தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 5,546 
 

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10

கொஞ்ச நேரம் கழித்து காயத்திரி “அப்படி சொன்னா எப்படிடீ. நீ என்ன காலம் பூராவும் கல்யா ணம் பண்ணிக்காம இருக்கப் போறயா என்ன.எனக்குப் புரியலையே” என்றாள் கலவரத்தோடு. கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி லதாவைக் கட்டிக் கொண்டு “நீ சொல்வது ரொம்ப சரி லதா.நாம் அந்த தப்பைப் பண்ணக் கூடாது லதா”என்று அழுதாள்.லதாவின் முதுகுப்புறம் நனைந்தது.”அம்மா எனக்கு இனிமே கல்யாணமே வேணாம்மா.உன் பணக் கஷ்டம் எனக்கு நன்னாத் தெரியும்.எந்தப் பையனையும் நீ பாத்து எனக்குக் கல்யாணம் பண்ண நிறைய செலவு ஆகும்.அந்தப் பையனின் அப் பாவும் அம்மாவும் ‘இதை செய்யுங்க’,’அதைச் செய்யுங்க’ன்னு உன்னை பிடுங்கி எடுத்துடுவா.அவ்வ ளவு பணம் உன் கையில் இப்போ இல்லை.பாக்கலாம்,போகப் போக என்ன ஆகிறதுன்னு” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள் லதா.அதற்கு மேலே காயத்திரி இன்னும் பேசவில்லை.

காயத்திரி மெஸ்ஸில் வேலைக்கு சேர்ந்து ரெண்டு மாசம் ஆகி விட்டது.அன்று காலையில் படுக்கையை விட்டு எழுந்ததில் இருந்து லதாவுக்கு தலை சுற்றல் இருந்து வந்தது.அவள் மெல்ல பல் தேய்க்க போனாள்.பல் தேய்க்க விடாமல் அவளுக்கு வாந்தி வருவது போல் இருந்தது.’மெல்ல ஓசை படாமல் நாம வாந்தி எடுக்கலாம்’என்று எண்ணி அவள் தன் வாயைப் பொத்திக் கொண்டு மெல்ல வாந்தி எடுக்க ‘ட்ரை’ பண்ணினாள்.அவளால் வாந்தியை கட்டுப் படுத்த முடியவில்லை.வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தாள்.லதா வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு பதறிப் போன காயத்திரி ‘பாத்’ ரூமுக்கு ஓடி வந்தாள் காயத்திரி.“ஏண்டி,ஏன் வாந்தி எடுக்கறே நீ.ராத்திரி சாப்பிட்டது ஏதாவது ஒத்து க்கலையா உனக்கு.நாம வெறும் தோசையும் சாம்பாரும் தானே சாப்பிட்டோம்.எனக்கு ஒன்னும் பண்ணலையே லதா.உனக்கு ஏன் வாந்தி வறது”என்று கத்தினாள்.’இவ வாந்தி எடுக்கறாளே இவ உடம்புக்கு என்ன ஆச்சு’ என்று மிகவும் கவலைபட்டாள் காயத்திரி.லதாவுக்கு ஒன்னும் புரியவில்லை. வாந்தி எடுப்பது கொஞ்சம் நின்றவுடன் லதா மெதுவாக “எனக்குத் தெரியலையேம்மா. எனக்கு பயமா இருக்கும்மா”என்று சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள்.லதாவை கைத் தாங்கலாகப் பிடித்துக் கொண் டு ஹாலுக்குள் வந்தாள் காயத்திரி.லதாவுக்கு முகம் எல்லாம் வேர்த்துக் கொட்டி இருந்தது.காயத்திரி உடனே ஒரு விசிறீயை கொண்டு வந்து லதாவின் முகத்தை விசிறினாள்.விசிறி கொண்டே காயத்திரி எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி வந்தாள்.லதா ”அம்மா மறுபடியும் வாந்தி எடுக்கணும் போல் இருக்கு”என்று சொல்லி எழுந்து ‘பாத் ரூமு’க்கு போனாள்.காயத்திரியும் அவள் பின்னால் போய் அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

ரெண்டு மூனு தரம் லதா வாந்தி எடுத்த பிறகு அம்மாவுடன் மெல்ல ஹாலுக்கு வந்தாள். ஹாலுக்கு வந்த லதா முடியாமல் படுத்து விட்டாள்.காயத்திரி உடனே அவளுக்குக் காபிப் போட்டுக் கொண்டு வந்து கையில் கொடுத்தாள்.லதா அந்த காப்பியைக் குடித்தவுடன் கொஞ்சம் சுமாரானாள். மெல்ல எழுந்து புடவையை சரி செய்துக் கொண்டு “வாம்மா நாம் ‘மெஸ்’க்குப் போகலாம்.இப்பவே ரொம்ப நேரம் ஆயிடுத்து” என்று சொல்லி தன் அம்மாவுடன் வேகமாக போனாள் லதா.’மெஸ்’க்குக் கிளம்பினாளே ஒழிய காயத்தா¢ லதா ஒரு காரணம் இல்லாமல் காலையிலே வாந்தி எடுத்ததை நினை த்து மிகவும் கவலை பட்டாள்.நடந்துக் கொண்டு இருந்த காயத்திரி அடிக்கடி லதாவைப் திரும்பி பார்த்துக் கொண்டு வந்தாள்.

லதாவும் ’இத்தனை நாளா இல்லாம இன்னைக்கு ஏன் நமக்கு இந்த வாந்தி வந்தது.நம்ம உட ம்பிலே ஒரு வித மாத்தமும் தெரியறதே.இது என்ன மாத்தம்,ஏன் இப்படி இருக்கு நம்ப உடம்பு’ என்று யோசித்தாள்.அவளுக்கு ஒன்னும் புரியவில்லை.சாம்பாருக்கு புளியைக் கரைத்துக் கொண்டு இருந்தா ளே ஒழிய காயத்திரியின் மனம் வேதனைப் பட்டுக் கொண்டு இருந்தது.மறுபடியும்,மறுபடியும்,அவ மனசு ‘பகவானே,நாம் பயப் படுவது போல் ஒன்னும் இருக்கக் கூடாதே.அப்படி ஏதாவது ஆனா நான் இந்தப் பொண்ணை வச்சுண்டு இந்த உலகத்லே எப்படி வாழப் போறேன்.ஏற்கெனவே நம்மிடம் அதிக மான பணம் காசு இல்லையே.பகவானே அந்தக் கஷ்டத்தை மட்டும் எனக்கு குடுத்துடாதே.நான் இப்போ பட்டு வரும் கஷ்டமே எனக்குப் போதும்’ என்று வேண்டிக் கொண்டு இருந்தது.வேலையில் கவனமே இல்லை அவளுக்கு.’மெஷின்’ மாதிரி வேலை செஞ்சு வந்தாள் காயத்திரி.

