நான் தான் குற்றவாளியோ?

 

ராமச்சந்திரனுக்கு வேலையே ஓடவில்லை. அவரால் நம்பவே முடியவில்லை. நேற்று வரையில் அவருக்கு எதிர்இருக்கையில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த சகுந்தலா இன்று இல்லை என்பதைத்தான். முந்தியநாள் சரியாக ஐந்துமணிக்குத் தன் கைப்பையைத் தோளில் தொற்விட்டுக்கொண்டு வரேன், சார் என்று கூறிப் புன்னகை காட்டிவிட்டுக் கிளம்பிப்போன சகுந்தலா.

அவளது திடீர்ச் சாவைப்பற்றி அலுவலகத்தில் ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசி விமர்சித்துக்கொண்டிருந்தார்கள். சகுந்தலா திடீரென்று செத்துப் போனதைக் காட்டிலும் அவர் காதில் விழுந்த அவள்பற்றிய விமரிசனங்களே அவரை அதிகத் துயரத்தில் அமிழ்த்தின.

என்ன அழகான பெண் சகுந்தலா. நிதான உயரம், அதற்கு ஏற் பருமன். கூரிய மூக்கு, சிறிய உதடுகள். என்ன கேலிசெய்தாலும் முகம் சுருக்காமல் சிரித்துக்கொண்டே கேட்டுக்கொள்ளும் அந்தப் பெருந்தன்மை பெரும்பாலான பெண்களுக்கு இல்லை என்று அவருக்குத் தோன்றியது.

எல்லாவற்றுக்கும் மேலாக அவளுடைய அந்தக் கண்கள். அந்த உருண்டையான விழிகளின் கருமையையும், துருதுருப்பையும் வேùந்தப் பெண்ணின் கண்களிலும் அவர் கண்டதில்லை. சில பெண்களைப்போல் ஒரு செயற்கைத்தனத்துடன் அவள் இமைகொட்டி அவர் பார்த்ததே இல்லை. மொத்தத்தில் கவர்ச்சியும் அடக்கமும் நிறைந்த பெண்.

அன்று காலை சரியாகப் பத்தரைமணிக்குச் சகுந்தலாவின் சாவுபற்றியச் செய்தி தொலைபேசியில் வந்தது. அவளுடைய உவினர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர்தான் தகவலைக் கொடுத்தார். “பாடி’ யைப் பன்னிரண்டுக்குள் எடுத்துவிடுவார்கள் என்று சொன்னார்.

சகுந்தலா அவர் வீட்டுக்கு எத்தனையோ தடவைகள் வந்திருக்கிாள். ஒருமுû அவர் மனைவி சம்பகம் அவரைப் பார்ப்பதற்காக அலுவலகத்துக்கு வந்தபோது பிரிவில் அவர் இல்லை. அப்போது சம்பகத்தை உட்காரச்சொல்லி உபசரித்து, காப்பி வாங்கிக்கொடுத்துத் தோழமையுடன் பேசிக்கொண்டிருந்தது சகுந்தலாதான். வெளியே எங்கேயோ சென்றிருந்த அவர் திரும்பிவந்ததும், நாங்களே அறிமுகம் பண்ணிண்டாச்சு, என்று சம்பகம் சொன்னாள்.

ஒருநாள் இவளை நம்ம வீட்டுக்குக் கூட்டிண்டு வாங்களேன், என்ன என்று சம்பகம் சென்னபோது அவரால் தன் காதுகளை நம்பமுடியவில்லை. கலகலவென்று யாருடனும் சட்டென்று பழகாத சம்பகத்தையே மடக்கி இழுத்துக்கொண்ட பெண் என்று இப்போது சொல்லிக்கொண்டார்.

என்ன, ராமச்சந்திரன் சார், கெளம்பலாமா என்று பத்மநாபன் குரலை உயர்த்தி வினவியதும் திடுக்கிட்டுத் திரும்பிய ராமச்சந்திரன் தான் அவன் சொன்னதைக் காதில் வாங்காததில் இரண்டாவது முறையாகச் சொல்லுகிறான் என்பதை அவனது இரைந்த குரலிலிருந்து புரிந்துகொண்டார்.

கெளம்பலாம் என்வாறு அவர் எழுந்துகொண்டார். வழியெல்லாம் சகுந்தலாவின் சிரித்தமுகம் அவரது நினைவில் தோன்றிக்கொண்டே இருந்தது.

அவர் நவராத்திரி கொலுவுக்கு முதன்முதலாய் அவளை வீட்டிற்கு அழைத்துக்கொண்டுவந்தார். சமபகத்துடன் அரட்டையடித்துவிட்டு அவள் புறப்பட்டபோது ஏழு மணியாகிவிட்டதால் அவளை அவளது வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வரவேண்டும் என்று சம்பகம் சொல்லிவிட்டாள். சம்பகத்தை அந்த அளவுக்கு அவள் கவர்ந்துவிட்டது அவரை வியப்பில் ஆழ்த்தியது.

அன்றிரவே, அந்தப் பொண்ணு சகுந்தலாவை நம்ம கோபிக்குப் பார்த்தா என்ன? என்று சம்பகம் கேட்டபோது அவர் வியப்பு அளவு கடந்துவிட்டது.

அவங்க ரொம்ப நடுத்தரமான குடும்பம், சம்பகம், அவ ஒருத்தி சம்பாதிச்சு அந்தக் குடும்பமே சாப்பிட்டுண்டிருக்கு. அவ காதுல, கழுத்தில எதுவுமே போட்டுக்கலைங்கிதைக் கவனிச்சியோ?

கவனிக்காம இருப்பேனா கேக்கக்கூடச் செஞ்சேனே, அவ தங்கை ஒருத்தி வேலை தேடிண்டிருக்கிதாச் சொன்னா. அதுக்கு அப்புந்தான் மாமி ஒண்ணு ரெண்டு நகை பண்ணிக்கணும்னாளே. இப்பவே அவகிட்ட கேட்டுவச்சுக்குங்கோ. அவ தங்கைக்கு வேலை கிடைச்சதும் அவா வீட்டுக்குப்போய் அவ அப்பா அம்மாவை நாமே பார்த்துப் பேசலாம். ஒண்ணும் கௌரவக் குறைச்சல் இல்லை. எங்கப்பா, எங்கம்மான்னு உசிரா இருக்கிவா பிள்ளையானாலும் பொண்ணானாலும் நல்லவாளா இருப்பா.

அது சரி. கோபிக்கு அவளைக் காட்ட வேண்டாமா. நம்ம கோபியை அவளும் பாக்க வேண்டாமா?

அதுக்கு ஒருநாள் ரெண்டு பேர் கிட்டவும் சொல்லாமலே ஏற்பாடு பண்ணினாப் போச்சு என் சம்பகத்தால் மறுநாள் வரையிலும்கூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அன்றிரவே பிள்ளைக்குச் சாப்பாடு பரிமாறிய நேரத்தில, ஏண்டா, கோபி உனக்கு ரொம்ப ஜோரான பொண்ணு ஒண்ணு பார்த்து வெச்சிருக்கேன். உங்கப்பா ஆபீஸ்ல வேலை பண்றா. கொஞ்சம் ஏழை. உனக்கு என்னிக்கு சௌகர்யமோ அன்னிக்கு லீவு போட்டுட்டு வீட்டில இரு. உங்கப்பா அவளை இங்கே கூட்டிண்டு வருவார். அப்ப நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கலாம். ஆனா அவா வீட்டில அவ தங்கைக்கு வேலைகிடைச்சதுக்கு அப்புரந்தான் அவளுக்குக் கலியாணம் பண்ணுவா போலிருக்கு. பெண்ணைப் பிடிக்கிது, பிடிக்கலைன்னு சொல்லிட்டியானா, அப்பும் அவாளுக்குத் தோதான நேரமாப் பார்த்து ஏற்பாடு பண்ணலாம் என்றாள். தொடர்ந்து அவளைப் பிடிக்கலைன்னு சொல்வாளும் உண்டோ? என்று முத்தாய்ப்பு வைத்துவிட்டு மகனின் முகத்தைப் பார்த்தாள்.

கோபி தலையை குனிந்தபடி சோற்றை அளைந்து கொண்டிருந்தான்.

என்னடா பேசாம இருக்கே?

எங்க ஆபீஸில் என்னோட வேலைபார்க்கி ஒரு பொண்ணுக்கு ஏற்கனவே நான் வாக்குக் குடுத்துட்டேம்மா. நான் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கிதா இருக்கேன்.

பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ராமச்சந்திரனுக்கே அந்தச் செய்தி சற்று அதிர்ச்சியைக் கொடுத்தது. சம்பகத்தை அது எவ்வளவு பாதித்திருக்கும் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

என்னன்னா, இவன் இப்படிச் சொல்ரானே?

விடு. அவன் அதிருஷ்டம் அவ்வளவுதான். நம்ம அதிருஷ்டமும் அவ்வளவுதான். சுலபமா வாழ்க்கை அமைய பாக்கியம் அந்தப் பெண்ணுக்கும் இல்லை.

அப்படி விட்டுட முடியுமா.. ஏண்டா, கோபி, நான் சொல் இந்தப் பொண்ணையும் நீ பாரேன். பார்த்துட்டு உன் அபிப்ராயத்தைச் சொல்லு.

இதென்னம்மா பேச்சு. இன்னொரு பொண்ணைப் பார்த்துட்டுப் பழகின பொண்ணைக் கைவிடலாமா, தப்பில்லை. என்னமோ புடவை செலக்ஷன் பண் மாதிரிப் பேசறியே..

இதப்பாரு, சம்பகம், அவன் சொல்தும் நியாயம்தான். அவன் இஷ்டத்துக்கு விட்டுடு. இனிமே சகுந்தலாவைப் பத்தி இவன்கிட்டப் பேசாதே.

அன்றிரவு முழுவதும் சம்பகம் சரியாகத் தூங்கவே இல்லை. ஒரு நல்ல பெண் மருமகளாக அந்த வீட்டுக்குள் அடிஎடுத்து வைக்கும் வாய்ப்புப் பறிபோனதைப்பற்றிப் புலம்பிப் புலம்பி அவரது தூக்கத்தையும் கெடுத்தாள்.

கல்யாண வயசில நமக்கு இன்னொரு பிள்ளை இருக்காதோ, என்று சகுந்தலாவைப் பற்றி நினைத்து நினைத்து சம்பகம் அவ்வப்போது உருகினாள். அவருடைய 2வது மகனோ சகுந்தலாவைவிட மூன்று வயது சிறியவன்.

நாட்கள்தான் போனது, சகுந்தலாவின் தங்கைக்கு வேலை கிடைப்பேனா என்ரது. கடைசியில் ஒரு வழியாய் ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் ஒரு தனியார் நிறுவனத்தில் அவளுக்குத் தட்டெழுதும் வேலை கிடைத்தது.

நேற்றுபோல் இருக்கிறது. ஐந்து ஆண்டுகள் பறந்துவிட்டது. சகுந்தலாவின் கலகலப்புக் கொஞ்சம் போல் குறைந்திருந்தது என்பது தவிர வேறு எந்த மாற்மும் இல்லை. ஒவ்வொரு நவராத்திரி கொலுவுக்கும் அவள் அவர் வீட்டுக்கு வந்து பாட்டுப்பாடிச் சுண்டல் வாங்கிப் போய்க் கொண்டிருந்தாள்.

திருமணம் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. திருமணம் நிச்சயமானதும் சொல்லுமாறும், தம்முடைய பங்குக்குத் தாம் இரண்டாயிரம் ரூபாய் தருவதாகவும் அவர் அவளிடம் சொல்லும்போது, போன ஜென்மத்துல நீங்க எனக்கு அப்பாவா இருந்திருக்கணும் என்று கலங்குவாள்.

அதன்பிகு சிலநாட்களாக சகுந்தலா ரொம்பவும் கலகலப்பும் சிரிப்புமாக இருந்தாள்.அதற்கான காரணத்தை அவர் கேட்கமுடியாது. இருப்பினும், அது தானாகவே அவருக்கு ஒருநாள் தெரிந்து போயிற்று. பேருந்து நிறுத்தத்தில் ஒருநாள் தற்செயலாக அவளை இன்னோர் இளைஞனுடன் அவர் காண நேர்ந்தது. இடித்துக்கொண்டோ உரசிக்கொண்டோயில்லாவிட்டாலும் பார்வைகளின் ஆழமும் அவர்கள் உவை அவருக்குச் சொல்லமல் சொல்லின. ஒரு தகப்பனுக்குரிய கவலை அந்தக் கணத்தில் அவர் நெஞ்சில் வந்து உட்கார்ந்துகொண்டது. தமது மன நிலை குறித்து அவருக்கே வியப்பு உண்டாயிற்று.

அந்தப் பையனைப் பற்றி விசாரிக்கவேண்டும் என்று எதனாலோ அவர் மனசு அடித்துக்கொண்டது. தொலைவிலிருந்து அரைகுûயாகப் பார்த்தபோது, எல்லாரையும்போல் அவனும் நாகரிகமானவனாகத்தான் தெரிந்தான். நாகரிகம் என்பது நடை, உடை, பாவனைகளோடு மட்டும் தொடர்புள்ளதாயின் அவளுக்கு ஏற் அழகனாக அவன் தென்பட்டதில் அவருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. மேலும் கொஞ்சம் நகர்ந்துபோய் அவனது முகத்தைத் தம் மனத்தில் நன்கு பதித்து வைத்துக்கொண்டார்.

ஆனால் அவனைப் பற்றி எங்கே எப்படி விசாரித்தறிவது?

சற்று நேரத்தில் வந்துநின் பஸ்ஸில் இருவரும் ஏறிக்கொண்டார்கள். பெட்டிக்கடை ஒதுக்கத்தில் சற்ú மûந்தாற்போல் அதுகாறும் நின்றுகொண்டிருந்த அவர், இருவரும் பேருந்தில் ஏறிக்கொண்டதும் வெளிப்பட்டார். பஸ் புப்பட்டுப்போனபின் ஓர் ஆட்டோ தற்செயலாக அவரெதிரே வந்து நின்து. வர்றீங்களா, சார் என்று அதன் ஓட்டுநர் கேட்டதும், ராமச்சந்திரனுக்குத் திடீரென்று ஓர் எண்ணம் வந்தது.

அவர் மெதுவாக அதற்குள் ஏறி அமர்ந்துகொண்டு, இருவரும் ஏறிப்போன பஸ்சை தொடர்ந்துபோகச் சொன்னார்.

அதுலேருந்து இங்கு யாரையாச்சும் பிடிக்கணுமா?

எனக்குத் தெரிஞ்சவங்க அந்த வண்டியில ஏறி இருக்காங்க. அவங்க எங்கே இங்குாங்களோ அங்க நான் இங்கிப்பேன்.

அவர் எதிர்பார்த்தபடியே இருவரும் திருவல்லிக்கேணி கடற்கரையில் இங்கிக்கொண்டார்கள். ராமச்சந்திரன் ஆட்டோவை அனுப்பிவிட்டு அவர்களுக்குப் பின்னால் சற்று இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கலானார்.

அதற்குப் பிகு மனிதச் சந்தடி அதிகம் இல்லாத ஓர் ஒதுக்குப்புத்தில் இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசினார்கள். அவரும் சற்று தொலைவில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.

ஏழு மணிக்குப் புடவையில் ஒட்டியிருந்த மணலை உதறியபடி சகுந்தலா எழுந்தாள். அவனும் எழுந்தான். அவளைப் பேருந்தில் ஏற்றிவிட்டு அவன் மட்டும் தனியாக நின் நேரத்தில் அவர் அவனுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டார். தன் கைக்கெடியாரத்தைக் சுழற்றிப் பையில் போட்டுக்கொண்டு, மணி என்ன சார், என்று அவனைக் கேட்டார். உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகமா இருக்கு. ஆனா எங்கேன்னு ஞாபகம் வரமாட்டேங்கது என்று சும்மாவேனும் பேச்சுக் கொடுத்து அவன் பெயர், வேலை செய்யும் இடம் எல்லாம் அறிந்து கொண்டார்.

கல்யாணம் ஆயிடுச்சா?
இன்னும் இல்லே.
எதுக்குக் கேக்கரேன்னா, எனக்குத் தெரிஞ்ச இடத்தில கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு இருக்கு. பொண்ணு ரொம்ப அழகா இருக்கும்.. என்று தம்மிடம் அவே இல்லாத அசட்டுத்தனத்தைத் தோற்றுவித்துக்கொண்டு பேசினார்.

எனக்குத் தெரிஞ்ச இடத்தில ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்கா, சார். கொஞ்ச நேரத்துக்கு முந்திகூட இங்க என் கூட நின்னுன்டிருந்தாளே..என்று சகுந்தலா பற்றிச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

அவர் திருப்தியுடன் சிரித்துக்கொண்டார். சேதியைத் தெரிந்துகொண்டதும் சம்பகம்தான் ரொம்பவும் கவலைப்பட்டாள்.

தங்கைக்குத்தான் வேலை கிடைச்சிடுத்தே. அஞ்சு வருஷமா அவளுக்குக் கல்யாணம் பண்ணிவைக்க அவா வீட்டில எந்த முயற்சியும் செய்யலியா?

இருபதாயிரம் வரதட்சிணை, பதினஞ்சு பவுன் நகைன்னா எங்கேடிபோகும் அந்த ஏழைக் குடும்பம், பணம் இல்லாததாலதான் அவ கல்யாணம் தட்டிப் போயிண்டே இருக்கு. ஏதோ அவளுடைய நல்லகாலமோ என்னவோ, ஒருத்தனோட பழக ஆரம்பிச்சிருக்கா. இது நல்லபடியா முடியணும். ஆனா அவன் எப்படிப்பட்டவன்னு தெரியல்லே. அவ கிட்டயே கேட்டா என்ன..

கேக்கலாம். ஒண்ணும் தப்பு இல்ல நம்ம கொழந்தை மாதிரி அவ. அவளுக்குக் கலியாணம் நிச்சயமானா நம்மால ஆனது ஒரு ரெண்டோ மூணோ கொடுத்து ஒத்தாசை பண்ணலாம். நம்ம கிட்டவும் நியை இல்லை. இருந்தா அவ கல்யாணத்தையே நடத்தி வைக்கலாம். ரொம்பப் புண்ணியம், என்று சம்பகம் தொடந்தபோது ராமச்சந்திரன் மகிழ்ச்சியின் எல்லைக்கே போனார்.

மறுநாள் அவர் அலுவலகத்துக்குச் செல்லவில்லை. சகுந்தலாவுடன் பழகிக்கொண்டிருக்கும் அந்தப் பையனைப் பற்றி விசாரிக்கத்தான் லீவு போட்டார்.

அவனைப்பற்றி அவர் திரட்ட முடிந்த தகவல்கள் அவருக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. அவன் பெரும் பணக்காரனாம். பணக்காரர்கள் பணத்துக்கு ஆசைப்படவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் தாம் கௌரவம் என் தப்பான போர்வையின் கீழ் மேலும்மேலும் பணத்துக்கும், அந்தஸ்தான உவுக்கும் ஆலாய்ப் பக்கிார்கள். உத்தியோகம் பார்க்கவேண்டிய அவசியத்திலேயே அவன் இல்லை என்றும் பொழுது போக்குக்காகவே அவன் வேலை செய்வதாகவும் தெரிந்துகொண்டார்.

ஒரு பணக்காரப் பையன் தன் ஏழைக் காதலியை அடைவதில் வெற்றியடைவானா அல்லது தோல்வியடைவானா என்பது அவனது மனிதாபிமானத்தைச் சார்ந்த ஒன்றாக இருக்கும் என்பது தெளிவாய்ப் புரிந்துபோனதில் ராமச்சந்திரனின் கவலை இரட்டிப்பானது.

பையன் மொத்தத்துல எப்படிசார் என்று அவர் வினவியபோது, அந்த நண்பர் பட்டுக்கொள்ளாமல் இரண்டுக்கெட்டா

- ஜனவரி 2001 

தொடர்புடைய சிறுகதைகள்
திருப்பம்!
குமாரிக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. தன் தந்தையைத் தனியாக விட்டு விட்டுக் கிளம்புவதற்கு, அவளுக்கு இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன. தினகரனின் காதலை, மாரிசாமி ஏற்க மாட்டார் என்பதை, அவரின் ஜாதிப்பற்றுமிக்க நடவடிக்கைகளிலிருந்து அவள் அறிந்திருந்ததால் தான், அப்படி ஒரு முடிவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அந்த மைய அரசு அலுவலகத்துள் வீணா காலடி எடுத்து வைத்த போது சரியாக மணி 8.50. மின் தடங்கலால் மின் தூக்கி (lift) வேலை செய்யவில்லை. எனவே, கால்கள் வலிக்க வலிக்க, அவள் படிகளில் ஏறி இரண்டாம் தளத்தில் இருந்த தனது ...
மேலும் கதையை படிக்க...
ஆளுக்கு ஒரு சட்டம்!
சுஜாதாவின் மனம், தாங்க முடியாத பரபரப்பில் ஆழ்ந்திருந்தது. அன்று பிற்பகல், 3 மணிக்கு, எழுத்தாளர் சிவமதியைப் பார்க்க, அவளுக்கு, அவர், அனுமதி வழங்கியிருந்தார். கடந்த, 25 ஆண்டுகளாக தமிழில் மட்டுமல்லாது, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றிலும் எழுதிக் கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர். மூன்று மொழிகளில் ...
மேலும் கதையை படிக்க...
”நேற்றிலிருந்து நானும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். என்ன யோசனை அப்படி-ஏதோ பெரிய கோட்டையைப் பிடிப்பதற்கு யோசனை செய்வது மாதிரி?” ஆழ்ந்த உறக்கத்தின்போது உலுக்கி எழுப்பப்பட்டவனுக்குரிய திடுக்கிடலுடன் வள்ளிநாயகம் இலேசான தலைக் குலுக்கலோடும் சட்டென விரிந்து கொண்ட விழிகளோடும் கல்பனாவை ஏறிட்டான். ஓர் அசட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
‘‘மங்களம்! இன்னைக்கு ராத்திரி பன்னண்டு மணிக்கு ஒரு கிராக்கி வருது. ‘ஜெயில்லேர்ந்து இன்னைக்குத் திரும்பி வந்திருக்குமே, அந்தப் பொண்ணு மங்களம்தான் வேணும்’னு அந்தாளு சொன்னாரு. ஒருக்கா, உன்னோட கேஸ் நடந்துக்கிட்டு இருந்தப்ப கோர்ட்டுக்கு வந்து போயிக்கிட்டு இருந்த ஆளோ என்னமோ! கரெக்ட்டா ...
மேலும் கதையை படிக்க...
திருப்பம்!
இது தாண்டா ஆஃபீஸ்!
ஆளுக்கு ஒரு சட்டம்!
நியாயங்கள் மாறும்
நீயா! – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)