தீர்ப்பு – ஒரு பக்க கதை

 

திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என முடிவுக்கு வந்த சுனிதாவும் சுந்தரும் ஏனோதானோவென வாழ்ந்து இப்போது ஆறு வருடம் கழித்து விவாகரத்து தீர்ப்பிற்காய் மகள் தீபாவோடு கோர்ட்டில் காத்திருந்தனர்.

குழந்தையை யார் பங்கு போட்டுக்கொள்வது என்ற பிரச்னையில் இருவரும் உரிமை கொண்டாட குழம்பிப்போன நீதிபதி குழந்தை தீபாவிடமே தீர்ப்பை கேட்டார்.

அங்கிள் ரெண்டு பேருமே ஏன் பிரியறாங்க..? என்ற எதிர்பாராத தீபாவின் கேள்வியில் ஆடிப்போனார் நீதிபதி.

அது… வந்து… அம்மா பேசறது அப்பாவிற்கும் அப்பா பேசறது அம்மாவுக்கும் புரியலையாம். அதான் பாப்பா அவங்க பிரியறாங்க… என சமாளித்தார்.

அங்கிள் ரெண்டு பேருமே பெரியவங்க. அவங்க பேசறதே அவங்களுக்கு புரியலைன்னா, நான் இன்னும் சின்னப் பொண்ணு. நான் பேசறதை அவங்களால எப்படி புரிஞ்சுக்க முடியும்? அதனால என் பேச்சை கேட்டு, புரிஞ்சு எனக்கு எல்லாம் செய்யற வேலைக்காரப் பாட்டி வீட்டிற்கே
போயிடறேன். என்ற தீபாவின் பேச்சைக் கேட்ட நீதிபதியின் பேனா தானாகவே உடைந்தது.

- கோவை நா.கி.பிரசாத் (நவம்பர் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
“என் கணவர் என்னை நல்லா பாத்துக்கிறார். இவர் எனக்கு மூணாவது!” எண்ணையைத் தடவி, என் உடலைப் பிடித்துவிடும்போது, தன்போக்கில் பேசினாள் அய்னுல். அவள் சொன்னவிதம் எப்படி சாதாரணமாக இருந்ததோ, அதேபோல் நானும் அதை ஏற்றுக்கொண்டேன். அதிர்ச்சியோ, அருவருப்போ ஏற்படவில்லை. “மத்த ரெண்டு பேர்?” என்று ...
மேலும் கதையை படிக்க...
ஆயிரம் முயன்றும் தன்னுடைய மனப்போராட்டங்களை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் தீப்தி. 'கீச்..கீச்.. ' என்று குரலெழுப்பியபடி அவள் காலடியில் சிந்திக்கிடந்த கடலையொன்றை கொறிக்க முயன்றுகொண்டிருந்தது குருவியொன்று. அதை ஏதோ விளையாட்டுப்பொருளாய் எண்ணி, அதைப்பார்த்து நகைத்துக்கொண்டிருந்தது, பக்கத்திலிருந்தவளின் கைக்குழந்தை. வழக்கமான மனநிலையில் இருந்திருந்தால் அவளும் ...
மேலும் கதையை படிக்க...
கங்கம்மா வீட்டிற்கு செல்லும்போது செல்வத்தையும் பார்த்து வர வேண்டும் என்று தோன்றியது பிச்சம் நாயுடுவுக்கு. இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். ரொம்ப நாட்களாகி விட்டது என்றாலும், போய் பார்த்து வர காரணமும் வேண்டியிருக்கிறது. மேலுக்கு ஒரு காரணம் சொல்லலாம், அவனுக்கு ரெண்டொரு ...
மேலும் கதையை படிக்க...
மாமி, மாடியில் துணிக்கு நானந் போட்ட கிளிப்பில் ரெண்டு குறையுது! ஒரு வேளை நீங்க மறதியா எடுத்துட்டு வந்துட்டீங்களா? கொஞ்சம் செக் பண்ணுங்க…’ சொன்ன பக்கத்துப் போர்ஷன் ஆனந்தியை ஏளனமாகப் பார்த்தார் வரதன். “சரிம்மா, எங்களுதுன்னு எடுத்துட்டு வந்திருக்கலாம்! நிச்சயம் பார்க்கறேன்!’ அமைதியாக பதில் ...
மேலும் கதையை படிக்க...
ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான ...
மேலும் கதையை படிக்க...
ஒரு விதி – இரு பெண்கள்
தெளிந்த மனம்
தேன்கூட்டு மெழுகு
அல்பம் – ஒரு பக்க கதை
ஆண்மை 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)