Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நாணல்புல்

 

அந்த மெல்லியகம்பு அவளது உடல் எடையை தாங்குமா இல்லையா என்பதல்ல தாங்குகிறது.

அவள் அதை நிலையூன்றி வேர்கொண்டு வருகிறாள் என்பதே கண் கூடு. மாதவன் டீக்கடை வாசல்அது.

இவன் தெற்குப்பார்த்து நிற்கிறான். மேற்குப் பார்த்து கடையின் நடை. அப்படியா னால்கடையின் டீப்பட்டரையும் அப்படித்தானே இருக்க வேண்டும்.நீங்கள் நினை ப்பது சரிதான்.

ஒன்றல்ல,இரண்டல்லதட்டுநிறைந்த வடைகளும் பஜ்ஜிகளுமாய் அருகில் சட்னி வாளியுடன்வைக்கப்பட்டிருந்த இடத்தினருகில் நிற்கிறான்.கடையின் நடை வாசல ருகே கடையின் உள் செல்ல வழிவிட்டு அமர்ந்திருந்த டீப்பட்டரையில் அடுக்கித் தெரிந்த பஜ்ஜிவடைகளில் நிலையூன்றித் தெரிந்தபார்வைநகன்று,நகன்று டீ மாஸ் ட ரின் மேல் பதிந்த போது மாலை வெயில் மெல்ல இறங்கித்தெரிவதாக/

வடையில் முழித்துத்தெரிந்த பருப்பும்,பஜ்ஜியின் லேசான கருகலுமாய் எதை எடுத் துத் தின்பது முதலில் என யோசிக்க வைத்துவிடுகிறது.

காலையிலிருந்து மாலை வரை அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் ஒன்றுக்குப் போகக்கூட எந்திரிக்க யோசித்தவனாய் கம்யூட்டரையே உற்றுப்பார்த்தபடி அமர் ந்து வேலை பார்ப்பதில் இப்படி ஆகிப்போகிறது.

அதன் விளைவு இப்படி போகிற வழியில் தட்டுப்படுகிற கடையில் ஏதாவது சாப்பி ட்டு ஒரு டீக்குடித்தால் தேவலாம் போல தோனி விடுவது தவிர்க்க முடியாத தாகிப் போகிறது. முத்து இன்னமும் ஒரு படி மேலே.

தினசரி மாலை வேலைமுடிந்து வருகையில் சட்னியுடன் ரெண்டு வடையும் பஜ்ஜி யும் சாப்பிடால்தான்கடைக்காரர்அந்தவழியேபோகவிட மாட்டார்என்பது போல பேசு வார். எல்லாம் எண்ணெய்ப் பலகாரங்களின் மேல் இருக்கிற மோகம்.

காய்ந்து போன மூளைக்கு சற்றே ஈரம் பாய்ச்சினால் நன்றாக இருக்கும் என்கிற நினைப்பிலும்நப்பாசையிலுமாய்ஏதாவது ஒருடீக்கடையில் நிற்பதை விடுத்து மாதவன் டீக்கடையில் நிற்கிறான்.

மிகச்சரியாக அதன் எதிர் வரிசையில் நான்கு கடை தள்ளி டாஸ்மாக்.சமயத்தில் அந்தக்கடையின்வாடையும், போதையும் இங்கு வந்துதாக்கதலைகிர்ரிட்டு விடும். அப்புறம் குடிக்கிற திக்கான டீ கிக்காக இருக்கும்.தினசரி காலை,மாலை இரு வேளை அங்கு டீக்காய் நிற்கிற போதுகிடைக்கிறதட்டுப்படுகிற கடையின் அடை யாளத்தையும், வாசனையையும் தவிர்த்து காணமுடிகிற ஒன்றாய் அந்தப் பாட்டி காட்சிப்பட்டுத் தெரிகிறாள்.

சுட்டுவிரல் தடிமனே இருக்கும் மெல்லிய நாணல் கம்பு .அதுவும் அவளது இடுப் பளவே இருக்கிறது.80 ற்கும் மேற்பட்ட வயதில் தெரிந்த அவளது உடலைப் போர்த்திக் கிடந்த புடவை அந்த மெல்லிய உடலுடன் ஒட்டிப்போயும், நகர்வற்று மாய்/

அவள் புடவையை உடுத்திருக்கிறாளா அல்லது அள்ளி போர்த்தியிருக்கிறாளா என்கிற சந்தேகம் அவளைப்பார்க்கும் போதெல்லாம் வராமல் இருந்ததில்லை. அவள் வருகை டீக்கடை நடையை தொட்டு விட்டாலோ அல்லது தூரவருகையில் அவளை எட்டிப் பார்த்து விட்டாலோ போதும்,மாதவன் ரெடியாக இரண்டு பஜ்ஜிகளை பிய்த்துப் போட்டு சட்னி ஊற்றி வைத்து விடுவார் ரெடியாக ஒரு பிளாஸ்டிக் தட்டில்/

