பார்வை..!

 

“விஷால் இன்னிக்கு எங்காவது வெளியில் போறியாப்பா.? தேவகி
கேட்டாள்.

” இல்லைம்மா.. தொடர்ந்து மூணு நாளா வெளியில போய்
போரடிச்சிடுச்சி.. இன்னிக்கு வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கலாம்னு
இருக்கோம்..”

ஸ்வாதி குளித்து விட்டு வருவதற்குள் பரபர வென்று சமையலை
முடித்த தேவகி, கணவர் ராகவனை கூப்பிட்டாள்,

” என்னங்க.. இன்னிக்கு மாம்பலம் வரை போய்ட்டு வந்துடலாம்..
கோமதி அத்தை நம்ம விஷால் கல்யாணத்தில் எவ்வளவோ ஒத்தாசையா இருந்தா.. ஸ்வீட்… பழத்தோட ஒரு நடை போய்ட்டு வந்துடலாம்…”

” சரிம்மா… புது மாமியார் சொன்னா மறுப்பேது..? கணவர் ராகவன்
கிண்டலடித்தார்.

“இந்த கிண்டல்தானே வேணாங்கிறது… ஸ்வாதி டிஃபன் டேபிள்ல
வச்சிருக்கேன்.. சாப்பிட்டுட்டு காபி மட்டும் போட்டு குடிங்க..”
என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

” என்னங்க.. நானும் பார்த்திட்டேயிருக்கேன்.. நமக்குதான் புதுசா
கல்யாணமாயிருக்கு.. நாம வெளிய போற மாதிரி.. உங்கம்மாவும்
போட்டி போட்டுகிட்டு.. ஜோடியா அடிக்கடி வெளியே
கிளம்பிடறாங்க…?”

” ஸ்வாதி எங்கம்மா ரொம்ப நல்லவங்க.. மாமியார்ங்கிற பார்வையோட அவங்களை குறையா பார்க்காதே.. போக..போக.. நீயே
புரிஞ்சிக்குவே…”

மாலையில் வீடு திரும்பிய ராகவனும், தேவகியும் புது டி.வி. பெட்டி
ஒன்றை வாங்கி வந்தார்கள்.

” விஷால் இந்த டி.வி யை அம்மா ரூம்ல செட் பண்ணிடுப்பா…”

“க்கும்.. பார்த்திங்களா.. உங்க அம்மாவுக்கு இளமை திரும்புது..
பெட்.. ரூம்லயே டி.வி.. கேக்குதாம்….” நக்கலாக சிரித்தாள் ஸ்வாதி.
இரவு பதினொரு மணியிருக்கும்.. ஸ்வாதிக்கு விக்கல் எடுத்தது..
தண்ணீர் குடிக்க கிச்சனுக்கு செல்லும்போது .. தேவகியின் ரூமில்
லைட் எரிந்து கொண்டிருந்தது.

” ஏண்டி இப்படி .. பதிணொரு மணி வரை சீரியல் பார்த்து என்
தூக்கத்தை கெடுக்கிற..? வழக்கம் போல ஹால்ல டி.வி பார்க்க
வேண்டியதுதானே…?

“.. என்னங்க புரியாம பேசறிங்க..? ஹாலுக்கு நேரா நம்ம விஷால்
ரூம் இருக்கு.. நான் அங்க உட்கார்ந்து டி.வி பார்த்திட்டிருந்தா..
அவங்க கதவை சார்த்த சங்கடப்படுவாங்க..அதான் நம்ம ரூமுக்கே
டி.வி போடச்சொன்னேன்..நான் அந்த காலத்தில உங்க அம்மா..
தம்பி .. நாத்தனார்னு உங்ககிட்ட கல்யாணமான புதுசில தனியா
பேச முடியாம தவிச்சேன்..அதனாலதான் புதுசா கல்யாணமான
நம்ம மகன்.. மருமகளை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு.. அவங்க
வீட்டில இருக்கறப்ப உங்களை வெளியில கூட்டிட்டு போயிட்டேன்.
மருமகளும் நம்ம வீட்டு பொண்ணுதானே.. நாம நிறைய விட்டு
கொடுத்துப் போனா.. அவ தானா.. நம்மளை அப்பா அம்மாவா
ஏத்துக்குவா…”

தேவகி பேச.. பேச.. ஸ்வாதிக்கு குற்ற உணர்வில் விக்கல் தானாகவே நிற்க… பூனை மாதிரி சத்தம் போடாமல் திரும்பியவள்..மாமியாரை..இல்லையில்லை.. அம்மாவை மானசீகமாய் வணங்கியபடி தன் அறைக்குள் போனாள்.

- 21-11-2010 – குடும்ப மலரில் வெளிவந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
விநாயகர் சதுர்த்தி விழா.. வசந்தம் நகரில் இளைஞர் குழு சுறு சுறுப்பாக செயல் பட்டு கொண்டிருந்தது. ஏரியா முழுக்கும் வசூல் வேட்டை நடத்தியவர்கள் இனியவன் வீடு வந்ததும் தயங்கி நின்றார்கள். இனியவன் தீவிர நாத்திகவாதி.. கோயில் குளம் என்று வந்தால் விரட்டாத ...
மேலும் கதையை படிக்க...
" நிவேதா நீ ஒண்ணும் சின்ன பெண்ணில்லை.. உனக்கு சொல்லி புரிய வைக்க,, இத்தனை நாளா வர்ற ஒவ்வொரு வரனுக்கும் எதையாவது காரண்ம் சொல்லிட்டிருந்தே.. போன வாரம் திருப்பூர்ல இருந்து வந்த வரன் உனக்கு எல்லாவிதத்திலயும் பொருத்தமா இருக்கு. இனியும் தள்ளி போட்டா சொந்த பந்தங்களுக்கு என்னால் பதில் ...
மேலும் கதையை படிக்க...
“ சார் இந்தாங்க சாவி ... வீட்டை ஒரு தரம் பார்த்துக்கங்க... “ முகத்தில் கடுகளவும் இனிமை காட்டாமல் சாவியை கொடுத்து விட்டு போனான் சுரேஷ். அவர்கள் மேல் போர்ஷனுக்கு வந்து ஐந்து மாதம்தான் ஆகியிருக்கும்.. அதற்குள் காலி செய்து விட்டார்கள்.. இந்த ...
மேலும் கதையை படிக்க...
பரபரப்பான வேலைகளிடையே சைலண்ட் மோடிலிருந்து மொபைல் கிர்..கிர்ரென்று அதிரவும் எடுத்த மித்ரா, ஹலோ... ஹலோ.. மித்ராவா ? நான் உங்க வாசகன் பேசறேன்.. இந்த வாரம் சலங்கையில் நீங்க எழுதியிருந்த மன ஓசை சிறுகதை நல்லாயிருந்தது...எதேச்சையாத்தான் படிக்க முடிஞ்சது...” “ ரொம்ப நன்றிங்க... உங்க பேர்?” “ ...
மேலும் கதையை படிக்க...
கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு போர்த்தியிருந்தது.. இந்த நேரம் பார்த்து பவர் கட் வேறு.சுசித்ராவிற்கு நெஞ்சுக்குள் திக்.. திக் என்று இதயம் அடித்து கொண்டிருந்தது. சில்லென்று தண்ணீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஹாலுக்கு சென்று ப்ரிட்ஜில் இருக்கும் தண்ணீரை எடுத்து வர ...
மேலும் கதையை படிக்க...
வசந்த விழா…!
மறந்துவிடு கண்மணி
ஒப்பந்தம்
மௌன மொழிகள்
அந்த நொடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)