தற்கொலை – ஒரு பக்க கதை

 

நீங்க யாராவது பரீட்சையிலே ஃபெயிலாகியிருக்கீங்களா? அதனாலே… அப்பா, அம்மாட்டே திட்டு வாங்கியிருக்கீங்களா?
அந்த வேகத்தில் தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கீங்களா?

அந்த நிலைமைதாங்க நம்ம ஷர்மிக்கு வந்துடிச்சி! ஆனா….அதுக்கு முன்னாலே சமந்தா மிஸ்ஸை மட்டும் பார்க்கணும்னு
ஆசை?

மிஸ் வீட்டுக்கு போனாள், பார்த்தாள்…. அழுதாள்! தற்கொலையை மட்டும் மறைத்து விட்டாள். ஆனால்…. “கடைசியாய் உங்களைப் பார்த்துட்டு போவலாம்னு…’ சொன்ன அவளது வார்த்தை மட்டும் சமந்தா மிஸ்ஸை உறுத்தியது.

“அட…. அசட்டுப் பெண்ணே!’ என்று புத்திமதிகளைச் சொன்னாள்.

எதிரே இருந்த பூக்காரியிடம், பூ வாங்கி அவள் தலையில் சூட்டினாள். அவளை தனியே அழைத்து… “இந்தப் பூக்காரி இருக்காளே… அவா எங்க அக்கா கிளாஸ்மேட்! உன்னெ மாதிரி பத்துலெ ஃபெயிலானவதான்! ஒரு தொழிலைக் கத்துகிட்டா…

இப்போ அவாபேருக்கு நாலு காம்பவுண்ட் இருக்கு! ஆனா அவாகூட படிச்சி பாஸ் பண்ணுன எங்க அக்காவுக்கு ஒரு வீடு இல்லை!’ என்றாள்.

இப்பமெல்லாம் நம்ம ஷர்மி தையல் கத்துக்க போய்கிட்டு இருக்கா! “எப்படியும் நாலு காம்பவுண்ட் வாங்கிடணும்னு…’

ஆனா… அதுல பாருங்க…. இந்தப் பூக்காரி அக்கா கிளாஸ் மேட்டும் இல்லே! அவளுக்கு சொந்தமா காம்பவுண்டும் இல்லே!

– கீர்த்திமலர் (ஜூன் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
தொலைந்து போன தூக்கம் !
அந்தச் செய்தியைக் கேட்டபோது... நான் புத்தகக் கடையில் இருந்தேன். கைப்பேசியைத் துண்டித்து, மனசு அதிர அதிர காருக்கு நடந்தேன். ரொம்ப அழுக்கான ஜீன்ஸில், பிராண்டட் டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த இளைஞன், படு வேகமாகப் பைக்கை உதைத்துக் கொண்டிருந்தான். ''ஹெல்மெட் போட்டுக்கலியா?'' என்று ...
மேலும் கதையை படிக்க...
சீக்கிரம் கிளம்புப்பா , சீக்கிரம் என்னப்பா எங்க போறம் கிளம்புன்னு சொல்றீங்க, மறந்துட்டியா இன்னிக்கு உங்க அக்கா வீட்டுக்கு போகலாமின்னு நேத்தே சொன்னல்ல ஞாபகமில்ல,,கிளம்பு என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய இடுப்பில் உள்ள வேட்டியை இழுத்து கட்டினார் தமிழ்ப்பிரியன். அப்பா நான் வரலப்பா ...
மேலும் கதையை படிக்க...
'ஆற்றங்கரை மேட்டினிலே....அசைந்து நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை'...காரைக்கால் பண்பலையில் டி.எம்.எஸ் குரல் கசிய...தானும் சேர்ந்து பாடியபடியே சமையலில் ஈடுபட்டிருந்தாள் சரசு. பாதியிலேயே பாடலை நிறுத்தி விட்டு அறிவிப்பாளர் "நேயர்களே..ஒரு முக்கிய அறிவிப்பு...நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே இருநூற்றைம்பது கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு ...
மேலும் கதையை படிக்க...
கடைசியாக அம்மா கொழும்புக்கு வந்து சேர்ந்தாள். கடைசியாக என்று சொன்னால், அம்மா தனது வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் கொழும்புக்கு வந்து சேர்ந்தாள் என்று அர்த்தமல்ல. ஒருவகையில் பார்க்கப்போனால் இது அவளது வாழ்வின் கடைசிக் காலமும்தான்! சரிக்குச் சரி நாலு ஆண்களும் நாலு பெண்களுமாக ...
மேலும் கதையை படிக்க...
முருகன் படித்தவன் . பீ.ஈ , ஈரோடு கல்லூரியில் முடித்து, சென்னையில் ஒரு கணினி விற்பனை கம்பனியில் , சுமாரான சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். வயது 25. கைக்கும் வாய்க்குமே பற்ற வில்லை. இதிலே ஊரில் இருக்கும் அப்பா அம்மாவிற்கு ...
மேலும் கதையை படிக்க...
தொலைந்து போன தூக்கம் !
அன்புவின் வாசிப்பு
குலச்சாமி
போகும் இடம்
அழிவின் ஆரம்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)