பார்வை – ஒரு பக்க கதை

 

ஏங்க, பக்கத்து ஃபிளாட் சௌம்யா வீட்டுக்குப் போயிருந்தேன். எவ்வளவு பெருசு பெருசா சோபா, டீப்பாய், டைனிங் டேபிள் எல்லாம் வாங்கி வச்சிருக்காங்க தெரியுமா..? கணவன்
மோகனிடம் ஏக்கத்தோடு சொன்னாள் கனகா.

நம்ம வீட்டுலயும் அவசியத்துக்கு எல்லாம்தான் இருக்குதே கனகா,….

நீங்க வேற..!நம்ம வீட்டைப் பாருங்க…மைதானம் மாதிரி காலியா இருக்கு…வீட்டுக்கு வர்றவங்களை உட்கார வைக்க ரெண்டே ரெண்டு பிளாஸ்டிக் சேர்தான் இருக்கு. வர்றவங்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்க? – கனகா சொல்லிக் கொண்டிருக்கும்போதே காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்தால்…வாசலில் சௌம்யா.

ஹப்பா..வீட்டை எவ்வளவு விஸ்தாரமா வச்சசிருக்கீங…எங்க வீட்டுக்காரர் தேவையில்லாம சோபா, டைனிங்டேபிள், எல்லாம் பெரிசு பெரிசா வாங்கிப்போட்டு இப்போ ஹால்ல நடக்கக்கூட இடம் இல்லை.

ஒரு விசேஷம்னா வீட்டைச் சுத்தம் செய்யறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா? பேசாம எல்லாத்தையும் வித்துட்டு உங்களை மாதிரி ரெண்டு பிளாஸ்டிக் ஃசேர் வாங்கிப் போடலாம்னு இருக்கேன் – சௌம்யா இயலாமையோடு சொல்ல, கணவனை அசடு வழியப் பார்த்தாள் கனகா.

- கீர்த்தி (செப்ரெம்பர் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
”ஒரு எருமை வாங்கலாம்னு பார்க்கிறேன்…” பலராமிடம் பேச்சை ஆரம்பித்தார் பூங்காவனம். ”எதுக்கு எருமை? நல்லா யோசித்துதான் பேசறியா?” ”யோசிக்காம இருப்பேனா? கலப்படமில்லாத பால் கிடைக்குமே!” ”எனக்கென்னவோ சரியாப்படலே…எருமை யாருடைய வாகனம்? அதை வாங்கறேன்னு சொல்றியே…உனக்கோ வயசாச்சி…எருமை வந்த நேரம் ஏதாவது ஆயிட்டுதுன்னா…” ”அதில்லே பலராம்..நம்ம ராமசாமிகிட்டே ஒரு எருமை ...
மேலும் கதையை படிக்க...
வீம்பு
''போனா, எம் பொணம்தான் போவும்' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சிவமாலை. ''ஏண்டி அப்பிடிச் சொல்றவ? வாசப்படியில குந்திக்கிட்டு அப்பிடிச் சொல்லலாமாடி? மவளுக்குக் கண்ணாலம் கட்டணும். மவனுக்குப் பொண்ணு பாக்கணும். பேரன் பேத்தினு எடுக்க வாணாமா?'' என்று மகளைப் பார்த்துக் கேட்டாள் துளசி. ''ஆமாம், ...
மேலும் கதையை படிக்க...
‘சரி சொல்லு..’ என்றேன். ‘என்னத்தைச் சொல்ல.. அதாங் கேக்கிறனே.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா, என்ன சேத்து வைச்சிருக்க?’ என்றாள் என் மனைவி. நான் எதனையும் சேர்த்து வைக்கவில்லை. வாடகை வீடு இருக்கிறது. சாப்பாடு இருக்கிறது. கடையிருக்கிறது. மகள் படிக்கிறாள். ‘ஒன்ன நம்பி புள்ள பெக்க முயாது’ ...
மேலும் கதையை படிக்க...
மனித நேயக் கடவுள்
களக்காடு பேருந்து நிலையம். மூன்று வரிசை கொண்ட பயணிகள் இருக்கை. மாலை நேரம் என்பதால் பள்ளிக்கூடமே திரண்டு அங்குதான் நின்று கொண்டிருந்தது. கசமுச கசமுச என மாணவர்களின் சத்தம். 70 வயதிருக்கும் அவருக்கு. புது வேட்டி சட்டை. ஆனால் நன்றாக அழுக்காகியிருந்தது. இருக்கையில் ...
மேலும் கதையை படிக்க...
"வாங்க ரைட்டர் சார், என்ன வேணும்?" அண்ணாச்சி மோதிர விரல்களால் கரன்சி நோட்டை எண்ணிக்கொண்டே அதியனை வரவேற்றார். பாலவாக்கம் ஏரியாவுல அண்ணாச்சி டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்னா எல்லாருக்கும் தெரியும். "டேய் பசங்களா நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு கடைக்கு லாரில சரக்கு வருது. ரெண்டு ...
மேலும் கதையை படிக்க...
எருமை – ஒரு பக்க கதை
வீம்பு
அவஸ்த்தை
மனித நேயக் கடவுள்
முடிச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)