‘மெஸ்’ஸில் எல்லா வேலையும் முடித்துக் கொண்டு காயத்திரி லதாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்தாள்.அவளுக்குப் பொறுமை இல்லை.லதாவைப் பாத்து “லதா இன்னைக்கு காத்தாலே என்னைக்கும் இல்லாம ஏன் வாந்தி எடுத்தே.எனக்கு என்னவோ பயமா இருக்கு.நீ என்ன நினைக்க றே லதா”என்று மெல்ல லதா வாந்தியைப் பத்தி என்ன நினைக்கிறாள் என்று தெரிந்துக் கொள்ள ஆசைப் பட்டாள்.அம்மா இப்படி தன்னை நோ¢டையாகவே கேட்டதுக்கு ‘நாம இந்த மாதிரி வாந்தி எடுத்ததுக்கு ஏதோ அர்த்தம் இருக்கு’என்று நினைத்து “நீ கேப்பது சரி தாம்மா.எனக்கும் இதுக்கு கார ணம் தெரியலேம்மா ஆனா இப்போ எல்லாம் காத்தாலே ரொம்ப நேரம் தூங்கணும் போலவே இருக்கு. உடம்பிலும் ஏதோ மாத்தம் தெரியறதும்மா” என்று உண்மையை சொன்னாள் லதா.

காயத்திரிக்கு இன்னும் கவலை அதிகமாக ஆகி விட்டது.லதாவிடம் எப்படி தான் படும் ‘சந்தே கத்தைச்’ சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை.கொஞ்ச நேரம் ஆனதும் “லதா நான் சொல்றே ன்னு நீ தப்பா எடுத்துக்காதே .எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு.நாம உடனே ஒரு லேடி டாகடரைப் பாத்து உன் உடம்பை காட்டணும்ன்னு தோன்றது.நீ என்ன சொல்றே”என்று கேட்டாள் காயத்திரி.லதாவுக்கு தன் அம்மா சந்தேகம் நன்றாய் புரிந்து விட்டது.லதா சட்டென்று “எனக்கும் இது சரின்னுத் தான் படறது.நாம டாக்டர் கிட்டே காட்டி நம்ம சந்தேகத்தை நிவர்த்திப் பண்ணிக் கொள்ற து நல்லதுன்னு எனக்கும் தோன்றதும்மா” என்றாள்.‘அதெல்லாம் ஒன்னும் இல்லேம்மா நான் காத்தா லே எடுத்தது ‘சாதாரண வாந்தி’.நீ கவலைபட வேணாம்ன்னு லதா சொல்லுவா’என்று எதிர் பார்த்த காயத்திரிக்கு லதா சொன்னதைக் கேட்டதும் இன்னும் அதிர்ச்சியாய் இருந்தது.

காயத்திரி ‘மெஸ்’ வேலையை முடித்துக் கொண்டு வரும் வழியிலே இருந்த ஒரு ‘நர்சிங்க் ஹோ முக்கு’ போனாள்.ரிஷப்ஷனில் ‘டோக்கன்’ வாங்கிக் கொண்டு அங்கு இருந்த சோ¢ல் இருவரும் உட் கார்ந்துக் கொண்டார்கள்.காயத்திரி பகவானைப் பிரார்த்தணை பண்ணிக் கொண்டு இருந்தாள்.லதா ‘டொக்கன்’ நம்பர் வந்ததும் காயத்திரி லதாவை டாக்டர் ரூமுக்கு அழைத்துப் போய் காலையிலே நட ந்த எல்லா சமாராத்தையும் விவரமாகச் சொன்னாள்.டாக்டர் லதாவை ‘செக் அப்’ பண்ணி விட்டு அவளிடம் நிறைய அவள் ‘உடம்பைப்’ பத்தி கேள்விகள் கேட்டாள்.சந்தேகத்தின் போ¢ல் டாகடர் லதாவுக்கு இது ஒரு வேளை கர்ப்பமாக இருக்குமோ என்று நினைத்து அதற்கு உண்டான ‘டெஸ்டுகளை’ எல்லாம் பண்ணினாள்.’டெஸ்டுகள்’ முடிந்த பிறகு அந்த ‘ரிசல்ட்ஸ்களை’ எல்லாம் வந்த பிறகு அந்த லேடி டாக்டர் அவைகளை எல்லாம் பார்த்து விட்டு தீர்மானமாக காயத்தா¢யிடம் “உங்க பொண்ணு முழுகாம இருக்கா.பேருக்கு இது மூனாவது மாசம்மா.இவங்களை நீங்க மாசம் ஒரு தரம் ‘செக் அப்’ பண்ணி,இவங்களும்,வளரும் குழந்தையும் நல்லா இருக்கான்னு பாத்துக் கிட்டு வாங்க.இது ரொம்ப முக்கியம்”என்று சொல்லி காயத்திரியையும் லதாவையும் வெளியே அனுப்பினார் அந்த லேடி டாக்டர்.

டாக்டர் சொன்னதை கேட்டா லதாவுக்கு உலகமே இருட்டி விட்டது போல இருந்தது.அவளுக் கு மயக்கமே வரும் போல் இருந்தது.லதாவை கீழே விழாமல் பிடித்துக் கொண்டாள் காயத்திரி.மெல்ல லதாவைப் பிடித்துக் கொண்டு வந்து காலியாக இருந்த ‘பென்ச்சி’ல் உட்கார வைத்து விட்டு,எதிரே தெரிந்த தண்ணீர் கானில் இருந்து கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்த லதாவிடம் கொடுத்து குடிக்கச் சொன்னன்.எதிரே இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் காயத்திரி.அது எட்டறை காட்டியது . அப்போது அங்கே வந்த ‘நர்ஸ்’ காயத்திரியிடம் “மேடம் நீங்க டாக்டர் ‘பீஸ¤ம்’, மத்த ‘டெஸ்டுகளு க்கும்’ மொத்தம் ஆறு நூரு ரூபாய் கட்டணும்.இந்தாங்க பில்” என்று சொல்லி அந்த ‘நர்ஸிங்க் ஹோமி’ன் பில்லை நீட்டினாள். ”என்னங்க இது.நாங்க வெறுமனே டாகடர் கிட்டேக் காட்டிட்டு போக இங்கே வந்தோம்.இப்ப நீங்க என்னடான்னா ஆறு நூரு ரூபாய்க்கு பில் தரேங்களே”என்று ஆச்சரியத் தோடு கேட்டாள் காயத்திரி.”ஆமாம் மேடம்,டாக்டர் ‘பீஸ்’ இரு நூரு ரூபாய்,இவங்களுக்கு பண்ண மத்த ‘டெஸ்டுகளுக்கு’ எல்லாம் சேர்த்து நாலு நூரு ரூபாய் மேடம்”என்று விளக்கினாள் அந்த ‘நர்ஸ்’.

