டைரக்டர்

 

உருகி உருகி காதலித்துக்கொண்டிருந்தான் தினேஷ். கயல்விழி அவனது காதல் மொழிகளை முகம் சிவக்க இரசித்துக்கொண்டிருந்தாள்.”கட்” டைரக்டர் சொன்னதும்,

இதுவரை இவர்கள் இருவரின் காதல் பேச்சுக்களை உற்று கவனித்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் மூச்சு விட்டு “அப்பாடி” என்றனர். அதுவரை அமைதியாய் இருந்த இடம் கலகலப்பாயிற்று”. தினேசுக்கும், கயல் விழிக்கும் மறுபடி தங்கள் இயல்புக்கு வர நினைத்தனர்.

உதவி டைரகடர் வேண்டாம் அடுத்த சீன் டைரக்டர் கண்டினியூ பண்ணுவாரு அப்படீனு நினைக்கிறேன், சொன்னவர்களை பரிதாபமாய் பார்த்தனர் இருவரும். காலையில் வெறும்

காபியும், இரண்டு பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டிருந்தனர். அந்த பசியிலும் தங்கள் காதல் நடிப்பை பல்லை கடித்து நடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் நிலைமையை பார்த்த புரொடக்சன் மானேஜர் மெல்ல டைரக்டரிடம் சென்றார்.மற்றவர்கள் தங்களுடைய

பொருட்களை இடம் மாற்றி வைத்துக்கொண்டிருந்தனர்.

சார் ஒரு சின்ன பிரேக் கொடுக்கலாமா? புரொடக்சன் மேனேஜர் டைரக்டரிடம் மெல்ல வந்து கேட்க, டைரக்டர் கதிரவன் யோசித்தவர் “வேண்டாம் சார்” இப்ப அவங்க ரொமான்ஸ் சீன் சிக்குவேசன்ல இருக்காங்க” அடுத்த ஷாட் அப்படியே டூயட் சீனுக்கு கொண்டு போறோம். இடையிலே பிரேக் விட்டா, கண்டினியூனிட்டி கட்டாயிடும். சொன்ன டைரக்டரை மரியாதையுடன் பார்த்து அப்படியே செய்யலாம் சார். புரொடக்சன் மேனேஜர் நகர்ந்து கொண்டார்.டைரக்டர் உதவியாளார்களை கூப்பிட்டு அடுத்த ஷாட் “டூயட் சீனுக்கு அப்படியே போயிடலாம். முதல் ஷாட் இந்த லோகேசன்ல் வெச்சுட்டு அடுத்த ஷாட்டுக்கு வெளியே போறோம்.

அடுத்த நொடி அவரது உதவியாளர்கள் பறந்து அடுத்த கட்ட ஷூட்டிங்குக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.

ஒரு வழியாக அடுத்தடுத்து இரண்டு ஷாட்களை முடிக்கும் போது மணி கிட்டத்தட்ட பதினோரு மணிக்கு மேல் ஆகி விட்டது. தினேசும், கயல்விழியும், விட்டால் போதும் என்று அவரவர்கள் இடத்துக்கு பறந்தனர்.

டைரக்டரிடம் வந்த அவரது உதவியாளர் உங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரட்டுமா சார்? நோ தேங்க்ஸ், நானே வர்றேன், சொல்லிக்கொண்டே எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இடத்துக்கு வந்தார். பணியாளர்கள் வரிசையாய் தட்டில் காலை டிபனை வாங்கி சென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஒருவர் முகமும் பார்க்காமல் குனிந்து கரண்டியில் உப்புமாவை எடுத்து தட்டில் போட்டுக்கொண்டிருந்த சமையல் உதவியாளர் அடுத்து நிற்பவருக்கு உப்புமாவை எடுத்து தட்டில் போடும்போதுதன் கவனித்தார்.அங்கு தட்டை ஏந்தி டைரக்டர் நிற்பதை. சார் பதட்டமானவர் நீங்க சொல்லியிருந்தா நாங்களே அங்க கொண்டு வந்திருப்போமில்ல, பதட்டப்பட,இவர் எந்த சலனமும் காட்டாமல் ஏன் எனக்கு இங்க எல்லாம் கொடுக்க மாட்டீங்களா? ஐயோ சார் அதுக்கில்லை, சொல்லிக்கொண்டே டைரக்டர் தட்டில் உப்புமாவை வைத்தார். தட்டில் விழுந்த உப்புமாவை கையில் எடுத்து வாயில் போட்டுக்கொண்டே நகர்ந்த டைரக்டரை அதிசயத்துடனும், வியப்புடனும் பார்த்து கொண்டிருந்தார் அந்த சமையல்கார்ர்.

