தமிழ் – ஒரு பக்க கதை

 

மருந்துக்கடை மகேஸ்வரனுக்கு உடம்பு சரியில்லாததினால், டாக்டர் அவரை ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார்

கல்லூரி விடுமுறையிலிருந்த மகன் தமிழிடம் ஒரு வாரம் கடையைப் பார்த்துக் கொள்ளும்படி கூறி மகேஸ்வரன் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்தார்,

ஒரு வாரம் செல்ல உடல் நலமாகி, கடைக்கு வந்த மகேஸ்வரன், ‘பில்’ புக்குகளை எடுத்து வியாபார நிலவரத்தைப் பார்த்தார்

தமிழ் பொறுப்பிலிருந்த ஒரு வாரமும் கடை வியாபாரம் கூடியிருந்தது. அவன் பில் போட்டதுதான் சற்று முரண்பாடாக இருந்தது.

மருந்து வாங்கியவர்களில் ஒரு சிலருக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியும், ஒரு சிலருக்கு 11 சதவிகிதம் தள்ளுபடியும் தமிழ் கொடுத்திருந்தான்

”எதற்காக அவன் ஒரு சிலருக்கு கூடுதலாக 1 சதவிகிதம் கொடுக்க வேண்டும்?’’ என முகவாயில் கை வைத்தபடி யோசித்த மகேஸ்வரனின் கண்களில் மருந்துக்கடை அலமாரியிலிருந்த ஓர் அறிவிப்பு அட்டை தெரிந்தது.

அதில், ”மருந்து வாங்குபவர்கள் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசினால் கூடுதலாக ஒரு விழுக்காடு விலைச்சலுகை கிடைக்கும் – தமிழ்’’ என்றிருந்தது.

தமிழ், கடை வியாபாரத்தை மட்டும் பெருக்கவில்லை. தமிழையும் வளர்த்துள்ளான் என்ற விவரம் மகேஸ்வரனுக்கு தெரிய வர, மகனை நினைத்து அவர் பெருமிதம் கொண்டார்.

- விருதை ராஜா (ஜனவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
சிறுமிக்கும் குமரிக்குமான வித்தியாசங்களை அவளிடமிருந்து மெல்லச் செதுக்கிக் குறைத்துக் கொண்டிருந்தது காலம். காலத்தின் இரவில் கனவு கண்டு புரண்டாள் புஷ்பா. கனவில் படுபாதாளமாய் ஆழ்ந்திருந்தது ஒரு கிணறு. அதன் நீர் சாந்தின் பிசுபிசுப்பில் தளும்பிக் கிடக்க, அதில் மெல்ல நீந்திக் கிடந்தன ...
மேலும் கதையை படிக்க...
மிகச் சிறிய குழந்தை, குழந்தை என்று கூட சொல்ல முடியவில்லை. சிசுபோலத் தெரிந்தது. விஞ்ஞான - உடற்கூற்றியல் விரிவுரைகளின் போது காண்பிக்கப்படுகின்ற ஒளிப்படங்கள், காணொளிகளில் இருப்பது போல தலைபெரிதாகத் தெரிந்தது. முழுமையாக வளர்ச்சியடையாதது போலத் தெரிந்த உடலைக் குறுக்கிக்கொண்டு படுத்திருந்த அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
ஜன்னல் வழியே வெளியே பார்த்துகொண்டிருந்தேன், கீழே மாமியாரும் மருமகளும் மரத்தடியில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவர்கள் அதிகமாக பேசிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் நெருங்கி உட்கார்ந்துள்ளதை பார்ப்பதில் ஒரு அன்னியோன்யம் தெரிநதது. பொதுவாக மகிழ்ச்சியான சூழ்நிலை அங்கில்லை என புரிந்தது, பெருமூச்சு வநதது எனக்கு, என்ன செய்வது ...
மேலும் கதையை படிக்க...
கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் ...
மேலும் கதையை படிக்க...
வீட்டு வாசலில் ஆட்டோவிலிருந்து கல்லூரித்தோழி உமா கையில் பெட்டியுடன் இறங்குவதைப் பார்த்த கலாவுக்கு அடக்கமுடியாத ஆச்சரியம் ! "நாளைக்கு மவுணட் ரோடு பாங்க்லே வேலைக்கு இன்டர்வ்யூ. சென்னைலே உன்னைத்தவிர வேற யாரையும் தெரியாது எனக்கு. உனக்குக் கொஞ்சம் டிரபிள் கொடுக்கலாமேன்னுதான் புறப்பட்டு வந்துட்டேன். ரெண்டு நாள் ஜாலியா ...
மேலும் கதையை படிக்க...
பாதாள நந்தி
நான் கதை சொன்னால் கேட்காது
உயிர்
கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும்
திருடர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)