தலைக்குனிவு

 

” அப்பா நீங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப்போறிகங்க? என் வீட்டுக்கு வந்துடுங்கப்பா ” சதீஷ் சொன்னான்.பதில் சொல்லாமல் பார்க்கலாம் என்பது போல் தலையசைத்தார் சுந்தரேசன்.

கொஞ்ச நேரத்தில் அப்பாவிடம் வந்த நரேன், ” அப்பா நீங்க தனியா இருக்க வேண்டாம் என் கூட வந்திடுங்க ” என்றான்.

தாய் இறந்த துக்கத்திற்கு வந்த மகன்கள்தான் இவ்வாறு அழைத்தனர். இரண்டுபிள்ளைகளுக்கும் மூன்று மாதம் கழித்து பதில் சொல்வதாக கூறி அனுப்பினார்.

மூன்று மாதம் கழித்து அப்பா போனில் சொன்ன தகவலை கேட்டு இரண்டு பிள்ளைகளும் உடனடியாக புறப்பட்டு வந்து கூச்சல் போட்டார்கள்.

” அப்பா இந்த வயசுல நீங்க பண்ணின காரியம் கொஞ்சங்கூட நல்லால்லே… அம்மா போய் மூணு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு வந்து நிக்கறிங்களே…உங்களுக்கு அசிங்கமா இல்லை…?”

சிறிது நேரம் மௌனமாய் இருந்த சுந்தரேசன் தொண்டையை கணைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.

” உங்கம்மா உங்களை எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தா? கடைசி காலத்தில உங்க கூட வந்து இருக்கணும்னு ஆசைப்பட்டா.. ஆனா, அவ படுத்த படுக்கையா இருக்கறதை காரணம் காட்டி , அவளை நீங்க கூட்டிட்டு போய் வைச்சிக்கலை.

கடைசி வரை அவளுக்கு நான் எல்லாம் மனசு கோணாம செஞ்சும் ‘ பிள்ளைங்க பார்த்துக்கலேன்னு மனக்குறையோடதான் போய் சேர்ந்தா…”

அப்ப எங்க மேல இல்லாத பாசம் இப்ப என் மேல ஏன் வந்திருக்கு…?
காரணம் நான் நல்லா திடகாத்திரமா இருக்கேன். உங்க வீட்டுக்கு சம்பளம் இல்லாத காவல்காரனா இருப்பேன்..என் பென்ஷன் 20 ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கலாம்ங்கிற நப்பாசைதானே…?”

உங்க ரெண்டு பேரையும் நான் அப்படியே விடலை.. நல்லா படிக்க
வைச்சிருக்கேன்.. நல்ல வேலையில் இருக்கிங்க.. வீடும் வாங்கி கொடுத்திட்டேன், கல்யாணத்துக்கு செய்ய வேண்டியதையும் செஞ்சிட்டேன். இனி யாருக்காவது நல்லது செய்யனும்னு நினைச்சேன்…

இதோ இந்த வளர்மதியோட அப்பாவும் அம்மாவும் வயசானவங்க.. வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ற அளவுக்கு வசதி இல்ல.. அதனால 40 வயசாகியும் இன்னும் கல்யாணமாகலை. அப்பா , அம்மா காலத்துக்கு பிறகு இவ நிலமை கேள்விக்குறியா இருந்தது. இவளை கல்யாணம் பண்ணிகிட்டதால என் பென்ஷன் பணம் எனக்கு பிறகு இவளுக்கு வரும். இதுக்கு சட்டபடி ஏற்பாடு செய்யத்தான் இந்த கல்யாணம்.மற்றபடி, இவ என்னை பார்த்துக்க வந்த தாய்… என் மனசுல எந்த களங்கமும் இல்ல.. இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கலேன்னா யாரும் இங்க வர வேண்டாம்….”

சுந்தரேசனின் வார்த்தைகள் சம்மட்டியாய் தாக்க.. பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தனர் இரு பிள்ளைகளும். 

தொடர்புடைய சிறுகதைகள்
விடியற்காலை.. இதமான காற்றில் நடந்து செல்வது சுகமாயிருந்தது வெங்கடேசனுக்கு.' ஆமாம்.. இன்னிக்கு என்ன ராமுவை காணோம்...? யோசித்தவாறு வீட்டுக்கு திரும்புகையில் எதிரே ராமு வந்து கொண்டிருந்தார். "வெங்கடேசன் இன்னிக்கு எழுந்ததே லேட்டுப்பா.. நான் சொல்லிட்டிருந்த மாதிரி என் பையனையும் அவன் பொண்டாட்டியையும் வெளியே அனுப்பிட்டேன்பா.. நானும் பிரேமாவும் ...
மேலும் கதையை படிக்க...
என்னை நீரஜின் பள்ளியில் அழைத்திருந்தார்கள். நீரஜ் பள்ளியில் எல்லாவற்றிலும் சூப்பர் ஸ்டார். அதனால் சிறந்த அன்னையாக பள்ளியில் என்னை சிறப்பிக்க போகிறார்களாம்… அன்னையர் தினத்தை பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டும். என்ன பேசலாம்… அன்னையர் தினத்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். வேலைக்காரி ...
மேலும் கதையை படிக்க...
கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு போர்த்தியிருந்தது.. இந்த நேரம் பார்த்து பவர் கட் வேறு.சுசித்ராவிற்கு நெஞ்சுக்குள் திக்.. திக் என்று இதயம் அடித்து கொண்டிருந்தது. சில்லென்று தண்ணீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஹாலுக்கு சென்று ப்ரிட்ஜில் இருக்கும் தண்ணீரை எடுத்து வர ...
மேலும் கதையை படிக்க...
"சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம இருந்தா எப்படி...?" - கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார். இருவரும் ஒன்றாகவே பணி புரிந்தவர்கள்.ஓய்வு பெற்ற பிறகும் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள்.ஒருவர்க்கு தெரியாமல் இன்னொருவர் குடும்பத்தில் எதுவும் நடந்ததில்லை.தினமும் யாராவது ஒருவர் வீட்டில் ...
மேலும் கதையை படிக்க...
“இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே... என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்... ப்ளீஸ் பா....” “ நீ நினைக்கறதை நீயே எழுதினா நல்லாருக்குமே சூர்யா...?” “ இல்லப்பா... எனக்கு எழுதல்லாம் வராது.... என் எண்ணத்துக்கு நீ உயிர் குடுத்தா நான் ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
மருமகள்
சிறந்த அன்னை…
அந்த நொடி…
வீடு
நினைவெல்லாம் நீயே ஆனாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)