உடனே காயத்திரி ”என்னிடம் இப்போ இரு நூரு ரூபாய் தான் இருக்கு.நான் காத்தாலே ‘பேங் கில்’ இருந்து மீதி பணம் எடுத்து நாளைக்குக் கொண்டு வந்து தறேன்” என்று சொல்லி தன்னிடம் இருந்த இரு நூரு ரூபாயை அந்த நர்ஸிடம் கொடுத்தாள் காயத்திரி.”மேடம்,நீங்க மறக்காம மீதி நானூரு ருபாயை பாயை நாளைக்கு காத்தாலே கொண்டு வந்துக் குடுத்து விடுங்க.உங்க ‘அடரஸ் ஸை’ கொஞ்சம் எனக்கு இந்த காகிதத்திலே எழுதிக் குடுங்க” என்று சொல்லி ஒரு காகிதத்தை காய த்திரியிடம் நீட்டினாள் அந்த ‘நர்ஸ்’.காயத்திரி தன்னுடைய வீட்டு விலாசத்தை ‘நர்ஸ்’ கொடுத்த காகிதத்தில் எழுதிக் கொடுத்து விட்டு “நான் மறக்காம நாளைக்கு மீதி பணத்தை கொண்டு வந்து தந்து விடறேன் நீங்க கவலைப் பட வேணாம்”என்று சொல்லி விட்டு லதாவையும் கூட்டிக் கொண்டு ‘நர்சிங்க் ஹோமை’ விட்டு தன் போர்ஷனுக்கு வந்தாள் காயத்திரி.

உள்ளே வந்து “டாக்டர் இந்த மாதிரி சொல்லிட்டாரே லதா.இனி நாம என்ன செய்ய போறோம், இன்னும் சில மாசங்கள்ளே,உன் உடம்பு வெளி உலகத்துக்கு தெரிய வந்துடுமே”என்று சொல்லி விட்டு சுவற்றில் மாட்டி இருந்த அம்பாள் படத்தைப் பார்த்து “அம்மா,எங்களுக்கு ஏன் இந்தக் கஷ்டம். நாங்க பாவம் பண்ணோம்.எது நடக்கக் கூடாதுன்னு நான் உன்னை வேண்டிண்டு வந்தேனோ அதையே நடக்க வச்சுட்டியே.நான் உன்னை இத்தனை நாளா வேண்டிண்டு வந்தது எல்லாம் வீணா.உனக்கு காதுளே இல்லையா.இந்த சோதனையை எங்களுக்கு ஏன் கொடுத்தே.என் ஆத்துக் காரர் சிவனேன்னு என்னையும்,இந்த பொண்ணையும் விட்டுட்டு போயிட்டார்.இது ஒரு சுமை.என் பொண்ணு ‘வாழ்க்கையை’ ஒரு நய ‘வஞ்சகப்பாவி’ கெடுத்தது ரெண்டாவது சுமை.இது ரெண்டும் போதாதுன்னு எனக்கு இன்னும் ஒரு சுமையை குடுத்துட்டயே.இது உனக்கே நன்னா இருக்கா. இனி மே நாங்க ரெண்டு பேரும் இனிமே என்னப் பண்ணப் போறோம்” என்று உரக்க சொல்லி தன் தலை யில் அடித்து கொண்டு அழுதாள்காயத்திரி.லதா அம்மாவுக்கு சமாதானம் சொன்னாளே ஓழிய லதா மனம் கொந்தளித்துக் கொண்டு இருந்தது.

“லதா நான் சொன்னா நீ நம்ப மாட்டே.அந்த பாவி உன்னை அப்படி ‘மான பங்கம்’ பண்ண நாள்ளேந்து இன்னைக்கு வரைக்கும் நான் தினமும் வயித்திலெ நெருப்பைக் கட்டிண்டு வந்து வாழ்ந்துண்டு இருந்தேன்.இந்த மூனு மாசமாவே பயந்தது போலவே ஆயிட்டதேடி.நாசமாப் போயிடு வான் அந்தப் பாவிப் பய.என் பொண்ணை இந்த ‘கதி’க்கு ஆளாகி விட்டானே.அவன் நன்னாவே இருக்க மாட்டான்.அவன் அழிஞ்சுப் போவான்.அவனுக்கு நல்ல சாவே வராது.நய வஞ்சகப் பாவி” என்று கன்னா பின்னா என்று ரமேஷை திட்டி கத்தினாள் காயத்திரி.

கொஞ்ச நேரம் ஆனதும் “பணத்துக்கு ஆசைப் பட்டு,நான்அந்த பணக்காரா ஆத்து சமையல் வேலைக்கு போன,எனக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும்.இன்னும் நான் என்ன,என்ன,அனு பவிக்க வேணுமோ இந்த லோகத்லே”என்று சொல்லி தன் தலையில் அடித்து கொண்டு அழுதாள் காயத்திரி. ‘தனக்கும் அம்மாவுக்கும் மயக்க மருந்துக் குடுத்து அந்த நயவஞ்சகன் ‘கெடுத்ததும்’ இல்லாம,இப்போ என் வயித்லே ஒரு குழந்தையையும் குடுத்து விட்டானே.இனிமே நாம் என்னப் போ றோம்.இப்போ நம் வாழ்க்கையே பாழாயிடுத்தே’ என்று நினைத்து லதாவும் விக்கி விக்கி அழுதாள். அழுது கொண்டே தன் பாயைப் போட்டு கொண்டு படுத்து விட்டாள் லதா.அவள் ஒன்னும் சாப்பிட வில்லை.’மெஸ்’ஸில் இருந்து கொண்டு வந்த தோசையும் சாம்பாரும் அப்படியே காரியரில் இருந்தது. லதா சாப்பிடாத்தால் காயத்திரியும் ஒன்னும் சாப்பிடாமல்,தன் பாயைப் போட்டுக் கொண்டு லதா பக்கத்திலே படுத்துக் கொண்டாள்.