அவளும் கடைக்குள் நுழைந்ததும் அதை வாங்கிக்கொண்டு கடையினுள் இருக்கிற பெஞ்சில் அமர்ந்து விடுவாள்.பெரும்பாலான நாட்களில் கையில் வாங்கிய பஜ்ஜித் தட் டுடன் அவள் கையில் வாங்கிய பஜ்ஜித்தட்டுடன் அவள் சென்று அமர்கிற இடம்கடையின்சமயலறையாய்இருந்திருக்கிறது.அங்குதான்அவளுக்குசௌகரியப் படுகிறது எனச்சொல்கிறார் கடையின் உரிமையாளர் மாதவன்.

அன்றாட நகர்வுகளில் காலையிலும், மாலையிலுமாய் நடந்தேறுகிற இந்த சௌகரி யம் அவளது வயதில் அவளை எங்கு நிலை நிறுத்தி வைத்திருக்கிறது எனத் தெரி யவில்லை.

தினசரி காலை வேலையிலும்,மாலை வேலையிலுமாக அவளைப் பார்க்க நேர்ந்து விடுவதுண்டு.சில நாட்கள் பார்க்கமுடியாமல்தப்பிப்போவதும் உண்டு.

மெலிந்து ஒட்டிப்போய்கிடக்கிற உடலில் முளைத்துத் தெரிகிற கைகளும், கால் களும் அவள் உடல் பாரத்தை தாங்கி நடக்கஏதுவாயும்கம்புபிடித்து நடந்து செல்ல ஏதுவாயும் ஆகிபோகிறது.

அவளது இடுப்பளவே உயரம் கொண்ட கம்பு அவள்உடுத்தியிருந்தசேலையையும் சேர்ந்து தாங்கி சுமந்து வருவதாய்/

”எனக்கு சுங்கடிப்பொடவையும்,கண்டாங்கிச்சேலையும் ரொம்பவே புடிக்கும் தம்பி. ஏங் வீட்டுக்காரரு அததான் எடுத்துக்குடுப்பாரு.அதுல நான் ரொம்பவே நல்லா இருக்குறதா சொல்லுவாரு.நானும் ஓரளவுக்கு நல்லாவே இருப்பேன் அப்பம். ஏங்கூட காடு கரைகள்ல வேல செய்யிற ஏங்சேக்காளிகளுக்கு இது ஒண்ணுதான் ஏங் மேல ரொம்ப பொறாமையா இருக்கும்ன்னா பாத்துக்கப்பா,

ஏங் மேல ஆசைப்பட்டுதான் என்னையகூட்டிக்கிட்டுவந்தாரு.எங்க கல்யாணம் மொறையா ஆயி,அப்பன்பாத்து பேசி முடிச்ச வச்ச கல்யாணம் இல்ல,நான் மதுரை யைத் தாண்டி ரொம்ப தூரத்துலஇருக்குறஊர்க்காரி,காண்ட்ராக்டாமாசக்கணக்கு ல இங்க நெல்லு நாத்து நடுற வேல செய்ய வந்த யெடத்துல என்னய அவருக்கு ரொம்பவேபுடிச்சிப்போச்சி,ஏங்கூடவேலை செய்யிற ஒருத்திகிட்ட கேட்டுப்பாத்து ருக்காரு,ஒறவு மொற,ஊரு மொற,,,,,, எல்லாம் எப்பிடி என்ன ஏதுன்னு.

