தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 5,638 
 

அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21

அன்று புதன் கிழமை.சாயகாலம் மணி ஐந்து இருக்கும்.காயத்திரி ரமேஷை பார்த்ததும் “வாப்பா” என்று சொல்லி ரமேஷ வரவேற்றாள்.

”மாமி.நான் பத்மா சேஷாத்ரி ஸ்கூல் ‘பிரின்சிபால்’ கிட்டே நான் ‘அப்பாயின்ட்மென்ட்’ வாங்கி இருக்கேன்.அதன்படி நாம ஆனத்தை அழைச்சுண்டு பிரின்சிபாலை ‘மீட்’ பண்ணனும் மாமி.நீங்க வெள்ளிக் கிழமை காத்தாலே பத்து மணிக்குரெடியாக இருங்க’னு சொல்லிட்டு போகத்தான்,நான் ‘பாக்டரி’விட்டு ஆத்துக்கு போகிற வழியிலே வந்தேன்” என்று சொன்னான்.“நாங்க வெள்ளி கிழ மைக் கத்தாலே ரெடியா இருக்கோம்”என்று சொன்னாள் காயத்திரி.ரமேஷ் லதா கொடுத்த காபியை குடித்து விட்டு கிள்ம்பிப் போனான்.வெள்ளிகிழமை ரமேஷ் ‘பாக்டரி’ வேலையை கொஞ்சம் பார்த்து விட்டு ரமேஷ் சரியாக பத்தரை மணிக்கு எல்லாம் வந்து காலிங்க் பெல்லை அழுத்தினான்.லதா வாசல் கதவைத் திறந்து ரமேஷைப் பார்த்து “வாங்கோ, உள்ளே வாங்கோ.”நாங்க ரெடி ஆயிட்டோம்.அம்மா பாத் ரூமில் இருந்து வெளியே வந்தவுடன் நாம கிளம்பலாம்”என்று தனக்கு சுரேஷோடு பேச ஒரு ‘சா ன்ஸ்’ கிடைத்ததே என்று நினைத்து சந்தோஷப் பட்டாள்.ரெண்டு நிமிஷத்திற்கெல்லாம் காயத்திரி ரெடி ஆகி வந்தவுடன் எல்லோரையும் காரில் அழைத்துக் கொண்டு பத்மா சேஷாத்ரி ஸ்கூலுக்கு வந் தான்.ரமேஷ் மெல்ல இறங்கி எல்லோரையும் அழைத்து கொண்டு,பிரின்சிபால் ரூமுக்குப் போனான். பிரின்சிபால் ரூம் வாசலில் நின்றுக் கொண்டு இருந்த பியூனிடம் தன் பர்ஸ்ஸைத் திறந்து தன் ‘விசிடிங்க் கார்ட்டை’க் கொடுத்து “இதை கொஞ்ச பிரின்சிபால் கிட்ட குடுங்க”என்று சொன்னான்.லதாவும் காயத்திரியும்,ஆனந்தும் அங்கே போட்டு இருந்த சேர்களில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.ரெண்டு நிமிஷம் கூட ஆகி இருக்காது அந்த பியூன் ரமேஷிடம் வந்து “சார், உங்க ளே பிரின்சிபால் உள்ளே வரச் சொன்னார்”என்று சொன்னான்.
ரமேஷ் மெல்ல எழுந்து லதாவையும் காயத்திரியையும் ஆனந்தை யும் அழைத்து கொண்டு பிரின்சிபால் ரூமுக்குள் நுழைத்தான்.பிரின்சிபால் தன் தலையைக் குனிந்து கொண்டு ஏதோ எழுதிக் கொண்டு இருந்தார்.ரூமுக்குள் நுழைந்ததும் ரமேஷ் “குட் மார்னிங்க் மேடம்” என்று சொன்னதும் பிரின்சிபால் தன் தலையை நிமிர்ந்து “குட் மார்னிங்க் சுரேஷ்”என்று சொன்னதும் பிரின்சிபாலுக்குத் தூக்கி வாரிப் போட்டது.‘என்ன இவன்,அக்குள் கட்டையை வச்சுண்டு நடந்து வரானே,என்ன ஆச்சு இவனுக்கு’என்று யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தார். கொஞ்ச நேரம் ஆனதும் வருத்ததுடன் “வா,சுரேஷ்,வாங்கோ எல்லோரும் உக்காருங்கோ.உன்னை இப்படிப் பார்க்க ரொம்ப வருத்தமா இரு க்கு.என்ன ஆச்சு உனக்கு” என்று ரொம்ப கா¢சனமாக கேட்டார் பிரின்சிபால்.ரமேஷ் மெல்ல தன் அக்குள் கட்டையை எடுத்து ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு வந்து உட்கார்ந்தான்.காயத்திரியும், லதாவும்,ஆனந்தும் உட்கார்ந்தார்கள்.”ரொம்ப ‘தாங்க்ஸ்’ மேடம் நீங்க விசாரிச்சதுக்கு.என் பாமிலி லே’ ஒரு பொ¢ய ‘டிராஜடி’நடந்துட்டது மேடம்” என்று சொல்லும் போதே அவன் கண்கள் குளாமாயிற் று.அவன் தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து தன் கை குட்டையை வெளியே எடுத்து தன் கண்களை த் துடைத்துக் கொண்டான்.உடனே அந்த பிரின்சிபால் “வெரி சாரி டு ஹியர் தட் சாட் நியூஸ்.சுரேஷ்” என்று சொன்னார்.பிரின்சிபாலும் சுரேஷூம் பேசிக் கொண்டு இருந்ததை லதாவும் காயத்திரியும் ஆச்சரியமாக கேட்டுக் கொண் டு இருந்தார்கள்.

“மேடம்,இவன் பேர் ஆனந்த்,இது அவன் அம்மா.இது ஆனந்தின் பாட்டி.நான் ஆனந்தின் ‘அட்மிஷனுக்கு’த் தான் உங்களுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தேன்” என்று சொன்னதும் பிரின்சிபால் ஆனந்தைப் பார்த்து “உன் பேர் என்ன’ என்று கேட்டாள்.“என் பேர் ஆனந்த் மேடம்” என் று பளிச்சென்று சொன்னான் ஆனந்த்.”குட், ரொம்ப நல்ல பேர் உனக்கு”என்று சொன்னாள் பிரின்சி பால்.“உன் அம்மா பேர் என்ன” என்று கேட்டதும் என் அம்மா பேர் லதா”என்று சொன்னான் பிரின் சிபால் லதாவையும்,காயத்திரியையும் பார்த்தாள்.காயத்திரி தன் நெத்தியிலே விபூதி இட்டுக் கொ ண்டு இருந்தாள்.லதா கழுத்திலே ஒன்னும் இல்லாம வெறுமனே சாந்து பொட்டு இட்டுக் கொண்டு இருந்தாள்.இருவரும் பார்க்க ரொம்ப சாதாரணவர்கள் போல தெரிந்தது.லதா முகம் சலனம் இல்லாமல் இருந்தது.’சரி இவாளைப் பத்தி விசாரிச்சா சுரேஷூக்கு கஷடமா இருக்கும்’ என்று நினைத்து பிரின் சிபால் “சுரேஷ் இப்போ எல்லாம் இந்த ஸ்கூலில் அட்மிஷன் தர ‘டொனேஷன்’ தரணும்ன்னு ‘ஆர்டர்’ போட்டு இருக்கா.‘டொனேஷன்’ நாப்பதாயிரம் ரூபாய்” என்று சொன்னாள்.

உடனே ரமேஷ் தன் ப்¡£ப் கேசைத் திறந்து செக் புக்கை எடுத்து நாப்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதி பிரின்சிபாலிடம் கொடுத்தான்.“தாங்க்ஸ் சுரேஷ்“ என்று செக்கை வாங்கிக் கொண்டா ள் பிரின்சிபால்.உடனே பிரின்சிபால் வாசலில் நின்றுக் கொண்டு இருந்த பியூனை ‘காலிங்க் பெல்’ அடித்துக் கூப்பிட்டாள்.“ஆனந்த் உனக்கு இந்த ஸ்கூல் பிடிச்சி இருக்கா”என்று கேட்டதும் ஆனந்த் “ரொம்ப பிடிச்சு இருக்கு ‘மேடம்’” என்று சொன்னான்.இதற்குள் பியூன் வந்து விடவே பிரின்சிபால் “நீ போய் ‘ஹெட் க்ளார்க்கை’ வரச் சொல்”என்று சொல்லி பியூனை அனுப்பினாள் பிரின்சிபால்.சற்று நேரத்திற்கெல்லாம் ‘ஹெட் க்ளார்க்’ வரவே அவரைப் பார்த்து “இவர் நம்ம ஸ்கூலுக்கு ‘டொனேஷன்’ குடுத்து இருக்கார்.இவர் நம்ம ஸ்கூல் பழைய ஸ்டூடண்ட்.இவரும் இவர் தம்பியும் இந்த ஸ்கூல்லெ படிச்சி ‘ஸ்டேட் ராங்க்’ வாங்கினா. இந்தாங்கோ ‘செக்’.இந்த பையன் பேர் ஆனந்த்.இவனுக்கு ‘பர்ஸ்ட் ஸ்டாண்டர்டில்’ நான் ‘அட்மிஷன்’ குடுத்து இருக்கேன்.நீங்க இவாளை அழைச்சுண்டு போய் நம்ம ஸ்கூல் ‘டைம் டேபிள்’, ‘யூனிபாரம்’ ‘க்லாஸ்’ டைமிங்க்ஸ்’,‘புக்ஸ்’,‘நோட் புக்ஸ்’ பத்தின எல்லா ‘டிடேல்ஸ்ஸூம்’ சொல்லி அனுப்புங்க” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு “சுரேஷ்,நீ அந்த ‘பாஸ்ட் ஆக்சிடெண்டை’ மறந்துட்டு ‘ஹா ப்பி’ ஆக வாழ்ந்து வரணும்.என் ‘பெஸ்ட் விஷஸ்’ உனக்கு எப்போவும் இருக்கு சுரேஷ்.’காட் ப்லெஸ் யூ’“என்று சொல்லி சுரேஷை வாழ்த்தினார் பிரின்சிபால்.

”ரொம்ப ‘தாங்க்ஸ்’ மேடம்”என்று சொல்லி விட்டு மெல்ல காலை எடுத்து வைத்துக் கொண்டு எழுந்தான் ரமேஷ்.லதாவும் காயத்திரியும் எழுந்தா ர்கள்.ரமேஷ் தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு நடந்து வெளியே வந்தான்.பிரின்சிபால் ரூமை விட்டு வெளியெ வந்து எல்லோரும் ‘ஹெட் க்லார்க்’ ரூமுக்குப் போனார்கள்.
அந்த ‘ஹெட் க்ளார்க்’ ரமேஷிடம் ‘பாயிஸ்’ யூனிபாரம் கிடைக்கிற கடை பேரை சொல்லி விட் டு “சார்,நாங்க பையனுக்கு ‘ஸ்கூல்புக்ஸ்’,’நோட்புக்ஸ்’ எல்லாம் தந்து விடுவோம்.நீங்க ஒன்னும் வெ ளியே வாங்க வேனாம்.இதை தவிர ‘ஸ்போர்ட்ஸ் பீஸ்’, ‘ஜிம் பீஸ்’ எல்லாத்துக்கும் சேத்து நீங்க மொ த்தமா ரெண்டாயிரம் ரூபாய் தர வேணும்.இந்தாங்கோ ஸ்கூல் ¨டரி”என்று சொன்னதும் ரமேஷ் தன் பீப் கேஸைத் திறந்து ரென்டாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கை எழுதி அந்த ‘ஹெட்க்ளார்கிடம்’ கொடு த்தான்.அவர் உடனே அந்த ரெண்டாயிரம் ரூபாய் செக்குக்கு ஒரு ரசீது கொடுத்தார்.ரமேஷ் அந்த ரசீதையும், ¨டரியையும்,வாங்கி லதாவிடம் கொடுத்தான்.பிறகு எல்லோரும் அந்த ரூமை விட்டு வெ ளியே வந்தார்கள்.வாசலில் வந்து ரமேஷ் கார் டிரைவரைக் கூப்பிட்டு ஸ்கூல் வாசலுக்கு வரச் சொன் னான்.கார் டிரைவர் ஸ்கூல் வாசலுக்கு வந்ததும் ரமேஷ் முன் சீட்டில் ஏறிக் கொண்டான்.லதாவும் காய த்திரியும் ஆனந்தும் பின்னால் ஏறிக் கொண்டார்கள்.

காரில் ஆனந்த் “அங்கிள்,நீங்க இந்த ஸ்கூல்லேயா படிச்சேள்”என்று கேட்டான். உடனே ரமேஷ் “ஆமாம் ஆனந்த், நான் இந்த ஸ்கூல்லேதான் படிச் சேன்.ரொம்ப நல்ல ஸ்கூல் ஆனந்த் இது.இங்கே எல்லா பாடங்களையும் ரொம்ப நன்னா சொல்லி குடு ப்பா” என்று சொன்னான்.கார் வந் ததும் ரமேஷ் எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் அந்த பள்ளீக்கூடத்தின் ‘ஹெட் க்ளார்க்’ சொன்ன துணிக்டையில் ஆனந்த அளவுக்கு ஆறு ‘யூனிபாரம்’ தைக்க ஆரடர் கொடுத்தான்.பக்கத் திலே இருந்த ‘பாடா ஷ¥’ கடையிலே ரெண்டு ஷ¥ ஆறு ‘சாக்ஸ்’ வாங்கினான்.பிறகு ஒரு ‘பைவ் ஸ்டார்’ ஹோட்டலுக்கு போகும் வழியில் “மாமி,இந்த பள்ளீகூடத்லே ‘அட்மிஷன்’ கிடைக்கறது ரொம்ப,ரொம்ப கஷ்டம்.இதை கொண்டாடவே,நான் உங்க எல்லோரையும் இந்த ஹோட்டலுக்கு அழைச்சுண்டு வந்து இருக்கேன்” என்று சந்தோஷமாக சொன்னான்.

