புதிய மருமகள் – ஒரு பக்க கதை

 

அடுத்தடுத்து தனது இரண்டு மகளுக்கும் திருமணம் நடத்தி முடித்து விட்டார் நந்தகுமார். மிகப்பெரும் பணக்காரரான அவரது வீடு அரண்மனை மாதிரி. மகன்களுக்கு வாய்த்த இரண்டு மருமகள்களும் மகன்களோடு அதே வீட்டில் தான் வாசம்.

அன்று நந்தகுமாரை பார்க்க அவரது நண்பரொருவர் வந்திருந்தார். வந்தவர் பேச்சோடு பேச்சாக. வந்திருக்கிற புத்தம் பதிய மருமகள்கள் இரண்டு பேரும் எப்படி? என்று கேட்டு வைத்தார்.

என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்… இரண்டு மருமகள்களுமே எனக்கு ரெண்டு கண்ணு மாதிரி என்று ஒரேயடியாக புகழ்ந்து தள்ளி விட்டார் நந்தகுமார். இதைக் கேட்டு கொண்டிருந்த அவரது மூத்தமகன் பாலகுமாரனுக்கு ஒரே அதிர்ச்சியாக போய்விட்டது.

இரண்டு மருமகள்களுமே ஒன்றுக்கும் லாயக்கில்லை..உதவாக்கரை.. என்று எப்போது பார்த்தாலும் கோபமும் சிடுசிடுப்புமாக இருக்கும் அப்பாவா இப்படி?

மிகுந்த ஆச்சரியத்தோடு அப்பாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தான் பாலகுமாரன். நண்பர் விடைபெற்று சென்ற பிறகு நந்தகுமார் மகனிடம் சொன்னார். குறைகளை ஏன் மற்றவங்க கிட்ட சொல்லணும்… நிறைவாகவே நாமிருப்போம்..

பாலகுமாரன் அப்பாவின் முகம் பார்த்து புன்னகைத்தான்.

- பானுமதி பாஸ்கோ (5-9-12) 

தொடர்புடைய சிறுகதைகள்
பிறந்த மண்!
மகனின் வருகைக்காக ஹாலில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் விஸ்வநாதன். ""என்னங்க... இப்படி ரொம்ப நேரமா குட்டி போட்ட பூனை மாதிரி ஹாலையே சுத்தி வர்றீங்க... என்ன விஷயம்?'' என்ற மனைவி காமாட்சியின் பேச்சை கேட்டும், கேளாதவராய் நடந்து கொண்டிருந்தார். ""ஏங்க... காலையில தான் ...
மேலும் கதையை படிக்க...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள் பஞ்சகச்சம் உடுத்திக் குடுமியோடும் , கையில் தர்ப்பைக் கட்டோடும் போய்க் கொண்டிருந்தார். அண்ணா பலகலைக் கழகத்தில் பொறியியல் படித்த குமார் ...
மேலும் கதையை படிக்க...
அப்போது மாலினி கிராமத்தை விட்டுத் தாலி கட்டிய கணவனே உலகமென்று நம்பி டவுனிலே வந்து வேரூன்றிய நேரம் அக்கினி சாட்சியாகப் பெரியோர் நல்லாசியோடு அவளுக்கு வந்து வாய்த்த அந்தக் கல்யாணச் செடி, ஒரு குறையுமில்லாமல் ஆழ வேரூன்றி விருட்சமாகி நிலைத்து நிற்குமென்று ...
மேலும் கதையை படிக்க...
வாரமெல்லாம் ஆபிஸூக்கு அலைந்து மனசு வெறுத்துப் போச்சுடி. எங்காவது வெளியில் ஜாலியா போயிடு வரலாமா?’’ கேட்ட என் வாயை அவசரமாகப் பொத்தினாள் தோழி பிரதீஷா. ‘’ஏய்! சத்தம் போட்டுப் பேசாதே. வினோத்தோட காதில் விழுந்துச்சுன்னா அவ்வளவுதான். நம்மளோடு அவனும் வரேன்னு அடம் பிடிப்பான். கூட்டிப் போனால் ...
மேலும் கதையை படிக்க...
கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டியாடா என்று அவனை கேட்போம். இரவு ...
மேலும் கதையை படிக்க...
பிறந்த மண்!
குமார் அண்ணா
கண்ணீர் நதி குளித்துக் கரைகண்ட,சத்திய தரிசனமான சில உண்மைகள்
இந்தக் காலத்துக் குழந்தை – ஒரு பக்க கதை
கல்யாணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)