பாசம் – ஒரு பக்க கதை

 

ரவி தூரத்தில் வருவது தெரிந்ததுமே, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுப்ரமணியம் பாதியிலேரே எழுந்து மகனை சந்தோஷமாய் வரவேற்றார்.

“என்னப்பா… எப்படி இருக்க…?’ ரவி கேட்டான்.

“நல்லா இருக்கேன்டா… நீ எப்படி இருக்க…? ராதா எப்படி இருக்கா…? குழந்தை விவேக் எப்படி இருக்கான்?’

சுப்ரமணியன் பாசத்துடன் கேட்டார்.

“….ம்… எல்லாரும் நல்லா இருக்காங்க…’ சொன்ன ரவி,

“அப்பா… மருந்து மாத்திரையெல்லாம் இருக்கா…?’ என்று கரிசனத்துடன் கேட்டான்.

“இன்னும் பத்து நாளைக்கு இருக்குடா… நீ கவலைப்படாத…

ம்… இப்ப ராதா உன்கிட்ட சண்டை போடாம இருக்காளா…?’

கவலையுடன் கேட்டார்.

“ம்… இப்ப பிரச்னை ஒண்ணுமில்லப்பா…’ தலையைக் குனிந்து சொன்ன ரவி, “அப்பா… நான் வரட்டுமா…? நிறைய வேலை இருக்கு…’ சொல்லிவிட்டு விடை பெற்றான்.

“ஒரு நிமிஷம் இருடா…’ சொன்ன சுப்ரமணியம் வாசல்வரை வந்து மகனை வழி அனுப்பினார்!

“கடவுளே! அவனையாவது அவன் பிள்ளை முதியோர் இல்லத்துல சேர்க்காம இருக்கணும்…’

சுப்ரமணியம் கண்ணீர் விட்டபடி பிரார்த்தித்தார்.

– சித்ரா பாலசுப்ரமணியன் (மார்ச் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
மகளுக்காக ஒரு பொய்!
சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து, அந்த போலீஸ் வேன், பலத்த பாதுகாப்புடன் சிறைவாசி களுடன், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை நோக்கிச் சென்றது. வேனில், சிறைவாசிகள் எட்டு பேர் இருந்தனர்; அனைவரும் ஆயுள்தண்டனை கைதிகள். சில நிமிட கோபப் பிடியில் சிக்கி ...
மேலும் கதையை படிக்க...
வானொலியில் பொங்கும்பூம்புனல் போய்க்கொண்டிருக்கும் சுசான் கேற்றடியில்நின்றுகொண்டிருப்பான் ”காலை வெயிலில் நிறையவிட்டமின் “டி” இருக்கின்றது’ ஸ்கூலில் “ஹெல்த் மாஸ்டர் சொல்லியதை தன் மேனி இலேசாக சுடும்போது அவன் நினைத்துக்கொள்வான். இன்னும் ஒருபாடல் முடிவதக்குள் வந்துவிடுவாள் இப்படி அவன் நினைத்துக்கொண்டு சுவருக்கு ஒற்றைக்காலை உதை ...
மேலும் கதையை படிக்க...
மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?'' - பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள். ''ஆமாண்டியம்மா... ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி... வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் 'பாரதிம்மா... பாரதிம்மா...’னு ஓடிவந்து ...
மேலும் கதையை படிக்க...
கலவரம்…. பஸ்களை அடித்து நொறுக்கி தீயை வைத்து ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர் அந்த ஜாதி கட்சிக்காரர்கள். கலவரத்தைத் தூண்டி விட்டு விட்டு ஹாயாக ஓட்டல் ரூமில் ஸ்காட்ச்சை சுவைத்தபடி அமர்ந்திருந்தார் அந்த ஜாதிக் கட்சித் தலைவர் தண்டபாணி. தன் அடிப்பொடியிடம் வினவினார் ...
மேலும் கதையை படிக்க...
“என்னங்க…என்ன பேசாம நின்னுட்டிருக்கீங்க…போங்க…போங்க…போய்க் கூப்பிடுங்க…” – என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை வாசலை நோக்கி விரைவு படுத்தினாள் சாந்தி. இவள் எதற்காக இப்படிப் பரத்துகிறாள் என்பது எனக்குத் தெரியும். அறையிலிருந்தே மேனிக்கே ஜன்னல் வழியாகப் பார்த்தேன். ராஜப்பாதான் போய்க் கொண்டிருந்தார். ‘பாவம், ...
மேலும் கதையை படிக்க...
மகளுக்காக ஒரு பொய்!
விதியின் பாதையில்
தாய்வாசம்
ருத்ர தாண்டவம் – ஒரு பக்க கதை
வரும்….ஆனா வராது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)