சாப்பிட்டு விட்டு எல்லோரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்கள்.கார் வந்ததும் எல்லோ ரும் காரில் ஏறிக் கொண் டார்கள்.“மாமி,நான் உங்களை ஆத்லே ‘ட்ராப்’ பண்ணிட்டு நான் ‘பாக்டரி க்கு’ப் போறேன்”என்று சொன்னதும் டிரைவர் காரை லதா வீட்டுக்கு ஒட்டிப் போனான்.வீடு வந்ததும் லதா,காயத்திரி,ஆனந்த் மூவரும் இறங்கி கொண்ட பீறகு ரமேஷ் காரை ‘பாகடரிக்கு’ ஓட்டிப் போகச் சொன்னான்.வழி நெடுக ‘அப்பாடா,என் ஆனந்துக்கு நான் படிச்ச ‘பத்மா சேஷாத்ரி’ ஸ்கூல்லெ ‘அட் மிஷன்’ கிடைச்சுட்டது.இனிமே அவன் கவலை இல்லாமல் ‘ப்ளஸ் டூ’ வரைக்கும் படிச்சு வரலாம்’ என் று நினைத்து சந்தோஷப் பட்டான்.ரமேஷ் அம்பத்தூர் ‘பாகடரிக்கு’ போய் தன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டான்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் ‘மானேஜிங்க் டைரகடர்’‘அக்கவுண்ட்ச் ஆபீசர்’ ரெண் டு பேரையும் தன் ரூமுக்கு வரச் சொல்லி இந்த வருஷ வரவு செலவு கணக்குகளை பார்க்க ஆரம்பித் தான்.கணக்கை பார்த்த ரமேஷூக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.இந்த வருஷம்‘பாக்டரிலே நல்ல லாபம் வந்து இருந்தது.அடுத்து ரமேஷ் கிண்டி ‘பாகடரிக்குப் போய் தன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு ‘மானேஜிங்க் டைரகடர்’ ‘அக்கவுண்ட்ச் ஆபீசர்’ ரெண்டு பேரையும் தன் ரூமுக்கு வரச் சொல்லி இந்த வருஷ வரவு செலவு கணக்குகளை பார்க்க ஆரம்பித்தான்.கணக்கைப் பார்த்த ரமேஷூ க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.இந்த வருஷம் இந்த ‘பாக்டரிலேயும் நல்ல லாபம் வந்து இருந்தது.ரெண்டு ‘பாகடரியிலும் நல்ல லாபம் வந்தததை நினைத்து சந்தோஷப் பட்டான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.டிரைவர் வந்து கார் கதவைத் திறந்ததும் ரமேஷ் மெல்ல காரை விட் டு கீழே இறங்கி வீட்டு வாலுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அடித்தான்.லதா வந்து கதவை திறந்தாள். சுரேஷ் நின்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் அவளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.”வாங் கோ,வாங்கோ” என்று சொல்லி ரமேஷை வரவேற்றாள்.ரமேஷ் மெல்ல நடந்து உள்ளே வந்து அக்குள் கட்டையை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு அவன் வழக்கமாக உட்காரும் சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டான்.டிரைவர் ‘கேக்’ டப்பாவை வைத்துக் கொண்டு பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்தான். “இந்தா கேக்கும் சாக்லெ ட்டும்”என்று சொல்லி டிரைவர் கிட்டே இருந்து ‘கேக்’ டப்பாவை வாங்கி ஆனந்திடம் கொடுத்தான்.”‘தாங்க்ஸ்’ அங்கிள் என்று சொல்லி ‘கேக்’ டப்பாவை வாங்கிக் கொண்டு போய் அதைத் திறந்து ஒரு துண்டு கேக்கை சாப்பிட ஆரம்பித்தான்.அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒரு துண்டு கொடுத்து விட்டு ரமேஷூக்கும் ஒரு துண்டு கொடுத்து விட்டு,ஒரு துண்டு ‘கேக்கை’க் கொண்டு வந்து ரமேஷிடம் கொடுத்தான்.ரமேஷ் அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.கொஞ்ச நேர ம் ஆனதும் “மாமி,ஆனந்தனுக்கு ‘அட்மிஷன்’ கிடைச்ச வேளை எங்க ரெண்டு ‘பாகடரியிலேயும்’ இந்த வருஷம் நல்ல லாபம் கிடைச்சு இருக்கு.இதை உங்க ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லிட்டு,போ கலாம்ன்னு நினைச்சு வந்தேன்.கூடவே ஆனந்தனுக்கு இங்கே இருந்து பதமா சேஷாத்ரி ஸ்கூலுக்கு போய் வறது ரொம்ப சிரமமா இருக்கும்.அதனாலே நான் பதமா சேஷாத்ரி ஸ்கூலுக்கு பக்கத்லே ஒரு ‘ப்ளாட்’ வாங்கலாம்ன்னு இருக்கேன்” என்று சொன்னான்.