இரவு பூராவும் இருவரும் தூங்கவில்லை.காலையில் மசூதியில் இருந்து அவர்கள் பக்தி பாடல் களைப் பாடிக் கொண்டு இருந்தார் மசூதித் தலைவர்.காயத்திரி மணி ஐந்து என்று தெரிந்துக் கொண் டாள்.மெல்ல எழுந்து பல் தேய்த்துக் கொண்டாள் அவள்.பில்டா¢ல் காபிப் பொடிப் போட்டு ‘டிக்காக்ஷ ன்’ போட வென்னீர் கொட்டினாள் காயத்திரி.வந்து லதாவை பார்த்தாள் காயத்திரி.அவள் முழித்துக் கொண்டு இருந்தாள்.கொஞ்சம் நிம்மதியாக இருந்தது காயத்திரிக்கு.லதா எழுந்து பல் தேய்த்துக் கொ ண்டு வந்தாள்.அவள் கண்கள் கோவைப் பழம் போல் சிவந்து இருந்தாலும் அவள் தெளிவாக இருந் தாள்.”அம்மா ராத்திரி சாப்பிடாததாலே எனக்கு ரொம்ப பசிக்கிறது, தாகமாவும் இருக்கு. எனக்குக் கொஞ்சம் காபிக் குடு.இனிமே நடந்ததை நினைச்சி நாம் அழுதுண்டு இருக்க கூடாதும்மா.மேலே ஆக வேண்டியதை நாம கவனிக்கணும்.நாம் இப்ப குளிச்சுட்டு மெஸ்ஸ¤க்கு புறப்படலாம்.இனிமே தான் நமக்கு வாழ பணம் வேணும்” என்று சொன்னாள்.லதா காபி கேட்டவுடன் காயத்திரி பில்டா¢ல் இறங்கிய ‘டிக்காக்ஷனை’ விட்டு காபிப் போட்டுக் கொடுத்தாள்.அம்மா கொடுத்த காபி யைக் குடித்தாள் லதா.எழுந்துப் போய் குளிக்கப் போனாள் லதா.

யோனைப் பண்ணிணாள் காயத்திரி.சரி இனிமே நாம லதா கிட்டே நம் மனசிலே இருக்கிறதே கிட்டச் சொல்லி விடப் போறேன்.அவ தப்பா எடுத்துண்டாலும் பரவாயில்லை எனக்கு’ என்று நினைத் தாள் காயத்திரி.லதா குளித்து விட்டு வந்ததும் அவளைப் பார்த்து “லதா,நான் சொல்றேன்னு நீ தப்பா மட்டும் எடுத்துக்காதே.என் மனசிலே இருக்கிறதே உன் கிட்ட சொல்றேன்.நான் நன்னா யோஜனை பண்ணிட்டேன்.எனக்கு வேறே வழி ஒன்னும் தெரியலே.உன் வயத்லே இருக்கிற குழந்தையை ‘அபா ர்ஷன்’ பண்ணணிண்டு வந்து விடலாம்.அப்பா யாருன்னு தெரியாத இந்த குழந்தையை வளத்து வருவது ரொம்ப சிரமமா இருக்கும்” என்று மெல்ல பயந்துக் கொண்டேசொன்னாள் காயத்திரி.லதா தீர்மானமாக “அம்மா,எல்லாருக்கும் மேலே இருக்கிற பகவான் என் வயித்லே ஒரு குழந்தை¨யே குடுத்து இருக்கார்.அந்த ஜீவனைக் கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லேம்மா.முன்னே ஒரு தடவை நீ என்னை அந்த கனபாடிகள் பையனை கல்யாணம் பண்ணிக்க சொன்னப்போ சொன்னா மாதிரியே இப்பவும் நான் சொல்றேன்.என் வயத்லே வளந்து வர குழந்தையை,நான் கொல்ல யாருக்கும் அனுமதி தரப் போறது இல்லேம்மா.எந்த ஒரு உயிரையும் கொல்லும் அதிகாரம் மனுஷாளுக்கு இல்லேம்மா.அது மகா பாவம்மா.இந்த ‘கொலை பாதகம்’ நான் நிச்சியம் பண்ணமாட்டேம்மா.நான் போன ஜென்மத்லே என்ன பாவம் செஞ்சேனோ தெரியலே.ஒரு நய ‘வஞ்சகப் பாவியாலே’ என் கற்பை இழந்து நிக்கறேன். அது போறாதா.இனிமே நான் என் மனம் அறிய என் வாழ்க்கைலே எந்த ஒரு தப்பும் பண்ண போறது இல்லேம்மா. என்னை மன்னிச்சிடும்மா.நான் இந்த குழந்தையை பெத்துக்கப்போறேம்மா” என்று சொல்லி விட்டு தன் தலையை தன் கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதாள் லதா.