எனக்கும் அவரு மேல ஒருகிறுக்கு இருந்திச்சிதான்,அவர பாத்த நாளு மொதக் கொண்டுமனசு நெல கொள்ளல என்ன,,,ஆம்பள அவரு தைரியமா சொல்லீட் டாரு, பொம்பள நான் எப்பிடி பட்டுன்னு சொல்றது/ மனசுக்குள்ளயே போட்டு மருகி நின்ன நாளும் அதுவுமா பாத்து ஒரு நா ராத்திரி வேளையா நாங்க தங்கியிருந்த வயக்காட்டு கூடாரத்துகே வந்துட்டாரு.அப்புறமாஎன்ன செய்ய மனசும்,மனசும்பேசிக்கிட்ட அருமை யானபொழுதாபோச்சி அது,நாங்களும்மறுநா காண்ட்ராக்ட் முடிஞ்சிகெளம்பப்போறோம். என்ன செய்ய தம்பி ,அவரு எங்க கல்யாணம் பத்தி ஒரு முடிவக்கேக்குறாரு. அப்ப வே அந்த நிமிஷமே சொல்லச் சொல்றாரு.ஆம்பள அவர மாதிரி படக்குன்னு என்னால ஒரு முடிவ சொல்ல முடியல.அவரு இப்பவே இப்பிடியே கெளம்பு .ஏதாவது கோயில்ல போயி கல்யாணம்கட்டிக்கிருவோம்ங்குறாரு,கண்டிப்பா ரெண்டு பேர் வீட்லயும் சம்மதி க்க மாட்டாங்க,ஜாதி குறுக்க நிக்கும் போது எப்பிடின்னாரு,நானும் காண்ராக்ட் வேல முடிஞ்சி ஊருக்குப்போன ஒருவாரத்துல இவரத்தேடி பஸ்ஸேறி வந்துட் டேன்.

அப்பறம்என்னரெண்டு வீட்லயும் அதகளம்தான்.நாங்க வேற,நீங்க வேற இனிமே நம்ம ரெண்டு கும்பத்துக்கும் ஒட்டும் கெடையாது ஒறவும் கெடையாதுன்னு சொல் லி ஏங் மொத மகன் பெறக்குற வரைக்கும்பேச்சுவார்த்தபோக்குவரத்து அன்னம், தண்ணின்னு எதுவும்இல்லாம இருந்தவுங்க மூத்தமகன் பொறந்த கொஞ்ச நாள்ல புள்ளைய பாக்குற சாக்குலவந்தாக .அப்புறம் பாத்தா சம்பந்தகாரங்க ரெண்டு பேரும் எங்களக்கூட மறந்து போறஅளவுக்குஒண்ணு, மண்ணாஐக்கியமாகிப் போனாங்க.அப்பயெல்லாம்தாய் வீட்ல யிருந்து என்னய பாக்க வரும்போது ஒரு சுங்கடி சேல உறுதி.மதுரப்பக்கம் அதுசௌ கரியம்தான,இவருஇங்க எடுத்துதர்ற கண்டாங்கிச் சேலைன்னு வரும் கடந்தும் எனக்கு கட்ட நேரமில்லாம பெட்டிக் குள்ள ஒறங்கும் சேலக.வீட்ல சோறு தண்ணிக்கி பத்தாக் கொற வந்தப்பக்கூடயும் உடுத்துற உடுப்புக்கு பஞ்சம் வந்தது கெடையாது.

அடுத்த வருசங்கள்ல பொறந்த ரெண்டு கொழந்தைகளுக்கும் என்னோட பழைய சேலைதான் பீத்துணியா இருந்துச்சி/ அப்பிடியெல்லாம் இருந்துட்டு இப்பம் ஒத்தச் சேலை க்கு அல்லல்ப்படவேண்டியிருக்கு.

அவரு போனதுக்கு அப்புறம் அப்பிடியே அவர நினைச்சிக்கிட்டு காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன் தம்பி. டீக்கடைக்கும் வீட்டுக்கும் ஊடாலையுமா ஜீவன் கெடந்து அல்லாடுது,இப்பம்சாப்புட்டுப்போறேனே,அதுதாஏங்ராச்சாப்பாடு.வீட்ல போயி இருந்தா சாப்புடுவேன், இல்லைன்னா அப்பிடியே மொடக்கி படுத்துருவேன்,கடைய விட்டுபோகும் போது டீக்கடை தம்பி மிச்சமிருக்குற ரெண்டு பஜ்ஜிய மடிச்சி குடுக்கும், அந்த மாதிரி நாள்கள்ல எனக்கு கூடுதல் சாப்பாடு கெடச்ச மாதிரி இருக்கும். பிராய த்துலஏங்அளவுக்குசாப்புட ஆள்கெடை யாது,ஏங்சோட்டுபொண்ணுங்க ஏங்கூட சாப்பாட்லபோட்டி போட முடியாது. சரித் தான் அப்பத நெலமைய இப்ப நெனைச்சா முடியுமா, நெலம எப்பிடி இருக்கோ அப்பிடி போயிக்கிற வேண்டியதுதா,ஏங்மகனும் என்னையகொறயாவச்சிப்பாத்து க் கல்ல,அவன் சத்து அவ்வளவுதான்.