”நீங்க எங்க குடும்பத்துக்கு ரொம்ப தான் உதவி பண்ணி வறேள்”என்று சொல்லி தன் கண்களி ல் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் காயத்திரி.ரமேஷ் வெறுமனே சிரித்துக் கொண்டு இருந்தான்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ரமேஷ் மெல்ல தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு வெளியே போனான்.லதா அவன் கூட கார் வரைக்கும் வந்தாள்.ரமேஷ் காரில் ஏறிக்கொண்டவுன்,லதா மெல்ல ரமேஷிடம் “உங்களுக்கு ’ரொம்ப தாங்க்ஸ்’” என்று தன் கையை கூப் பி சொன்னாள்.“உங்களுக்கு ஒரு புது ‘ப்லாட்’ வாங்கிக் குடுக்க முடிகிறதேன்னு எனக்கு ரொம்ப சந் தோஷம் லதா.பாவம் நீயும்,ஆனந்தும்,உன் அம்மாவும் அந்த சின்ன ஆத்லே கஷ்டப் பட்டு வந்துக் கொண்டு இருக்கேள்.எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு”என்று சொல்லி சிரித்தான் ரமே ஷ்.போர்ஷனுக்குள் வந்ததும் காயத்திரி “லதா,அந்தப் பையன் நான் உங்களுக்கு ஒரு புது ‘ப்லாட்’ வாங்கித் தரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கானே” ன்று ஆச்சரியத்துடன் சொன்னாள்.உடனே லதா “ஆமாம்மா,எனக்கும் அவர் சொன்னதை கேட்டு ஆச்சரியமா இருந்தது”என்று சொல்லி சந்தோஷப்பட்டு ”என்னவோ நாம பூர்வ ஜென்மத்தைலே பண்ண புண்ணியம்மா.அவர் நம்ம குடும்பத்துக்கு உதவி பண்ணீ வறது”என்று சொன்னாள்.காயத்திரிக்கு லதா சொன்னது அவ்வளவாக பிடிக்கவில்லை “எனக்கு என்னவோ நீ சொல்றாப் போல தோணலே.அவன் ஒரு கோடீஸ்வரன்.அவன் நமக்கு இவ்வ ளவு பண்ண என்ன அவசியம் சொல்லு.எல்லாம் அவன் தம்பி பையன் இந்த ஆத்லே வளந்துண்டு வறதாலே தான் இருக்கும்.நம்மை தொட்டு அவனுக்கு என்ன.போக போக அவன் என்ன பண்ணப் போறான்ன்னு பாக்கணும்.நாம் இப்போ ஒன்னும் அவசரப் படக் கூடாது”என்று சொல்லி அலுத்துக் கொண்டதும் லதாவுக்கு அம்மா மேலே கோவம் வந்தது.”அம்மா,உனக்கு எப்பவும் எதிலுமே சந்தேகம் தான்.அவர் ரொம்ப நல்லவர்ம்மா.நீ வீணா அவரை சந்தேகப் படறே”என்று சொன்னதும் காயத்திரிக்கு லதா சொன்னது பிடிக்காமல் இருந்ததால் ஒன்னும் பேசாமல் இருந்து விட்டாள்.காரில் வந்துக் கொண் டு இருந்த ரமேஷ் ‘பகவானே,நான் உன்னை வேண்டிக் கொண்டது போல,நீ அவாளுக்கு ஒரு ‘ப்ல ¡ட்டு’ம் வாங்கி தர சந்தர்ப்பம் குடுத்து இருக்கே.உனக்கு என் மனனார்ந்த நன்றிகள்”என்று சொல்லி தான் தினமும் வேண்டி வரும் பகவானுக்கு நன்றி செலுத்தினான் ரமேஷ்.அடுத்த நாள் காலையிலே ரமேஷ் குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் சொல்லி விட்டு ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு சுவாமி கோவி லுக்குப் போய் விட்டு ‘பாக்டரிக்கு’ப் போனான்.

அவன் ‘மானேனிங்க் டைரகடரோடு’ பேசிக் கொண்டு இருந்தான்.அவர் முன்னம் ஒரு தடவை ’என் ‘கசின்’ ஒருவர் ‘ரமணீயம் பில்டர்ஸில்’ மானேஜிங்க டைரக்டராக இருந்து வரார்; என்று சொன் ன்து ஞாபகத்துக்கு வந்தது.ரமேஷ் “நீங்க முன்னே ஒரு தடவை என் கிட்டே உங்க ‘கசின்’ஒருவர் ‘ரம ணீயம் பில்டர்ஸில்’ மேனேஜிங்க் டைரக்டரா இருக்கார்ன்னு சொல்லி இருந்தேள்.அவர் செல் போன் நம்பர் கொஞ்சம் தர முடியுமா.எனக்கு ஒரு ப்லாட் வாங்கணும்”என்று கேட்டான்.அவர் உடனே “ஆமா அவன் பேர் ராமநாதன்.அவன் செல் நம்பர் 9873452345.நீங்க அவனுக்குப் போன் பண்ணி என் பேரைச் சொல்லுங்க.நானும் அவனுக்கு போன் பண்றேன்.அவன் உங்களுக்கு ‘சூரா’ ‘ஹெல்ப்’ பண்ணுவான் மிஸ்டர் சுரேஷ்”என்று சொன்னார்.உடனே ரமேஷ் “சார்,நீங்க அவருக்கு போன் பண்ணீ விட்டு எனக்கு சொல்லுங்க”என்று சொன்னான்.அவர் ஒத்துக் கொண்டு எழுந்துப் போனார்.ரமேஷ் செல் ‘போன்’ அடித்தது.போனை ஆன் பண்ணி ரமேஷ் பேசினான்.“மிஸ்டர் சுரேஷ்,நான் ராமநாத னுக்கு போன் பண்ணி உங்களை பத்தி சொல்லி இருக்கேன் நீங்க அவன் கிட்டே பேசி உங்க ‘ரிக்வய ர்மென்ட்டை’ சொல்லுங்க.அவன் நிச்சியமா ஹெல்ப் பண்ணுவான்” என்று சொன்னதும் “ரொம்ப ‘தாங் க்ஸ்’ “என்று சொல்லி ‘போனை’ கட் பண்ணீனான் ரமேஷ்.’நாம் லதாவுக்கு ஒரு மூனு பெட் ரூம் ப் லாட்டா வாங்கிடலாம்.ஆனந்த் ஒரு ரூம் உபயயோக படுத்தி கொள்ளட்டும்.லதாவும்,அவள் அம்மாவு ம் ஒரு பெட் ரூமை உபயோகப் படுத்தி வரட்டும்.ஒரு பெட் ரூம் ‘ஸ்பேரா’ இருக்கட்டும்.யாராவது ‘கெ ஸ்ட்’ வந்தா தங்க சௌகா¢யமா இருக்கும்.அந்த ‘ப்லாட்டில்’ ஒன்னு இருந்து ஒன்னு இல்லாமல் இரு க்கக்கூடாது.இப்போ நாம இருந்து வர பங்களா மாதிரி அந்த மூனு பெட் ரூம் பாலாடிலே எல்லா வச தியும் செஞ்சு தரணும்’ என்று நினைத்தான் ரமேஷ்.

ராமநாதன் ‘போன்’ பண்ணினதும்,ரமேஷ் அவா¢டம் “சார்,எனக்கு ஒரு மூனு பெட் ரூம் ப்லா ட் ஒன்னு உடனே வேணும்.அந்த ‘ப்லாட்’ தியாகராய நகர் பத்மா சேஷாத்ரி ஸ்கூலுக்கு ரொம்ப பக்க மா இருக்கணும் உங்களால் எனக்கு ‘ஹெல்ப்’ பண்ண முடியுமா”என்று கேட்டதும் ராமநாதன்” மிஸ்டர் சுரேஷ்,பத்மா சேஷாத்ரி ஸ்கூலுக்கு எதிரேயே நாங்க ஒரு ஆறு ‘ப்லாட்’ கட்டறோம்.எல்லாமே மூனு ‘பெட் ரூம் ப்லாட்’ தான்.அதில் ஐஞ்சு ‘ப்லாட்’ வித்துப் போச்சு.ஒரு ‘ப்லாட்’ புக் பண்ணவர் ஒரு பொ¢ ய கம்பனி ஓனர்.ஆனா திடீரென்று அவர் கம்பனி ரொம்ப ‘லாஸ்ஸில்’ போயிட்டதுன்னு சொல்லி ‘பேக் அவுட’பண்ணிட்டார்.நீங்க அந்த ‘ப்லாட்டை’ பாக்கறேளா.பிடிச்சி இருந்தா நான் அவருக்கு குடுத்த ‘ரெட்டுக்கே’ உங்களுக்குத் தறேன்” என்று சொன்னார்.உடனே ரமேஷ்”நான் நிச்சியமா அந்த ‘ப்லாட்டை’வந்துப் பாக்கறேன் சார்.நான் எங்கே,எப்போ,வந்து பார்க்கட்டும்”என்று கேட்டதும்,ராமநா தன் “நான் நாளைக்கு காத்தாலே பத்து மணிக்கு பத்மா சேஷாத்ரி ஸ்கூல் வாசலில் என்னுடைய வெ ள்ளை இன்னோவா கார்லே உங்களுக்காக காத்துண்டு இருக்கேன்”என்று சொன்னதும் ரமேஷ் ”நான் நிச்சியமா நாளைக்கு காத்தாலே பத்து மணிக்கு பத்மா சேஷாத்ரி ஸ்கூலுக்கு வறேன்”என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனான்.

