பரிசு… – ஒரு பக்க கதை

 

ஆற்றங்கரையின் படிக்கட்டில், தன் மனசு போலவே தண்ணிரும் கலங்கி ஒருவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சரவணன்.

‘முதல் பரிசு வாங்கிவிடலாம் என்று எவ்வளவு ஆசையாகப் போட்டியில் சேர்ந்து கஷ்டப்பட்டு பயிற்சி செய்ததெல்லாம் வீணாயிற்றே’ என்று தோன்றிய எண்ணங்களை உதறிவிட்டு சட்டையக் கழற்றினான்.

அப்போது ‘ஐயையோ என் ராசாத்தியை யாராவது காப்பாற்றுங்களேன்’ என்ற குரல் காதில் விழுந்தது. மறுவிநாடி நீரில் பாய்ந்தான். ஆற்றுத் தண்ணீரில் முங்கி முங்கி வெளியே வந்து தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு வயது ராசாத்தியின் அருகில் சென்று லாகவமாகப் பிடித்து பத்திரமாகக் கரையில் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.

‘என் மகளைக் காப்பாத்திய தெயவம்பபா நீ’ என்று அந்தத் தாய் சரவணின் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அந்தத் தாயின் கண்ணீர் அவனைச் சிலிரக்க வைத்தது.

நீச்சல் போட்டியில் பரிசு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இப்பொழுது அவனிடம் இல்லை. அதை விட பெரிய பரிசு அல்லவா கிடைத்திருக்கிறது என்று நினைத்தபடி மகிழ்ச்சியோடு மீண்டும் நீந்த ஆரம்பித்தான்.

- டி.ஜானகி, கரூர் (ஏப்ரல் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
இந்தத் தொழில்நுட்ப யுகம் எந்தளவுக்கு நம்மை மனித உறவுகளில் இருந்து அப்பால் இழுத்துச்சென்று அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிவதில்லை. இதைப்பற்றி சிந்திக்க எப்போதாவது நாம் ஒரு நிமிடத்தை ஒதுக்கியுள்ளோமா? அனுபவங்கள் அவரவருக்கு தலையிடியாக வந்து குத்திக்குடையும் போதுதான் ...
மேலும் கதையை படிக்க...
சிவசு அய்யாவுக்கு அந்த வாசனை மட்டுப்பட்டது. மேலும் மூக்கைச் சுருக்கி அதை உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றார். அதே வாசனைதான்! ஏதோ யூகத்துடன் விறுவிறுவென கொல் லைப் பக்கம் சென்றார். கொல்லையின் புறத்திலிருந்து நீண்டிருந்த வயல்வெளி வரப்பில் முத்து சென்றுகொண்டு இருந்தான். புழக்கடைத் தொட்டித் ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவுக்கு இறுதி சடங்குகள் யாவும் நல்ல படியாக நடந்து முடிந்தது. நான் எனது உடைகளை பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தேன். மாலை ஆறு மணிக்கு சென்னைக்கு டிரெயின். எல்லா உடைகளையும் எடுத்து வைத்து பெட்டியை மூடிய போது சித்தி அறைக்குள் ...
மேலும் கதையை படிக்க...
தாயே! உன்கிட்ட வேண்டியபடியே என் பொண்ணுக்கு நல்ல இடத்திலே சம்பந்தம் கிடைச்சிடுத்து, நான் நினைத்தபடியே உன் அருளாலே உன் கோயில்கிட்டேயே ஒரு கல்யாண மண்டபமும் கட்டி முடிச்சாச்சு, நீதான் கூட இருந்து நல்லபடியா என் பொண்ணோட திருமணத்தை முதல் திருமணமா அந்த ...
மேலும் கதையை படிக்க...
மவுனத்தின் குரல்!
மனோகருக்கு, "விர்' ரென்று ஒலியெழுப்பிய அலாரத்தின் ஓசை, திடுக்கிட்டு விழிக்கச் செய்தது. உருப்படி புரியாத ஏதோவொரு கனவுதான் என்றாலும், அது ஏதாவதொரு சந்தோஷமான கனவு என்ற அளவில் தான் நினைவு இருந்தது. ஏனென்றால், அவன் எதற்காகவோ, மகிழ்ச்சியுடன் கனவில் சிரித்த போதுதான், ...
மேலும் கதையை படிக்க...
ஸ்மார்ட் போனின் அன்பு
தேவைகள்
தீராத விளையாட்டுப் பிள்ளை
கரை ஒதுங்கிய காற்று
மவுனத்தின் குரல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)