பிரார்த்தனை – ஒரு பக்க கதை

 

“டே! போதும், ஓவரா சீன் போடாத, நீ வேண்டிக்கிறதுலதான் அந்த ஆம்புலன்ஸ்ல போறவன் பொழைச்சிக்கப் போறானா!’ தன்னைக் கடந்து போன ஆம்புலன்ஸைக் கண்டு பிரார்த்தித்த முத்துவுக்கு சதீஷ் கொடுத்த வார்த்தைப் பரிசு இது.

“டே, நான் பண்ணது சீன் போட இல்லை. நம்ம பிரார்த்தனையும் அவர் பொழைக்க ஒரு காரணமா இருக்கலாம் பாரு. அதையும் தாண்டி பாதிக்கப்பட்ட ஒருத்தன் நல்லா இருக்கணும்னு நினைக்கறதுல தப்பும் இல்ல, குத்தமும் இல்ல’ என்று முத்து தன் கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சதீஷின் செல்போன்
ஒலித்தது.

“டே சதீஷ்! நான் அம்மா பேசரேன்டா. உங்க அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம். ஆக்சிடென்ட் ஆன இடத்துல இருந்தவங்க அவரை ஜி.எச்.ல சேர்த்திருக்காங்களாம். சீக்கிரம் வீட்டுக்கு வாடா. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை!’

தன் அம்மாவின் பேச்சைக் கேட்கக் கேட்க சதீஷின் முகம் வெளிறிக் கொண்டே போனது.

“டே இங்கு பாரு, உங்க அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது, பயப்படாம போ’ சதீஷை தன் தைரிய வார்த்தைகளால் தேற்றிய முத்து பிரார்த்திக்கத் தொடங்கினான்.

சதீஷின் உதடுகளும் பிரார்த்திக்கத் தொடங்கியது, தன் அப்பாவை இறைவன் காப்பாற்ற வேண்டுமென்று.

- ச.கோபிநாத் (ஜூலை 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
வாசகர் தர்மம்!
அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார் இன்று, என்னை வரச் சொல்லி கடிதம் போட்டிருந்தனர். அவர்கள் பதிப்பகத்தில் புத்தகமாக, என் சிறுகதைகள் வெளிவந்தால், அதை விட பெருமையில்லை. இவர்களின் அங்கீகாரம் அபூர்வமென்பதால், எக்காரணத்தைக் கொண்டும் இந்த வாய்ப்பை நழுவ ...
மேலும் கதையை படிக்க...
“ ...ஹலோ!...விஜயா பேங்க் பிராஞ்சா?...” “ ஆமாம்! உங்களுக்கு யார் வேண்டும்?...” “ மேனேஜர் ரமா மேடத்திடம் அவசரமாப் பேசவேண்டும்!..” டெலிபோன் ஆபரேட்டர் மேனேஜர் ரூமுற்கு லைன் கொடுக்கிறார். “ எஸ் மேனேஜர் ஸ்பீங்கிங்!...” “ மேடம் நான் மெட்ராஸிருந்து கௌதம் பிரண்ட் பிரகாஷ் பேசுகிறேன்!...… வந்து….வந்து,,,” குரலில் ...
மேலும் கதையை படிக்க...
சில நாட்களாகவே ஊருக்கு புதிதாய் வரப்போகும் பேருந்து நிலையத்தைப் பற்றிய பரபரப்பு பேச்சுகள் அதிகரித்திருந்தன. முக்கியமாக ஊருக்கு நடுவில் வரப் போவதால் சுற்றியுள்ள புறம்போக்கு இடங்கள் அகற்றப்படுமென்ற ஒரு அச்சமும் பலரிடம் இருந்தது. அதில் பாதிக்கப்பட முடியாத இடத்திலிருந்தவர்களில் பலர், "ஊருக்கு ...
மேலும் கதையை படிக்க...
ரூபா என்கிற ரூபாவதி. நடுத்தர வர்க்கம் வாடகை வீட்டின், அறைக்குள்ளிருந்தபடியே ரூபாவதியின் உறவினர்களுடன் சேர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளைச் சாந்தி ஓரக்கண்ணால் பார்த்தாள்.காப்பி, மிக்சர். இனிப்பு. ஒவ்வொருவருக்கும் பரிமாறப்பட்டு இருந்தன.மாப்பிளையின் பெரியப்பா, பெரியம்மா, காலில் விழுந்து வணங்குதல் போன்ற சம்பிரதாயங்கள் முறையாக நடந்தன. ...
மேலும் கதையை படிக்க...
காட்டுக்கு வேட்டையாட வந்திருந்த தன் எஜமானனுக்காக புதரில் மறைந்திருந்த ஒரு முயலை விரட்டு, விரட்டு என்று விரட்டிற்று ஒரு நாய். ஓடி ஓடிக் களைத்த முயல் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்று, அட, இனத் துரோகி! என்னைப் போல் நீயும் ஒரு மிருகம், ...
மேலும் கதையை படிக்க...
வாசகர் தர்மம்!
நீயும் கூட ஒரு தாய் தான்!
வீடு
ரூபா என்கிற ரூபாவதி
கடமை – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)