அடுத்த நாள் ரமேஷ் காத்தாலேயே எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு கோவிலுக்குப் போய் விட்டு பத்மா சேஷாத்ரி ஸ்கூல் வா சலுக்கு வந்தான்.சொன்னார் போல் ஸ்கூல் வாசலில் ஒரு வெள்ளை ‘இன்னோவா’ கார் நின்றுக் கொ ண்டு இருந்தது.அதன் பக்கத்தில் ‘கோட் சூட்டுடன்’ ஒருவர் நின்றுக் கொண்டு இருந்தார். ரமேஷ் மெல்ல காரை விட்டு கீழே இறங்கி தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு நடந்து இன்னோவா கார் கிட்டே வந்தான்.“குட் மார்னிங்க் மிஸ்டர் சுரேஷ்.‘ஐ ஆம் ராமநாதன்”என்று சொல்லி ரமேஷை கையைப் பிடித்துக் குலுக்கினான்.”வாங்க சார்,நான் உங்களுக்கு அந்த ‘ப்லாட்டை’க் காட்டறேன்” என்று சொல்லி ரமேஷை அழைத்துக் கொண்டு போய், லிப்ட்டில்’ ஏறி முதல் மாடிக்கு வந்தார். பின் னாலேயே ‘சூப்பர் வைசரும்’ வந்து ‘ப்லாட்’கதவைத் திறந்தார்.”’ ப்லாட் வேலை ‘நைன்டி பர்சன்ட்’ முடிஞ்சுடுத்து.இன்னும் ஒரு மாசத்லே எல்லா வேலையும் முடிச்சுட்டு ‘ப்லாட்டை’ உங்களுக்கு ‘ஹா ன்ட் ஓவர்’ பண்ணடுவேன்” என்று சொன்னதும் ரமேஷ் ‘ப்லாட்டை’ சுத்திப் பார்த்தான்.அவனுக்கு ‘ப்லாட்’ ரொம்ப பிடித்து இருந்தது.மூனு பெட் ரூமுக்கும் பால்கனி.பொ¢ய ஹால்,பொ¢ய கிச்சன்,வே லைக்காரி பத்து தேய்க்க தனி அறை,ஒரு பூஜை அறை என்று ரொம்ப நன்றாக இருந்தது.ரமேஷ் ராம நாதனிடம் “எனக்கு இந்த ‘ப்லாட்’ ரொம்பப் பிடிச்சு இருக்கு.இந்த ‘ப்லாட்டுக்கு’ நான் எவ்வளவு தரணும்”என்று கேட்டான் ரமேஷ்.“இந்த ‘ப்லாட்’ விலை மூனு கோடி ரூபாய்.நீங்க இப்போ ஒன்னரை கோடி ரூபாய் நீங்க குடுங்க.மீதியை நான் ப்லாட் ‘ஹாண்ட் ஓவர்’ பன்ற அன்னைக்கு குடுத்தா போ றும்” என்று சொன்னார் ராமநாதன்.”ஓ.கே சார்.நான் இன்னைக்கே நீங்க சொன்னா மாதிரி ஒன்னரை கோடிக்கு உங்களுக்கு ஒரு ‘செக்’ குடுத்துடறேன்”என்று சொன்னான் ரமேஷ்.ரெண்டு பேரும் ரமேஷ் கார் கிட்டே வந்ததும் ரமேஷ் தன் காரைத் திறந்து, தன் ப்¡£ப் கேஸைத் எடுந்து ஒன்னரை கோடி ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுத்தான் ரமேஷ்.

“ரொம்ப தாங்க்ஸ் மிஸ்டர் சுரேஷ்”என்று சொல்லக் கொண்டு இருக்கும் போது ரமேஷ் “சார், உங்களுக்கு ஒரு நல்ல ‘இன்டீரியர் டெகரேட்டர்’ தெரியுமா.நான் இந்த ‘ப்லாட்டுக்கு’ எல்லாம் பே ¡ட்டுத் தரணும்”என்று கேட்டான்.“சார் எனக்கு ஒரு நல்ல இன்டீரியர் டெகரேட்டர் தெரியும்.அவர் பேர் வினோத்”என்று சொல்லி விட்டு தன் செல் போனை ஆன் பண்ணி அவர் செல் நம்பரை ரமே ஷூக்கு சொன்னார்.ரமேஷ் அந்த செல் நமப்ரை தன் செல் போனில் போட்டுக் கொண்டான்.ராமநாத ன் கிளம்பி போனவுடன் ரமேஷ் வினோத் நம்பருக்குப் போன் பண்ணனான்.வினோத் போனில் பேசி யதும் ரமேஷ் “மிஸ்டர் வினோத்,என் பேர் சுரேஷ்.நான் ரமணீ£யம் பில்டர்ஸ் கீட்டே இருந்து பத்மா சேஷாத்ரி ஸ்கூல் கிட்டே ஒரு மூனு பெட் ரூம் ப்லாட்டு வாங்கி இருக்கேன்.நீங்க அதற்கு பூராவும் ‘இன்டீரியர் டெகரேட்’ பண்ணி,எனக்கு ஒரு ‘எஸ்டிமேட்’ தரணும்.உங்களுக்கு எப்ப சௌகா¢யப்படும்” என்று கேட்டான்.அவர் உடனே “எனக்கு அவா டி.நகர் ப்லாட் நன்னா தெரியும் நாளைக்கு இதே நேரம் உங்களுக்கு சௌகா¢யப்படுமா”என்று கேட்டார் வினோத்.உடனே ரமேஷ் “எனக்கு சௌகா¢யமா இருக்கும்.நான் ‘ப்லாட்லே’ நாளைக்குக் காத்தாலே இதே நேரத்திற்கு வந்து விடறேன்,நீங்க வந்தா நாம பேசி முடிவு பண்ணீ¢டலாம்”என்று சொன்னவுடன் “நான் நாளைக்குக் காத்தாலே அங்கே வந்து விடறேன்”என்று சொல்லி ‘போனை’’கட்’ பன்ணீனார் வினோத்.

