பழசு – ஒரு பக்க கதை

 

பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய இளமதியன் ஊரிலிருந்து வந்திருந்த தனது தாத்தாவைப் பார்த்ததும் சந்தோத்தில் திக்குமுக்காடிப்போனான்.

”தாத்தா எப்போ வந்தீங்க..? ” கேட்டுக்கொண்டே அவர் மடியில் அமர்ந்தான்.

”காலையிலேதான் வந்தேன், நல்லா படிக்கிறியா ராசா…’!’

ம்…தாத்தா, போனவாட்டி மாதிரி எனக்கு கதை சொல்லிகுடுங்க….!

”உன் அப்பாவோட கதையே பெரிய கதை. இப்போ நீயும் உன் அப்பா அம்மாவும் வசதியா இருக்குற மாதிரி, நானும் உன் அப்பாவாவும் இல்ல. அந்தக் காலத்துல கரண்ட் கிடையாது. அரிக்கேன் விளக்குலதான் படிச்சான். போட்டுக்க நல்ல சட்டை கிடையாது. சாப்பாட்டுக்கே கஷ்டம். அந்தக் கஷ்டத்துல உன் அப்பா எஸ்.எஸ்.எல்.சி.யிலயும் பிளஸ் டூவிலயும் தோத்துத்துட்டு அப்புறமா எழுதி பாஸ் ஆகி டிகிரி வாங்கிட்டான்….!

”அப்பா…எதுக்கு தேவையில்லாம பழசையெல்லாம் அவன்கிட்டே சொல்றீங்க…? நான் ஃபெயில் ஆன விஷயம் ரொம்ப முக்கியமா…? தனது தந்தை மீது கோப்ப்பட்டான் இளமதியனின் தந்தை.

இல்லடா…இன்னைக்கு படிக்குற புள்ளைங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கு, கஷ்டம்னா என்ன்னன்னு தெரியல, தோல்வியக்கூட தாங்கிக்கத் தெரியல, குழந்தைகளுக்கு அத சொல்லித்தரணும், கஷ்டத்த சகிச்சுக்கிட்டும் தோல்விய தாங்கிக்கிட்டும் பழக கத்துக்கிட்டாங்கன்னா எதிர்காலத்துல உன்ன மாதிரி தன்னம்பிக்கையோட வருவாங்ங…!

அவர் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்து மௌனமாக வெளியேறினான் இளமதினின் தந்தை.

- 19-9-12 

தொடர்புடைய சிறுகதைகள்
சிறுமி ஜெலினாவிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து பக்கத்து கடைக்குச் சென்று வாஷிங் சோப்பும் ஷாம்பும் வாங்கி வரும்படி சொன்னாள் அவளது தாய் ஜமுனா. சரிம்மா! என்றபடியே உற்சாகமாய் கடையை நோக்கி நடந்தாள். கடைக்காரரிடம் வாஷிங்சோப்பும் ஷாம்புவும் கேட்டு வாங்கிவிட்டு பத்து ரூபாய் ...
மேலும் கதையை படிக்க...
மயில்சாமி வெளிநாட்டில் இரண்டு வருடம் வேலை செய்துவிட்டு ஊர் வந்தபோது முதல் இரண்டு நாட்கள் தனது உறவுக்காரர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்பட்டான். நாட்கள் நகர நகர அவனுக்கு கிடைத்த மரியாதை காற்றில் கரையும் கற்பூரம் போல கரைந்து போனது. வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சேமித்த இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தின் தேர்வு பேப்பர் திருத்தப்பட்டு வாங்கியதிலிருந்து மதிவதனி ஒரு மாதிரியாகவே இருந்தாள். காரணம், அதில் முப்பது மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். மாலை ஐந்து மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு எல்லோரும் புறப்பட்டுப்போன பின்பும் மதிவதனி வீட்டுக்குப் போகாமல் அழுதபடியே நின்றாள். ‘ஏம்மா அழறே’ தலைமை ...
மேலும் கதையை படிக்க...
நடுநிசி கழிந்த பிறகும் சூரியன் வீசியிருந்த வெக்கையின் பாய்ச்சல் தணிந்தபாடில்லை. காற்று வீச மறுத்து அடங்கி கிடந்தது.. ஊர் ஜனங்கள் திரண்டிருந்த இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் சமய சொற்பொழிவு முடிந்து நடந்த சிறப்பு பூஜைக்குப்பிறகு வந்திருந்த கூட்டம் மெல்ல மெல்ல ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடு திரும்பினேன். பூட்டியிருந்த அறைகதவின் வாசற்படியில் அமர்ந்திருந்தார் தாமோதரன் பெரியவர். என்னைக் கண்டதும் கையிலிருந்த தடிக்கம்பை தரையில் ஊன்றியபடி மெல்ல எழுந்து வாசற்கதவை திறக்க வழி விலகி நின்றார். அவரது முகம், தலை, மார்பு என்று அனைத்து ...
மேலும் கதையை படிக்க...
நாணயம் – ஒரு பக்க கதை
சுவர்
தேர்வு – ஒரு பக்க கதை
வெந்து தணியும் வெஞ்சினங்கள்
தோட்டத்தில் ஒரு வீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)