பட்டுப் புடவை – ஒரு பக்க கதை

 

நந்திதாவின் கல்யாணத்திற்காக ஸ்பெஷலாக நெய்யப்பட்டிருந்த அந்த பட்டுப்புடவையை நூறாவது தடவையாக எடுத்து அழகு பார்த்தாள் நந்திதா.

கிட்டத்தட்ட அந்தப் புடவையின் விலை மட்டும் ஐம்பது லட்சம் என அவளது அப்பா சொன்னார். புடவையை டிசைன் செய்தது. நந்திதாவுக்கு கணவனாக வரப்போகும்
விஷ்ணு. இதுவரை எந்த மணமகளும் அணியாத வகையில் நந்திதாவின் புடவை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நந்திதாவின் மீது விஷ்ணு வைத்துள்ள
காதல் அவளுக்குப் புரியும் என்பதால், செலவைப்பற்றி கவலைப் படாமல், காசை வாரி இறைத்து அந்தப் புடவையை நெய்யச் சொல்லியிருந்தான்.

அன்றும் புடவையை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவளது அப்பா சந்தானத்தின் சத்தம் கேட்டது.

“அம்மா நந்திதா… விஷ்ணு சார் வந்திருக்கார்… அந்தப் புடவையை எடுத்துட்டு வாம்மா…’ என்று சொல்லவும், கையில் எடுத்த புடவையை அதற்கென்று இருந்த அட்டைப்பெட்டியில் வைத்து, அப்பாவிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.

புடவையை விரித்துப் பார்த்த விஷ்ணு அசந்து விட்டான்.

“சார் நான் நினைச்சதை விட அருமையா நெய்திருக்கீங்க…எங்க கல்யாணத்திற்கு வர்ற எல்லாரும் புடவையைப் பார்த்து மூக்கில் விரலை வைக்கப் போறாங்க பாருங்க… எல்லா பத்திரிகையிலும் இந்தப் புடவையைப் பத்தின நியூஸ்தான் ஹைலைட்டா இருக்கப்போகுது பாருங்க… இந்தாங்க சார், இந்தப் புடவை நெய்ய நீங்க கேட்ட பணம்’ என்று புடவை நெய்ததற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, புடவையுடன் கிளம்பிய விஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஏழை நந்திதா!

- எஸ்.செல்வசுந்தரி (பிப்ரவரி 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
அழுக்கு நாலு முழ வேட்டியோடு வந்து கொண்டிருந்த பழனியை வழியிலேயே மடக்கினான் முருகன். அவருக்கு செலவுக்கான பணத்தைக் கொடுத்து வழியனுப்ப முயன்றான். வீட்டைப் பார்த்தே ஆக வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தார் பழனி. ‘’டேய் முருகா, என் பேரனைப் பார்த்து ஒரு வருசமாகுது’ மன வருத்தத்தோடு ...
மேலும் கதையை படிக்க...
திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செலவநாயகமும் - ஒரு அறிமுகம்: [+] பொங்கல் விடுமுறை நாட்களானதால் வேர்கடலைச் சங்கத்தில் அதிகமாகக் கூட்டமில்லை. வெனிஸ் அறையில் பதினைந்து பேர் இருக்கலாம். வழக்கமாக வரும் சாமி நாதன், சாய் பிரபு, நெடுமாறன். அருகில் புதிதாக ஒரு ...
மேலும் கதையை படிக்க...
வீடு…. எல்லாம் முடிந்த மயான அமைதி. படுத்தப் படுக்கையாய் இருந்த அம்மா நாற்காலியில் அமர்ந்து இன்னும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். கொள்ளி வைத்து விட்டு திரும்பியதற்கடையாளமாய் மொட்டை அடித்து தினேஷ் சோபாவில் அமர்ந்து வீட்டின் கான்கிரீட் தளத்தை இலக்கில்லாமல் வெறிக்கப் பார்த்துக் ...
மேலும் கதையை படிக்க...
அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என நினைத்துக்கொண்டு கவலையடைந்தாள் புனிதம். வயது அதிகரிப்பது ஒன்றும் புதினமான சங்கதியில்லை என்பது தெரிந்திருந்தாலும் இப்பொழுதெல்லாம் வயதின் நினைவும், அதையொட்டிய கவலைகளும் தோன்றுவதற்குக் காரணம் அவன்தானோ? அவனைக் காண நேர்ந்தபிறகுதானே இந்தப் புதுமையான மனக்கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. ...
மேலும் கதையை படிக்க...
நீரோட்டம்
அவன் ஈரத்தரையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது. புங்க மரத்தடி காலை நிழல் இதமானதாக இருந்தது. என்னைப் பார்த்ததும் அவசரமாக எழுந்து வந்தான். அவன் கையில் மூங்கில் குச்சி ஒன்று இருந்தது. ஈரத் தரையைப் பார்த்தேன். செவ்வக வடிவில் கோடிட்டு இருந்தான். ...
மேலும் கதையை படிக்க...
பொய் – ஒரு பக்க கதை
காசிருந்தால் கல்யாணம்
அப்பா…!
ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள்
நீரோட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)