Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

பாறாங்கல்லும் ஒரு பனிக்கட்டியும்!

 

தயங்கித் தயங்கிப் பக்கத்து வீட்டுப் பெரியவரிடம் வந்தார்கள் விபின் தம்பதி.

‘‘மறுபடி மறுபடி உங்க ளுக்குச் சிரமம் கொடுக்கிறதுக்கு மன்னிக்கணும். ரேவதிக்கு இன்னிக்கு ஒரு இன்டர்வியூ. அதான், குழந்தையைக் கொஞ்ச நேரம் உங்ககிட்ட விட்டுட்டுப் போக லாம்னு… ஃபீடிங் பாட்டில், நாப்கின், வெந்நீர் எல்லாம் இதோ இருக்கு. மூணு மணி நேரத்துக்குள்ள வந்துடுவோம்..!’’

‘‘அவசரமே இல்ல… நிதானமா வாங்க! சுசிதான் என்கிட்ட ஒட்டிக்கிட்டாளே! சமர்த்தா இருப்பா!’’ என்றார் பெரியவர்.

அடுத்த அரை மணியில், அவர்கள் ஒரு தியேட்டர் வாசலில் வந்து இறங்கினார்கள்.

‘‘இப்படி இன்டர்வியூ இருக்கு, டாக்டரைப் பார்க்கணும்னு அடிக்கடி பொய் சொல்லி, நம்ம குழந்தையை அவர்கிட்ட தள்ளிட்டு சினிமாவுக்கு வர்றது கொஞ்சமும் சரியில்லீங்க. பாவம் அவரு… ஏற்கெனவே நொந்துபோயிருக்காரு…’’

‘‘தெரியும். அவர் பொண்ணு யாரையோ காதலிச்சு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வந்து நின்னா. இவர் ஏத்துக்கலே. அவ இப்ப கணவனோட எங்கேயோ கண்காணாத இடத்துல இருக்கா..!’’

‘‘மக பிரிஞ்சு போய் ரெண்டு வருஷம் ஆகப்போகுது. இந்த மனுஷருக்கு துக்கத் தைப் பகிர்ந்துக்கப் பெண்டாட்டியும் இல்ல. எத்தனை ஆறுதல் சொல்லியும் அவரைத் தேத்த முடியலே… அவரைப் போய் நாமளும் இப்படிச் சிரமப்படுத்தணுமா?’’

அடுத்த வாரத்தில் ஒருநாள்…

‘‘என்ன விபின், இன்னிக்கு வெளியே எங்கும் போகலையா நீங்க? குழந்தை சுசித்ராவை வேணா எங்கிட்ட விட்டுட்டு சினிமாவுக்குப் போறதானா போயிட்டு வாங்களேன்…’’ என்றார்.

‘‘இல்லீங்க, ஏற்கெனவே உங்களுக்கு ரொம்பவாட்டி சிரமம் கொடுத்திருக்கோம்!’’

‘‘இதுல என்ன சிரமம் இருக்கு? இட்ஸ் எ ப்ளஷர்!’’ என்று சிரித்தவர், ‘‘அடுத்த வாரம் டெல்லியிலேர்ந்து என் மகள் குடும்பத்தோடு இங்கே வரா!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமா, மாப்பிள்ளை சென்னைக்கு மாற்றல் வாங்கிட்டார். இனிமே இங்கேதான் இருப்பாங்க’’ என்றவர், ‘‘நான்தான் போன் பண்ணிக் கூப்பிட்டேன். எல்லாத்தையும் மறந்துறலாம்னு தீர்மானிச்சுட்டேன். அவளுக்கும்தான் வேற யார் இருக்கா? ஸோ, அடுத்த வாரம் என் குட்டிப் பேரன் வந்துடுவான். அவனுக்கு நல்ல விளை யாட்டுத் துணையாச்சு உங்க குட்டிப் பாப்பா!’’ என்று குஷியாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார் பெரியவர்.

பெரிய பாறாங்கல்லை ஒரு சின்ன பனிக்கட்டி கரைத்த அதிசயத்தை நிகழ்த் தியது தெரியாமல், பொக்கை வாய் திறந்து சிரித்துக்கொண்டு இருந்தாள் சுசித்ரா.