உள்ளூரிலேகட்டிக்குடுத்தபொண்ணுரெண்டுபெண்பிள்ளைகளோடநிக்குறா, அவ ளுக்குபுள்ளைகளுக்குநல்லயெடத்துலமாப்புளஅமையனுமேன்னுகவல.இவனுக்கு என்னையப்பாத்துக்குறதும்,புள்ளைங்களவளக்குறதும்,படிக்கப்போடுறதுமே பெரும் பாடா இருக்குது.

எங்க தம்பி அவன் வருமானத்துல வருசத்துக்கு ஒரு நூல்ப்பொடவை எடுத்து தர்றதே பெருசு/ இது போக கூப்பன் கார்டுலதைப் பொங்கலுக்கு குடுக்குற சேலையையும் ஊட, மாட வாங்கிக்கிருவேன்.அதுவேசரியாகிப்போகும்என்றாள்.அவள்கட்டியிருந்த புடவை வயலெட் கலரில் இருந்தது.பார்டர் அடர் ஊதாகக்கலரில் முகம் நிறைந்த சுருக்கமும், ஊடல் நிறைந்த தளர்வும்,நடக்க முடியா நகர்வுமாய் நடுத் தெருவின் மத்தியிலிருந்து வருகிறாள்.

போனவருசமே மழைக்கு ஒழுகுன வீடு தம்பி.இந்தவருசமாவதுமழைக்குமுன்னாடி அதை சரி பண்னனும்ன்னு அலையா அலையுறான் ஏங் மகன் .எங்க விக்கிற வெலை வாசிக்கும்,கூலிக்கும் அவன் நெனச்சது நடக்காம போயிருமோன்னு கெடந்து மருகுறான்.

ரெண்டுல ஒண்ணு பொம்பளப் புள்ளையாப் போச்சு அவனுக்கு. பையனவுட அவகொஞ்சம் சுதாரிச்ச ஆளு.உருண்டு,பெரண்டு தரையிலே கூட நீந்தீருவான் நீந்தி/ பொம்பளப் புள்ளயும் அவன விட்டவ இல்ல.ஆனாலும் இவள பையன் அளவுக்கு சுதந்திரமா விட முடியல.

இவுங்களாவது பரவாயில்ல.எங்க காலத்துல எங்காவது பக்கத்து ஊருக்கு போக ணுன்னாகூடதொணையோடதான் போகணும்.இப்ப கையில காசும் ஒடம்புல தெம்பும்தான்வேணும்தம்பி.நெனைச்சநேரம்நெனைச்சயெடம்ன்னு போயி வந்துர் ராங்க பஸ்ஸீல,ரயில்லண்ணு எனச் சொன்ன பாட்டியின் பேத்தி 12ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள் உள்ளூர்ப்பள்ளியில் .

போன வருடம்தான் ப்ளஸ் டூ வரை கொண்டு வந்திருந்தார்கள்.11 ஆம் வகுப்புக்கு மதுரைபோய்வந்தபிள்ளை.உள்ளூருக்கு12வரவும் திரும்பவும்உள்ளூர் வகுப்பறை யிலேயே அவளுக்கு 17 ஆகப் போகுது தம்பி வயசு.கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு சொல்றான் மகன்,இந்தக்கழுதகேக்கமாட்டேங்குறா,மேலபடிக்கணும்,வேலைக்குபோகனுன்னு ஒத்தக்கால்ல நிக்குறா,அத அவன் அப்பங்கிட்ட சொல்றதுக்கு பயந்துக்கிட்டு எங்கி ட்டு வந்து சொல்லிச்சொல்லச்சொல்றா,நான் என்ன செய்ய மத்தளத்துக்கு ரெண்டு பக்க இடிங்குற மாதிரி ரெண்டு பேர்ட்டயுமா வாங்கிக்கட்டிக்கிட்டு,,,,,,,,,,,,,சரி அவுங்க யார் தம்பி ஊராவுங்களா?ஒருபக்கம்பெத்தமகன்,ஒரு பக்கம் அவன் பெத்த பேத்தி. இப்பஎன்ன கொறஞ்சா போறம்,வையவைய வைரக்கல்லு,.அது சரி இது ஒரு மாத் தந்தான தம்பி.நாங்க அப்ப அப்பிடி இருந்தோம்ங்குறதுக்காக இப்பவும் புள்ளைங்க அப்பிடி இருக்க முடியாது.தவுர இப்ப எதுனாலும் துட்டுன்னு ஆகிப்போச்சு தம்பி/ஒரு காலத்துல காடு,கரைன்னு வெளஞ்சு கெடந்தப்ப பக்கத்து மனுசன்ஒறவு வேணும்ன்னு நெனைச்சோம்/பெத்தவுங்க, பெறந்தவுங்க, அண்ணன், தம்பி,பெத்தவுங்க, பெறந்தவுங்க அண்ணன், தம்பி,ஜாதி சனம் எல்லாம் தேவை ன்னு ஆகிப்போச்சு.அதுதான் இந்த சீரழி வுக்கெல்லாம் காரணமோன்னு தோணுதுதம்பி.மனுசமொகம் பாத்து பேசுனது, பழகுனது எல்லாம் மாறிப் போச்சு தம்பி என்கிறாள்.

9.45 பஸ் பத்து நிமிடம் தாமதம் போலும்.இப்போதுதான் போகிறது.ஆட்களையே காணவில்லை.

அரை மணிக்கு முன்னதான் மதுரையிலிருந்து வர்ர வண்டி போச்சி. அப்பமே நெனைச் சேன்.கூட்டம் கொறைவா இருக்கேன்னு,இன்னைக்கி என்ன எதுவும், அட்டமி, இல்ல வடக்க,தெக்க சூலமாதெரியல,ஒரு வேள அப்பிடித்தான் போலயி ருக்கு.இப்பம்யாருஅதையெல்லாம்பாக்குறா,ஏதோஒருதோதுக்காகஅப்பம்சொல்லி வச்சிருக்காங்க,இப்பம்இருக்குறகாலத்துக்குஅதுஒத்துவருமான்னு தெரியல. தம்பி சரி அப்பம் அப்பிடி இருந்துச்சி,இப்பம் இப்பிடியிருக்கு/

இருக்கட்டும் தம்பி,,,,,,,,,, காலையில வெள்ளன ஏங் மகன மீன் யேவாரத்துக்கு அணுப்பணும்/ வரட்டுமா? 

தொடர்புடைய சிறுகதைகள்
அப்பாக்களின் இறப்பு தவிர்க்க முடியாததும் நடப்பதும் தான் என்றாலும் கூட அவர்களின் இழப்பு எற்படுத்திவிட்டுச் செல்கிற வெற்றிடம் மிகப் பெரியாதாகவே. நண்பரின் அப்பா இறந்து போகிறார் ஒரு அதிகாலைப் பொழுதாக என போன் வந்த வேலை காலை 8.00 அல் லது 8.05 ...
மேலும் கதையை படிக்க...
சொல்லாமல் கொள்ளாமல் உள்ளே நுழைந்த காற்று திறந்திருந்த கதவை தனது சின்னக்கால்களால் சற்றே பலமாய் எட்டி உதைத்து விட்டு வந்த வழியாகவே திரும்பிச்சென்று விடுகிறது. அவசரத்தில் அது எந்தக்காலால் உதைத்தது எனப்பார்க்க மறந்தே போகிறான். எந்தக்காலாய் இருந்தால் என்ன, எட்டி உதைத்தது உதைத்ததுதானே?பட்ட ...
மேலும் கதையை படிக்க...
இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே. காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை போய்விட்டு வந்து விடலாம் என்கிற நினைவு தாங்கி நேற்று இரவு தூங்கிப்போனது தான். ஆனால் காலையில் எழும்போது வழக்கமான சோம்பலும் மிதமிஞ்சிப்போன ...
மேலும் கதையை படிக்க...
அவர்களது வீட்டை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை . நாராயணா ஸ்டோர்ஸீக்கு எதிர்சந்தில் இருக்கிறது என்றார்கள். போய் விட்டேன். நீண்ட அகலமான தெரு.ஸ்டோரிலிருந்து பார்த்தால் குறுக்காகப் போன மெயின் ரோட்டைத்தாண்டி நீண்டு தெரிந்தது. இரண்டு பக்கமும் முளைத்திருந்த வீடுகள் வரிசையாகவும்,வரிசை தப்பியுமாய் தெரிந்தன.வாசலில்போடப்பட்டிருந்த கோலங்கள் அழிந்தும் ...
மேலும் கதையை படிக்க...
சாவி வாங்க வேண்டி வந்ததினால் அங்கு வந்தேன்.இல்லையெனில் வந்திருக்க மாட்டேன். ஒரு டீ நாவின் சுவையறும்புகள் மீது படர்ந்து தொண்டைக் குழி வழியாக இறங்கி சுவை கொடுக்கிறதாக அல்லது திருப்தியோ, மன நிம்மதியோ கொள்ளச் செய்வதாக காளியம்மா வீடு, பெருமாள் சாமி டீக்கடை,சிந்திக்கிடந்த ...
மேலும் கதையை படிக்க...
விநாடி முள்ளின் நகர்வுகள்…
மென்காற்றாய்…
இன்வாய்ஸ்
விலாசம்
குழல் விளக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)