“கட்டேல போறவன்” ஏண்டா என் உசிரை எடுக்கற? தட்டை ஏந்தி நின்ற அந்த சிறுவனை அவன் அம்மா விரட்டிக்கொண்டிருந்தாள்.”அம்மா பசிக்குதும்மா, பாப்பாளுக்கு வச்சிருக்கற அந்த சோத்துல கொஞ்சம் போடும்மா, பரிதாபமாய் கேட்ட மகனை பார்த்தவள் அந்த தட்டில் விசம் கலந்து வைத்து அதை தான் சாப்பிட்டு விடலாம் என்று வைத்திருப்பதை, எனக்கு வேண்டும் என்று கேட்டவனை அது பாப்பாளுக்கு என்று பொய் சொன்னாள். இப்பொழுது இவன் எனக்கும் வேணும் என்று பிடிவாதமாய் கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டதை, பொறுக்க முடியாமல்,’கட்டையில போறவன் என்னை சாக்க்கூட விட மாட்டேங்கறானே, என்று தலையில அடித்து அழுது கொண்டே அந்த தட்டில் வைத்திருந்த விசம் கலந்த சோற்றை ஓடிப்போய் கால்வாயில் வீசி எறிந்தாள்.

அவள் வீசியதை வெறித்து பார்த்த அந்த சிறுவன் “ ஏம்மா இப்படி பண்ணுன?

கேட்டவனை அழுகையுடனே பார்த்த அம்மா எதுவும் பேசாமல் தலையை மடேர் மடேர் என்று அடித்துக்கொண்டு அழுதாள். அவள் அழுது ஓயும் வரை பார்த்துக்கொண்டிருந்த

சிறுவன் அவள் அழுகை ஓய்ந்த பின் அம்மாவை வெறித்து பார்த்து விசம் கலந்து சாப்பிட்டுட்டு போயிட்டா எல்லாம் சரியா போயிடுமாமா?

திக்கென்று பார்த்தாள் அந்த சிறுவனை ! டேய்..அதிர்ச்சியுடன் கூவியவளை “அம்மா, அப்பா நம்மளை விட்டுட்டு ஓடிட்டான்னு சொல்லி நீ விசம் குடிச்சு செத்துட்டியின்னா அவனுக்கும் உனக்கும் என்னம்மா வித்தியாசம்?

இந்த கேள்வியை அந்த தாய் கேட்டு என்னை மன்னிச்சுடுடா, கதறி அழுதவள் அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள்.

இல்லைடா இந்த மாரியம்மா இனி கனவுல கூட சாக நினைக்க மாட்டாடா, உன்னையும், தங்கச்சியையும் நல்ல வழி காட்டிட்டுத்தாண்டா இவளோட கட்டை இனி வேகும். தன்னுடைய கலைந்திருந்த கூந்தலை இறுக்கி முடித்துக்கொண்டவள். வாடா என்று அவன் கையை பிடித்துக்கொண்டு அப்பன் வேலை செய்த முதலாளியை பார்க்க போனாள்.

முதலாளியை பார்க்க அவரது கணக்கு பிள்ளை முதலில் அனுமதிக்கவில்லை.

உன் புருசன் செஞ்ச காரியத்துக்கு அவனை பொலி போட்டிருக்கணும், தப்பிச்சுட்டான், தறுதலை பையன், உறுமியவரை பார்த்த அந்த பெண், ஐயா என்னை வெட்டி போட்டாலும் சரி இப்ப அவரை பார்க்கணும், பிடிவாதமாய் நின்றவளை பார்த்த கணக்குப்பிள்ளை, சரி கொஞ்சம் இரு என்று அவரிடம் அனுமதி வாங்கி வர உள்ளே சென்றார்.

அதற்குள் ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்த முதலாளியின் மனைவி வெளியே இவள் பையனுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்து ஏ மாரியம்மா இங்கன வா, என்று கூவியவள், வந்தவுடன், இங்க பாரு இந்த வேலைக்காரி திடீருன்னு லீவை போட்டு தொலைச்சுப்புட்டா, இந்த பாத்திர பண்டம் எல்லாத்தையும் கழுவி துடைச்சுட்டு, வீட்டையும் கூட்டிட்டு போயிடு, சொல்லிக்கொண்டே உள்ளே சென்றாள்.

மாரியம்மா, தன் மகனை கொஞ்சம் உக்காந்துக்கடா, என்று சொல்லிவிட்டு அந்த அம்மாள் சொன்ன வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். அம்மா நானும் உங்ககூட வேலை செய்யறேன் என்று அருகில் வந்து பாத்திரங்களை எடுத்து விளக்க ஆரம்பித்த
மகனை பெருமையுடன் பார்த்தாள் மாரியம்மா.

அதே நேரம் “முதலாளி” இப்ப வேண்டாம் அப்புறமா பாக்கறேன்னு சொல்லிடு என்று சொல்லி அனுப்பிய கணக்குப்பிள்ளை இங்கு இவள் பாத்திரம் கழுவிக்கொண்டிருப்பதை பார்த்தவர், இனி முதலாளி நினைத்தாலும் மாரியம்மாளை ஒண்ணும் பண்ண முடியாது என்று முடிவுக்கு வந்தவர் போல் வீட்டினுள் சென்றார்.அதற்குள் ஒரு சொம்பில் சுடச்சுட காப்பியும், தட்டில் நாங்கைந்து இட்லியுடன் வந்த முதலாளியின் மனைவி, முதல்ல இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு வேலையை முடிங்க, சொல்லிவிட்டு திரும்பியவளை “அம்மா என்று அழைத்தாள் மாரியம்மா” என்னளே? என் புள்ளை சித்த நேரத்துல ஸ்கூலு முடிஞ்சு வந்திடுவா, இதுல இரண்டு இட்லிய என் பையனை அனுப்பிச்சு என் புள்ளைக்கு கொண்டு போய் வச்சிட்டு வர சொல்லிட்டுமா. கேட்டவளை வெறித்து பார்த்த அந்த அம்மாள் நீ வேலைய முடிச்சு போறப்ப, நானே தர்றேன், நீங்க இரண்டு பேரும் சாப்பிடறதுக்குத்தான் இப்ப கொடுத்தேன், சொன்னவளை கண்ணீருடன் கைகூப்பி நன்றி சொன்னாள் மாரியம்மாள்.

தினமும் அம்மாளுக்கு உதவியாய் வந்து வீட்டு வேலைகளை முடிக்க உதவி செய்து கொண்டிருந்த சிறுவன், ஒரு முறை சென்னையிலிருந்து வந்திருந்த முதலாளியின் மகன், மனைவி, குழந்தைகள், போகும்போது மாரியம்மாளிடம் உன் பையனை நாங்க மெட்ராசுக்கு கூட்டிட்டு போலாமா? என்று கேட்டவர்களை புன்னகையுடன் பார்த்து என் புள்ளைக்கு விருப்பமுன்னா கூட்டிட்டு போங்க, சொன்னவுடன் தலையசைத்தான் சிறுவன்.

