பரீட்சைகள் – ஒரு பக்க கதை

 

விளையாடி விட்டு வீட்டுக்குள் வந்த சிறுவன் குமரேஷை, ”படிக்காமல் என்ன விளையாட்டு எப்போதும்?” என்று அம்மா சத்தம் போட்டாள்

பதிலேதும் சொல்லாமல் டி.வி.ரிமோட்டைக் கையில் எடுத்தான் அவன்.

என்ன பண்றே? சானலை மாத்தி கார்ட்டூன் பார்க்க உட்காரப் போறியா? நீ உன் ரூமுக்குள் போய்ப் படி…எதையும் இப்போ மாத்தக்கூடாது” என்றாள் அம்மா.

சிரித்தபடியே அம்மாவைப் நிமிர்ந்து பார்த்த குமரேஷ் ரிமோட்டில் மியூட் பட்டனை அழுத்தி விட்டு சொன்னான்:

”நான் சானலை மாத்தலம்மா…கீழ் ஃபிளாட் மகேஷ் அண்ணா பெரிய பரீட்சைக்குப் படிக்கிறான்…நம்ம வீட்டு டி.வி.சத்தம் அவனுக்குப் பயங்கர தொல்லையாக இருக்கும்…பாவம்மா அவன்..அதனால சவுண்டைக் கம்மியா வச்சிட்டுப் போறேன்.”

பெருமையுடன் அவனைப் பார்த்தாள் அம்மா.

- பர்வதவர்த்தினி (8-6-11) 

தொடர்புடைய சிறுகதைகள்
'ணங்'கென்ற சத்தத்துடன் முதலில் ஒரு பித்தளைக் குடம் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக வைக்கப்பட, தேசிய நெடுஞ்சாலையின் அந்தப் பகுதியே பல வண்ணக்குடங்களினால் போடப்பட்டது போல் தோற்றமளித்தது. வானம் பார்த்த பூமியான கருத்தம்பட்டி கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
காலையில் கண் விழித்ததும் அசதியாக இருந்தது. இரவெல்லாம் சரியாக உறக்கம் இல்லை. விழித்திருக்கிறேனா இல்லையா என்று தெரியாத ஒரு மயக்கநிலையிலேயே இரவு கழிந்துவிட்டது. ஏதேதோ கனவுகள் வேறு. உடல் வலியைவிட மன அசதியே பெரிதும் இருந்தது. அனு பக்கத்தில் இன்னும் உறங்கிக் ...
மேலும் கதையை படிக்க...
மாலை ஐந்து மணி. ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. எனது இரு சக்கர வாகனம்...வாகனங்கள் வரிசையில் கடைசியாக நின்றது. கும்பலாக நாலைந்து சிறுவர்கள்... பனை ஓலையில் நுங்கைக் கட்டிக் கொண்டு... '' சார் நுங்கு.. ! சார் நுங்கு...! '' - நிற்கும் பேருந்து, நான்கு ...
மேலும் கதையை படிக்க...
கமலம் மாமி ரொம்ப கெட்டிக்காரி. படு சாமர்த்தியம். கட்டும் செட்டுமா அவ குடித்தனம் நடத்துகிற அழகே தனி. மாமிக்கு ஐம்பத்தியெட்டு வயதானாலும் பார்ப்பதற்கு நாற்பத்தியைந்துக்கு மேல் மதிப்பிட முடியாது. எப்பவும் தேனீயைப் போல சுறுசுறுப்புடன் வளைய வருவாள். நங்கநல்லூரில் வாசம். வீட்டை சுத்தமாக ...
மேலும் கதையை படிக்க...
எதிரில் வந்த என்னைக் கவனிக்காமல் தெரு திருப்பத்தில் திரும்பி ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டின் முன் வண்டியை நிறுத்தி படியேறும் ரமேசைப் பார்க்க எனக்குள் பரவசம். நான் இவனைப் பிஞ்சிலேயேத் தூக்கி கொஞ்சிய பக்கத்துவீட்டுப் பிள்ளை. பத்து வயதுவரை என் மடியில் ...
மேலும் கதையை படிக்க...
மாயப் பெட்டியும் மாறாத மனிதர்களும்
அப்பாவின் புத்தக அலமாரி
நுங்கு… நுங்கு…!
மாமியாரின் மாமியார்
வலி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)