கொஞ்ச நேரம் போனதும் லதா ”நான்,உன்னோடு வந்து சமையல் வேலை செஞ்சு வந்து, குழந் தையை நன்னா படிக்க வச்சு,அவனை ஆளாக்கப் போறேம்மா.நான் யாரையும் கல்யாணமே பண்ணிக் கப் போறதில்லே.இனிமே யாரையும் நீ ஜாதகம் கேட்டுண்டு எல்லாம் இருக்க வேணாம்.இனிமே இந்த குழந்தை தான் என் லோகம்”என்று சொல்லி விட்டு தன் கண்களை துடைத்துக் கொண்டு ‘மெஸ்’ வேலைக்கு கிளம்ப தயரானாள்.காயத்திரியும் தன் மனதை கல்லாக்கி கொண்டு லதாவோடு ‘மெஸ்’க் கு கிளம்பினாள்.ஒரு மெஷின் போல காயத்திரியும் லதாவும் அந்த ‘மெஸ்’ வேலைக்கு போய் வந்துக் கொண்டு இருந்தார்கள்.அந்த வார ஞாயிற்றுக் கிழமையே லதாவை கூட்டிகொண்டு பழைய மாம்பல வீட்டுக்கு போய், தன் மீதி சாமான்களை எல்லாம் எடுத்து கொண்டு,மீதி மூனு மாச ‘அடவான்ஸை’ அந்த வீட்டு மாமி யே கேட்டாள் காயத்திரி.அந்த மாமி “நன்னா இருக்கு.இப்படி ‘திடு ‘திப்’ புன்னு நிங்க மூனு மாச ‘அட் வான்ஸை’ கேட்டா,எங்க ஆத்லே அவ்வளவு பணம் இருக்குமா என்ன.இன் னைக்கு பாத்து ஞாயித்துக் கிழமையா வேறே இருக்கு.நான் பாங்குக்கு போய் பணம் வாங்கிண்டு வர முடியாதே.எங்காத்துகாரர் வேறே இப்போ பாத்து வெளி ஊர் போய் இருக்கார்.நான் ஒரு மாச ‘அட் வான்ஸை’ இப்போ தறேன்.மீதி ரெண்டு மாச ‘அட்வான்ஸை’ அடுத்த ஞாயித்துக் கிழமை இதே நேர த்துக்கு வாங்கோ.நான் உடனே குடுத்துடறேன்.சொல்ல மறந்துட்டேனே.நீங்க கிளம்பிப் போன மறு நாள் ஒரு பணக்கார மாமி,அவ கார்லே வந்து உங்களே கூப்பிட சொன்னா.நான் நீங்க காலி பண்ணீ ண்டு போன சமசாரத்தே அவ கிட்டே சொல்லிட்டு ‘நீங்க யாரு.காயத்திரி மாமி வந்து கேட்டா என்ன சொல்றதுன்னு கேட்டா அந்த பணக்கார கர்வி ‘கார்லே வந்த மேடம்ன்னு சொல்லுங்கோ.அவளுக்கு தெரியும்’ ன்னு காரில் இருந்தே பதில் சொல்லிட்டு போனா.கேக்கறாவா ஒரு மனுஷியாவே தோணலே அந்த கர்விக்கு.அந்த கர்வியே உங்களுக்கு தெரியுமா”என்று கேட்டாள்.

அதற்கு காயத்திரி முகத்லே எள்ளும் கொள்ளும் வெடிக்க “எனக்கு கார்லே வந்த அந்த கர்வி யாருன்னே தெரியாது.நீங்க சொன்னா மாதிரியே நான் அடுத்த வார ஞாயித்துக் கிழமை இதே நேரத் துக்கு வறேன்.பணத்தே கொஞ்சம் தயவு பண்ணி குடுத்துடுங்கோ.எனக்கு இப்போ ரொம்ப பண முடை”என்று சொன்னவுடன் “நான் நிச்சியமா அடுத்த ஞாயித்துக் கிழமை குடுத்திடறேன்.நான் அப் படி எல்லாம் ஏமாத்த மாட்டேன்.என்னை நம்புங்கோ.பயப்படாம போங்கோ” என்று கொஞ்சம் அழுத்தி சொல்லவே,‘இனிமே இங்கே இருந்தா,நம்ம வாயை நோண்டுவா’என்று நினைத்து காயத்திரி லதாவை அழைத்துக் கொண்டு ‘விடு’ ‘விடு’ என்று அங்கே இருந்து கிளம்பினாள்.

வருகிற வழியிலே “அம்மா, நீ ரொம்ப நல்லா காரியம் பண்ணே.நாம இந்த ஆத்தை காலி பண்ணீட்டு மயிலாப்பூர் போயிட்டேம். அப்படி போகாம இருந்த அந்த கர்வி மாமி நம்மை பாத்துட்டு இருப்பா.அவ கிட்டே நாம நடந்த உண்மையை சொல்ல முடியாம தவிச்சுண்டு வந்து இருப்போம்” என்று சொல்லி அம்மாவை புகழ்ந்தாள் லதா.”எல்லாம் அந்த பகவான் காட்டின வழி தான்.நம்ம கையி லெ ஒன்னும் இல்லே லதா.சில காரியம் நன்னா முடியறது.சில காரியம் நமக்கு கஷ்டத்தே தறது” என்று விரக்தியோடு சொன்னள் காயத்திரி.ஆனால் அவ உள் மனம் மட்டும் “நல்ல வேளை,நாம அந்த கர்வி கண்லே படலே’ என்று சொல்லிக் கொண்டு சந்தோஷப் பட்டது.

திங்கக் கிழமை வழக்கம் போல காயத்திரியும் லதாவும் குளித்து விட்டு,காபி குடித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு மெஸ்ஸ¤க்குக் கிளம்பினார்கள்.’மெஸ்’ மூடி இருந்தது.’மெஸ்’ வாசலிலே ‘மெஸ்’ மாமாவுக்கு உறவுக்கார ஒரு சர்வர் நின்றுக் கொண்டு இருந்தான்.காயத்திரியும் லதாவும் வருவ தற்கு முன்னாலே இன்னும் ரெண்டு சமையல் பண்ற மாமிகள் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.அந்த சர்வர் எல்லோரையும் பாத்து “நேத்து ராத்திரி ஒரு மணிக்கு ‘மெஸ்’ மாமாவுக்கு ‘ஹார்ட்அட்டாக்’ வந்து இருக்கு.மாமி அவரை ஹாஸ்பிடல்லே சேத்து இருக்கா.அவர் குணம் ஆயி வர வரைக்கும் அந்த மாமி ‘மெஸ்ஸை’ மூடி விடச் சொல்லி இருக்கா.நீங்க இப்போ ஆத்துக்குப் போங்கோ.’மெஸ்’ மாமா உடம்பு நன்னா ஆயி அவர் ஆத்துக்கு வந்தா தான் மாமி ‘மெஸ்ஸை’ மறுபடியும் தொறந்து வியாபாரம் பண்ண ஆரம்பிப்பா.எத்தனை நாள் ஆகுமோ எனக்குத் தெரியாது” என்று சொல்லி வீட்டுப் போய் விட்டான்.