அவர்கள் சினிமா தொழிலுக்கும்,தொலைக்காட்சி தொடர்களுக்கும், பைனான்ஸ் செய்து கொண்டிருந்ததால் அவர்கள் வீட்டில் வேலைக்காரனாய் சென்றவன் பத்து வருடங்களில், அந்த தொழில்களின் நெளிவு சுழிவுகளை கற்றுக்கொண்டான்.ஒரு நாள் அவனை அழைத்த முதலாளியின் மகன் எனக்கு நல்லா தெரிஞ்ச டைரக்டர் ஒருத்தர் இருக்காரு அவருகிட்ட உன்னை அசிஸ்டெண்டா சேர்த்து விடுறேன், பொழச்சுக்கோ, என்று சொல்லி, அந்த டைரக்டரிடம் இவன் எங்க ஊர்ருக்காரன், இனி உங்க புள்ளை மாதிரி பார்த்துக்குங்க. சொல்லி வழி அனுப்பினான். இவன் “அன்று முதலாளியின் மனைவி தெய்வமாய் வந்து அம்மாவுக்கும் வாழ்வு கொடுத்த்ததை நினைத்து பார்த்தவன்” இன்று அந்தம்மாளின் வாரிசு எனக்கு வழி காட்டியிருக்கிறது. விடை பெற்றவன் கண்களில் கண்ணீர்.

பொங்கிய கண்ணீரை தன் இடது கையை சட்டை பாக்கெட்டுக்குள் விட்டு கை குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்துக்கொண்டார் டைரக்டர் கதிரவன், தன் கடந்த காலங்களை நினைத்து. 

தொடர்புடைய சிறுகதைகள்
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஒரு பிரபலமான நிறுவனத்தை நடத்தி வரும் பரமசிவம், அமெரிக்காவில் இருந்து சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும். அவரை வரவேற்க அவரது கம்பெனி இந்திய நிர்வாகிகள்,மூவர் நவ நாகரிக உடையணிந்து வரவேற்றனர்..”வெல்கம் சார்” என்று கை குலுக்கிய மூவருக்கும் நன்றி ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் அடர்ந்த கானகத்தை ஒட்டி ஒரு குடியானவன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடியானவனுக்கு குருவாயூரப்பன்,என்ற பையன் மற்றும் மனைவியும் இருந்தனர். தினமும் அந்த குடியானவன் அடர்ந்த கானகத்துக்குள் சென்று காய்ந்த மரங்களை வெட்டி விறகுகளாக்கி கொண்டு வந்து ஊருக்குள் ...
மேலும் கதையை படிக்க...
என் பையனை அடிச்சவன் நல்லாவே இருக்க மாட்டான், நாசமாத்தான் போவான். அந்த பெண்ணின் கையை பிடித்து அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார் அவள் கணவர். பேசாம இரு, அதான் வக்கீல் நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டாருல்லை, அவங்க இரண்டு பேரும் என்னமா அடிச்சு போட்டிருக்காங்க என் பையனை.அவகிட்ட இவன் போனான்னா ...
மேலும் கதையை படிக்க...
இரவு பத்து மணி இருக்கும், கடைசி வேலைக்காரனும் விடைபெற்று சென்று விட்டான், வாசலில் ஒரு கூர்க்கா மட்டுமே நின்று கொண்டிருந்தான், பங்களாவில் புகழ் பெற்றஅறிவியல் விஞ்ஞானி மாதவன் தூங்குவதற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது மணிஏறக்குறைய பதினொன்று இருக்கலாம், போன் மணி அடித்தது, அதை ...
மேலும் கதையை படிக்க...
விடியற் காலை நான்கு மணிக்கு வேண்டா வெறுப்பாய் எழுந்தவன் வாக்கிங்க் போய்த்தான் ஆக வேண்டுமா, என்று யோசித்தேன். ஐம்பதை தாண்டி விட்டாலே வர தயாராய் இருக்கும் சுகர், பி.பி போன்ற வியாதிகளை நினைத்து வாக்கிங் கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன்.யாருடைய தூக்கத்தையும் கெடுக்காமல் ...
மேலும் கதையை படிக்க...
தந்தை பட்ட கடன்
புதிய வனம் உருவானது
சிலர் இப்படியும் காப்பாற்றுவார்கள்
கடத்தல்
உழைப்பில் இத்தனை பலனா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)