நாடு அதை நாடு – ஒரு பக்க கதை

 

ராதா அப்பாவை எங்கே காணோம்?

அவர் காலையிலேயே வோட்டு போட கிளம்பிவிட்டார்.

ராகவன் கோபமானான். உடம்புல சுகர், பிரஷர் வச்சுக்கிட்டு இப்போ வோட்டு போடலைன்னா என்ன குடியா முழுகிடும்?

சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் அப்பா பலராமன் உள்ளே நுழைந்தார். ஏம்பா காந்திஜியோட ஜெயில்ல ஒண்ணாயிருந்தேன். பாத யாத்திரை போனேன்னு சொல்வீங்களே ஆனா உங்க தியாகி பென்ஷன் வாங்க உங்களை நாயா இந்த அரசாங்கம் அலைய வைக்கிறதே இதுக்கு வோட்டு போடலைன்னா என்ன?

டேய் நீங்களெல்லாம் எங்களுக்கு என்ன செய்வீங்கன்னு எதிர்பார்த்தா நாங்க அன்னைக்கு சுதந்திர போராட்டத்தில ஈடுபட்டோம். அன்னியரை விரட்டணும்னு தான்

அதே மாதிரி, நாடு உனக்கு என்ன செய்ததுன்னு கேட்காதே, நீ நாட்டுக்கு இது வரை என்ன செய்தேன்னு யோசிக்க ஆரம்பி… என்று சொன்ன அப்பாவை, ராகவன் வியப்போடு பார்த்தான்.

-எஸ்.ஜெயலெட்சுமி, ஸ்ரீரங்கம் (நவம்பர் 2011)
 

தொடர்புடைய சிறுகதைகள்
"ஏண்டி சனியனே என் பேனாவை நீ எடுத்தியா? உன்னாலதான் வீட்டில பிரச்சனையே.... எங்கடி போய்த் தொலைஞ்ச....? கத்திக்கொண்டே மகேஷ் அறையை விட்டு வெளியே வருவதற்கும், அதற்குள் அங்கே கைஅக்குள்களில் கட்டையுடன் கண்களில் நீருடன் தங்கை இளவழகி வந்து சேர்ந்தாள். "அண்ணே .....நான் எடுக்கலேண்ணே......வேணா ...
மேலும் கதையை படிக்க...
பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின் பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு, அதற்குள் ஐதான இழைகளுடையதும், தொய்வானதுமான ஒரு சிலந்திவலைபோல குறுக்கும் நெடுக்குமாக சிறு சிறு பாதைகள் (புறோமினேட்ஸ்) காலாற உள்ளே நடப்பவர்களுக்கும், ...
மேலும் கதையை படிக்க...
செப்டம்பர் 1, 1939-ம் ஆண்டு, நாங்கள் சின்னக் கிராமம் போய்ச் சேர்ந்தோம். எனக்கு வயது எட்டு. அப்போது தான், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியிருந்தது. 5-ம் தேதி, எங்கள் அத்தையின் கணவர் சுப்பைய்யருக்கு, சஷ்டியப்தபூர்த்தி. அத்தை, என் அப்பாவின் மூன்று அக்காக்களில் ...
மேலும் கதையை படிக்க...
குழந்தை காலை உதைப்பது அவளது வயிற்றின் மேல் பட்டு அவளை சிலிர்க்க வைத்தது, இன்னும் கொஞ்ச நேரம் தான் கண்ணே, தனக்குள் சொல்லிக்கொண்டே தன் குழந்தையை இறுக்கி அணைத்தாள். சட்டென்று அதிகமாக இறுக்கி விட்டோமோ மனதில் நினைத்தவுடன் தன் இறுக்கத்தை தளர்த்தினாள். ...
மேலும் கதையை படிக்க...
தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் நாகராஜ். அவருக்கு இப்பல்லாம் இரவில் தூக்கம் வருவதில்லை. படுத்ததும் அயர்ந்து தூங்க ஆரம்பிப்பவர் திடீரென விழித்துக் கொள்வார். அப்புறம் தூக்கம் அவ்வளவுதான். எப்பவும் கொஞ்ச நேரமாச்சும் தூங்குவார். இன்று தூக்கம் வரவேயில்லை... அதுக்கும் காரணம் ...
மேலும் கதையை படிக்க...
தேடி வந்த தேவதை
காலச்சிமிழ்
அத்தை
ஊமை தாயும் குழந்தையும்
விழலுக்கு இறைத்த நீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)