காயத்திரிக்கும் லதாவுக்கும் அந்த சர்வர் சொன்ன விஷயம் ‘ஷாக்கா’ இருந்தது.மத்த ரெண்டு சமையல் மாமிகளும் கிளம்பிப் போன பிறகு காயத்திரி லதாவைப் பார்த்து “என்ன லதா,நமக்கு இப்படி இடி மேல் இடி விழறது. நாம வேலை செஞ்சு வந்த இந்த ‘மெஸ்’ வேலையும் இப்போ இல்லேன்னு ஆயிடுத்து.இனிமே என்ன பண்ணப் போறோம்” என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.லதா “அம்மா, இது நடு ரோடு.நீ இப்படி அழுதுண்டு எல்லாம் இருக்காதே.வா ஆத்துக்குப் போய் நிதானமா யோஜ னைப் பண்ணலாம்” என்று சொல்லி அம்மாவை சமாதானப் படுத்தி அவர்கள் போர்ஷனுக்கு அழைத் து வந்தாள்.வீட்டு வாசல்லே வசந்தி நின்றுக் கொண்டு இருந்தாள்.காயத்திரியும் லதாவும் போர்ஷனு க்கு வந்து கொண்டு இருப்பதைப் பார்த்து அவள் ஆச்சரியத்துடன் “என்ன காயத்திரி,நீ அழுதுண்டு இருக்கே.நீயும்,லதாவும் இந்த நேரத்லே திரும்பி உங்க போர்ஷனுக்கு வந்துண்டு இருக்கேள்.உங்க யாருக்காவது உடம்பு சரி இல்லையா.டாக்டரை பாக்கணுமா”என்று கேட்டாள்.

உடனே காயத்திரி “எங்க ரெண்டு பேருக்கும் உடம்பு நன்னா தான் இருக்கு” என்று சொல்லி விட்டு ‘மெஸ்’ வாசல்லே நடந்ததை எல்லாம் சொல்லி விட்டு “இப்போ எங்க ரெண்டு பேருக்கும் சமையல் வேலை இல்லே” என்று சொல்லும் போது அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ”அடப் பாவமே.அப்படியா சமாச்சாரம்.கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே.நான் இப்போ என் உறவுக் கார பையன் ஒருத்தன் பூணல் ‘பங்க்ஷனுக்கு’ போயிண்டு இருக்கேன்.நான் திரும்பி வந்ததும்,என் ‘ப்ரன்ட்ஸ்’ கிட்ட எல்லாம் உனக்கு யாராவது ஆத்லே சமையல் வேலை கிடைக்குமான்னு கேட்டு சொல்றேன்.நான் வரட்டுமா.இப்பவே நான் அந்த ‘ப்ங்கஷனுக்கு’ ரொம்ப லேட்”என்று சொல்லி விட்டு தன் காரில் ஏறிப் போய் விட்டாள்.காயத்திரி லதாவை கூட்டிக் கொண்டு தன் போர்ஷனுக்கு வந்து கதவை திறந்துக் கொண்டு உள்ளே போய் அவள் கணவர் படத்துக்கு முன்னாலே நின்றுக் கொண்டு “என்ன சோதனை எங்க ரெண்டு பேருக்கும்.இந்த நேரம் பாத்தா அந்த ‘மெஸ்’ மாமாவுக்கு ‘ஹார்ட் அட்டாக்’வரணும்.இப்போ எங்க ரெண்டு பேருக்கும் வேலை இல்லையே. நீங்க தான் தெய்வமா இருந்துண்டு எனக்கு சீக்கிரமா எங்காவது ஒரு சமையல் வேலையைக் காட்டணும்.இப்போ நாங்க ரெண்டு பேர் மட்டும் இல்லையே.மூனூவது ஒன்னு லதா வயத்லே வந்து இருக்கே.அந்த லேடி டாக்டர் சொன்னா மாதிரி லதாவுக்கு மாசா மாசம் ‘செக் அப்’ பண்ண வேண்டிஇருக்குமே.அப்புறமா அவ பிரசவ செலவு வேறே இருக்கே” என்று வேண்டிக் கொண்டு இருக்கும் போது அவளுக்கு அழுகை அழுகையா வந்தது.

லதா உடனே “அதை எல்லாம் இப்போ பிடிச்சு உன் மனசிலே போட்டுண்டு ஏம்மா அழறே. போகப் போகப் பாக்க்லாம்மா.இப்போ கொஞ்சம் அமைதியா இருந்து வாம்மா.நம்மை இவ்வளவு தூரம் அழைச்சுண்டு வந்த அந்த பகவான் நமக்கு ஒரு நல்ல வழி காட்டாமலா போயிடுவார்.அந்த பகவா னை நாம ரெண்டு பேரும் தினமும் வேண்டி வரலாம்மா”என்று சொல்லி சமாதானப் படுத்தினாள். உடனே காயத்திரியும் “ஆமாம் லதா,நீ சொல்றது நூத்துக்கு நுறு நிஜம்.நாம் தினமும் கோவிலுக்குப் போய் பகவானை வேண்டிண்டு வரலாம்”என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அன்று சாயங்காலம் காயத்திரி லதாவை அழைச்சுண்டு அந்த தெருக் கோடியிலே இருக்கிற கோவிலுக்குப் போனாள் காயத்திரியைப் பார்த்ததும் அந்த குருக்கள் “என்ன மாமி,உங்க பொண்ணு ஜாதகத்தை கொண்டு வந்து தறேன்னு சொல்லிட்டுப் போனேள்.அப்புறமா உங்களே இந்த கோவில் பக்கமே காணலே” என்று கேட்டார்.காயத்திரி கண்லே கண்ணீர் முட்டியது.அதை வெளி காட்டிக்காம “இல்லே மாமா.நான் சமையல் வேலை செஞ்சு வர ‘மெஸ்’ மாமாவுக்கு திடீர்ன்னு ‘ஹார்ட்அட்டாக்’ வந்து,அவா ‘மெஸ்ஸை’ மூடி விட்டு இருக்கா.எனக்கு இப்போ சமையல் வேலை இல்லே.என் கிட்டே இருக்கிற சொற்ப பணத்தே வச்சுண்டு என்னால் கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது.நீங்க சித்தே யார் கிட்டேயாவது சொல்லி எனக்கு ஒரு சமையல் வேலை ஏற்பாடு பண்ண முடியுமா.உங்களுக்கு கோடி புண்ணீயம் உண்டு மாமா”என்று சொல்லி தன் புடவை தலைப்பால் தன் கண்களை துடைத்து க் கொண்டாள்.”அடப் பாவமே.அப்படியா ஆயிடுத்து.கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.என் அண் ணாவுக்கு நிறைய ‘உபாத்யாயம்’ பண்ற ஆம் எல்லாம் இருக்கு.நான் இன்னைக்கு சாயங்காலமா அவர் கிட்டே சொல்லி உங்களுக்கு சமையல் பண்ண வேலைக் கிடைக்குமான்னு கேக்கறேன். நீங்க என் னை இன்னும் மூனு நாளைக்கு அப்புறமா வந்து பாருங்கோ.எதுக்கும் உங்க ‘செல்போன்’ நம்பரை க் குடுங்கோ.நான் உங்களுக்கு போன் பண்ண சௌகா¢யமா இருக்கும்” என்று சொன்னவுடன் காயத் திரி தன் ‘செல் போன்’ நமபரைச் சொன்னாள்.அந்த குருக்கள் காயத்திரி சொன்ன ‘செல் போன்’ நம்ப ரை தன் செல் போனில் போட்டுக் கொண்டார்.பிறகு சுவாமிக்கு தீபத்தை காட்டி விட்டு விபூதி பிரஸா தம் கொடுத்தார்.”சரி மாமா,நீங்க சொன்னா மாதிரி நான் உங்களை மூனு நாளைக்கு அப்புறமா வந்து பாக்கறேன்.இதுக்கு நடுலே உங்களுக்கு ஏதாவது சமாச்சாரம் தெரிஞ்சா என் ‘செல் போனு’க்கு போன் பண்ணுங்கோ”என்று சொல்லி விட்டு அவர் குடுத்த விபூதியை தன் தெத்தியில் இட்டுக் கொண்டு சுவாமியை வேண்டிக் கொண்டு லதாவை அழைச்சுண்டு ஆத்துக்கு வந்தாள்.

