புகை – ஒரு பக்க கதை

 

தீபாவளிச் சலுகையில் வீட்டு உபயோகப் பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இருவீட்டார் எதிர்ப்புடன் காதல் திருமணம் செய்துகொண்ட லதா, மகேந்திரன் தம்பதிகளுக்கு இதுதான் தலை தீபாவளி.

“அந்தச் செருப்ப வாங்காமலே வந்துட்டீங்களே, ஏன்?” கேட்டாள் லதா.

“அது தரமான ரகமா தெரியலை. வேற நல்லதா வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன்”

“அதுபோகட்டும். அந்த அயர்ன் பாக்ஸையாவது வாங்கியிருக்கலாமே?”

“இதோ பார் லதா! உனக்கு இதெல்லாம் புரியாது. பார்க்குறதுக்குத்தான் அது நல்லாயிருக்கு. கியாரண்டி கிடையாது. சீக்கிரமே பல்லிளிச்சிடும்!”

“மிக்ஸியும் அப்படித்தானா?”

” ஆமாம். விலை ரொம்ப சொல்ற மாதிரி இருக்கே!”

“ஆறுமாசம் உழைக்கப்போற செருப்புத் தரமானதா இருக்கணும்னு நெனக்கிறீங்க. நாலஞ்சு வருஷம் உபயோகப்படப்போற அயர்ன்பாக்ஸுக்கு கியாரண்டி இருக்கணும்னு சொல்றீங்க. அத்தியாவசியத் தேவையான மிக்ஸியை விலை அதிகம்னு சொல்றீங்க. எல்லோரையும் உதறித் தள்ளிட்டு, உங்களையே கதின்னு நம்பி வந்த எனக்கு உங்க உடம்புக்கு எதுவும் வந்திடக் கூடாதுங்கற எண்ணம் இருக்கக் கூடாதா…?

வாழ் நாள் பூராவும் நீங்க என்கூடவே இருக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா? விலைமதிப்பில்லா உயிரை இப்படி சிகரெட் டைக் குடிச்சே சேதப்படுத்திக்கணுமா?” லதா வார்த்தைச் சாட்டையைச் சொடுக்கிய போது, ரொம்பவே வலித்திருக்க வேண்டும் மகேந்திரனுக்கு.

பற்றவைத்திருந்ததை உடனே கீழே போட்டுக்காலால் சிதைத்தான் மகேந்திரன்.

சிதைந்து புதைந்தது சிகரெட்டுடன் புகைபிடிக்கும் எண்ணமும் கூட….

- ஏப்ரல் 1, 2014 

தொடர்புடைய சிறுகதைகள்
“பரீட்சை நேரத்தில் தேர்தல் வச்சது நல்லதா போச்சுடா.’ ரவி சொன்னதைக் கேட்டு சீனி குழம்பினான். இபருவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் இரட்டையர்கள். சுமாராய் படிப்பவர்கள். “அப்படி வச்சதனாலதானே நாம படிக்க முடியாம ஃபெயில் ஆனோம். எப்படி நல்லதுன்னு சொல்ற?’ சீனி புரியாமல் கேட்டான். “இப்ப ஏன் ஃபெயில் ...
மேலும் கதையை படிக்க...
“சம்வன் இஸ் நோட் இன் திஸ் வோர்ல்ட்…” “சொறி .. நிரஞ்சனா.. ஐ ஜஸ்ட் …” “நிரு” “ஆ?” “கோல் மீ .. நிரு .. அப்பிடித்தான் எல்லாரையும் கூப்பிடச்சொல்லுவன் .. நிரஞ்சனா இஸ் டூ லோங்” “ஓ … அப்ப சுரேன் ஓகேயா?” “பெயரை கேட்கிறீங்களா? இல்ல .. ...
மேலும் கதையை படிக்க...
பெண் பார்த்தல்
""பொண்ணு கெடைக்கறதே அருந்தலா இருக்கு. இதுல நாம நெனக்கிற மாதிரியெல்லா முடியாது முருகா'' என்ற வீரம்மாள், ""நீ கொம்பு ஓவ்வார்த்த சுத்தமில்ல. தண்ணியடிச்சிருக்கியா?'' என்று ஒரே மூச்சில் பேசினாள். வீரம்மாளின் வீட்டின் வெளித்திண்ணையில் குத்துக்காலிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த முருகன், ""கஞ்சி குடிக்கவே ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு முடியை வித்தியாசமாக, ஸ்டைலாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் ஆசை இல்லை. ஆனால் இந்த முறை எப்பவும் போல், பள்ளி பிள்ளைப்போல் முடிவெட்டிக்கொள்ளக் கூடாது என்று அக்கா சொன்னாள். “எலி கரண்டுன மாதிரி கரண்டிட்டு வந்தா வீட்டுக்குள்ள விடமாட்டேன்” வாசலைவிட்டு இறங்கும்போது அக்கா ...
மேலும் கதையை படிக்க...
பிறந்த நாள்
வீடு முழுவதும் அலங்காரத் தோரணங்கள். வண்ண வண்ண பலூன்கள். கலர் விளக்குகள் கண் சிமிட்ட.. "ஹேப்பி பர்த் டே டு நேத்ரா' என்கிற ஆங்கில தர்மாகோல் வாசகங்கள் பளிச்சிட... "ஓ இன்று நேத்ராவின் பிறந்த நாள்'. கற்பகத்தின் மகள் நேத்ரா. பன்னிரண்டாம் ஆண்டு பிறந்த நாள். குறிஞ்சி மலர் ...
மேலும் கதையை படிக்க...
ரிசல்ட் – ஒரு பக்க கதை
நான்…வருவேன்.
பெண் பார்த்தல்
ஸ்கூல் சீசன்
பிறந்த நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)