ஏங்க, இப்படி திட்டு வாங்கிட்டு அவனிடம் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு உங்களுக்கு தலையெழுத்தா என்ன..?
அரை மணிக்கு முன் நடந்ததுக்குத்தான் அப்பாவிடம் அம்மா கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.
நடந்தது இதுதான்
இரவுக்குள் முடித்து ஆபீஸூக்கு அனுப்ப வேண்டிய வேலையை வீட்டிலிருந்தவாறே செய்து கொண்டிருந்தேன்.
ரிடையர் ஆன அப்பா கதை அடிக்கிறேன் பேர்வழின்னு பக்கத்தில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் அது எப்படி இது எப்படின்னு சந்தேகம் கேட்டுத் தொந்தரவு கொடுத்தார்.
அவரிடம் எரிந்து வழிந்தேன்.
”அவனோட சின்ன வயசிலே அப்படி இப்படின்னு சந்தேகம் கேட்கறச்சே சலிக்காம எத்தனையோ விஷயம் சொல்லிக் கொடுத்திருக்கேன். இப்ப எனக்கு
வயசாயிடுச்சுல்ல, ஞாபக சகதி குறைஞ்சிகிட்டு வருது, விடு கமலா” ன்னு அம்மாவிடம் அப்பா சொல்லவும் இந்த வயசிலும் கத்துக்கறதில் ஆர்வத்தோடு இருக்கற அப்பாவிடம் இனி இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்று மனசுக்கு கட்டளையிட்டேன்.
- கே.ராகவன் (15-4-2009)
தொடர்புடைய சிறுகதைகள்
சாப்பாடு ஆனதும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
“இந்தாப் பாரு சுந்தரம் நான் சொல்றேன்னு வருத்தப்படாதே. இந்த உலகத்திலே பணம் தான் முக்கியம். மற்றது எல்லாம் அப்புறம் தான். பெண்களைக் கட்டிக் கொடுத்து விட்டு நாம் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அது அது வாழ்க்கையை அது ...
மேலும் கதையை படிக்க...
ஏங்க ,கொஞ்சம் அடுப்பிலே பாலை வைங்க, இதோ வந்து காபி தாரேன்.
சந்தானம், காலை நடைப் பயிற்சி முடித்து வந்தவனைப் பார்த்து குளித்துக் கொண்டு இருந்த கீதா கூறினாள்.
சரி சரி,வைக்கிறேன். என பாலை அடுப்பில் வைத்தான்.
குளித்து முடித்து வந்த கீதா, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லே, ...
மேலும் கதையை படிக்க...
கதிரேசன் பத்திரிகை கொடுத்ததுமே முடிவு செய்து விட்டேன், அவன் கல்யாணத்துக்கு அவசியம் செல்ல வேண்டும். காரணம், கல்யாணம் நடக்க இருப்பது ஆய்க்குடியில்!
ஆய்க்குடி.... என் பால்யத்தின் பள்ளி நாட்கள் கழிந்தது அந்த ஊரில்தான். கோலி, செல்லாங் குச்சி, பம்பரம் என எல்லா விளை ...
மேலும் கதையை படிக்க...
குமார் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவன். அதனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து நல்ல மகிழ்ச்சியாக ஆடம்பர வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.
கல்லூரியில் நன்றாக எல்லோரிடமும் பழகும் குணம் கொண்டவன். ...
மேலும் கதையை படிக்க...
'தாத்தா!' என்று ஓடி வந்த பேத்தி ராகவியை அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார் பெரியவர் சிங்கமுத்து.
அந்த கிராமத்திலே இருக்கும் வீடுகளிலே மிகப்பெரிய வீடானா ஜமீன் மாளிகைக்கு சொந்தக்காரர் அவர். அதில் தன் மனைவி ராஜேஸ்வரி, மகள், மருமகன் மற்றும் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார்.
ராகவிக்கு தன் ...
மேலும் கதையை படிக்க...