நல்ல சேதி – ஒரு பக்க கதை

 

திருமணமாகி மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையே என்று மாலாவுக்கு மிகவும் கவலை. அவளுடைய கணவன் பாபு, ஒரு தனியார் உடற் பரிசோதனை நிலையத்தில் வேலை செய்து வந்தான்.

கணவன் காலையில் வேலைக்குக் கிளம்பும்போது மாலா, “இன்னைக்கி என் அம்மாவை அழைச்சிக்கிட்டுப் போய் டாக்டர் சொன்ன டெஸ்ட்களை எடுக்கப்போறேன்” என்றாள்.

“சரி” என்ற பாபு வேலைக்குப் போய்விட்டான்.

அன்று இரவு கணவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் மாலா. அவர் கருவுற்றிருக்கிறாள் என்று பரிசோதனை முடிவுகளை வைத்து டாக்டர் சொன்னதே காரணம்.

வேலை முடிந்து பாபு, திரும்பி வந்தான். அவன் கொண்டு வந்த பையில் நிறைய இனிப்புகள் இருந்தன. வியப்புடன் அவனைப் பார்த்து, “”நானே நல்ல சேதி சொல்லணும்னு காத்திருந்தேன். நீங்களே ஸ்வீட் வாங்கிட்டு வந்திட்டீங்க” என்றாள் மாலா சிரிப்புடன்.

அந்த நல்ல செய்தியை அவளை முந்திக் கொண்டு பாபு சொன்னான். எப்படித் தெரியும்?” வியப்புடன் கேட்டாள்.

ஆஸ்பத்திரியில் உனக்கு எடுத்த டெஸ்ட்கள் எல்லாம் எங்க லேப்புக்குத்தான் வந்தன” என்றான் பாபு.

- ராமு, திண்டுக்கல் (பிப்ரவரி 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
ரவி தூரத்தில் வருவது தெரிந்ததுமே, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுப்ரமணியம் பாதியிலேரே எழுந்து மகனை சந்தோஷமாய் வரவேற்றார். “என்னப்பா… எப்படி இருக்க…?’ ரவி கேட்டான். “நல்லா இருக்கேன்டா… நீ எப்படி இருக்க…? ராதா எப்படி இருக்கா…? குழந்தை விவேக் எப்படி இருக்கான்?’ சுப்ரமணியன் பாசத்துடன் கேட்டார். “….ம்… ...
மேலும் கதையை படிக்க...
நண்பன்
கண்ணாடித் தடுப்பு வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே தெரியாதவாறும் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் நடப்பது அனைத்தும் தெரிவதாயும் அமைக்கப்பட்டிருந்தது. மணி மூன்றைத் தாண்டி நாற்பது நிமிடங்கள் ஓடியிருந்தது. இன்னும் இருபது பேருக்கு மேல் காத்துக் கொண்டிருந்தார்கள். இன்று வெள்ளிக்கிழமையாதலால் இன்னும் வருவார்கள். நான் தரும் ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பழங்கால பிரிட்டிஷ் கட்டடத்தை விட்டு வெளியே நடந்தாள். வெயில் முகத்தைச் சுட்டெரித்தது. இதைப் போன்ற உயரமான மேற்கூரையும் வளைவுகளையும் நீளமான தாழ்வாரங்களையும் கொண்ட கட்டடம் இன்னும் வேறு ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாள். ராஃபிள்ஸ் பிளேஸில் இல்லை. டோ ...
மேலும் கதையை படிக்க...
பூபாள நேரத்து கனவுகள்!
"பொற்கொல்லர் கள்!' - ஒரு பிரபல வாரப் பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதை போட்டியில், முதல் பரிசை தட்டிக் கொண்ட சிறுகதை இது. கதாசிரியை கனகா, தனியார் நிறுவனத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்ப்பவர். வரதட்சணை பேயால் சீரழியும் பெண்களைப் பற்றி, உருக்கமாக எழுதியிருந்தாள் கனகா. அவளும், வரதட்சணை ...
மேலும் கதையை படிக்க...
சங்கரன்: 15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாரதி, அம்மா ராதை. சென்னையில் அண்ணா நகரில். சங்கரன் மூன்றாவது குழந்தை, இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு. நடுத்தர வர்க்க குடும்பம். சாரதி ஒரு சைவ ஹோட்டல் நடத்திக் ...
மேலும் கதையை படிக்க...
பாசம் – ஒரு பக்க கதை
நண்பன்
பறவைப் பூங்கா
பூபாள நேரத்து கனவுகள்!
சங்கர ராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)