நிலா சோறு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 9,419 
 

அதுஒரு அடுக்கு மாடி குடியிருப்பு.. அங்கே வசிக்கும் பொரும்பாலானோர் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள்.

இங்கே தான் நம்ம நாயகன் ஸ்ரவன் இருக்கிறான். அவனின் அம்மா அப்பா இருவரும் வேலைக்கு போய்விடுவார்கள்.. பள்ளி முடிந்துவந்தால்.. வீட்டின் வெறுமையே அவனை வரவேற்கும்..

மூன்றாம் வகுப்பு படிக்கிறான். காலை அவசரமாக எழுப்பி அவனை குளியலறையில் தள்ளிவிடுவார்கள் பெற்றவர்கள்.. அவனும் குளிக்கிறேன் என்ற பெயரில் இரண்டு வாளி தண்ணீரை மேலே தெளித்து கொண்டு வந்துவிடுவான்..

பிறகு.. யூனிப்பார் மாட்டிகொண்டு.. டைனிங் டேபிலில் இருக்கும் உணவை உண்பான்.. தாயும் தந்தையும் அவர்கள் அலுவலகம் செல்ல பரபரப்புடன் கிளம்பி கொண்டுயிருப்பார்கள்.

காலையில் ஒருவரின் முகத்தை ஒருவர் பாத்து கொள்ளகூட நேரம் இருக்காது.. அவர்களும் உணவு உண்டுவிட்டு.. ஸ்ரவனை.. பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு.. அவனுக்கு கையசைத்து விடை கொடுக்ககூட டைம்யிருக்காது கிளம்பிவிடுவர்.

மாலை ஸ்ரவன் வந்து வீட்டில் தனியாக தான் இருப்பான்.. அவனின் துணை டீ.வி, கணிணி, விதவிதமாக விளையாட்டு பொருட்களும் தான்… அனைத்தையும்.. சுற்றி வைத்துகொண்டு.. தனிமையில் விளையாடுவான்..

தாய் வந்ததும் அவரை ஓடிச்சென்று கட்டி கொள்வான். அவரோ அலுவல் பணியின் அலுப்பில் அப்படியே அமர்ந்து கொள்வார்.. சிரித்து பேசக்கூட முடியாது… வாரம் முழுவதும் இப்படி இருக்க..

வாரயிறுதில் மூவரும் வெளியே சென்று ஊர் சுத்திவிட்டு இரவு உணவை ஹோட்டலில் உண்பர். இதுவே வழக்கமாகி போனது.

ஒருநாள் இரவு…

ஸ்ரவன் அம்மா யசோதா.. இரவு உணவு தயாரிக்க சமையலறை சென்றார். அப்போது..

“அம்மா.. அம்மா.. ” என்று அழைத்த படியே சமையலறை உள்ளே வந்தான் ஸ்ரவன்..

“என்னடா.. குட்டி.. நீயே.. சமையல் கட்டுகுள்ள வந்திருக்க.. ரொம்ப பசிக்குதா… இரு அம்மா.. சாப்பாடு வைச்சுடறேன்.. சாப்பிடலாம்… “என்று கூறி அவனை சமையலறை மேடையில் தூக்கி அமரவைத்து இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்து தந்தாள் யசோதா.

அதை சாப்பிட்ட படி ஸ்ரவன் “இன்னிக்கு என்னம்மா.. சாப்பாடு.. “என்று கேட்க..

அவளோ சலிப்புடன்… “கொழம்பு இருக்கு ஸ்ரவன் குட்டி.. அம்மா.. சாப்பாடு மட்டும் தான் வைக்க போறேன்.. ” என்றாள்.

“அம்மா.. அம்மா.. நிலாச் சோறு பண்ணிதரியா..” என்று ஸ்வரன் கேட்க..

“என்ன.. என்ன கேட்ட.. ”

“அம்மா.. நிலாச் சோறுன்னு ஒரு டிஷ் இருக்காமே.. அதை எனக்கு சமைச்சி கொடு..”

“நிலாச் சோறு.. ” “உனக்கு இதை யாரு சொன்னாங்க.. எப்படி ஒரு டிஷ் எல்லாம் இல்லை குட்டி.. அது .. ” என்று யசோதா கூறிமுடிக்கும் முன்…

“நீங்க பொய் சொல்றீங்க.. பக்கத்து வீட்டுல ஒரு குட்டிபாப்பா இருங்காங்கயில்லே…. அந்த பாப்பாவோட பாட்டி ஊரிலேயிருந்து வந்துயிருங்கங்க.. அந்த பாப்பா சரியா சாப்பிட மாட்டா தானே.. எப்பவும் சாப்பிட அழுதுகிட்டே இருப்பா இல்லை..”

“ஆனா …அந்த பாட்டி நேத்து பாப்பாவுக்கு நிலா சோறு தான் ஊட்டினாங்களாம்.. பாப்பா சமத்தா சாப்பிட்டுடாங்கலாம்.. தெரியுமா..” என்று விழிகள் விரிய கூறிய மகனை ஆச்சரிய அதிர்ச்சியாய் பார்த்தாள் அவனின் அம்மா யசோதா.

அவனோ… மீண்டும் தொடர்ந்தான்..” அம்மா.. அந்த டிஸ் ரொம்ப நல்லாயிருக்குமாம்மா.. எனக்கும் அந்த டிஷ் பண்ணிகுடுங்களேன்..” என்று கொஞ்சிய மகனிடம் என் கூறுவது என தெரியாமல் அவள் முழிக்க..

அப்போது அங்கே கிரிஷ் வந்தான்.. ஸ்ரவனின் தந்தை கிருஷ்னன்.. ஸ்டைலாக.. கிரிஷ்..

“ஹாய்.. செல்லம்ஸ்.. என்ன டிஸ்கஷன்.. நானும் கலந்துக்கலாமா.. ” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்ப.. கிரிஷ் நிற்பதை கண்டனர்.

அதுவும் அவன் முகம் இன்று தவுசன் வாட்ஸ் பல்பு போல ஒளிர்ந்தது..

“அப்பா.. ” என்று ஸ்ரவன்.. ஓடிச்சென்று அவன் கால்களை கட்டி கொண்டான். அவனை தூக்கி கொண்டான் கிரிஷ்.

“என்ன.. சார் இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டீங்க.. முகம் வேற பிரைட்டா இருக்கு.. ” என்று யசோதா கேட்க..

“யசோ.. இன்னிக்கு.. வேலை சீக்கிரம் முடிச்சிடுச்சி டா… அதுதான் உங்களை வந்து சீக்கிரம் பாக்கப்போறேன் …. அப்படிக்கற சந்தோஷம்.. அதுதான் முகம் பிரைட்டா இருக்கு… ”

“நம்ப முடியலையே…” என்றாள் யசோ..

” எப்பவும் நான் வரும் போது ஸ்ரவன் தூக்கியிருப்பான்… நீ தூக்கலக்கத்துலே இருப்ப… உங்க கூட பேசக்கூட முடியாது.. அது எனக்கும் ரொம்ப கஷ்டமாதான் இருக்கு..”

” எங்க அப்பா கூட எல்லாம் நான் நல்லா விளையாடுவேன்… ஆனா இன்னிக்கு எனக்கு ஸ்ரவன் கிட்ட பேசக்கூட நேரம் இல்லாதபடி வேலை செய்யவேண்டியிருக்கு..”

“இதையெல்லாம் நினைக்கும் போது ரொம்ப stressஆதான் இருக்கு … என்ன பண்ணமுடியும்.. வேலை செஞ்சிதானே ஆகனும்.. ” என்றான் கிரிஷ் பெருமூச்சுடன்.

இதை கேட்ட யசோதா.. ” ஆமா.. நான் கூட அப்படி தான் இருந்தேன்.. ஸ்கூல்விட்டு வரும்போது அம்மா வீட்டுலே இல்லையினா.. எனக்கு அவ்வளவு கோபம் வரும்… நான் வரும் நேரத்துலே எங்க போனாங்கனு கேட்டு சண்டை போடுவேன்.. அம்மா என்னை சமாதானபடுத்த.. புதுசா ஏதும் செஞ்சிதறுவாங்க.. ஆனா.. இன்னிக்கு.. என் பையன்.. என்னை எதிர்பார்த்து காத்திருக்கான்… ”

பிறகு.. ஸ்ரவனுடன் கிரிஷ் விளையாட சென்றுவிட்டான்… இருவரும் விளையாடுவதை பார்த்தபடியே உணவு தயாரித்தாள் யசோதா..