அடுத்த நாள் ரமேஷ் சரியாக பத்து மணிக்கு ‘ப்லாட்டுக்கு’ வந்து காருக்கு வெளியே நின்றுக் கொண்டு இருந்தான்.வினோத் செல் போனில் சொன்னபடி காரில் வந்து இறங்கி வந்தார்.ரமணியம் ‘சூப்பர்வைஸர்’ ‘ப்லாட்’ கதவைத் திறந்து விட்டதும்,ரெண்டு பேரும் உள்ளே போனார்கள். ரமேஷ் “மிஸ்டர் வினோத்,மூனு ‘பெட் ரூமிலேயும்’ காட்றெஜ் பீரோ,ஏ.ஸி,கட்டில்,இலவம் பஞ்சு மெத்தை தலைகாணிகள்,’டிரெஸிங்க் டேபிள் அண்ட் சேர்’,எல்லா ஜன்னல்களுக்கு நல்ல ‘க்லாத்தில் ஸ்க்¡£ன்’ ரெண்டு செட்,‘வார்ட்ரோப்’,‘பான்,’நைட் லைட்’,ஹாலுக்கு ‘ஸ்ப்லிட்’ஏ..ஸி,ஹால்லே ரெண்டு பொ¢ய ஷோ கேஸ், மூனு பான்,’ பால்ஸ் சீலிங்க்’,‘பான்ஸி லைட்டிங்க்’,ஹாலில் ரெண்டு பொ¢ய ‘டெக ரேடிவ் லைட்ஸ்’ ’ஒரு பொ¢ய ‘கார்பெட்’,ஒரு சோபா செட்,ஒரு டீ.வீ. பூஜா ரூம் ‘டெகரெஷன்’ சமை யல் ரூமிலெ நல்ல ‘கிச்சனட்’, ‘ஆக்வாகார்ட்’ வாட்டர்’ ப்யூரிபையர்’,காஸ் அடுப்பு,அதுக்கு ரெண்டு சிலிண்டர் ‘கனெக்ஷன்’,ஒரு டெலிபோன் கனெக்ஷன்,‘எக்ச்சாஸ்ட் பேன்’,எல்லா பாத் ரூமிலேயும் நல்ல ‘சானிடரி ‘பிட்டிங்க்ஸ்’ ’மியூஸிகல்’ காலிங்க் பெல்,ஒரு ‘டபுள் டோர் பிரிட்ஜ்’,‘மைக்ரோவேவ்’, ஒரு ‘வெட் க்ரைண்டர்’,‘வாஷிங்க் அண்ட் டிரையர் மெஷின்’,’சுமீத் க்ரைன்டர்’,’ஜூஸ் மெஷின்’, இன் னும் என்ன எல்லாம் பண்ணனுமா அதை எல்லாம் ‘பிக்ஸ்’ பண்ணுங்க.ஒன்னு இருந்து ஒன்னு இல் லாம இருக்ககூடாது.எல்லாம் ‘ஹைக்ளாஸ் ப்ராடக்ட் ஆக இருக்கணும்”என்று சொ¡ன்னான்.வினோத் “நீங்க சொன்னா மாதிரி நான் எல்லாத்தையும் நல்ல ‘ஹை க்லாஸ் ப்ராடக்ட்டா ப்ரவைட்’ பண்ணி விடறேன்.எல்லாம் பண்ணி முடிக்க எனக்கு ‘ஒன் மந்த்’ ஆகும்”என்று சொன்னார். ரமேஷ் “நோ ப்ரா ப்லெம்.ஆனா ‘வர்க்’ மட்டும் ரொம்ப ‘பர்பெக்ட்டாக’ இருக்கணும்” என்று கண்டிப் பாகச் சொல்லி விட்டு “நான் இப்ப எவ்வளவு ‘அடவான்ஸ்’தரட்டும்”என்று கேட்டவுடன் “சார் நான் இன்னைலே இருந்தே ‘வர்க்கை’ ஆரம்பிச்சுடறேன்.நீங்க எனக்கு இப்ப ஒரு ‘தர்ட்டி லாக்ஸ்’ குடுங்க நான் ‘வர்க்’ எல்லா த்தையும் முடிச்ச பிறகு மீதியை வாங்கிக்கறேன்” என்று சொன்னதும் ரமேஷ் ”ஓ.கே” என்று சொல்லி விட்டு முப்பது லக்ஷ ரூபாய்க்கு ஒரு செக் எழுதி கொடுத்தான்.

அந்த ஞாயிற்றுக் கிழமை ரமேஷ் ஒரு பாக்கெட்’பிஸா’வை வாங்கிக் கொண்டு காயத்திரி வீட்டு க்கு வந்து ஆனந்திடம் ‘பிஸா’ பாக்கெட்டை கொடுத்து விட்டு,அவன் வாங்கி இருக்கும் ‘பாலாட் டை’ பத்தியும்,அதன் விலையையும்,ப்லாட்டில் அவன் பண்ண சொல்லி இருக்கும் எல்லா விவரத் தையும் சொன்னான்.காயத்த்திரிக்கும் லதாவுக்கும் ரமேஷ் ஒன்னு ஒன்னா சொல்லும் போது மலை த்துப் போய் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.ரமேஷ் ஆனந்தைக் கூப்பிட்டு “ஆனந்த,இந்த ‘ப்லாட் டில்’ இருந்து பத்மா சேஷாத்ரி ஸ்கூல் முன்னுறு அடி தான்.நீ தினமும் காத்தாலே ‘ஸ்கூல் பெல்’ அடி க்கறதுக்கு ஐஞ்சு நிமிஷம் முன்னாடி ஆத்தை விட்டு கிளம்பினா போறும்”என்று சொன்னான்.ஆனந் துக்கு சந்தோஷம் தாங்கவில்லை.”ஸ்கூல் அவ்வளவு பக்கமா அங்கிள்”என்று கேட்டு விட்டு ஒரு துண்டு ‘பிஸா’ துண்டை ரமேஷிடம் கொடுத்தான்.ரமேஷ் அதை வாங்கி சாப்பிட்டான்.கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு ரமேஷ் கிளம்பும் முன் “மாமி,மூனு நாளைக்கு ஒரு தடவை அந்த ‘பலாட்டில் நடக்கற வேலையை பாத்துட்டு வரணும்.எல்லாம் ரெடி ஆக ஒரு மாசம் ஆகும்.நான் ‘ப் லாட் ரெடி ஆனதும் இங்கே வந்து உங்களையும், லதாவையும்,ஆனந்தனையும் அழைச்சுண்டு போ ய் காட்டறேன்”என்று சொல்லி விட்டு மெல்ல தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு மெல்ல வெ ளியே வந்து காரில் ஏறீ பங்களவுக்கு வந்தான்.ரமேஷ் கிளம்பிப் போய் பத்து நிமிஷமாகியும் காயத்திரி யும்,லதாவும் ரமேஷ் சொன்ன ‘ப்லாட்’டை பத்தியும்,அதில் அவன் பண்ண சொல்லி இருந்ததை யும் நினைத்து ஆச்சரியப் பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

