பாரதி வாடை..!

 

காலையில் கண்களைத் துடைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தண்டபாணி மதியம்…. முகம் சோர்ந்து, உடல் தளர்ந்து வந்து நாற்காலியில் தொய்வுடன் அமர்ந்து வியர்வையைத் துடைத்தார்.

கணவனின் வாட்ட முகத்தைப் பார்த்ததுமே பங்கஜத்திற்குத் திக்கென்றது.

“என்னங்க ஆச்சு… .?” பயம், படபடப்பாய்க் கேட்டாள்.

நிமிர்ந்து பரிதாபமாக மனைவியைப் பார்த்தவர்…

“அதிகம் எதிர்பார்க்கிறாங்கம்மா…” மெல்ல சொன்னார்.

“என்ன எதிர்பார்க்கிறாங்க…?”

“நூறு பவுன், இருபத்து அஞ்சு லட்சத்துல ஒரு இன்னோவா கார். அப்புறம் சீர்வரிசை அது இதுன்னு படாடோபம்…”அதற்கு மேல் அதிகம் பேச முடியாமல் நிறுத்தினார்.

கேட்ட பங்கஜம் திறந்த வாய் மூடவில்லை.

“பையன் பெரிய படிப்பு படிச்சிருக்கானாம். மாசம் லட்சத்தை நெருங்கும் சம்பளமாம். கலியாணம் கட்டினா தனிக்குடித்தனமாம். பொண்ணுக்கு அக்குதொக்கு கஷ்டமே இல்லே. சொன்னாங்க.

நானும்.’ .என் பொண்ணு .நல்லா புடிச்சிருக்கா. இந்த அளவு சம்பாதிக்கிறாள் !’ சொன்னேன்.

‘அதெல்லாம் முடியாது. அதெல்லாம் முடியாது. பேச்சுன்னா பேச்சுதான். உங்களுக்குத் செய்ய சவுகரியப் படலைன்னா… உங்க செய்காலுக்குத் தக்க வேறு இடம் பார்த்துக்கோங்க’ – சொன்னாங்க.

நாம பொண்ணை படிக்க வச்சி வேலைக்கனுப்பியது எல்லாம் வீண். உழவு மாடு, விருதா மாடுக்கெல்லாம் கல்யாணச் சந்தையில ஒரே விலை.” புலம்பினார். குரலில் வருத்தம் இழையோடியது.

“கவலைப் படாதீங்க. இந்த இடம் நமக்கு வேணாம். !” பங்கஜம் குரல் கறாராக வந்தது.

“ஏன்..?” – திகைப்பாய்ப் பார்த்தார்.

“உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலையாம் . !”

“பங்கஜம்.?” துணுக்குற்றார்.

“அவளுக்கு இந்த அளவுக்குப் படிச்சி , உத்தியோகம் பார்க்கிற வரன் வேணாமாம். !”

“ஏனாம்..?”

“எனகென்னத் தெரியும்..? கேட்டாத்தான் உங்க செல்லப் பெண் என்னிடம் ஒழுங்கா சொல்லுவாளா…? சேதியை உங்களிடம் சொல்லச் சொன்னாள் சொன்னேன்.”

‘தாய்க்கும் மகளுக்கும் என்றைக்குமேப் பிடிக்காது. ஏடாகூடம் ! இந்த விஷயத்தில் கூடவா மகளை அதட்டி உருட்டி காரணம் கேட்கக்கூடாது..? இல்லை… மகளாவது தாயிடம் ஒழுங்கான காரணத்தைச் சொல்லக் கூடாதா..?’ – நினைக்க மனைவி, மகள் மீதே தண்டபாணிக்கு வெறுப்பை வந்தது.

போகட்டும். ! கண்ணம்மா ஏனிப்படி தன்னிடம் சொல்லக் சொல்லிவிட்டு போனாள்..? வேலைக்குச் செல்பவள், வெளிப்பழக்க வழக்கம் தெரிந்தவள். நாட்டு நடப்பு புரிந்தவள். தன் தகுதிக்கும் தராதரத்திற்கும் ஏற்ற வரன் இப்படித்தான் அதிகம் கேட்கும். இது தங்கள் சக்திக்கு மீறியது என்று நினைத்துச் சொன்னாளா..?

தன்னைவிட அதிகப் படிப்பு, சம்பளம் உள்ளவன் வாய்த்தால் தான் அவனுக்கு அடங்கி ஒடுங்கி அடிமையாக வேண்டும். சரி வராது . – என்கிற எண்ணத்தில் சொன்னாளா..?

தன்னைவிட குறைவாகப் படித்து, வேலையில் இல்லாத வரன் முடித்தால் அவன் தனக்கு அடங்கி நடப்பான். தான் வேலைக்குச் செல்ல கணவன் வீட்டில் பெண்ணைப் போல் சமையல் வேலை செய்து தனக்குப் பணிவிடைகள் புரிவான். என்று நினைத்து எதிர்பார்க்கிறாளா..?

