தொழில் – ஒரு பக்க கதை

 

சாப்பிட்டு முடித்துக் கிளம்பினான் சேகர். எதிரில் ஜோதிடக் கடை. ஜோதிடர் அவன் அப்பா. ‘இங்கு கைரேகை பார்க்கப்படும். ஜோதிடம், ஜாதகம் கணிக்கப்படும்’ என்ற போர்டு. பைக்கை தள்ளிக்கொண்டு போய் கடை எதிரில் நிறுத்தினான். உள்ளே போனான்.

என்னப்பா…இன்னும் ஜாதகம், ஜோதிடம் கணிக்கப்படும், கைரேகை பார்க்கப்படும்னு போர்டு போட்டுக்கிட்டு….இப்போ உலகம் கம்ப்யூட்டர், இன்டர்நெட்னு போயிட்டு இருக்கு. மனுஷன் வேற கிரகத்துல ஆள் இருக்கான்னு தேடிட்டு இருக்கான்….இன்னும் நீங்க இதே ஜாதகம்,ஜோசியத்தை கட்டிக்கிட்டு அழறீங்க’ என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் கோபம் வந்துவிட்டது அப்பாவுக்கு. ‘அடேய்…தொழிலை கேவலமா பேசாதேடா, நீ படிச்சிருக்கியே பெரிய கம்ப்யூட்டர்…அது இதுல சம்பாதிச்சு படிச்சதுதான்…மறந்துடாதே!” என்றார் ஆவேசமாக.

‘ஹூக்கும்…ஏதாவது சொன்னா, உங்களுக்கு கோபம் வந்துடுமே பெரிசா…சரி, நான் வர்றேன்’ என்றபடி கிளம்பினான்.

தன் அலுவலகத்துக்கு வந்தவன், பைக்கை நிறுத்திவிட்டு, கதவைத் திறந்து உள்ளே வந்தான்.

அங்கிருந்த போர்டில், ”கம்யூட்டர் நிலையம்…இங்கு கம்ப்யூட்டர் ஜோதிடம் பார்க்கப்படும்…கம்ப்யூட்டரில் ஜாதகம் கணிக்கப்படும்’ என்று போட்டிருந்தது!

- கே.ஆனந்தன் (14-6-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: ஜெயமோகன். தெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல். நான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நெடுநாட்கள் துவைத்து உலர்த்தி பழுப்பேறிய வெள்ளைத்துண்டு ...
மேலும் கதையை படிக்க...
எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறக்கும் வரை நான் என் அம்மாவைப் பற்றி தவறாகவே புரிந்து கொண்டிருந்தேன். அதுவரை அவரை நான் இந்த உலகத்திலேயே இருந்த மிகக் கொடுமையான அம்மா என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது என் குழந்தைகளை நான் ...
மேலும் கதையை படிக்க...
(1) சம்பத் டீ குடிப்பதற்காகத் தன் வீட்டின் அருகிலிருந்த டீக்கடைக்குக் கிளம்பினான். அவன் தனது மரக்காலைப் பொருத்திக்கொண்டான். தொடைகளில் இணைக்கும் பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நடந்தான். அவனுக்கு நடப்பதற்குச் சிறிது அயர்ச்சியாக இருந்தது. காலையில் எழுந்ததும் முதல் தடவையாக நடக்கும்போது இப்படித்தான் இருக்கும். ...
மேலும் கதையை படிக்க...
“யோவ், பெரிசு! ஊட்ல சொல்லினு வண்ட்டியா?” லாரி டிரைவரின் கட்டைக்குரலோ, விடாமல் ஒலித்த ஹார்ன் ஒலியோ கணேசனின் காதில் விழவில்லை. பத்து வயதிலிருந்தே எந்த வசவோ, சத்தமோ கேட்காதது அவரது அதிர்ஷ்டம்தான். `போனதுதான் போனாளே! போறச்சே இந்த செவிட்டு முண்டத்தையும் அழைச்சுண்டு போயிருக்கப்படாதோ? இதை ...
மேலும் கதையை படிக்க...
கிருபாவுக்கு என்னதான் பிரச்சனை? கிருபா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? எதுவுமே எனக்கு புலப்படவில்லை. அவள் நடந்து கொள்ளும் விதம் எனக்கு எரிச்சலைத்தான் மூட்டுகின்றது. எரிச்சல் தலைக்கு ஏறும்போது கோவாமாக மாறுகிறது. அந்த கோவத்தில்தான் கிருபாவை நன்றாக அடித்துவிட்டேன். நெஞ்சழுத்தம் நிறைந்தவள்; ...
மேலும் கதையை படிக்க...
அலை அறிந்தது…
அம்மாவின் கட்டளைகள்
பெயர்நீக்கச் சான்றிதழ்
விட்ட குறை
பூமாலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)