பிரியம்!

 

கதிரேசனுக்கு எழுபது வயசு பூர்த்தியாகி விட்டது. வயசானவர் என்பதற்கு அடையாளமாக சுகர், பிரஸர், மூட்டு வலி எல்லாம் நிரந்தரமாக வந்து விட்டது.

அதனால் முன்பு மாதிரி எதற்கெடுத்தாலும் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போவதை நிறுத்திக் கொண்டார். முடிந்த வரை பூஜை, புனஸ்காரம் என்று ஓய்வாகவே இருந்தார்.

பேரன், பேத்திகளுக்கு தொடர்ந்தாற் போல் நான்கு நாட்கள் ஸ்கூல் லீவு. கதிரேசனின் ஒரே மகன் அரவிந்தனும், மருமகளும் கேரளாவில் ஆழப்புழை படகு வீட்டிலிருந்து, திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில் வரை, நண்பர்களோடு சேர்ந்து சகல வசதிகளும் உள்ள ஏர் கண்டிஷன் பஸ்ஸில் ஒரு டூர் போய் வர திட்டமிட்டார்கள். ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாதென்று, கூடவே ஒரு சமையல்காரரையும் கூட்டிக் கொண்டு போவதென்று ஏற்பாடு.

கதிரேசனுக்கும் நீண்ட நாட்களாக திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயிலுக்குப் போய் வர வேண்டும் என்று ஆசை.

ஹாலில் உட்கார்ந்து எல்லோரும் ஆர்வத்தோடு ‘டூர் புரொக்கிராம்’ பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

கதிரேசனும் ஆவலோடு அந்த இடத்திற்குப் போனார். அவரைப் பார்த்தவுடன்

“அப்பா!…நாங்க நாலு நாள் லீவில் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு டூர் போகிறோம்!…வயசான காலத்தில் உங்களால் அலைய முடியாது!….வீண் கஷ்டம் எதற்கு?…இங்கும் பூட்டியிருக்கும் வீட்டில் பூட்டை உடைத்து திருடுவது சகஜமாகி விட்டது!….நீங்க வீட்டை பத்திரமாப் பார்த்துக்குங்க!….ஒரு நாலு நாள் தானே?…ஒரு நல்ல ஓட்டலாப் பார்த்து சாப்பிட்டுக் கொள்ளுங்க!…..”என்று அருமை மகன் அரவிந்தன் சொன்னான்.

“ மாமா!….நாம மாதம்பட்டியில் கட்டற பண்ணை வீட்டு வேலையை வர வர அந்த இன்ஜினீயர் சரியா மேற்பார்வை பார்க்கறதில்லே!…..இருபது கிலே மீட்டர் தானே!…மெதுவா பைக்கில் ஒரு நடை போய் அங்கு வேலை நடப்பதைப் பார்த்திட்டு வந்திடுங்க! உங்களுக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்!…” என்று மருமகளும் மாமனாரிடம் பிரியமாகச் சொன்னாள்!

- புதுகைத் தென்றல் ஆகஸ்ட் 2014 

தொடர்புடைய சிறுகதைகள்
“ சித்ரா!....சித்ரா!...ஏண்டி அலாரம் அடிப்பது கூடத் தெரியாமே அப்படி என்னடி தூக்கம்?...எழுந்து வாடி!....”என்ற அம்மா கண்மணியின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள் சித்ரா. காலை ஐந்து மணி. அதற்குள் அம்மா ஆரம்பித்து விட்டாள் ‘படி!..படி!.’ என்ற ராமாயணத்தை!. முகத்தைக் கழுவிக் கொண்டு, வேறு ...
மேலும் கதையை படிக்க...
கிருஷ்ண குமார் அந்த காலனியில் குடியிருக்கும் தன் நண்பர்களுக்கு பிறந்த நாளன்று ஸ்டார் ஹோட்டலில் தடபுடலாக விருந்து கொடுப்பது வழக்கம். அந்த காலனிக்கு கிருஷ்ண குமார் தான் குடியிருப்போர் நல சங்கத் தலைவர். மற்ற காலனிவாசிகளைப் போல சாதாரண தொழிலாளியாகத் தன் வாழ்க்கைப் ...
மேலும் கதையை படிக்க...
“ அம்மா!....வரவர தம்பி ரத்தினத்தின் போக்கே சரியில்லே! தினசரி இரவு வீட்டிற்கு ரொம்ப லேட்டா வருகிறான்.. நேத்து ராத்திரி இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டினான்.. நான் போய் திறந்து விட்டேன்…குடிச்சிருப்பான் போலிருக்கு…எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு!....” “ அவன் சேர்க்கை சரியில்லே! நானும் ...
மேலும் கதையை படிக்க...
மார்கழி மாதம் பிறந்தாலும் பிறந்தது. சாந்திக்கு அதே வேலையாகப் போய்விட்டது.!எல்லோரும் படுத்தவுடன், இரவு பனிரண்டு மணிக்கு வாசல் லைட்டைப் போட்டுக் கொண்டு கோலம் போட ஆரம்பித்தால் அவள் கோலம் போட்டு முடிக்க இரவு மணி மூன்றாகி விடும்.ரோடு முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
படிக்காதவங்க கூட இப்ப ஏ.டி.எம். மிஷினைப் பயன் படுத்தறாங்க! உள்ளே போன ஆசாமி வெளியே வர ரொம்ப நேரமாச்சு! வெளியே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அந்த ஆசாமி தேள் கொட்டியது போல் பரபரப்பாக வெளியே வந்தார். “என்னாச்சு?...எதற்கு இந்தப் பதட்டம்?” என்று கேட்டேன். “சார்!...என் கார்டை ...
மேலும் கதையை படிக்க...
கல்லுக்குழி!
இதுவும் கூட புரட்சி தான்!
குடியிருந்த கோயில்!
பட்டால் தான் தெரியுமா?
நியாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)