வியாபாரி, சொந்தமாக தொழில் செய்பவன் தேவையோ..?!

தான் பணக்காரியாக இருந்து அலட்டலாக வேலைக்குச் சென்று திரும்பலாம் நினைப்போ..?!

- எந்த நினைப்பில் இப்படி தாயிடம் சொல்லிச் சென்றாள்..? – சிந்தனையில் வளைய வந்தார்.

மாலை.

கண்ணம்மா…வேலை விட்டு வீட்டிற்குத் திரும்பி காபியெல்லாம் குடித்து , களைப்பு நீங்கி..ஆசுவாசமாக அமர்ந்திருந்தவள் அருகில் தண்டபாணி அமர்ந்தார்.

“மகளே..!” அழைத்தார்.

“என்னப்பா..?”

“அம்மாவிடம் படிச்ச மாப்பிள்ளை வேணாம் அது இதுன்னு ஏதோ சொல்லிவிட்டுப் போனீயாமே..?”

“ஆமாம்ப்பா !”

“ஏன்..?”

“எனக்குத் தெரிந்து… வேலையில் இருக்கும் ஆண், பெண்ணுக்கு…. பெத்தவங்க சரிக்கு சரி சமனான வரங்களைத்தான் தேடுறாங்க. சம்பத்தப் பட்டவர்களும் அதை விரும்புறாங்க.

தானாய்த் தேடுறவங்களும் அப்படித்தான் தேடுறாங்க. அமைச்சிக்கிறாங்க.!

ஏன்…? சமுதாயத்துல தாங்கள் வசதி வாய்ப்பாய், கெத்தாய் வலம்வர ஆசை. இதே ஆசையில், தன் பெண் நல்லா இருக்கவேண்டும் என்கிற கணிப்பில் பெண்ணைப் பெத்தவங்களும் அப்படித்தேடி கடன் வாங்கி கலியாணம் முடிச்சி கஷ்டப்படுறாங்க.

இந்த இணையான இணை சேர்ப்பில் சில சவுகரியங்கள், கஷ்டங்கள் இருக்குப்பா. தூரத்து நிலவு. ஆனா…. உண்மை.. ! நிறைய மேடு பள்ளங்கள். புரியலையா…?

இப்படி பணம் பணத்தோடு சேர்வதால் அவர்கள் மேட்டுக்குடிகள் போல் தெரிந்தாலும்… உள்ளே…ஏகப்பட்ட ஓட்டை உடைசல்கள். தம்பதிகளுக்குள் அன்பு, ஆசை, நேசம், பாசம், சரியான விட்டுக் கொடுப்புகள் இல்லே. நீயா, நானா என்கிற ஏட்டிக்குப் போட்டிகள். இஷ்டத்திற்கான செய்கைகள், செயல்பாடுகள். விவாகரத்துகள், வில்லங்கங்கள்.

இது இல்லாமல் இருக்கணும்ன்னா…படிப்பு, சம்பாத்தியம் எல்லாத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு….நல்ல வரனாய்த் தேடுறதுதான் நல்லது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு வருமானம் போதும். அப்படிப் பார்த்தால் எனக்கு படிப்பு, சம்பாத்தியம் கணவர் தேவை இல்லே. என்னைப் புரிந்து நடக்கும் கணவர்தான் தேவை. நல்லவர் இருக்காங்க பொருங்க. கிடைப்பாங்க.” சொன்னாள்.

தண்டபாணி முகத்தில் பளீர் வெளிச்சம்.

‘கண்ணம்மா… பெயர் வைத்தாலே….துணிவு , முற்போக்கு சிந்தனையெல்லாம் வந்து பாரதி வாடை வருமோ…?’ – நினைக்க… தண்டபாணிக்குள் புளகாங்கிதம்.

“சரி. கண்ணம்மா…!” சந்தோசமாக சொன்னார். 

தொடர்புடைய சிறுகதைகள்
அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழையும்போதே என் மனைவி அருணா உர்ரென்றிருந்தாள். 'இன்றைக்கு நாம் ஒரு தவறும் செய்யவில்லையே!' - திக்கென்றது. "என்ன விசயம்..?" கேட்டேன். மௌனம்!! இந்த மௌனம் அரைமணிநேரம் கழித்து காபி கொடுக்கும்போதும் இருந்தது! அப்புறம் அதையும் தாண்டி நீடித்து இரவு ஒன்பது மணிக்கு சாப்பாடு ...
மேலும் கதையை படிக்க...
சொல்ல வந்ததைச் சொல்லி முடித்துவிட்ட திருப்தி. எதிரிக்கு..... யோசிக்க, நினைக்க அவளுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பில் நாற்காலியில் அமர்ந்தான் நந்தகோபால். சற்றுத் தள்ளி... 'இதற்காகவா இவ்வளவு கஷ்டம், எரிந்து விழுந்தோம், வாழ்க்கையை வீணாக்கினோம்..?'- தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து வெளியே வெறித்தாள் ...
மேலும் கதையை படிக்க...
புதுச்சேரி-நாகை பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சைப் பனாதி... வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. நாற்பத்தைந்து வயது தோற்றம். எதைஎதையோத் தின்று வெறுப்பேற்றினான். மரியாதை மருந்துக்குக் கூட ''சார்!'' நீட்டவில்லை. எனக்கு, இவன் அநாகரீகத்தை உணர்த்தி முகத்தில் கரி பூச ஆசை. கடலூர் பேருந்து ...
மேலும் கதையை படிக்க...
வெகு நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவிற்கு வந்த சுந்தர் இருக்கையை விட்டு எழுந்தான். தொலைபேசியை நெருங்கி ஒலி வங்கியைக் காதில் வைத்து எண்களை அழுத்தினான். '' ஹலோ. .! '' எதிர் முனையில் அவள்தான் எடுத்தாள். '' பிரதீபா ! நான் சுந்தர் பேசறேன் ...
மேலும் கதையை படிக்க...
படப்பிடிப்பு இடைவேளையில் தன் சக நடிகைகளுடன் அமர்ந்திருந்த நித்யாவிற்கு..எப்போதும் போல் இப்போதும் மனதிற்குள் அதே நினைவு, முக வாட்டம். இந்தத் தொழிலில் நான்கைந்து வருடங்களாக துணை நடிகையாக வாழ்க்கை நடத்தும் தனக்குத் திரைப்பட நடிகையாக வெளிக்காட்டிக் கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கம், கஷ்டம்.! தோழிகள், உறவினர்களிடம் ...
மேலும் கதையை படிக்க...
ஆள் கம்பெனியில் உயர் பதவி. நல்ல சம்பளம். அப்புறம் ஏன் சைடு பிசினஸ். ஐந்து பத்து லட்சம் போட்டு வியாபாரம் ? பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறான் ? சம்பாதிப்புக்கு வேலை. இருக்க ஒரு வீடு. திடீர் செலவிற்குக் கொஞ்சம் சேமிப்பு. மனைவி ...
மேலும் கதையை படிக்க...
"எதுக்கு நம்ம பெண்ணை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்காமல் அரசாங்க பள்ளியில் சேர்க்கனும் என்கிறீங்க...? "கண்ணகி கணவனைக் காட்டமாகக் கேட்டாள். பதில் பேசாமல் இருந்தான் சந்திரன். "தாய் மொழி பாசமா..?" "ம்ம்ம்ம்......'' "எனக்கும் தாய் மொழி பாசம், தமிழ் மேல விருப்பம் இருக்கு. ஆனாலும்....கால நிலவரத்துக்குத் தகுந்த மாதிரி ...
மேலும் கதையை படிக்க...
காலையிலேயே அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். பிரச்சனை. பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் தம்பி ஒரு வருட காலமாக குடி, கூத்தியாள் என்று ஒரே களேபரம். அதனால் மனைவி மக்களை அடித்து அட்டூழியம். அடித்தால் அவன் மனைவி மக்களுடன் என் வீட்டில் அடைக்கலம். நாசமாகப் போகிற ...
மேலும் கதையை படிக்க...
"நாவப்பழம்...! நாவப்பழம்...!" குரல் கேட்டு திரும்பினேன். தலையில் மூங்கில் கூடை சுமை. வயிறு வேறு பெரிசாய் எட்டு மாதம். வியர்வை ஒழுகும் முகம். அவள் அசைந்து அசைந்து வருவதைப் பார்க்கவேப் பாவமாக இருந்தது. கூடவே எட்டு வயது சிறுவன் வேறு. மேல் சட்டை ...
மேலும் கதையை படிக்க...
அறைக்குள் வந்து தன் எதிரில் சுவாதீனமாக அமர்ந்த அந்த இரு சுடிதார் அழகு இளைஞிகளைப் பார்த்ததும் சந்திரன் முகத்தில் மலர்ச்சி. "சந்திரன் ! நாங்க ரெண்டு பேரும் அதுக்காக வரலை. ஆண் விபச்சாரம் பத்தி புள்ளி விபரம் எடுக்க வந்த பத்திரிகையாளர்கள். !" ...
மேலும் கதையை படிக்க...
என்று விடியும்…?
மலரும் உறவுகள்
மனிதன்..!
பெண் அடிமை இல்லை…!
இவர்களும்…
சைடு பிசினஸ்
பள்ளிக்கூடம்..! – ஒரு பக்க கதை
எட்டாம் அறிவு !
நாவப்பழம்..! நாவப்பழம்…!
அவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)