அஞ்சலை வீட்டுக்குள் நுழையும்போதே ‘வெற்றிலை வாங்கிட்டியா, கொண்டா’ என்று மாமியார் கிழவி கையை நீட்டினாள்.
‘இப்ப என்னா, ஒரு நாள் வெற்றிலை இல்லைன்னா உசிரா போயிடும்?’
ஆமாண்டியம்மா, உன் கிட்ட சிக்க வச்சுட்டு, பாவிப்பய புள்ள போய்ச் சேர்ந்துட்டான் பாரு. எனக்கு நல்லா வேணும். நான் இனி ஒரு நிமிஷம் கூட இங்கிருக்க மாட்டேன்’. தடியை ஊன்றிக்கொண்டு வெளியேறினாள்.
களைப்புத் தீர படுத்து எழுந்த அஞ்சலை வேலை செய்த வீட்டம்மா கொடுத்த பலகாரப் பொட்டலாத்தைப் பிரித்தாள்.
நெய் வாசம் மணக்கும் அதிரசங்கள். பசங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள். மீதி இருந்த ஒன்றை வாயில் போடப்போகும் போது மாமியார் ஞாபகம் வர அப்படியே எடுத்து வைத்தாள்.
‘ஏலே பசங்களா, காளி கோயிலில் பாட்டி இருப்பாங்க. போய் கூட்டி வாங்கடா.
கோயிலில் கிழவியும் வருந்தினாள். பாவம் மருமகள். புருஷன்காரனை விபத்தில் பலிகொடுத்தவள். குழந்தைகளோடு என்னையும் சேர்த்து கஷ்டப்பட்டு உழைச்சுக் காப்பாத்தறாளே! நான் அவளை அனுசரிச்சு நடக்க வேண்டாமா? நான் இப்படி தொட்டதுக்கெல்லாம் கோவிச்சுக்க கூடாது இனிமேல். வழக்கம் போல் பேரப்பசங்க வாராங்களான்னு எட்டி எட்டிப் பார்த்தாள்.
- பாமதி நாராயணன் (பெப்ரவரி 2013)
தொடர்புடைய சிறுகதைகள்
இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே.
காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை போய்விட்டு வந்து விடலாம் என்கிற நினைவு தாங்கி நேற்று இரவு தூங்கிப்போனது தான். ஆனால் காலையில் எழும்போது வழக்கமான சோம்பலும் மிதமிஞ்சிப்போன ...
மேலும் கதையை படிக்க...
தெருவின் இருபுறமும் ட்யூப் லைட் வெளிச்சத்தில், உரல்களில் பெண்கள் மாவிடித்துக் கொண்டிருந்தனர். சில வீடுகளில் ஆண்கள் வெளியே பாயை விரித்து சீட்டு விளையாடுவதற்கு தயார் செய்து கொண்டிருந்தனர். ஒலிப்பெருக்கியில் குமரிப் பெண்ணின் உள்ளத்தில் குடியிருக்க அப்ளிக்கேஷன் போட்டுக் கொண்டிருந்தார் டி.எம்.எஸ். வேப்ப ...
மேலும் கதையை படிக்க...
அனந்தராமன் ராமாயண பாராயணம் முடித்து எழுந்தார். வழக்கமாக இவர் பாராயணம் முடிக்கும் தருவாயில் இவர் மனைவி அம்புஜம் நைவேத்தியம் என்று பாயஸமோ, சர்க்கரைப் பொங்கலோ, இல்லை ஏதாவது ஒரு சித்ரான்னமோ படைப்பாள். பயபக்தியாகக் கற்பூர ஆரத்தி வரை காத்திருந்து, பட்டாபிஷேக ராமருக்கு ...
மேலும் கதையை படிக்க...
அம்மா வர வர என்னால் வேலையே செய்ய முடியலே! வீட்டு வேலைக்கு யாராவது ஆள் கிடைத்தால் ஏற்பாடு செய்யேன்! நடுத்தர வயசில பாரு! ஏன்னா வீட்டுல வளர்ந்த பசங்க இருக்காங்க….என்றாள் கோமதி, ஊரிலிருந்து வந்த அம்மாவிடம்.
அம்மாவும், தன் கிராமத்துக்குப் போய், தூரத்து ...
மேலும் கதையை படிக்க...
சாயங்காலம் வந்துடுவியா? இல்லை ரவைக்குத்தான் வருவியா, சொல்லிட்டு போ, சேர்த்து வடிக்கணுமா வேணாமா? என்று கேள்வியை எறிந்து விட்டு பதில் வராமல் போகவே, குடிச்சுட்டு வந்தா கஞ்சி கிடையாது சொல்லிப்புட்டேன்! ஆமா! என்று உலை அரிசியைக் களைந்து அடுப்பில் ஏற்றி பானையில் ...
மேலும் கதையை படிக்க...
வேலைக்காரி – ஒரு பக்க கதை