பத்து நாள் ஆனதும் “நான் ‘ரமணீயம்பிலடர்ஸ்’ ராமநாதன் பேசறேன்,உங்க ‘ப்லாட்’ பூரா ரெடி ஆயிடுத்து. நீங்க நாளைக்கு காத்தாலே வந்துப் பாத்துட்டு ‘ஓ.கே’ன்னு சொன்னா எனக்கு மீதி ‘பேம ண்ட்டையும்’ பண்ண முடியுமா.நான் என் அக்கவுண்ட்ஸ் ஆபீஸரை கூட அழைச்சுண்டு வரேன். அவர் ‘ப்லாட்டை’ உங்க பேருக்கு ரிஜிஸ்தர் பண்ணி கொடுத்து விடுவார்” என்று சொன்னவுடன், ரமேஷ் “நான் நிச்சியமா நாளைக்கு காத்தாலே பத்து மனிக்கு ‘ப்லாட்டுக்கு’ வந்துடறேன். ‘பாலன்ஸ் பேமன்ட்டை’ பண்ணி விடறேன்.ஆனா அந்த ‘ப்லாட்டை’ என் பேர்லே ரிஜஸ்தர் பண்ண வேணாம். வேறு ஒருத்தர் பேர்லே ரிஜஸ்தர் பண்ணனும்.நான் நோ¢லே வந்து உங்க கிட்ட சொல்றேன்”என்று சொ ன்னதும் “அப்போ நாம நாளைக்குக் காத்தாலே பத்து மணிக்கு ‘ப்லாட்லே’ ‘மீட்’ பண்ணலாம்” என் று சொல்லி போனைக் கட் பண்ணினார்.ரமேஷூக்கு சந்தோஷமாய் இருந்தது.’அந்த ‘ப்லாட்டு க்கு’ப் பூரா பணம் குடுத்துட்டு,அந்த ‘ப்லாட்டை’லதா பேர்லே ரிஜிஸ்தர் பண்ணிட்டோம்ன்னா.நாம நினை ச்சது எல்லாம் நல்லபடியாக முடிஞ்சிடும்.அப்புறம் மெல்ல நம்மிடம் இருக்கும் சொத்தை எல்லாம் ஆன ந்துக்குப் போய் சேறரா மாதிரி பண்ணிட்டா,நாம நாம நிம்மதியா வாழ்ந்து வரலாம்’என்று தன் மனதில் எண்ணி சந்தோஷப்பட்டான்.அடுத்த நாள் ரமேஷ் அந்த ‘ப்லாட்’டுக்கு வந்து சுற்றி பார்த்து விட்டு ராமநாதனுக்கு மீதி ‘பேமண்டை’பண்ணினான்.ஒன்னரை மாதம் ஆனதும் வினோத் அந்த ‘பலாட்டி ல் எல்லாம் போட்டு முடித்து ஆகி விட்டது என்று போன் பண்ணவே,ரமேஷ் ‘ப்லாட்’டுக் குப் போய் நன்றாக சுற்றி பார்த்து விட்டு,எல்லா ‘வர்க்கும்’ரொம்ப நன்றாக பண்ணி இருக்கவே,அவன் மிகவும் சந்தோஷப் பட்டு,அவர் கேட்ட மீதி பேமண்டை பண்ணி விட்டு,‘பால்ட்’டின் மூனு செட் சாவிகளை யும் வாங்கி க் கொண்டான்.
அவன் வழியில் ஆனந்தனுக்கு ஒரு ‘பிஸா’ பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்து காயத்திரி ஆத்துக்கு வந்து கால்ங்க் பெல்லை அழுத்தினான்.லதா வாசல் கதவைத் திறந்ததும் மெல்ல உள்ளே வந்து அவன் அக்குள் கட்டையை ஒரு ஓரமாக வைத்து விட்டு ‘பிஸா;’ பாக்கெட்டை ஆனந்திடம் கொடுத்தான்.உடனே ஆனந்த “ரொம்ப ‘தாங்க்ஸ்’ அங்கிள்”என்று சொல்லி விட்டு அந்த பாக்கெட் டை பிரித்து எல்லோருக்கும் ஒரு துண்டை கொடுத்து விட்டு மீதியை அவன் சாப்பிட ஆடம்பித்தான். கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ்” மாமி,‘ப்லாட் எல்லாம் முழுக்க முடிஞ்சு ரெடியா இருக்கு.நான் உங்க மூனு பேரையும் அழைச்சுண்டு போய் காட்ட தான் ‘பாக்டரிக்கு இன்னைக்கு போகலே.நீங்க மூனு பேரும் கொஞ்சம் ரெடி பண்ணிக்குங்கோ”என்று சொன்னதும்,லதா சமையல் வேலை பண்ணுவதை அப்படியே நிறுத்தி விட்டு ஒரு நல்ல பட்டு புடவையை கட்டிக் கொண்டு,ஆனந்தனை ரெடி பண்ணி னான்.காயத்திரியும் ரெடி ஆனவுடன் ரமேஷ் எல்லோரையும் காரில் அழைத்துக் கொண்டு போய் அவ ன் வாங்கி இருக்கும் ‘ப்லாட்டை காட்டினான்.பின்னாலேயே வந்த ‘சூப்ப்ர்வைஸர்’ எல்லா ‘ஏ.ஸி’யை யும்,விளக்குகளையும் ‘ஆன்’ பண்ணினான். காயத்திரியும், லதாவும் அந்த ‘ப்லாட்டை முழுக்க சுற்றிப் பார்த்தார்கள்.அவர்கள் இருவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.

காயத்திரி “இந்த ‘பாட்லே ஒன்னு இருந்து ஒன்னு இல்லாம இல்லை.பாக்க உங்க பங்களா மா திரியே இருக்கு.அதிலே மாடியும் கீழுமா ஐஞ்சு ரூம் இருந்தது.இந்த ‘ப்லாட்லே’ மூனு ரூம் இருக்கு. அதை தவிர வேறே எந்த வித்தியாசமும் இல்லே.நீ இவ்வளவு கோடி கோடியாக உன் பணத்தைக் கொட்டி இந்த ‘ப்லாட்டை’ எங்க மூனு பேருக்கும் வாங்கணுமா”என்று கேட்டாள்.ரமேஷ் “லதா,உனக் கு இந்த ‘ப்லாட்’ பிடிச்சி இருக்கா,நீ ஒன்னு சொல்லாம நின்னுண்டு இருக்கியே”என்று கேட்டதும் லதா உடனே “எல்லாம் போட்டு,இந்த ‘ப்லாட்’உங்க பங்களாவை விட இன்னும் பிரமாதமா இருக்கு. நாங்க இப்போ இருந்து வர அந்த சின்ன இடம் எங்கே,இந்த மாளிகை எங்கே.எங்களுக்காக நீங்க இவ் வளவு செலவு பண்ணி இந்த ‘ப்லாட்டை’ வாங்கணுமா.சின்னதா ஒரு ப்லாட் வாங்கி இருக்கக்கூடாதா”என்று கேட்டாள்.“லதா,நீங்க மூனு பேரும் இந்த மாதிரி பொ¢ய ‘ப்லாட்டிலெ’தான் இருந்து வரணு ம்.அது என் ஆசை” என்று சொன்னான்.லதா அதற்கு மேல் ஒன்னும் பேசாமல் சும்மா இருந்து விட்டா ள்.காயத்திரி “இந்த மாதிரி பொ¢ய ‘ப்லாட்டை’எங்களுக்கு வாங்கி குடுத்ததுக்கு ரொம்ப நன்றிப்பா” எ ன்று சொன்னதும்”நன்றி எல்லாம் எனக்கு நீங்க சொல்ல வேணாம் மாமி.நீங்களும்,லதாவும்,ஆனந்து ம் சந்தோஷமா இருந்து வந்தா அதுவே எனக்கு போறும்.அதைத் தான் தினமும் அந்த பகவானை நான் வேண்டி வந்துண்டு இருக்கேன்” என்று சொன்னான் ரமேஷ்.அவன் கண்கள் நீர் துளித்தது.