காயத்திரியும் லதாவும் கிளம்பிப் போன பிறகு ‘பாவம்,அந்த மாமி.கிளியேப் போக ஒரு பொண் ணை வச்சுண்டு கல்யாணம் பண்ண பணம் இல்லாம தவிச்சுண்டு வறா’ என்று தன் மனதில் சொல் லிக் கொண்டு பகவானிடம் ‘அந்த மாமிக்கு சீக்கிரமா ஒரு சமையல் வேலை கிடைச்சு,அந்த பொண் ணுக்கு ஒரு கல்யாணம் நடக்கணும்’ என்று வேண்டிக் கொண்டார்.காயத்திரியும் லதாவும் தினமும் ‘அந்த ‘மெஸ்’ மாமா உடம்பு நன்னா ஆயி ‘மெஸ்ஸை’ மறுபடியும் தொறந்து இருக்கணுமே’ என்று பகவானை வேண்டிக் கொண்டு ‘மெஸ்’ஸ¤க்கு போய் பார்த்து வந்துக் கொண்டு இருந்தார்கள்.’மெஸ்’ வாசல் கதவு பூட்டியே இருந்தது.மனம் உடைந்து போய் ஆத்துக்கு வந்தார்கள்.

ரெண்டு வாரம் ஓடி விட்டது.அன்று ‘மெஸ்’ஸைப் பார்க்க போன காயத்திரிக்கும், லதாவுக்கும், தூக்கி வாரிப் போட்டது.’மெஸ்’ மேலே இருந்த “சீணு பிராமணாள் மெஸ்”என்கிற போர்ட் கழட்டப் ட்டு இருந்தது,’மெஸ்’ வாசல் கதவு மேலே “இந்த ‘மெஸ்’ நிரந்தரமா மூட பட்டு விட்டது” என்று கொட்டை கொட்டை எழுத்தால் பெயிண்ட் பண்ணப் பட்டு இருந்தது.வானமே இடிந்து கீழே விழுந்தா மாதிரி இருந்தது ரெண்டு பேருக்கும். மனதை தேற்றி கொண்டு ஆத்துக்கு வந்தார்கள்.காயத்திரி லதாவிடம் “இந்த வேலையும் இப்போ நிரந்தரமா போயிடுத்தே.அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும் கைலே இருக்கிற பணத்தை தானே லதா நாம செலவு பண்ணி வரணும்”என்று சொல்லும் போது அவளுக்கு அழுகை வந்து விட்டது.’எங்கே நம்ம அம்மா இந்த நடு ரோடிலே அழுது விடப் போறா’ என்று நினை த்து லதா உடனே “வாம்மா,எல்லாம் ஆத்துக்கு போய் பேசிக்கலாம்.இது நடு ரோடு.நம்ம புராணத்தே நாலு பேர் கேட்டுண்டு இருக்கப் போறா” என்று சொல்லி அம்மாவை அழைத்துக் கொண்டு ஆத்துக்கு வந்தாள்.

தன் போர்ஷனுக்கு வந்து காயத்திரி அவ கணவர் போட்டோவுக்கு எதிரே உட்கார்ந்துக் கொ ண்டு இருந்தாள்.’இன்னும் கொஞ்ச நேரம் போனா பசி வந்திடுமே என்று நினைத்து லதா திரி ‘ஸ்டவ் வை’ பத்த வச்சு குக்ககா¢ல் அரிசி வேகப் போட்டாள்.காயத்திரியின் கணவர் காயத்திரியைப் பார்த்து “நான் என்ன பண்ணட்டும் சொல்லு காயத்திரி.நான் புகையிலை போடும் போது,அது எனக்கு ஒரு ‘எமனா’ வரும்ன்னு தெரியாம போச்சே.அப்படி தெரிஞ்சு இருந்தா,நான் அந்த புகையிலையைப் போட்டுண்ட்டே இல்லாம இருந்து இருப்பேனே.இப்படி உன்னையும் லதாவையும் தவிக்க விட்டூட்டு போய் இருக்க மாட்டேனே”என்று கேட்பது போல இருந்தது காயத்திரிக்கு.லதா பார்க்காம இருந்தப் போ தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி லதாவைப் பார்த்து” லதா,இந்த நித்திய கண்டம், பூர்ண ஆயுசு சமையல் வேலைக்குப் போகாம,இங்கே பக்கத்திலெ இருக்கிற ஏதாவது ‘எலிமெண்டா¢’ ஸ்கூலு க்குப் போய் ரெண்டாம் ‘க்லாஸ¤க்’கோ,மூணாம் ‘க்லாஸ¤க்’கோ ஒரு வாத்தியார் வேலைக்குப் போய் வறலாம்ன்னா,நான் பத்தாவதே ‘பாஸ்’ பண்ணலையே.அதை தவிர இத்தனை வருஷம் கழிச்சு என க்கு நான் படிச்சது ஒன்னும் ஞாபகமே இல்லே” என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.லதா விரக்தி யுடன் “அம்மா,நீ பத்தாவது ‘பாஸ்’ பண்ணாதததும் ஒன்னு தான்.நான் ‘பாஸ்’ பண்ணதும் ஒன்னு தான்.நான் இந்த ‘உடம்பை’ வச்சுண்டு,எப்படிம்மா ஒரு ‘எலிமெண்டா¢’ ஸ்கூல்லே வாத்தியார் வேலை க்குப் போய் வர முடியும் சொல்லு.இன்னும் ரெண்டு மாசம் ஆனா எனக்கு ‘வயிறு’ தெரிய ஆரம்பிச்சி டுமே”என்று சொல்லும் போது அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது.தன் அம்மாவை கட்டிக் கொண்டு அழுதாள்.லதா அழுவதைப் பார்த்த காயத்திரி “அழாதே லதா.நீ அழுதா அதை என்னால் பாத்துண்டு சும்மா இருக்க முடியாது.கூடிய சீக்கிரமே,அந்த பகவான் அவர் கண்னைத் தொறந்து ஏதாவது ஒரு வழியைக் காட்டுவார்ன்னு எனக்கு படறது. நீ இப்போ நிம்மதியா இருந்து வா.குசேலர் பட்ட கஷ்டத்தை விடவா நாம பட்டு வற கஷ்டம்.இருபத்தி ஏழு குழந்தைகளை வச்சுண்டு குசேலர் சம்சாரம் எவ்வளவு கஷ்டத்தை பட்டுண்டு வந்தா.ஒரு நாள் அந்த கிருஷ்ண பகவான் அவாளுக்கு நிறைய செல்வத்தே குடுத்து அவா கஷ்டத்தே போக்கலையா சொல்லு.நமக்கும் அந்த மாதிரி ஒரு நாள் நிச்சியமா வரும்ன்னு எனக்கு படறது” என்று சொல்லி சொல்லி லதாவுக்கு தேத்தறவு சொன் னாள்.லதா அதற்கு மேலே ஒன்னும் பேசாமல் சமையலை கவனித்துக் கொண்டு இருந்தாள்.

