தொ(ல்)லைபேசி? – ஒரு பக்க கதை

 

‘இந்த வீட்டில் இன்டர்நெட்லிருந்து அனைத்து வசதிகளும் இருக்கு. ஆனா தொலைபேசி மட்டும் கூப்பிடுவறங்க எண் தெரியற வசதி இல்லாத சாதாரணம். ஏன் இப்படி ?” வீட்டிற்குள் உட்கார்ந்து நண்பனோடு பேசிக் கொண்டிருந்த ரமேசுக்குள் திடீர் கேள்வி.

‘நண்பன் பொம்பளை விசயத்துல அப்படி இப்படி. அந்த காட்டிக்கொடுக்கும் தொலைபேசி இருந்தா வீட்டுல உள்ளவங்ககிட்ட மாட்டிக்கிட்டு வீண் விவகாரம், வம்புன்னு விட்டுட்டானா ?’

‘மனைவி அரசு ஊழியை. மகன்கள் இருவரும் கட்டிளம் காளைகள். கல்லூரி படிப்பு. அந்த நவீன தொலைபேசியை எப்படி விட்டு வைத்தார்கள்.?’

‘பையன்களுக்குப் பெண் நண்பர்கள், காதலிகள், கடலைபோடுவர்கள் உண்டு. வீட்டு தொலைபேசியில் ஏன் மிதிபடவேண்டும் என்று விட்டுவிட்டார்களா ? ‘

‘இவன் மனைவி சித்ரா? ‘

‘வீடடில் ஆளுக்கொரு கைபேசி. தேவை இல்லை. தீர்வா ?! ‘

”என்னடா ! பேசிக்கிட்டு இருந்தவனுக்குத் திடீர்ன்னு யோசனை ?” ரிஷி அதட்டல் குரல் ரமேசைக் கலைத்தது.

”ஒரு சின்ன சந்தேகம் ?”

”சொல்லு ?”

”உன் கிட்ட ஏன் பேசுறவங்க நம்பர் தெரியற தொலைபேசி இல்லே.?”

”சொல்றேன். அப்படி ஒரு தொலை பேசி இருந்தா…வேண்டியப்பட்டவங்க எண்ன்னா எடுப்போம். வேண்டாதவங்க, எதிரி, பிடிக்காவதவங்கன்னா விடுவோம். எனக்கு என்னவோ இது ஓடி ஒளியற கோழைத்தனமா மனசுக்குள் ஒரு உறுத்தல். மனுசன்னா…அவனுக்குள்ளே ஒரு போர்க்குணம், போராட்டக்குணம் இருக்கனும். அதுதான் அவனுக்கு முன்னேற்றம், வீரம், ஆரோக்கியம். இதை பொண்டாட்டி, புள்ளைங்க கிட்டே சொன்னேன். சரின்னாங்க விட்டுட்டேன்!” சொன்னான்.

ரமேசுக்கும் அது சரியாகப்பட்டது. தலையசைத்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
எங்கள் தெருவிற்கு எங்கிருந்தோ இளமையான, நல்ல வாலிபமான மெருன் நிறத்தில் ஆண் நாய் ஒன்று அடுத்த வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அவர்கள், ஒரு வருடம் அந்த வீட்டில் வசித்து காலி செய்து விடடு போன பிறகு அந்த நாய் அவர்களோடு செல்லாமல் எங்கள் ...
மேலும் கதையை படிக்க...
சாலையோர குடிசை வாசலில் வலிகனைசிங் கடை. என்னையும், இன்னொரு ஆளையும் தவிர வேறு யாருமில்லை. என்றாலும் சாமுவேல் பிசியாக இருந்தான். பத்தடி தூரத்தில் பெரிய பெரிய இரும்பு குழாய்கள் ஏற்றிய லாரி ஒன்று ஜாக்கியில் நின்றது. அதன் பின் இரண்டு சக்கரங்களைக் கழற்றி ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் காலனியில் பக்கத்து வீடு திறந்திருக்க .. யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தேன். '' என்னங்க. ..! '' என் மனைவி காபியும் பூரிப்புமாக எதிரே வந்தாள். '' என்ன. ..? '' காபியைக் கையில் வாங்கிக்கொண்டு பார்த்தேன். '' பக்கத்து வீட்டுக்குக் குடி வந்தாச்சு.'' '' யார். ...
மேலும் கதையை படிக்க...
இரவு எடுத்த முடிவின்படி வழக்கமாக வடக்கே செல்லும் அதிகாலை 5.30 மணி நடைப்பழக்கத்தைத் தெற்கேத் திருப்பினேன். அதனைத் தொடர்ந்து, 'இன்றைக்கு யார் மக்கள் அலட்சியத்தால் வீணாக வெளியேறும் குடிநீர், சாலை விளக்குகளை அணைப்பார்கள் ?' கேள்வியும் எழுந்து என்னோடு வந்தது. நான் நடை பயணம் ...
மேலும் கதையை படிக்க...
''என்னங்க! சாப்பிட வாங்க.'' அழைத்தாள் மனைவி மரகதம். ''அம்மாவுக்கும் போடு.'' என்றேன். அம்மா காலையில்தான் கிராமத்திலிருக்கும் தம்பி வீட்டிலிருந்து வந்தாள். வந்து இரண்டு நாட்கள் தங்குவாள். நல்லது கெட்டது சாப்பிட்டுவிட்டு கிளம்புவாள். அம்மாவிற்கு இங்கு கக்கூஸ் போகக் கஷ்டம். கிராமத்தில் காற்றாடச் சென்றவள். அடுத்து அவளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
வெறி
ஒத்த ரூபாய்
பக்கத்து வீட்டுக்காரி!
வர்ணங்கள்…..!
தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)