நம்ப முடியுமா?

 

‘என்னம்மா… பையனைப் பிடிச்சிருக்கா? பதிலே சொல்லாமல் இருக்கே!’’ – சடகோபன் தன் மகள் மாலதியிடம் மெல்லிய குரலில் கேட்டார்.மாலதி மெளனமாக இருந்தாள். காரணம், இது ரெண்டாந்தார சம்மந்தம். பிரசவத்தின்போது மனைவியை இழந்தவர்தான் மணமகன். கையில் ஒரு பெண் குழந்தை.

‘‘பையனை நல்லா தெரியும்மா! ரொம்ப நல்லவன். அவன் போதாத காலம்… அப்படி ஆகிடுச்சி. கொஞ்சம் யோசிம்மா!’’ – சடகோபன் விடுவதாக இல்லை.

‘‘பையனைப் பத்தி கவலை இல்லேப்பா. நல்லவராவே இருக்கட்டும். அவர் பெண் குழந்தையைப் பத்திதான் கவலைப்படுறேன். அவளை வளர்த்து ஒருத்தன் கையில கௌரவமா பிடிச்சிக் கொடுக்க வேண்டாமா? அதான் யோசிக்கிறேன்…’’

‘‘எனக்கு நம்பிக்கை இருக்கு மாலு… நீ புத்திசாலி. நல்ல இடத்தில் அவளை கரை சேர்ப்பே!’’ – ஆதரவாகச் சொன்னார் சடகோபன்.

‘‘உங்க முதல் மனைவிக்குப் பிறந்த என்னை, சித்தி சொன்னாங்கன்னு அவங்க சொந்தக்காரப் பையனுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வைக்கப் பார்க்கறீங்க. என்னை மட்டும் எப்படிப்பா நம்பறீங்க? நானும் சித்தி மாதிரிதானே இருப்பேன்!’’ – மாலதி கேட்கவும், தலை கவிழ்ந்தார் சடகோபன்.

- ஜூன் 2015 

தொடர்புடைய சிறுகதைகள்
மாடி போர்ஷனில் கணவன்-மனைவி சண்டை இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகமாகக் கேட்டது. தினமும் நடப்பதுதான். கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பது, வாய்க்கு வந்தபடி பேசுவது. பொறுக்க முடியாமல் மாடிக்குப் போனார் ஹவுஸ் ஓனர் மாணிக்கம். ‘‘இங்க பாருங்க சிவா சார்... நீங்க ...
மேலும் கதையை படிக்க...
‘‘நீ காலேஜ்ல படிக்கும்போது எடுத்த போட்டோக்கள் இருக்கா? அதுல நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்!’’ புது மாப்பிள்ளை பாஸ்கர் தன் மனைவி ரேகாவிடம் கேட்டான். அவன் மனதில் ஒரு திட்டம். தன் பர்சனல் ஆல்பத்தை எடுத்து வந்தாள் ரேகா. ஒவ்வொரு போட்டோவாக பார்த்தான் ...
மேலும் கதையை படிக்க...
ரேவதி கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. அந்த வீட்டில் கடைப்பிடிக்கும் சில வழக்கங்கள் அவளுக்கு சரியாகப் படவில்லை. அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள அவள் தயாராக இல்லை. ஈகோ இடித்தது. கணவன் ரவியிடம் சொல்லி வருத்தப்பட்டாள். “அது என்ன ...
மேலும் கதையை படிக்க...
மகள் ரம்யாவின் திருமண அழைப்பிதழை முதன்முதலில் தன் அண்ணனிடம் கொடுக்க கணவர் ரவி எடுத்துப் போவார் என்று கமலா எதிர்பார்க்கவில்லை. அவருக்கும் அவர் அண்ணனுக்கும் வெகு நாட்களாய் மனஸ்தாபம். ரவி செய்யும் எந்த வேலையிலும் தப்பு கண்டுபிடிப்பதே அவர் அண்ணனுக்கு வேலை. ...
மேலும் கதையை படிக்க...
‘‘இங்கே புதுசா சேர்ந்தவர்களை ராகிங் பண்ணுவாங்களா..?’’ ‘‘சேச்சே! அப்படியெல்லாம் இல்லை... யார் சொன்னது?’’ ‘‘புதுசா சேர்ந்த ஸ்டூடன்ட்ஸ் தலையில் தண்ணி ஊத்துவாங்கன்னு கேள்விப்பட்டேன்...’’ ‘‘அதெல்லாம் எப்போவோ நடந்தது... இப்போ அது மாதிரி இல்லை. ரொம்ப டிசிப்ளினா இருப்பாங்க...’’ ‘‘பேப்பரை கிழிச்சு தலையில் போடுவாங்களாமே?’’ ‘‘அப்படி எல்லாம் இல்லை!’’ ‘‘ஜூனியர்ஸோட லன்ச் ...
மேலும் கதையை படிக்க...
உபதேசம்
போட்டோ
மாற்றம் வரும் – ஒரு பக்க கதை
தப்பு
ராகிங் – ஒரு பக்க கதை

நம்ப முடியுமா? மீது ஒரு கருத்து

  1. Soraiyur Rangarajan says:

    சரி யான நெத்தியடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)