ரெண்டு பேருக்கும் வேலை போன அமக்களத்திலேயும்,லதாவுக்கு லேடி டாகடர் சொன்ன விஷயத்திலேயும், மூழ்கிப் போன காயத்திரி,அவ ‘செல் போனி’ல் போட்ட பணம் தீந்து போய் இருப்ப தையே கவனிக்காம இருந்து வந்தாள்.அவளுக்கு அவ ‘செல் போனை’ உபயோகப் படுத்த அவசியமே இல்லாம இருந்தது.கோவில் குருக்கள் காயத்திரி ‘செல்’ போனுக்கு போன் பண்ணீப் பார்த்துக் கொண் டு இருந்தார்.ஆனால் காயத்திரி ‘செல் போனில்’ இருந்து அவருக்கு பதிலே வர வில்லை.”இந்த நம்ப ரைத் தானே அந்த அம்மா எனக்குக் குடுத்துட்டுப் போனா.ஏன் பதில் சொல்லாம இருக்கா.ஒரு வேளை அந்த மாமி வேலை செஞ்சு வந்த ‘மெஸ்’ மறுபடியும் தொறந்து இந்த மாமியும் அந்த பொண் ணும் மறுபடியும் சமையல் வேலைக்கு போய் வறாளோ என்னவோ.என்ன இருந்தாலும் அந்த மாமி மறுபடியும் வேலை கிடைச்ச உடனே, என் கிட்டே வந்து இந்த விஷயத்தே சொல்லிட்டு போய் இருக்க ணும்.அந்த மாமி பண்ணது ரொம்ப தப்பான காரியம்.பாவம் நம்ப அண்ணா,நாம சொன்னோமேன்னு அவர் ‘உபாத்யாயம்’ பண்ற இடத்லே விசாரிச்சு ஒரு ஆத்தை சொல்லி இருக்கார்.சுத்த கர்வம் பிடிச்ச மாமி.இனிமே அந்த மாமியே கூப்பிடக் கூடாது” என்று கோவமாக சொல்லி விட்டு தன் செல் போனை ‘ஆப்’ பண்ணீனார்.

அடுத்த வார ஞாயித்துக் கிழமை காயத்திரி லதாவையும் கூட்டிண்டு தன் பழைய வீட்டுக்குப் போய் மீதி ரெண்டு மாச ‘அடவான்ஸை’ வாங்கிக் கொண்டு தன் ‘போர்ஷனு’க்கு வந்தாள்.அவள் கையிலே இருந்து வந்த கொஞ்சம் கொஞ்சமா கறைந்துக் கொண்டு இருந்தது.ரெண்டு நாள் ஆனதும் காயத்திரி ‘வெறுமனெ ஆத்லே இருந்து வறமே,அந்த பகவானை வேண்டிண்டு வரலாம்’ என்று நினைத்து லதாவை தன் கூட அழைச்சுண்டு தெருக் கோடியிலே இருக்கிற பிள்ளையார் கோவிலுக் குப் போனாள்.காயத்திரியைப் பார்த்ததும் அந்த குருக்கள் “ஏம்மாமி,உங்களுக்கு நீங்க வேலை செஞ்சு வந்த சமையல் வேலை போயிடுத்துன்னு சொல்லிண்டு என் கிட்டே வந்து சொன்னே ள்.நான் பாவம் அதை உண்மைன்னு நம்பிண்டு,உங்களுக்கு உதவலாமேன்னு நினைச்சுண்டு,எங்க அண்ணாவை விசாரிக்க சொன்னேன்.அவரும் பாவம் உடனே விசாரிச்சு,அவர் ‘உபாத்யாயம்’ பண்ற ஒரு ஆத்லே சமையலுக்கு ஒரு மாமி வேணும்ன்னு என் கிட்டே சொன்னார்.நீங்க என்னடான்னா உங்களுக்கு நீங்க வேலை செஞ்சு வந்த பழைய ‘மெஸ்லே’ திரும்பி வேலை கிடைச்ச உடனே,நீங்க உங்க ‘செல் போன்லே’ பதிலே சொல்லாம இருக்கேள்.நான் உங்களுக்கு ஒரு பதினைஞ்சு தடவையா ‘செல் போனி’ல் கூப்பிட்டா பதிலே பேசலே.இது நியாயமா சொல்லுங்கோ.உங்க அவசியத்துக்காக தானே என் கிட்டேவந்து ஒரு சமையல் வேலை கேட்டேள்.பழையபடி வேலை கிடைச்சதும் என் கிட் டே நீங்க வந்து அந்த விஷயத்தே சொல்லிட்டு போக வேணாமா.நீங்க பண்ணது கொஞ்சம் கூட நன்னாவே இல்லே”என்று கோவமாகக் கேட்டார்.அப்போது தான் காயத்திரிக்கு தன் ‘செல் போனு’க்கு காசு போடாதது ஞாபகத்துக்கு வந்தது.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *