பக்குவம்

 

வாங்க ! வாங்க சார் ! வெங்காயம் கிலோ பதினைஞ்சு ரூபாய், தக்காளி கிலோ பத்து ரூபாய் என்று கூவி விற்றுக்கொண்டிருந்தான் தன்னாசி.தன்னாசியின் குடும்பத்தை சிறுவயது முதலே எங்களுக்கு தெரியும்.அந்த சந்தையில் வரிசையாக கூவி விற்று கொண்டிருப்பவர்களில் இவன் குரல் தனியாக தெரியும். நல்ல உச்சரிப்புடன் கூவுவான். நான் கூட தன்னாசி நீ ரேடியோ ஸ்டேசனுக்கு வேலைக்கு போயிருந்தா உன் உச்சரிப்புக்கே வேலைக்கு எடுத்திருப்பாங்க என்று நகைச்சுவையாக பேசுவதுண்டு.அதுக்கெல்லாம் எனக்கு கொடுப்பிணை இல்லைம்மா. படிப்பு ஏறலை, எங்க குடும்பம் எல்லாம் இந்த சந்தையிலேயே காய்கறி வியாபாரம் பண்றவங்க, அதுனால இதுல இழுத்து விட்டுட்டாங்க, எங்க காலமும் இப்படியே ஓடிடுச்சு.சொல்லிக்கொண்டே காய்கறிகளை வாகாய் பொறுக்கி போடுவான்.

இங்க பாரு தன்னாசி இந்த காய் சொத்தை மாதிரி இருக்கு, என்றவளிடம் அம்மா உங்களுக்கெல்லாம் அப்படிப்பட்ட காய் போட மாட்டேன் என்பான். அப்ப மத்தவங்களுக்கெல்லாம் போடுவ இல்லையா? என்று அவனை மடக்கி விட்ட திருப்தியில் கேள்வி கேட்டால் அம்மா கொஞ்சம் கீழே பாருங்கம்மா என்று காட்டுவான். அவன் காட்டிய இடத்தில் பழையதும் அழுகியதும் ஒரு கூடையில் வைக்கப்பட்டிருந்தது.இதெல்லாம் எங்க போகுது? என்ற கேள்வியை வீசினேன்.எப்படியும் ஓட்டல்காரனுக்குத்தான் போடுவான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு.சாயங்காலம் ஒரு மாட்டுக்காரன் வந்து வாங்கிக்குவான். சும்மாதான் கொடுப்பேன்.வாயில்லா ஜீவங்களும் கொஞ்சம் சாப்பிடட்டுமே. சொல்லிவிட்டு சிரிப்பான்.

திடீரென்று என்று எங்கள் பேச்சு தடைப்பட்டது. என்ன தன்னாசி என்று நோட்டும் கையுமாக ஒருவர் வந்து நிற்க கொஞ்சம் இருங்கம்மா என்று சொல்லி காய்கறிகள் வைத்திருக்கும் கீழ்ப்புறமுள்ள சாக்குப்பைக்குள் கையை விட்டு பணம் எடுத்து எண்ணி வந்தவர் கையில் கொடுத்தான். அவர் எண்ணி அதை நோட்டு புத்தகத்தில் குறித்துக்கொண்டு வரட்டுமா தன்னாசி என்று கிளம்பினார்.

எனக்கு தேவையான காய்கறிகளை பொறுக்கி எடுத்து, கொண்டு வந்த பையில் போட்டு எவ்வளவு ஆச்சு? என்று கேட்டேன். சொன்ன தொகையை என் கையில் இருந்த கைப்பையில் இருந்து பணம் எடுத்து கொடுத்து விட்டு இது இங்கேயே இருக்கட்டும், நான் உள்ளே போய் கொஞ்சம் பழமெல்லாம் வாங்கிட்டு வந்திடறேன்.அவனும் என் காய்கறி கூடையை வாங்கி தன் பக்கத்தில் வைத்துக்கொண்டான்.நான் சந்தையின் உள் புறம் நடக்க ஆரம்பித்தேன்.

மதியம் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து வாயில் போடும்போதுதான் கவனித்தேன். கையிலிருந்த வளையலை காணவில்லை. மனது திடுக்கிட்டது.

எங்கே போயிருக்கும்? ஒன்னரை பவுன் இருக்கும்.எங்கேயும் கழட்டி வைத்தது போல் ஞாபகம் இல்லை, காலையில் வெளியே கிளம்பும்போது கையில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. அப்படியானால் எங்கே போயிருக்கும்.

அந்த காய்க்கடையில் காய்கறிகளை பொறுக்கி எடுத்தது ஞாபகம் இருக்கிறது. அப்பொழுது வளையல் கழண்டு விழுந்திருக்கலாமோ? மனதுக்குள் கேள்வி எழ அவசர அவசரமாய் வீட்டை பூட்டிக்கொண்டு அந்த வெயிலில் காய்கறிகள் சந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

தன்னாசி, கடை முழுவதும் தேடிப்பார்த்து விட்டு உதட்டை பிதுக்கினான்.

வீட்டுல நல்லா தேடிப்பார்த்தீங்களாம்மா? கேட்டவனிடம் பார்த்துட்டேன் தன்னாசி என்று மட்டும் பதில் சொன்னேன். உள்ளே சென்று பழக்கடையிலும் தேடிவிட்டு உதட்டை பிதுக்கிக்கொண்டு வெளியே வந்தேன்.

இன்றைய மதிப்பில் ஐம்பாதியிரம் ரூபாய்க்கு மேல் ஆகும். அவருக்கு தெரிந்தால் வீட்டில் கண்டிப்பாய் சண்டை தான். மனசு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

ஒரு வேளை தன்னாசி கடையிலே விழுந்திருந்தாலும் விழுந்திருக்குமோ, சுளையாக ஐம்பதாயிரம் மதிப்புள்ள வளையல் கிடைத்தால் யாருக்கு திருப்பி கொடுக்க மனசு வரும்? மனசு விரும்பாவிட்டாலும், அறிவு அவனாகத்தான் இருக்கும் என்று அடித்து சொன்னது.

வீட்டில் சொன்னவுடன் எதிர்பார்த்தது போல் அவர் சண்டைக்கு வரவில்லை. எங்கேயாவது கழட்டி வச்சிருப்ப, நல்லா தேடிப்பாரு,நிதானமா யோசி, சொல்லிவிட்டு அவர் வேலையை கவனிக்க சென்று விட்டார். எனக்கு தன்னாசி மேல்தான் சந்தேகம் இருப்பதால் மற்றவற்றை யோசிக்க முயற்சிக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சந்தைக்குள் சென்றவள், தன்னாசியை பார்க்கவே வெறுப்பாக இருந்தது. இதற்கும் அவன் என்னம்மா வளையல் கிடைச்சுதா? என்று அக்கறையுடன் கேட்டதற்கு அது எப்படி கிடைக்கும் என்று குதர்க்கமாய் எதிர் கேள்வியை போட்டு அவன் கடையை விட்டு விலகி அடுத்த கடையை நோக்கி நடந்தேன்.

எப்பொழுதும் நாலு வார்த்தை அவனிடம் பேசிவிட்டு ஏதேனும் இரண்டு மூன்று காய் கறிகள் வாங்கிவிட்டுத்தான் அடுத்த கடையை நோக்கி போவேன். ஆனால் இன்று அவன் கடையில் நிற்கவே என் மனது கேட்கவில்லை. அவன் கவலையுடன் என்னை பார்ப்பது போல் என் உள்ளுணர்வு சொல்லியது.

மறு நாள் காலை எட்டு மணி இருக்கும், கதவு தட்டப்பட்டது,கதவை திறந்த என் கணவர் எதிரில் தன்னாசி நிற்பதை பார்த்ததும் என்ன தன்னாசி இந்நேரத்துக்கு இந்த பக்கம், அம்மா ஏதாவது சொல்லியிருந்ததா? இல்லீங்கய்யா ! அம்மா வளையல் என் கடைக்கு வந்தபோது கானோம் அப்படீன்னு சொல்லியிருந்தாங்க, என் மேல கூட சந்தேகப்படறமாதிரி இருந்தது. நான் அப்படிப்பட்டவனெல்லம் இல்லையா ! என்று சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு கேட்டுக்கொண்டிருந்தது. என் கணவர் சே சே தன்னாசி என்ன சொல்றே? உன் அப்பா எங்கிட்ட படிச்ச பையன், நீயெல்லாம் என் கண் முன்னாடி வளர்ந்த பையன், அப்படி இருக்கும்போது அப்படியெல்லாம் நினைக்க மாட்டோம். இல்லீங்கய்யா அம்மா எப்பவும் என் கடையில எதுவும் வாங்கலியின்னா கூட நாலு நல்ல வார்த்தை பேசிட்டு போவாங்க, நேத்து சரியா கூட பேசாம போயிட்டாங்க அதனாலதான் மனசு கேக்கல, என்று கண்களில் கண்ணீர் வர பேசியவனிடம் காவேரி முதல்ல காப்பி போட்டுட்டு வா, என்று சொல்லிவிட்டு முதல்ல உட்காரு, அன்று அவனை உட்கார வைத்தவர், நான் காப்பி போட்டு கொண்டு வந்ததை அவனிடம் கொடுத்து என்ன காவேரி நம்ம தன்னாசிய சந்தேகப்படறீயா? என்று கேட்டவருக்கு நான் “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல”, என்னை தப்பா நினைச்சுக்காத தன்னாசி, வளையல் தொலைஞ்சதுல மனசு கொஞ்சம் வருத்தம் அவ்வளைவுதான்.அவனை சமாதானப்படுத்தி அனுப்பினோம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, வெளியூரில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் எங்கள் மகளும், மகனும் வந்திருந்தார்கள். அவர்களை வைத்து சமையலறையை கொஞ்சம் சுத்தம் செய்யலாம் என்று கூப்பிட்டேன். என்னம்மா நீ என்று அலுத்துக்கொண்டே வந்த மகள் சமையலைறை ஓரத்தில் இருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாய் எடுத்து வெளியே வைத்துக்கொண்டிருந்தவள் அம்மா இங்க பாரு என்று எதையோ எடுத்து வந்து காட்ட அது என் வளையல். எங்கடீ கிடைச்சது?என்று கேட்டவளுக்கு, பாத்திரங்களுக்கு நடுவுல கிடந்தது என்றாள்.

காய்கறிகளுடன், வெங்காயத்தை கீழே கொட்டும்போது அதற்குள் கழண்டு இருந்த வளையல் உருண்டு அந்த பாத்திரங்களின் நடுவில் விழுந்திருக்கலாம் என முடிவு செய்தவள்
என் கணவன் சொன்ன “தேடிப்பாரு” என்ற வார்த்தையை கேட்டு தேடி இருந்தால் பாவம் ஒரு அப்பாவி பையனின் மனதை நோக வைத்திருக்கவேண்டியதில்லையே.கிட்டத்தட்ட நாற்பத்தி ஐந்தை நெருங்கிக்கொண்டிருக்கும் எனக்கு வயதுக்கு தகுந்த பக்குவம் வரவில்லையோ? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு நாளை தன்னாசியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
சே ! இவளை எவ்வளவு நம்பினேன், இப்படி செய்து விட்டாளே? இவளுக்கு தெரியாமல் இது வரை ஏதாவது செய்திருப்பேனா? எது செய்தாலும் இவளிடம் கேட்டுத்தானே செய்தேன். அப்படி செய்தவனுக்கு இவள் செய்த பலன் இதுதான். எனக்கு வேண்டும், அம்மா அப்பொழுதும் சொன்னாள், ...
மேலும் கதையை படிக்க...
மகாராணி துர்கா கவலையில் ஆழ்ந்திருந்தாள். தனது கணவனின் படைகள் போரில் சற்று தொய்ந்து காணப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எதிர் பார்த்த நண்பர்கள் தங்களது படைகளை அனுப்புவதாக் கூறியவர்கள் எதிராளியின் படை பலத்தை கண்டு பின் வாங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் உள் ...
மேலும் கதையை படிக்க...
என்னை பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்வது நல்லது. அறிமுகத்தில்தான் என்னுடைய தொழில் இரகசியமே அடங்கியிருக்கிறது.சாதாரணமாக இன்னார், இன்ன வேலை செய்கிறார் என்றால் அது கேட்பவர்களுக்கு சுவாரசியத்தை தராது. அது போல என்னை போன்றவர்களுக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தித்தான் பழக்கம். அதுவும் கையில் ...
மேலும் கதையை படிக்க...
இந்த உலகத்தில் நடைபெறும் காலச்சூழ்நிலைக்கு நானேதான் சூத்திரதாரி ! பெருமையுடன் நினைத்துக்கொண்டான் சூரியன். இவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, நானில்லாவிட்டால் இந்த உயிரனங்கள் வாழ்வே முடியாது என்ற நினைப்பில் மழை. இவர்கள் இருவரின் பெருமைகளை பார்த்து முகம் சுழித்து நான் மட்டும் இல்லையென்றால், இவர்கள் இருவர் ...
மேலும் கதையை படிக்க...
சுந்தராபுரம் என்னும் ஒரு ஊரில் மயில்வாணன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார் அவருக்கு ராமு என்னும் ஒரு மகன் இருந்தான். ராமு அந்த ஊரில் உள்ள நடு நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். மயில்வாகணன் அருகில் உள்ள ஒரு நகரத்தில் கடை ...
மேலும் கதையை படிக்க...
மும்பையில் உள்ள ஓரளவு புகழ் பெற்ற கட்டடம் கட்டும் கம்பெனியின் உரிமையாளரான பரசுராமன் ஏதோ யோசனையில் இருந்தார். உள்ளே வந்த மேலாளரின் க்கும்...என்ற கணைப்பை கேட்டு சற்று திருக்கிட்டு வாங்க நமசிவாயம், என்றவர் அன்றைய அலுவல்கள் என்னென்ன? என்று கேட்க, நமசிவாயம் அன்றைக்கு ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணிரெண்டு ஆகி விட்டது, ஆனாலும் நீண்ட தூரம் செல்லும் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறையவில்லை,காரணம் நாளை மறு நாள் தீபாவளி பண்டிகை, தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை,வெளி ஊர் செல்லும் பயணிகள் கூட்டம் பேருந்தில் ஏறிக்கொண்டும், பேருந்துகளும் தொடர்ந்து சென்று ...
மேலும் கதையை படிக்க...
அன்று சேலத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தேன்.முக்கிய விருந்தாளியே நான் தான். கருத்தரங்கில் அவரவர்கள் தங்களுடைய கருத்துக்கக்களை மேடையில் விளக்கிக்கொண்டிருந்தபோது எனக்கு அழைப்பு செல்போனில் வந்தது. எரிச்சலுடன் எடுத்துப்பார்க்க மனைவி. இப்ப மீட்டிங் நடந்துட்டிருக்கு, பத்து நிமிசம் கழிச்சு நானே கூப்பிடுறேன். ...
மேலும் கதையை படிக்க...
மருத்துவமனையில் நடுவில் தடுப்பு மட்டும் போட்டு இரு புற வாசலுடன், கட்டில் போடப்பட்டிருந்தது. ஒரு கட்டிலில் நீண்ட நாள் நோயாளியாய் நடமாட முடியாமல் படுத்திருந்த பாஸ்கரன் மருந்தின் வேகத்தில் கண்ணயர்ந்து கொண்டிருந்தவர், தடுப்பை தாண்டி பக்கத்து கட்டிலின் அருகே சத்தம் கேட்டு ...
மேலும் கதையை படிக்க...
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஒரு பிரபலமான நிறுவனத்தை நடத்தி வரும் பரமசிவம், அமெரிக்காவில் இருந்து சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும். அவரை வரவேற்க அவரது கம்பெனி இந்திய நிர்வாகிகள்,மூவர் நவ நாகரிக உடையணிந்து வரவேற்றனர்..”வெல்கம் சார்” என்று கை குலுக்கிய மூவருக்கும் நன்றி ...
மேலும் கதையை படிக்க...
நான் கோபமா இருக்கேன்
இராஜ தந்திரம்
நானும் என் பஞ்சாயத்தும்
சூரியன், காற்று, மழை
ராமுவின் பெரும் உதவி
தவறு செய்யாமல் குற்றவாளி ஆனவன்
வேண்டாத பிரயாணி
எனக்கு தெரியாமல்
யாரென்று அறியாமல்
தந்தை பட்ட கடன்

பக்குவம் மீது ஒரு கருத்து

  1. P.Subramanian says:

    மனதை தொட்ட சிறுகதை . பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)