எதிர் வீட்டிற்கு வேலையாய்ச் சென்ற மனைவி திரும்பி வரும்போது சுருசுருவென்று வந்தாள்.
”உங்களுக்கு நல்ல இடம் பெரிய இடம் பார்த்துப் பழகத் தெரியாது.” முணுமுணுத்து அருகில் அமர்ந்தாள்.
”என்ன ?” துணுக்குற்றேன்.
”எதிர்வீடு…..எவ்வளவு தாய் புள்ளையாய்ப் பழகுறாங்க. அவுங்க மனசு வருத்தப்படுறாப்போல நடந்துக்குறீங்களே நியாயமா ?” கடுகடுத்தாள்.
”விசயத்தைச் சொல்லு ?”
அவுங்க வீட்டுப் பையன் நாலு நாளைக்கு முன்னாடி உங்ககிட்ட சைக்கிள் இரவல் வாங்கிப் போனானாம். போன இடத்துல சாவியைத் தொலைச்சுட்டு பூட்டை உடைச்சி எடுத்து வந்து உங்ககிட்ட விபரம் சொல்லி வைச்சானாம். நீங்க அதெல்லாம் முடியாது. புதுப்பூட்டு வாங்கி சைக்கிளை சரி செய்து கொடுத்துட்டுப் போ சொல்லி அப்படியே வாங்கி வைச்சீங்களாம். வேலை இல்லாத பையன்கிட்ட பணம் ஏது. தன் அப்பாக்கிட்டதான் வாங்கி புதுப் பூட்டு வாங்கி வைச்சிருக்கான். சாதாரண காசு….சம்பாதிக்காத பையன்தானேன்னு மன்னிக்கக் கூடாதா ? தெரியாத வீட்டுப் பையன்போல சார் கறாராய் நடந்துக்கிட்டாருன்னு புருசன் பொண்டாட்டி ரெண்டு பேருமே சொல்லி வருத்தப்பட்டாங்க.”
”அப்படியா ? நான் போய் மன்னிப்புக் கேட்டுவர்றேன்.” கிளம்பினேன்.
”வாங்க சார்.” பத்மநாபன் வரவேற்றார்.
”நீங்க வருத்தப்பட்டீங்கன்னு காயத்ரி சொன்னாள். அதான் வந்தேன்…”
உடன் தாக்குதல் அவர்கள் எதிர்பாராத ஒன்று. ஆகையால்….
”அதெல்லாம் ஒன்னுமில்லே…” அவர் நெளிய… அவர் மனைவி முகத்தில் சங்கடம்.
”வேலை வெட்டி இல்லேன்னாலும் அம்மா அப்பா சொல்பேச்சு கேட்காம பொறுப்பா இல்லேங்குறது உங்களுக்கும் எங்களுக்கும் தெரிஞ்ச விசயம். விளைவு…உங்க வீட்டு சைக்கிளை ஒடைச்சு ஓரம் கட்டிட்டு என் சைக்கிளை வந்து எடுத்துப் போறவன் இரவலாச்சே அதை சரியாய்த் திருப்பனும் அக்கரை பயம் இல்லாம பல தடவை பழுதாய் வைச்சிப்போறான். இதைக் கண்டிச்சாத்தான் சரி வரும்ன்னு அவன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன். என் கண்டிப்பு, பாடம் இப்போ அவனுக்குப் புத்தி வந்து தன் சைக்கிளை சரி செய்;து வேளாவேளைக்கு வந்து வேலைக்கும் முயற்சி செய்றான். இது பையனைச் சரி செய்ய எடுத்த முயற்சி. தப்புன்னா மன்னிச்சுக்கோங்க.? எழுந்தேன்.
”சாரி சார்.” அவர் என் கையைப் பிடிக்க…
”மன்னிச்சுக்கோங்க சார்” அவர் மனைவியும் வருத்தப்பட்டாள்.
தொடர்புடைய சிறுகதைகள்
'' அப்பா. .! இங்கே கொஞ்சம் வர்றீங்களா. ..? '' தன் அறையில் சோகத்தின் பிடியில் அமர்ந்திருந்த சௌமியா தந்தை சந்திரசேகரனை அழைத்தாள்.
' எதற்காகத் தன்னை அழைக்கிறாள். ..? ஏதாவது கொட்டப்போகிறாளா. .? அழப்போகின்றாளா . .? கடவுளே. .! இதென்ன ...
மேலும் கதையை படிக்க...
மஞ்சள் துணிப்பையுடன் கர்ணம் அலுவலகத்தில் நுழைந்த சந்திரசேகரன் காதர் வேட்டி, காதர் சட்டையிலிருந்தார்.
"வாங்க ஐயா !"- வரவேற்றார் கர்ணம் ஏகாம்பரம்.
"உட்காருங்க..."எதிர் இருக்கையைக் காட்டினார்.
சந்திரசேகரன் தான் கொண்டு வந்த மஞ்சள் பையை மேசை மீது வைத்தார்.
"என்ன விஷயம்...?"
"என் பட்டாவுல சிக்கலிருக்கு...''
"என்ன சிக்கல்...? ''
"என் ...
மேலும் கதையை படிக்க...
' கணவன் அலுவலகம் சென்றதும் வீட்டிற்கு இன்னொருத்தன் வருவதும் போவதும். .. என்ன பழக்கம் இது. ...? என்ன கலாச்சாரம். .? ' - இப்படி எதிர் வீட்டைப் பற்றி தணிகாசலத்துக்குள் ரொம்ப நாளாக உறுத்தல், கேள்வி.
இவ்வளவிற்கும் எதிர் வீட்டிற்கு வருபவன், ...
மேலும் கதையை படிக்க...
"யார் இவள்..? எங்கோ. பார்த்த முகம் மாதிரி தெரிகிறது..?" என்கிற யோசனையுடன் அலுவலக வரவேற்பறையில் நுழைந்தான் தினேஷ்.
அவனைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த அவள் இவன் உள்ளே வர…மரியாதை நிமித்தம் சட்டென்று எழுந்து நின்றாள்.
"உட்காருங்க. யார் நீங்க..?" அமர்ந்தான்.
அவளும் அமர்ந்தாள்.
"பத்து நாளைக்கு முன்னாடி கோட்டுச்சேரியில் ...
மேலும் கதையை படிக்க...
அவசர சிகிச்சைப் பிரிவில், ''சார்! நீங்க தான் என் மனைவி காப்பாத்தனும்...'' என்ற முகேசை விலக்கி ஆளைப் பார்த்த சுதனுக்கு அதிகமான மின்னதிர்வு.
நிர்மலா துவண்ட கொடியாய் கட்டிலில் கிடந்தாள்.
மறைத்துக்கொண்டு ''என்ன உடம்புக்கு ?.'' அவனைக் கேட்டான்.
''என்னன்னு தெரியலை சார். இருந்தாப்போல இருந்து ...
மேலும் கதையை படிக்க...
கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. காரம் சாரம் குறையாமல் அலமேலு முகம் சிவந்து ' புசு புசு ' வென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும், அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
எழுந்து போய் கதவைத் திறந்தவளுக்குச் சின்ன அதிர்ச்சி , ...
மேலும் கதையை படிக்க...
அம்மா படுத்தப் படுக்கையாய்க் கிடப்பதைப் பார்த்து அக்காள், தம்பி, தங்கைகள் எல்லோருமே வருத்தப் பட்டார்கள்.
'' ஏன்டா. .! சென்னையில் ஒரு ஸ்பெசலிஸ்ட் இருக்காராமே ! அங்கே கொண்டு போய் அம்மாவைக் காட்டிக் குணப்படுத்தலாமா .? '' அக்காள் இவனை யோசனைக் கேட்டாள்.
'' ...
மேலும் கதையை படிக்க...
வீட்டில் தன்னந்தனியாய் படுத்தப் படுக்கையில் இருக்கும் அன்னபூரணியைப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது சுமதிக்கு.
' எப்படி நாறுந்தோலுமாய்ப் போய்விட்டாள் அம்மா..? !! ' - நினைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
இதே ஊரில் இரண்டு அண்ணன்கள் ... மனைவி , மக்களுடன் நல்ல ...
மேலும் கதையை படிக்க...
'இன்று துபாயிலிருந்து கஸ்தூரி நேராக தங்கள் வீட்டிற்கு வருகிறாள் !'- என்று செந்தில் சேதி சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேதி சொல்லி வைத்த அடுத்த விநாடியிலிருந்து கண்ணணைவிட சுமதிக்குத்தான் வயிற்றில் கலக்கம். வீட்டில் வேலை ஓடவில்லை.
இதே நிலைதான் மூன்று வருடங்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அந்தமான் எக்ஸ்பிரஸ் ஜம்மு காஷ்மீர் கட்ராவை நோக்கி சென்னையிலிருந்து மூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் பயண தூரமான மூன்றில் ஒரு பங்கைக் கடந்து கொண்டிருந்தது.
எஸ். 7 ல் பயணம் செய்யும் நான், பூவரசன், அழகேசன், குசேலனைத் தவிரஅமர்நாத்திற்குப் பயணம் செய்யும் ...
மேலும் கதையை படிக்க...