‘இந்தப் பெருசுக ரெண்டும் ஒத்துமையா இருந்தா நமக்குத்தான் ஆபத்து. சண்டை மூட்டி விடணும்…’ – சமந்தா செயலில் இறங்கினாள். ‘‘சேலைக்குப் பதிலா நைட்டி யூஸ் பண்ணுங்க அத்தே. உங்க உடம்புக்கு அது ரொம்ப அழகா இருக்கும். என்கிட்ட ரெண்டு புது நைட்டி இருக்கு. தர்றேன்… இப்பவே போட்டுக்கங்க…’’ மாமியார் யோசிக்கும் முன்பே நைட்டிகளை எடுத்துக் கொடுத்தாள்.
அடுத்த ஐந்தாம் நிமிடம் சமந்தா மாமனார் முன்… ‘‘மாமா, அத்தை பண்ற கூத்தைப் பாருங்க… இந்த வயசில போய் நைட்டி போட்டுக்கிட்டுத் திரியிறாங்க…’’
கேட்டதுமே ‘விருட்’டென எழுந்தார் பெரியவர். ‘ஏன்டி… உனக்கென்ன கொமரின்னு நெனைப்பா? ஒழுங்கா லட்சணமா சேலையைக் கட்டுடீ!’ எனப் பெரியவர் சீறப்போறார்… ‘அதெல்லாம் முடியாது. நான் காலத்துக்கு ஏத்தாப்புலதான் இருப்பேன்’ என மாமியார் அடம்பிடிக்கப் போறார்… பார்க்கலாம் வேடிக்கையை என சமந்தா ஆர்வமாக பின்னாலேயே போனாள்.
அட இதென்ன… வெட்கத்தோடு நின்ற மாமியாரின் அருகில் போனவர், ‘‘அய்…! உனக்கு நைட்டி சூப்பரா இருக்கு வடிவு. இனி டெய்லி நைட்டியே யூஸ் பண்ணு! இன்னைக்கே அஞ்சாறு நைட்டி வாங்கிட்டு வந்துடறேன்!’’ என்றார். சமந்தா நொந்து போனாள்.
- சுபமி (மார்ச் 2014)
தொடர்புடைய சிறுகதைகள்
“மியாவ்.. மியாவ்.. பூனை சத்தம் போட்டு ஞாயிறு தூக்கத்தை கெடுத்தது. எழுந்து போர்டிகோவிற்கு சென்று பார்த்தேன் பக்கத்து வீட்டு பூனைகள் காம்பவுண்டில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.” சே.. கொஞ்ச நேரம் தூங்க முடியுதா பாருங்க பக்கத்து வீட்ல பெரிசா பூனை வளர்க்கிறேன்னுட்டு ...
மேலும் கதையை படிக்க...
லண்டன்-11.9.19
துளசி என்னும் மனநல வைத்தியர்,மகாதேவன் என்னும் மனித உரிமை வழக்கறிஞர்; என்பவர்களின்;; மேன்மை மிகு தந்தையும், கலிகாலக் கடவுளாகிய ஸ்கந்தனின் அருளில் அதி மிக பக்தியுள்ள தாட்சாயணியின் கணவருமான திருவாளர் சுந்தரலிங்கம் கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாகவிருக்கிறார்.அவருக்கு உடல்நலம்; சரியாக ...
மேலும் கதையை படிக்க...
"" என்ன கௌம்பீட்டியளாக்கும்?''
""போர ஜோலிக்குப் போயித்தானே ஆவணும்.''
""தூரம் தொலைவெட்டா இருக்கே. வயசான காலத்துலெ... இங்குனக்குள்ளேனா பரவாயில்லை.''
""இது பெரிய கேதமில்லையா... அதெல்லாம் பார்க்கமுடியுமா அப்புறம் எப்பப் போயிக் கேப்பீயாம்? ஒரு மாசம் ஓடிடுச்சு. காரியத்துக்கும் போகத் தோதுப்படலெ...''
""நல்ல சாவுதானே?''
""ம். என் ஜோட்டு ஆளுதான்.''
""எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
கண் விழிக்கும் போது காலம் அழகாய்த்தானிருந்தது பூரணிக்கு.
வழக்கம்போல பம்பரமாக ஆடி, ஓடி உழைத்து மகனையும், மகளையும் கல்லுhரிக்கு அனுப்பிவிட்டு ஓய்வெடுக்க நினைக்கையில்தான் - காலிங்பெல் சத்தத்துடன் அவளைக் கலங்கவைக்கவே வந்தது ஏர்மெயில் தபால் ஒன்று.
நயம் துலங்கும் பொன்னின் மெருகைப்போல் கையில் எடுக்கும்போதே, ...
மேலும் கதையை படிக்க...
""என்னாச்சு சுந்தரம்... எத்தனை முறை உங்கிட்ட சொல்லி இருக்கேன். கொஞ்சம் லாங்கா போறப்போ, வண்டியை கண்டிஷன்ல வச்சுக்கோன்னு... இப்போ எவ்வளவு அவஸ்தையா இருக்கு பாத்தியா?'' டை முடிச்சை லூசாக்கி, மேல் பொத்தானை கழட்டி, காற்று வாங்கிக் கொண்டான் மனோகர்.
மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான், ...
மேலும் கதையை படிக்க...
குதிரைமுத்து மளிகை ஸ்டோர்ஸ்!