நான் நானாக… – ஒரு பக்க கதை

 

அவன் முறை வந்தது. கொண்டு சென்ற பழங்களை சுவாமிஜியின் காலடியில் வைத்தான். குனிந்து அவரை வணங்கினான். ”அடிக்கடி உணர்ச்சி
வசப்படறேன். கட்டுப்படுத்த முடியலே” எனத் தன் பிரச்னையை வெளிப்படுத்தினான்.

”உன் அப்பாவோட சொத்தை அபகரிச்சிட்டே” என்றார் சுவாமிஜி.

”அப்பாவுக்கு சொத்து எதுவும் இல்லே. இறக்கும் போதும் கடனாளியாத்தான் இறந்தார்.”

வீடு வாசல் தோப்பு துரவுதான் சொத்துன்னு அர்த்தமில்லே. அவரோட குணம், அந்தக் கோபம் எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுகிற சுபாவம்,
ஆக்ரோஷம் எல்லாம்தான். அதையெல்லாம் கைவிடு. நீ நீயாக மாறு” அருளாசி வழங்கினார்.

வீடு வந்தான். விஷயத்தை புவனாவிடம் சொன்னான்.

”பார்க்கலாம்” என்றாள். அவ்வளவு சீக்கிரம் நம்பி விடமாட்டாள். அனுபவம்.

விடிந்தது. காலைக் கடன்களை முடித்துக்கொண்டு உள்ளே வந்தான். காப்பியைப் பருகினான்.

”நீங்க நீங்களா மாறிட்டீங்க” என்றாள். விழித்தான்.

”புரியலையா? காப்பியிலே சர்க்கரை குறைச்சாலே கத்துவீங்க. இன்னைக்கு காப்பியில நான் சர்க்கரையே போடலே!”

புவனா வாய் விட்டு சிரித்தாள். அவனுக்கு நோய்விட்டுப் போனாற்போல இருந்தது

- வினோதானந்த் (5-12-12) 

தொடர்புடைய சிறுகதைகள்
இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ரகுராமன், மிகுந்த சோர்வுடன் வீட்டின் காலிங் பெல்லை அமுக்கினார். கதவைத் திறந்த அவர் மனைவி வசுமதியின் முகம் வாடி இருப்பதை எளிதில் புரிந்துகோண்டு, "என்ன வசு, இன்னிக்கு ரொம்ப டல்லா இருக்க... முகத்துல சுரத்தே ...
மேலும் கதையை படிக்க...
ஜெயந்தி வந்திருப்பதாய் அம்மா சொன்னதும் மனதுக்குள் அவளை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் வந்ததை வாசுவால் மறைக்க முடியவில்லை. ஜெயந்தியுடனான பால்யத்தின் நட்பில் கட்டிய திரைச்சீலைகள் இன்னும் தோரணமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசுக்குள். சில உறவுகளில் இருக்கும் இந்த பிசுக்கு எப்போதும் போவதில்லை... ...
மேலும் கதையை படிக்க...
கோணம் சூ1 கிரிக்கெட் விளையாடுவதில், கவிதை எழுதுவதில் என்னுடைய திறமையை சில நேரங்களில் சந்தேகித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய புத்திசாலித்தனத்;தை என்றுமே நான் சந்தேகித்ததில்லை. ஹோனர்ஸோடு டிகிரி எடுத்து, படிப்பு முடிந்த கையுடன் நல்ல வேலை எடுத்து, இன்று, சிறந்த ஒரு எலெக்ட்ரிகல் இ;ஞ்சினீயராக, ...
மேலும் கதையை படிக்க...
அவன் ஒருபோதும் அப்பா பிள்ளையாக இருக்க விரும்பியதில்லை. ஆனாலும் அவனையறியாமல் அப்பாவின் பழக்க வழக்கங்கள் தான் அவனிடம் பெரும்பாலும் இருந்தன.அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்குப் பக்கத்தில் வாராவாரம் ஆடு அறுக்கும் பேகம் மாமியிடம் முந்தியநாளே சொல்லி வைத்து ஆட்டுக்குடல் வாங்கி தெருவிலே உட்கார்ந்து ...
மேலும் கதையை படிக்க...
கணபதியும், அவர் மனைவி பாக்கியமும், தெருவில் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக் கோடியில் உள்ள அந்த அடகுக்கடைக்குள் நுழைந்தனர். நகைகளை வைத்து பணமும், இரசீதும் பெற்று கொண்டு வெளியேறினர். வழியில் உள்ள மளிகைக் கடையில் அரிசியும், கொஞ்சம் மளிகையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு ...
மேலும் கதையை படிக்க...
தண்ணீர்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
இரண்டு கோணங்கள்
ஓர் உருமாற்றம்
அடகு – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)