- 29th ஆகஸ்ட் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்புள்ள அத்தானுக்கு, உங்கள் மனைவி மீனாட்சி எழுதிக்கொண்டது. நான் நலம். நீங்கள் நலமா? இங்கே நான் என் பிறந்த வீட்டுக்கு வந்து இன்றோடு நாற்பது நாளாகிறது. இதுவரை உங்களிடமிருந்து ஒரு போன்கால் கூட வரவில்லை. ‘எப்படி இருக்கிறாய் மீனு?’ என்று விசாரித்து ஒரு கடிதம் ...
மேலும் கதையை படிக்க...
உண்மைக்கு நூறு புனைபெயர்கள்!
ஜெகனுக்கு குபுக்கென்று ஆத்திரம் பொங்கியது. சட்டென்று சூடாயிற்று உடம்பு. பிடித்திருந்த மவுஸ், தன் மைதானத்திலிருந்து கீழே விழுந்தது. எண்ணை அழுத்தி, சபேஷை செல்லில் பிடித்தான். சபேஷின் குரலில் உற்சாகம் கொட்டிற்று, ''மெயில் பார்த்தியா? சந்தோஷம் பேயா அறைஞ்சிருக்குமே? ரொம்ப நாளா நீ குறிவெச்ச போஸ்டிங் ...
மேலும் கதையை படிக்க...
மூன்று கண்கள் !
மாலினிக்கு, கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும் சேர்ந்து அவளைப் படுத்துவர்? சந்தேகமே இல்லை... நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம், ஆண்களுக்கு மட்டும் தான். கணினியின் வெண்திரையில், லதிகாவின், "இ-மெயில்' அவளைப் ...
மேலும் கதையை படிக்க...
சிக்கல்
ஓவியம்: சேகர் வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர் சுகந்தன் மாமா. எந்த ஒரு பிரச்னைக்கும் அவரிடம் தீர்வு இருக்கும். குழப்பம் மிகும் நேரங்களில் நான் தேடி ஓடுவது சுகந்தன் மாமா வீட்டுக்குதான். அன்றைக்கும் போயிருந்தேன். ஒரு நூல்கண்டில் மும்முரமாகச் சிக்கல் பிரித்துக்கொண்டு இருந்தார் ...
மேலும் கதையை படிக்க...
அவள் ஒரு பெண்!
என் எத்தனையோ கதைகளில் ஏதாவது ஒரு கேரக்டர் கையில் ஒரு தந்தியை வைத்துக்கொண்டு தவித்து நிற்பதைப் பத்திபத்தியாக விவரித்திருக்கிறேன். ஆனால், இப்போது நானே ஒரு சேதியை வைத்துக்கொண்டு தவித்த தவிப்பைப் பார்க்கும்போது, இதில் பாதியையாவது என் கேரக்டர்கள் அனுபவித்திருப்-பார்களா என்று தோன்றியது. கட்டிலில் ...
மேலும் கதையை படிக்க...
ஜெயா, நீ ஜெயிச்சுட்டே!
அமர்க்களப்பட்டுக்கொண்டு இருந்தது மேடை. வருடா வருடம் நடக்கும் கலை விழா. நாலு வருட மாணவர்களும் சேர்ந்து அரங்கத்தை அதிரவைத்தார்கள். பாட்டுப் போட்டி முடிந்ததும், ‘‘நந்தகுமார், கலைவாணி,ஹரீஷ், ப்ரபா,மிருதுளா,ஒப்பிலியப்பன் எல்லோருமே இசைக்கு இனிப்பு தடவி காதுக்கு விருந்தளித்தனர். அனைத்துமே குறை சொல்ல முடியாத நட்சத்திரப் ...
மேலும் கதையை படிக்க...
‘பின்’ குறிப்பு!
உண்மைக்கு நூறு புனைபெயர்கள்!
மூன்று கண்கள் !
சிக்கல்
அவள் ஒரு பெண்!
ஜெயா, நீ ஜெயிச்சுட்டே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)