தோழி!

 

“நேற்று ஏண்டி நீ நடைப் பயிற்சிக்கு வரலே?….” பூங்காவுக்குள் நுழைந்ததும் தோழிகள் மாற்றி மாற்றி சித்ராவைக் கேள்வி கேட்டார்கள்!

“ அதை ஏண்டி கேட்கிறே?…எல்லாக் கடைகளிலும் ஆடி தள்ளுபடி போட்டிருங்காங்க! முதலிலேயே போனா நல்ல புடவைகளா ‘செலக்ட்’ பண்ணலாம்!…அதுதான் கடைவீதிக்குப் போயிட்டேன்!”

“ அப்ப நீ எத்தனை புடவை எடுத்தே?……அதைச் சொல்லு முதலிலே!….” என்றார்கள் தோழிகள் எல்லோரும் ஆர்வத்துடன்.

“…….மூணு புடவைகள் எடுத்திட்டேன்… அற்புதமா அமைச்சிட்டது!…நீங்க எல்லாம் போகும் பொழுது எங்க வீட்டிற்கு வந்து பார்த்திட்டுப் போங்க!..”

நடைப் பயிற்சியை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு, தோழிகள் ரம்யா, மேனகா, கோகிலா எல்லோரும் ஆர்வத்தோடு, பக்கத்துத் தெருவில் இருக்கும் சித்ரா வீட்டிற்கு, அவளோடு புறப்பட்டுச் சென்றார்கள்.

தோழிகளை உட்கார வைத்து, சித்ரா ஆர்வமாக அவள் விரும்பி எடுத்த பச்சையில் மயிலிறகு போட்ட பட்டுப் புடவை, சிவப்புக் கலரில் தாமரை மொட்டுப் போட்ட சில்க் காட்டன் புடவை, மற்றும் அவள் ஆசை ஆசையாக பல கடைகள் ஏறி கண்டுப் பிடித்த எம்.எஸ்.புளுவில் அன்னப் பட்சி போட்ட காஞ்சிப் பட்டுப் புடவை எல்லாவற்றையும் எடுத்து தோழிகளிடம் காட்டினாள்.

“ ஆகா!…..நீல நிறத்தில் அன்னப் பட்சி அற்புதம்!….” என்று வியந்து முதலில் பாராட்டியவள் ரம்யா.

“ இங்கே பாருங்கடி!…இந்த .பச்சை நிறத்தில் மயிலறகு பார்டரில் கொடுத்திருக்கும் ஜரிகை மின்னுவதை!….”.என்று ரசித்துச் சொன்னாள் மேனகா.

“ அதையெல்லாம் விடுங்கடி!….. இந்த சிவப்புக் கலர் புடவை தான் சூப்பர்!….தாமரை மொட்டு எவ்வளவு அழகாக இருக்கு பாரு!.. “ என்று மற்றவர்களுக்கு அந்தப் புடவையை விரித்துக் காட்டினாள் கோகிலா!

அதற்குள் ஒரு தட்டில் இனிப்பு, ஒரு தட்டில் காரம், இன்னொரு தட்டில் சுடச் சுட பில்டர் காப்பி என்று கொண்டு வந்து தோழிகளை உபசரித்தாள் சித்ரா.

டிபனை முடித்து விட்டு அடுத்த தெருவில் இருக்கும் அவரவர் வீட்டிற்கு கிளம்பினார்கள் தோழிகள்.

போகும் வழியில் முதலில் ஆரம்பித்தவள் ரம்யா தான்! “ இந்தக் காலத்தில் போய் நீல நிறத்தில் அன்னப் பட்சி!…சுத்தப் பட்டிக்காட்டுத் தனம்!….” என்று தன் கருத்தைச் சொன்னாள்.

“ ஆமாண்டி!…சித்ராவுக்கு கொஞ்சம் கூட ரசனையை இல்லை!…சிவப்புக் கலரில் போய் யாராவது புடவை எடுப்பார்களா?…ஒரு வேளை மேல் மருவத்தூர் போக எடுத்தாளோ என்னவோ?…” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் கோகிலா!

“ அதை விட கொடுமை இந்தப் பச்சைநிறம்!..இந்த பச்சை நிறமே பொதுவாக மங்கிப் போய் விடுகிறது!..இந்த லட்சணத்தில் கூத்தாடிகளைப் போல் ஜரிகை வேறு மின்னுகிறது!…சகிக்கலை!…” என்றாள் மேனகா.

பெண்களின் புடவைகள் விமர்சனமே நேரில் ஒரு மாதிரி, வெளியில் போய் ஒரு மாதிரி தான் இருக்குமோ?

- 11-11-16 

தொடர்புடைய சிறுகதைகள்
கோவை ரயில்வே ஜங்ஷனுக்கு எதிரில் சாந்தி தியேட்டருக்கு பக்கத்து சந்து தான் கோபாலபுரம். அங்கு இருக்கும் இரண்டு தெருக்கள் முழுவதும் திரைப் பட விநியோகஸ்தர்கள் தான்! அன்று காலை ஒன்பது மணிக்கு ‘ஆத்தா கிரியேஷன்’ அலுவலகத்தில் ஒரே சத்தம்! மானேஜர் தன் உதவியாளரை ...
மேலும் கதையை படிக்க...
சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, ஷேவ் செய்து ‘பிரஸ்’ ஆக யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால், டி சர்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக் கொண்டார். முகத்திற்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். ஹாலில் ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ!....நான் ரமேஷ் பேசுகிறேன்!...நீங்க யார் பேசறது?...” “நான் உன் பால்ய சிநேகிதன் கேசவன் பேசுகிறேன்!....என்னைத் தெரியவில்லையா?...” அட!.....சின்ன வயசிலே கூடப் படித்த அந்தக் கேசவனா…ஐயோ! …அவனுக்குப் பொய் சொல்வது அல்வா சாப்பிடற மாதிரி! ...அவனிடம் எப்படி தப்பிப்பது என்று ரமேஷின் சிந்தனை ஓடியது! …. “ ...
மேலும் கதையை படிக்க...
மூன்று பேர் உட்காரும் அந்த பஸ் இருக்கையில் பாஸ்கரனுக்கு கிடைத்தது மூன்று இன்ச் இடம் தான்! ஏற்கனவே உட்கார்ந்த இருவரும் காலை அகட்டி ஆளுக்கொரு லேப் டாப்பை மடியில் வைத்துக் கொன்டு, ஏதா வேலை செய்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். இவனும் ...
மேலும் கதையை படிக்க...
‘டொக்! டொக்!’ என்று கதவைத் தட்டிவிட்டு அறைக்குள்ளே வந்தாள் நர்ஸ். “ என்னம்மா!.... மாலை நாலு மணிக்கு ஆபரேஷன்….நீங்க இன்னுமா நீங்க பணம் கட்டலே!....உடனே போய் கேஷ் கவுண்டரில் பணத்தைக் கட்டிட்டு வாங்க!..” என்று நர்ஸ் சொன்னவுடன் மகன் முருகேசனைப் பார்த்தாள் பார்வதி. “ அம்மா!...நேற்று ...
மேலும் கதையை படிக்க...
சக்சஸ்
தடுமாற்றம்!
எஸ்.எம். எஸ்!
பெயின்ட் டப்பா!
குரு வீட்டில் சனி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)