சற்று நேரத்திற்கு பிறகு.. சமைத்ததை ஒரு பாத்திரதில் போட்டு… பிசைந்து எடுத்து கொண்டு வெளியே வந்தவள்..

“ஸ்ரவன்… வா.. நிலாச் சோறு சாப்பிடலாம்…” என்று கூற.. ஸ்ரவன் துள்ளி குதித்து எழுந்தான். கிரிஷ் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

அவள் கண்களில் செய்தியை சொல்ல அவனும் அவர்களுடன் கிளம்பினான். மூவரும் மாடிக்கு சென்றனர். கிரிஷ் பெட்சீட் எடுத்துவந்திருந்தான்.

அதைவிரித்து மூவரும் அமர்ந்தனர். இப்போது யசோதா ஸ்ரவனிடம்… “குட்டி.. அங்க பாரு அதுதான் நிலா.. ” என்று காட்டா..

அவனோ “அம்மா.. அது நிலான்னு எனக்கு தெரியாதா.. என்ன ..? நான் 3rd standard படிக்கிறேன்.. ” என்றான் பெரிய மனிதனின் தோரனையில்..

யசோதா.. சிரித்தபடியே.. ” இது தான் சோறு…” என்று பாத்திரத்தில் இருந்த சாப்பாட்டை காட்டா..

அவன் கடுப்புடன் இடுப்பில் கைவைத்து அவளை முறைத்து.. “என்ன அம்மா.. விளையாடறீங்களா… இது சாப்பாடு தான் .. அதுவும் எனக்கு தெரியும்… ” என்று கூற .. அவனை கிரிஷ் தன் மடியில் அமர்த்தி கொண்டான்..

யசோதாவோ.. “ஆமாம் டா.. குட்டி.. உனக்கு தான் இரண்டுமே தெரியுதே.. அப்புறம் எதுக்கு அம்மாகிட்ட கேட்ட…”

“அம்மா.. நான்.. நிலாச் சோறு சமைச்சி கொடுக்க சொன்னா… நீங்க காமடி பண்ணறீங்க…”

“இல்லடா.. ஸ்ரவன் குட்டி… அது நிலா… இது சோறு.. இரண்டும் சேர்த்தா தான் நிலாச் சோறு..” என்று கூற அவனோ விழிகள் விரிய “அப்படியா”… என்று கேட்டான்.

“ம்ம்.. ஆமாம்… வாங்க சாப்பிடலாம்.. ” என்று கூறியபடியே சோற்றை பிசைந்து ஸ்ரவனுக்கு ஊட்டினாள். கிரிஷ் தனக்கும் என்று கேட்க அவன் கைகளில் உருண்டையை உருட்டி கொடுக்கப்போனாள்.. அவனோ மறுப்பாக தலையசைத்து வாயைதிறக்க அவனுக்கும் ஊட்டினாள்.

பிறகு மூவரும் மகிழ்ச்சியாக உணவருந்திவிட்டு கீழே சென்றனர். தன் பெற்றோரிடம் மகிழ்ச்சியாக … விளையாடி.. பேசி .. உணவருந்திய சந்தோஷத்தில் ஸ்ரவன் சீக்கிரம் உறங்கிவிட்டான்.

அவனின் மகிழ்ச்சியை கண்டு இருவரும் மகிழ்ந்தனர். “கிரிஷ்.. இனிமே week endடை இப்படியே கழிக்கலாமா.. வெளிய போய் சாப்பிட வேண்டாம்.. கொஞ்ச நேரம் ஊரு சுத்திட்டு.. வந்து வீட்டுலே சமைச்சி நிலா சோறு சாப்பிடலாம்… ஓகே.. வா.. “என்று யசோதா கேட்க..

“டபுள்.. ஓகே.. யசோ.. ” என்று அவளை அனைத்து கொண்டான் கிரிஷ்.

( வீட்டில் இருக்கும் நேரத்தை குடும்பத்துடன் கழிக்க முயல்வோம்.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *