பாசம் – ஒரு பக்க கதை

 

‘’வினோ, பேரன் பேத்திகளைப் பார்க்க அம்மா நாளைக்கு ஊரிலிருந்து வர்றாங்க. ஒரு வாரம் தங்குவாங்க. கொஞ்சம் பக்குவமா நடந்துக்கோ’’
– பார்த்திபன் தனது மனைவி வினோதினியிடம் கூற, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் அவள்.

‘கிழத்தை ஒரே நாளிலிலேயே துரத்திட வேண்டும்’ என மனதில் நினைத்துக் கொண்ட வினோதினி, மறுநாள் வந்து விட்ட தனது மாமியார் ஞானத்திடம் கடுமையாக நடந்து கொண்டு இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தாள்.

பொறுமையிழந்த ஞானம் இது பற்றி பார்த்திபனிடம் கூற, அவன் கண்டுகொள்ளவேயில்லை.

மறுநாள் காலையில் பாத்ரூமிற்குள் குளிக்கச் சென்ற வினோதினி வழுக்கி விழுந்து விட்டாள்,

டாக்டரை வரவழைத்துக் காட்ட, அவளைப் பரிசோதித்த டாக்டர், ‘’கணுக்கால் தசை பிசகி விலகியுள்ளது. ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுத்தால் சரியாய்ப் போயிடும்’’ என கூறி தைலம் தடவி, ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து விட்டுச் சென்றார்.

வினோதினி படுக்கையறையே கதியென இருக்க, ஞானம் சமையல் வேலையைப் ஆர்த்துக் கொண்டு பேரன், பேத்திகளை கொஞ்சி மகிழ, பொழுது போனது,

பார்த்திபன் கடவுளை நினைத்துக்கொண்டான். பாத்ரூமில் மனைவியை வழுக்கி விழ வைத்து, அப்பாவி அம்மாவை நிம்மதியாக நாலு நாள் வீட்டில் தங்க வைத்த கடவுளுக்கு நன்றி சொன்னான்.

- ஜி.ராஜா (ஜனவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
வெகு நாட்களுக்குப் பிறகு..... எனக்கு முள்ளின் மீது அமர்ந்திருக்கும் அவஸ்தை, உறுத்தல், தவிப்பு. அப்போதும் போல் இப்போதும் அதே புகைவண்டிப் பயணம். அன்று என் எதிரில் அமர்ந்திருந்தவன் என் எதிரி.! சம வயது. இன்று அப்படி அமர்ந்திருப்பவர் அப்பாவின் எதிரி. எனக்குப் பிடிக்காதவர். ...
மேலும் கதையை படிக்க...
நீங்கள் திருடி இருக்கிறீர்களா? திருட்டுக்கு உடந்தையாகவாவது உழைத்து இருக்கிறீர்களா? இல்லை திருட்டை ஒழிக்க பாடுபடுபவரா? உங்களிடம் தான் இந்த கதையை சொல்லியாக வேண்டும். நான் ஒரு திருடன் இப்போது அல்ல.மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.வெள்ளை வேட்டி சட்டை அணிந்துக் கொள்ளவில்லை.பதவி பிரமாணம் எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
ஏகாம்பரத்துக்கு நம்பவே முடியவில்லை. “நான் பொறந்து வளர்ந்த புழுதிக்காடா இது!’ அடியோடு மாறி இருந்தது அம்பலவாணர்புரம். இருபது வருஷம் கழிச்சு அமெரிக்காவிலிருந்து, தான் உருவான கிராமத்தைப் பார்க்க பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான் ஏகாம்பரம். சில்லாங்குச்சி விளையாடிய இடத்தில் கம்பீரமாய் ஒரு கண்ணாடி மாளிகை. கல்யாண மண்டபமாய் நின்றது. மண்ணை ...
மேலும் கதையை படிக்க...
“திருட்டுப்போன பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று வீட்டின் முன் தலையைச் சீவிக்கொண்டிருந்த பெண்ணிடம் சேதுபதி கேட்டான். “பொண்ணு ஊட்டயா கேக்குறீங்க?” “இல்லீங்க. திருட்டுப்போன பொண்ணுன்னு ஒருத்தங்க இருக்கங்களாமே அவுங்க வீட்டெ கேட்டன்.” “அது பேரூதான் பொண்ணு.” “நீங்க ஆள மாத்தி சொல்றீங்கின்னு நெனக்கிறன்.” லேசாக சிரித்துக்கொண்டே அந்தப் ...
மேலும் கதையை படிக்க...
சடகோபன் இருபத்து மூன்று வயது வரையிலும் தீவிர முருக பக்தனாக இருந்தான். வைணவக் குடும்பத்தில் இது அரிது என்றாலும் அவன் தகப்பனாரிடமிருந்து தொத்திய நம்பிக்கை. அவன் அண்ணன்கள் இருவரும், அக்காக்கள் மூவரும், அம்மாவும் இதற்கென்றே அவனைக் கேலி பேசுவார்கள். பக்கத்திலிருந்த சிவன் ...
மேலும் கதையை படிக்க...
"எங்கள் வீட்டுக்குப் பாலன் வருவானா?" என்று ஆயிரத் தடவை கேட்டுவிட்டாள் பிலோமினா. அன்று விடிந்தால் நத்தார்த் திருநாள். "நிச்சயமாக வருவார்" என்ற பதிலைத்தான் திருப்பித் திருப்பிச் செல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. "அவர் எப்போது அம்மா வருவார்?" "இரவைக்குத்தான் வருவார்." "அவர் வந்தா எனக்குக் காட்டுவாயா அம்மா?" "ஓ, ...
மேலும் கதையை படிக்க...
வேஷம்
வீட்டு நடையில் சலீம் காலடி எடுத்து வைக்கும் போது, நடையின் ஓசையின் மூலம் அவனது வருகையை தெரிந்து கொண்ட அவனது உம்மா பாத்திமா, ""டேய் சலீம்... நில் அங்கேயே... வீட்டுக்குள்ளே வராதே... உன்னை பெத்த என் வயித்துல பிரண்டைய வச்சுதான் கட்டணும். ...
மேலும் கதையை படிக்க...
பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி ...
மேலும் கதையை படிக்க...
வைகறை ஞாயிற்றின் முதல் கீற்று அந்த ஊரில் பாட்டிமீது தான் முதலில் விழும். வெண்ணாற்றில் குளித்து முடித்து ஈரப்புடவை சொட்டச்சொட்ட நின்றபடியே அந்த முதல் ஒளியை எதிர்நோக்கி ஜபத்தையும் அங்கேயே முடித்துக்கொண்டபின் குடத்தை எடுத்துக்கொண்டு ஆள் உயரம் உள்ள படுக்கைக் கரையில் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய என்னுடைய ‘தனிமை’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோபத்துடன் செருப்பை மாட்டிக்கொண்டு சபரிநாதன் தெருவில் இறங்கி நடந்தார். காந்திமதி அவளுடைய வீட்டுத் திண்ணையில் தூணை மார்போடு கட்டியபடி நின்று கொண்டிருந்தாள். கடலின் அலை வேகமாகப் பின் வாங்குவது போல, ...
மேலும் கதையை படிக்க...
வேண்டாதவர்…!
தந்தை சொல்மிக்க
(ஏ)மாற்றம் – ஒரு பக்க கதை
திருட்டுப்போன பொண்ணு
சூரிய நமஸ்காரம்
பாலன் வந்தான்
வேஷம்
ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்
உயிர் மேல் ஆசை
தவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)