பாரம் – ஒரு பக்க கதை

 

”ஏங்க இத்தனை நாளும் சம்பளக் கவரை உங்க அம்மாகிட்டேதானே குடுத்தீங்க? நான் கல்யாணமாகி இப்பத்தானே வந்திருக்கிறேன், எங்கிட்ட கொடுத்தா உங்க அம்மா மனசு கஷ்டப்படும். வழக்கம்போல அத்தைகிட்டேயே குடுங்க”

புது மருமகள் நிலா, கணவனிடம் கூறியதை கேட்டுக்கொண்டு வந்த சாரதா கூறினாள், ”இருக்கட்டும்டி மருமகளே! இனி நீதான் எல்லாம் பார்த்துக்கணும். இனி அவன் சம்பளக் கவரை உன்கிட்டே குடுக்கிறதுதான் சரி”

தாயின் இந்த பதிலைக் கேட்ட சாரதாவின் இளையமகள் சுதா தாயை வினவினாள்,”ஏம்மா, அண்ணன் சம்பளக் கவரை உன் மருமககிட்ட
தாரை வார்க்குறியே…இனி எல்லாத்துக்கும் அண்ணிகிட்டே நாம கைகட்டித் தானே நிற்கணும்?”

”போடீ அறிவு கெட்டவளே…உங்க அண்ணன் கொண்டு வர்ற சம்பளத்தை வச்சு குடும்பச் செலவை சரிக்கட்ட நான் பாடாபடுவேன். இதுல புதுசா மருமக செலவு வேற,நமக்கு வேண்டியதைபுடுங்கிட்டு, நாம நிம்மதியா இருப்போம். இனி வந்தவ சுமக்கட்டும் பாரத்தை’’ என்ற
தாயை பயமாய் பார்த்த சுதா மனதிற்குள் நினைத்தாள்!

நாம போற வீட்டுல சம்பளக்கவரை தொடவே கூடாதம்மா’ என்று!

- தூத்துக்குடி வி.சகிதாமுருகன் (3-10-12) 

தொடர்புடைய சிறுகதைகள்
“முக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து ...
மேலும் கதையை படிக்க...
சுவர்க்கடிகாரம் நான்கு முறை ஒலித்து ஓய்ந்தது. கந்தசாமி பதறியடித்துக் கொண்டு எழும்புகிறார். 'கடவுளே கடவுளே மணி நாலாயிற்றே' என்று குழறிக் கொண்டு 'பட் பட் 'டென நெற்றியில் நாலு குட்டுகளுடன் குளியலறைக்குத் தாவுகிறார். குழாயைத் திறந்தார். சளசளவென பீச்சியடித்த தண்ணீரில் காக்காய் குளியல். மனிதவுரிமை சங்கத்தின் கூட்டம் ...
மேலும் கதையை படிக்க...
முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ” சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மத்தியான வேளை; வேலைத்தளம் இயந்திர இரைச்சலும் மனிதக் கூச்சலுமின்றி அமைதியாக ...
மேலும் கதையை படிக்க...
சில கேள்விகள்
அந்த வினாடி மீண்டும் மீண்டும் அவள் நினைவிலே கிளர்ந்தது. அஸ்வினியை ஈரத்துணியாய் முறுக்கிப் போட்டது. டாக்டர் படிப்பையே பாதித்தது. அவள் படிக்க வேண்டிய கேஸ் ஹிஸ்டரி பல வால்யூம் பக்கங்கள் பாக்கி இருந்தன. அழுது அழுது முகம் வீங்கியிருந்தது. எந்தத் தொழில் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு வயது பதினைந்து. என் அப்பாவை எனக்குப் பிடிக்காது. காரணம் அப்பா எப்போது பார்த்தாலும் பணம் வைத்துச் சீட்டாடுவார். ஆயிரக்கணக்கில் அடிக்கடி தோற்றுப் போவார். அதனால் என் பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டையும், வாக்குவாதமும் உண்டாகும். உடனே அப்பா கோவித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிப் போய்விடுவார். அதன்பிறகு ...
மேலும் கதையை படிக்க...
மரணம் வெல்லும்
கனவான் அவதாரம்
தீராத சாபங்கள்
சில கேள்விகள்
வைக்கோல் உறவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)