தலைமுறை – ஒரு பக்க கதை

 

பெரியவர் பக்தவச்லம் வீட்டு வாசலில் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து ஒரு வாரப்பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார்.

அவரது பேரன் மகேஷ் புதிதாக வாங்கிய மோட்டார் பைக்கை பளபளவென்று துடைத்துக் கொண்டிருந்தான்.

வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்தவர் கண்ணாடியை மட்டும் இறக்கிவிட்டு பெரியவரே, இங்கே பிருந்தாவன் நகர்னு புதுசா பிளாட் போடறாங்களே, அது எங்கே ? என்று கேட்டார்.

அது மாதிரி எந்த நகரும் இங்கே இல்லையே! என்றார் பக்தவச்லம்.

சார், நேரா போயி லெப்ட்ல கட் பண்ணுங்க, ஒரு சவுக்குத் தோப்பு வரும், அது பக்கத்துலதான் பிருந்தாவன் நகர்’ என்றான் மகேஷ்.

ரொம்ப தேங்கஃஸ் தம்பி” என்றார் காரிலிருந்தவர்

”மகேஷ், இத்தனை வருஷமாக இருக்கேன் , எனக்குத் தெரியாத அட்ரஸ் எல்லாம் எப்படி உனக்குத் தெரிஞ்சுது?’ என்று பக்தவச்லம் கேட்டார்

தாத்தா, மூணு மாசத்துக்கு முன்னாடி, நீங்க, அப்பா, சித்தப்பா அத்தை எலாரும் போய் உங்க பூர்வீக சொத்தை வித்தீங்களே அது எங்கே இருக்கு? என்று கேட்டான் மகேஷ்.

அதுவா? சவுக்குத் தோப்பு பக்கத்துல…

அதுதான் தாத்தா, இப்போ பிருந்தாவன் நகர்!

- சு.மணிவண்ணன் (நவம்பர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
“சந்திரா... சந்திரா... இங்கே...இங்கே...” என கை காட்டிய படி ஓடினாள் கன்னியம்மாள். கூட வந்த அவள் மகள் மங்கைக்கு கோபமாக வந்தது. எதிர் திசையில் சென்றுக்கொண்டிருந்த சந்திரன் பார்த்ததும் தான் நிறுத்தி மூச்சுவிட்டாள். தன் வயதை மறந்து ஓடியது கன்னியம்மாளுக்கே வெட்கமாக ...
மேலும் கதையை படிக்க...
அந்த நாள் ஞாபகம்
""அப்பா... உங்க சினேகிதர், அதாவது உங்க கூட படிச்ச கிளாஸ்மெட் கிருஷ்ணமூர்த்தியை ஞாபகமிருக்கா,'' என்று கேட்டான் என் மகன். பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான், ""ஞாபகமில்லாம என்ன... நல்லாருக்கு. அப்போ ரெண்டு கிருஷ்ணமூர்த்தி படிச்சாங்க. நீ யாரை சொல்ற?'' ""என்.கிருஷ்ண மூர்த்திப்பா... திருக்கொட்டாரம்.'' ""ஓ... ...
மேலும் கதையை படிக்க...
இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை என்றே நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.அபூர்வத்தெறிப்புக்கள் போலன்றி நான் எப்போதும் வெளியே தெரிவதில்லை.நன்கு உலர்ந்த துணியின் மீது விழும் நீர்த்துளி சற்று நேரத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
அழுதுகொண்டிருக்கிறது பூ. பூ அழுதால் தேன். பாலன் அழுதால் தேவை பால். இந்தப் பத்துவயது நோர்வேயிய பெண்குழந்தைக்கு என்ன ஆறாத சோகம்? ஆறுபோல் ஓடுகிறதே கண்ணீர். உருண்டோடும் நீலவிழிகளுக்குள் இத்தனை கண்ணீர் துளிகளா? உறைபனிகாலத்தில் கூட வெப்பத்தால் உறையாத கண்ணீர் நூல்கோத்த முத்தாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டது.. "இதோ பாரப்பா ரவி, அப்பா நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிண்டு போறதைப் பார்த்தா, அவர் முடிவு எந்த நிமிஷமும் வரலாம்னு தோணுது. அதனாலே நீ மேற் கொண்டு நடக்க வேண்டியதற்கு எப்பவும் தயாரா இருக்கிறது தான் உசிதம்" என்று சொல்லி டாக்டர் ...
மேலும் கதையை படிக்க...
அன்பின் விழுதுகள் அறுவதே இல்லை
அந்த நாள் ஞாபகம்
பருந்தானவன்
தனிமரம்
அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)