அவன் தன் பாக்கெட்டில் கையை விட்டு கைக் குட்டையை எடுத்து துடைத்து கொண்டான். லதாவும், காயத்திரியும் அவனை நன்றியோடு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.பிறகு ரமேஷ் மூவரை யும் அழைத்துக் கொண்டு காரில் ஏறி,அவர்களை வீட்டின் வாசலில் இறக்கி விட்டு விட்டு சந்தோஷ மாக ‘பாகடரி’க்குப் போனான்.ஆத்துக்கு வந்ததும் வராததுமாய் காயத்திரி லதாவைப் பார்த்து “லதா, இந்த பையன் அன்னிக்கு நம்ம ஆத்துக்கு வந்து ‘பலாட்’ விலையை சொல்லி,அதிலே அவன் போட சொன்ன எல்லா சாமான் களையும் சொன்ன போதே என் மனசிலே ஒரு சந்தேகம் வந்தது.நான் அப்போ அதை சொல்லலே. இப்ப சொல்றேன்.நன்னா கேட்டுக்கோ.எனக்கு என்னவோ இந்த பையன் நம்ம மூனு பேரையும் அந்த ‘பாலாட்டுக்கு’அழைச்சுண்டு போய் குடி வச்சுட்டு,ஆனந்தை நன்னா கவனிச்சுண்டு அவனை படி க்க வக்கப் போறான்.ஏன்னா,ஆனந்த் அவா ‘குடும்ப வாரிச்சாசே’. அப்பு றமா இவன் தான் ஆசைப்படற பணக்கார பொண்ணை கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இரு ந்து வந்து,நம்ம ரெண்டு பேரை யும் அந்த ‘ப்லாட்லே மறுபடியும் சமையல் வேலை பண்ணிண்டு வர சொல்லப் போறான்னா இல்லை யா பாரேன்” என்று சொன்னாள்.உடனே லதா கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.ஆனந்த வெளி யே விளையாட கிளம்பிப் போனான்.லதா அந்த கண்ணீரை துடைத் து கொண்டே அம்மாவை பார்த்து ”அம்மா எப்படி எல்லாம் உன் வாயாலே சொல்லாதேம்மா. பலிச்சுடப் போறது.நான் அவர் மேலே கொள்ளை ஆசை வச்சுண்டு இருக்கேன்.அதை மெல்ல உன்னை வச்சுண் டு அவர் கிட்டே சொல்லி,அவ ரை நான் கல்யாணம் பண்ணீக் கொள்ள ரொம்ப ஆசைப் படறேன். எனக்காக நீயும் என்னோடு சேந்து சொன்னா,அவர் என்னை நிச்சியமா கல்யாணம் பண்ணிப்பார். அவர் என்னை கல்யாணம் பண் ணிக்க ரொம்ப ஆசை பட்டார்மா.உன் பேச்சை அவர் தட்ட மாட்டார். ’ப்ளீஸ்ம்மா’.எனக்கு நீ இதை நிச்சியம் பண்ணணும்”என்று அம்மாவின் புடவை தலைப்பை பிடித்து கொண்டு சொன்னாள்.

காயத்திரிக்கு தூக்கி வாரிப் போட்டது.காயத்திரி உடனே “உனக்கு பயித்தியமா பிடிச்சு இருக்கு அப்போ நீ கல்யாணம் ஆகாத பொண்ணா இருந்தே.அழகாவும் இருந்தே.அவன் ‘நயவஞ்சக’ தம்பி உனக்கு ஒரு குழந்தேயே குடுத்துட்டு பரலோகம் போயிட்டான்.இது அவனுக்கு நன்னா தெரியும். நாம சமையல் காரா.நம்ம கிட்டே என்ன ஆஸ்தி இருக்கு.அவனோ ஒரு கோடீஸ்வரன்.ரெண்டு ‘பாக்டரி’ வச்சு இருக்கான்.உன் மூஞ்சியே நீ கண்ணாடியிலே பாத்தியா.அவனுக்கு நீ என்ன விதத்லே பொருத்தம்ன்னு நினைக்க்றே.பேசாம அந்த ஆசையே மறந்துட்டு வாழப் பழகு.நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்”என்று சொன்னதும் லதா விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள்.அவள் லதாவைப் பார்த்து “நீ ஆசைப்பட றது நடக்காது லதா,உன் அம்மா சொல்றேன் கேளு”என்று சொல்லியும் லதா விடாமல் “அம்மா,நான் அவ ரை கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசைபடறேன்ம்மா.நீ தான் எனக்கு இந்த ‘ஹெல்பை’ பண்ணனு ம்மா”என்று சொன்னதும் காயத்திரி பதில் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்து விட்டாள்.அடுத்த நா ள் ரமேஷ் ராமநாதன் ‘அக்கவுண்ட்ஸ் ஆபீஸரை’ வைத்து கொண்டு அந்த ‘ப்லாட்டை’ லதா பேர்லே ’ரெஜிஸ்தர் பண்ணி,’காஸ் கனெக்ஷனும்’ வாங்கினான்.

அடுத்த தடவை ரமேஷ் காயத்திரி வீட்டுக்கு வந்ததும் “மாமி,நான் அந்த ‘ப்லாட்டே’ லதா பேர்லே ‘ரெஜிஸ்தர்’ பண்ணி,‘காஸ் கனெக்ஷனும்’ வாங்கிட்டேன்.நான் என் ‘அக்கவுன்ட்ஸ் ஆபீஸ ரையும்’ மூனு ஆளையும் நாளைக்கு காத்தாலே ஒரு பத்து மணிக்கா ஆத்துக்கு அனுப்பறேன். இந்த ஆத்லே இருக்கிற ஒரு பாத்திரமும் நீங்க அந்த புது ‘ப்லாட்’டுக்கு கொண்டு வர வேணாம்.நான் இந்த பழைய பாத்திரங்களே ஒரு அனாதை இல்லத்துக்கு தந்து விடலாம்”என்று சொன்னான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *