திருடர்கள்

 

வீட்டு வாசலில் ஆட்டோவிலிருந்து கல்லூரித்தோழி உமா கையில் பெட்டியுடன்
இறங்குவதைப் பார்த்த கலாவுக்கு அடக்கமுடியாத ஆச்சரியம் !

“நாளைக்கு மவுணட் ரோடு பாங்க்லே வேலைக்கு இன்டர்வ்யூ. சென்னைலே
உன்னைத்தவிர வேற யாரையும் தெரியாது எனக்கு. உனக்குக் கொஞ்சம் டிரபிள்
கொடுக்கலாமேன்னுதான் புறப்பட்டு வந்துட்டேன். ரெண்டு நாள் ஜாலியா ஒங்க
வீடலே தான் தங்கப்போறேன். ஓகேயா” – -உமா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“சரிதாண்டி. ஏதாவது உளறாதே. ஆறு வருஷத்துக்கப்பறம் உன்னைப்பார்த்ததே எனக்கு
ஆனந்தமாயிருக்கு. ஜாலியான பழைய நாளெல்லாம் ஞாபகத்துக்கு வர்றது. என்
கணவரும் பத்து நாள் டூர்லே போயிருக்கார். நல்ல வேளையா போரடிக்கிற
சமயத்திலே கமபெனிக்கு நீ வந்தது நிஜமாவே ரொம்ப குஷியா இருக்கு தெரியுமா?”

ஹாலில் டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த கல்யாண போட்டோ உமாவின்
கவனத்தைக் கவர்ந்தது.

“பாத்தியா. மறந்தே போனேன். நீ எங்க கல்யாணத்துக்கே வரலியே. இவர்தான் என்
கணவர் விஜய். கம்ப்யூட்டர் இன்ஜினியர். அடுத்த போட்டோவில இருக்கிறது பாஸ்கர்
என் மச்சினன். டிகிரி முடிச்சு மூணு வருஷமாச்சு. வேலை கிடைக்காமெ கண்டபடி ஊர்
சுத்தி கிட்டுத் திரியரான். சாகவாசமும் சரியில்லை. ரொம்பக் கண்டிச்சுக்
கேக்கமுடியாத வயசு” பெருமூச்செறிந்தாள் கலா.

அடுத்த நாள்.

மாலை ஐந்து மணிக்கு வருவதாகச் சொன்ன உமா. இரவு பத்து மணிக்குத்தான்
களைத்துப் போய் வீடு திரும்பினாள்.

அவள் முகத்தில் சோகம் படர்ந்திருந்ததைக் கவனிக்கத் தவறவில்லை கலா.

“ஏண்டீயம்மா என்னவோ மாதிரி இருக்கே? உடம்பு சரியில்லையா , இல்லை
இன்டர்வியூலே திருப்திகரமா பண்ணலியா?”

“அதெல்லாம ஒண்ணுமில்லை. இன்டர்வ்யூ பிரமாதமாத்தான் பண்ணியிருக்கேன்.
ஆனா செலக்ட் ஆனாக்கூட வேலைக்கு நான் போறது சந்தேகந்தான்.
என் துரதிருஷ்டம் அப்படி”

“ஏண்டியம்மா என்ன ஆச்சு உனக்கு? திடீர்னு இப்படி விரக்தியாப் பேசறே-?”

“என்னத்தை சொல்றது-? இப்போ பஸ் ஸ்டாப்லே இருந்து வீட்டுக்கு
வந்துகிட்டிருந்தப்போ. ஜனநடமாட்டம் இல்லாத ஒரு இடத்திலே மோட்டார் பைக்ல
ரெண்டு பேர் வேகமா வந்து என் ஹாண்ட் பேக்கை பறிச்சுகிட்டு போயிட்டாங்க. என்
எல்லா சர்ட்டிபிகேட்களையும் அதிலதான் வச்சிருந்தேன். பயத்திலே கூச்சல் போட்டு
உதவி கேக்கக்கூடத்தோணலை. இப்ப நான் என்ன பண்றதுன்னே புரியலை. என்
எதிர்காலமே பாழாயிடுச்சோன்னு பயம் வந்திடுச்சு”—— சொல்லிக்கொண்டே அழ
ஆரம்பித்தாள் உமா.

கலா இடிந்து போனாள்.கடவுளே, தன் வீட்டைத்தேடி வந்தவளுக்கு இப்படியும் ஒரு
சோதனையா-? மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த
போது…பாஸ்கர் உள்ளே நுழைந்தான். நடந்தவற்றை அவனிடம் சொன்னார்கள்.

“அடப்பாவமே! அப்படியா நடந்தது-? சரி. பதட்டப்படாம அமைதியா இருங்க
கொஞ்ச நேரத்திலே வந்துடறேன்”

சொன்னபடியே அரைமணிக்குள் வந்தான்— கையில் திருட்டுப்போன பையுடன்!

பெண்கள் இரண்டு பேரும் காண்பது கனவா நனவா என்று ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.

“மிஸ்டர் பாஸ்கர். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். நல்ல வேளை பையில் எல்லாம் அப்படியே
இருக்கு”….. உமாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.

“பாஸ்கர், சாரி,,இத்தனை நாளா உங்களைப் பத்தி தப்பான அபிப்பிராயம் தான் என்
மனசிலே இருந்தது, இப்போதான் புரியுது நீங்க பயங்கரபுத்திசாலின்னு…….அது சரி,
எப்படி இவ்வளவு சீக்கிரமா பையைக்கண்டுபிடிச்சீங்க?” கலா கேட்டாள்,

பாஸ்கருக்குத் தலை கழுத்தில் நிற்கவில்லை.

“அதா, இ,ந்த ஏரியாவிலே இருக்கிற பெரிய போலீஸ் ஆபீசருங்க எல்லாரும் ஐயாவோட
ஆப்த தோஸ்துங்க, விஷயத்தை லேசா அவங்க காதுலே போட்டேன். அவ்வளவுதான்!
பேக் பறந்து என் கைக்கு வந்திடுச்சி.”

அடுத்த நாளே உமா திருச்சிக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள்,

இரண்டு நாட்கள் கழித்து,,,,,,,,,,,,,,,

இரவு எட்டுமணிக்கு வாசற்கதவு தட்டப்பட்ட சத்தம் கேட்டு கதவைத்திறந்த கலா
திடுக்கிட்டுப் போனாள், வீட்டில் அவள் மட்டும்தான்.

மூன்று போலீஸ்காரர்கள்! ஒரு வேளை பாஸ்கர் சொன்ன நண்பர்களோ? இருப்பது
சாத்தியமில்லை. பார்வையில் கடுமை கொப்பளிக்கிறதே

“பாஸ்கர் வீடுதானே? பயத்துடன் கலா தலையசைத்தாள்,

“ரெண்டு மூணூ மாசமா இந்த ஏரியாவிலே ,ராத்திரி தனியாப் போற பொம்பிளைங்க
கிட்ட மோட்டார் பைக்ல வர்ற காலிப்பசங்க ஹாண்ட் பேக். செயின், தாலி
இதுங்களைப் பறிச்சுகிட்டுப் போறதா நெறைய கம்ப்ளைன்டுங்க வந்துச்சு.”

கலா முகத்தில் லேசான புன்சிரிப்பு. “ஆமா, எங்க வீட்லே கூட…….”

அவளை பேசவிடாமல் போலீஸ்காரர் தொடர்ந்தார்.

“நாங்க கொஞ்ச நாளா ரகசியமா கண்காணிச்சுகிட்டு வந்தோம். நேத்து ராத்திரி
ரோந்து வர்றப்போ ஒரு மோட்டார் பைக் திருட்டுப்பய ம·ப்டில இருந்த எங்ககிட்ட
வசமா மாட்டிகிட்டான். பேரு சேகராம்…. அவனை மிரட்டி லேசாத்தட்டி
விசாரிச்சதிலே தெரிஞ்சது இந்த வீட்லே இருக்கிற பாஸ்கர்தான் அவன்
கூட்டாளியாம்.”

பிரமிப்பில் சிலையாக நின்றாள் கலா. 

தொடர்புடைய சிறுகதைகள்
டாக்டர் வரதனின் க்ளினிக் தி.நகர் தண்டபாணித் தெருவிலிருந்த அந்த ஹைதர் கால வீட்டின் ஒரு போர்ஷனில் இருந்தது. வரதன் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, பிராக்டிசுக்காக குடக்கூலிக்கு இந்த இடத்திற்கு வந்தவர். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஒடி விட்டன. இது வரை ...
மேலும் கதையை படிக்க...
கண்ணத்தாக் கிழவி குடிசை வாசலுக்கு வந்து பேரன் கண்ணன் சைக்கிளில் வேலைக்குப் போவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். கண்ணனும் பாசத்துடன் அவளைப் பார்த்து புன்சிரிப்புடன், "ஆயா, போ உள்ளே போய் பெசாமே குந்தி ரெஸ்ட் எடு. தினப்படி பாடற பாட்டை இன்னிக்கும் பாடதே. எனக்கு இப்போவே நேரமாயிடுச்ச்சு." ...
மேலும் கதையை படிக்க...
மணி நண்பகல் பன்னிரண்டு. அக்கினி நட்சத்திர வெயில் சென்னையை ஆக்ரோஷத்துடன் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ராஜாங்கம் நாயுடு தன் மளிகைக்கடையைப் பூட்டி முடித்தார். ஒரு சிட்டிகை பொடியை ஆனந்தமாக உறிஞ்சிக்கொண்டே நான்கு தெருக்கள் தள்ளி இருந்த தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். பசி வயிற்றைக் ...
மேலும் கதையை படிக்க...
நளினியின் பிரிவு ஒரே வாரத்தில் தன்னை இப்படிப் பாடாய்ப்படுத்தும் என்று சுரேஷ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையே டல்லடித்துப் போயிற்று. வீடு சிலை இல்லாத கோவில் போல, பூ இல்லாத சோலை போல களையிழந்து, சூன்யமாய் நிற்கிறது. கல்யாணமாகி மூன்று மாதங்களுக்குள்ளேயே, நளினி ...
மேலும் கதையை படிக்க...
செவ்வாய்க்கிழமை விடிந்துவிட்டாலே கற்பகத்திற்கு ஏனோ உள்ளூர ஒரு பயம் தோன்றி விடும். ஏதாவது ஒரு சிறுவிபத்தோ அல்லது சோக நிகழ்ச்சியோ தவறாமல் நடந்தே தீருவது வழக்கமாகப் போய்விட்டது. விடியற்காலையில் தினசரிக் காலண்டரில் தேதியைக் கிழித்தபோது அவள் ராசிக்கு 'சோகம்' என்று பலன் சொல்லியிருந்தது ...
மேலும் கதையை படிக்க...
டாக்டருக்கு மருந்து
ஆசை
வியாதி
துடிப்பு – சிலிர்ப்பு – தவிப்பு
துணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)