டேஸ்ட் – ஒரு பக்க கதை

 

பக்கத்து வீட்டுக்கு போய்த் திரும்பிய தன் மனைவி உமாவை கவனித்தான் தினேஷ்.

போகும்போது துள்ளலுடன் போனவள் இப்போ வரும்போது தலையை தொங்க போட்டு கொண்டு ஏன் வருகிறாள்?

உமா உனக்கு என்ன ஆச்சு! போறப்போ சந்தோசமா போனே இப்ப ஏன் இப்படி வர்ற?

நம்ம வீட்ல வேலை பார்த்த பொன்னம்மாவை அவ சமையல் சரியில்லைன்னு போக சொல்லிட்டோம்ல

ஆமா அதுக்கென்ன?

பக்கத்து வீட்டு கீதா ஒரு சமையல்காரி வேணும்னு சொன்னா அந்த பொன்னம்மாவை அங்க அனுப்பி அவஸ்தைபட வைப்போம்னு நினைச்சேன்.

பொன்னம்மாவை அவங்க வீட்டு சமையல் வேலையில் மாட்டி வச்சேன். அவ சமையல்லே அந்த கீதா என்ன பாடு படுறான்னு பாக்கத்தான் போனேன். ஆனா அந்த பொன்னம்மா சமையல் சூப்பரா இருக்குன்னு எனக்கு தேங்க்ஸ் சொல்றா. அது தான் எனக்கு புரியலே வாட்டத்துடன் சொன்னாள் உமா.

தினேஷ் புரிதலுடன் சொன்னான்.

உமா உனக்கு பிடிக்கிற சேலை அவளுக்கு பிடிக்காது. ஒவ்வொருத்தர் டேஸ்டும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

நம்ம வீட்லே பொன்னம்மா சமையல் எடுபடவே அவங்களுக்கு அவ சமையல் புடிச்சு போச்சு. உன் திட்டம் பலிக்கலே!

மறு பேச்சு பேசாமல் உள்ளே சென்றாள் உமா.

- கு.அருணாசலம் (செப்டம்பர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
''கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே 'மேரா நாம் ஜோக்கர்’... அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. 'ஆவாரா’வும் அவன் கததான்!'' - சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீர் எனப் பாதியில் இருந்து பேசத் துவங்குவார். அதற்கு ...
மேலும் கதையை படிக்க...
விடியக் காலமை கோச்சியிலே அண்ணன் ஊருக்கு வந்திருந்தான். போன மாசம்தான் வந்தவன்.. நேற்றுப் போலிருக்கு! திரும்பவும் வந்துவிட்டான். இந்தப் பக்கம் சீனவெடிச் சத்தம் கேட்டாலே அங்கெல்லாம் கலகம் வெடிக்கிறதாம்!'என்னடா தம்பி சொல்லாமல் பறையாமல் வந்து நிக்கிறாய்.. அங்காலை ஏதாவது வில்லங்கமோ?”'சும்மாதான் வந்தனான்!” ...
மேலும் கதையை படிக்க...
தகப்பன்சாமி
படுக்கையில் படுத்திருந்த ஹேமா, அறைக்குள், சரத் நுழைவதை பார்த்து, எழுந்து உட்கார்ந்தாள். கையோடு கொண்டு வந்த பார்சலை பிரித்தவன், அந்த நகை பெட்டியை ஹேமாவிடம் கொடுத்தான். அதில், ஒரு ஜோடி தங்க கம்மல், வெள்ளைக்கல், பச்சைக்கல் பதிக்கப்பட்டு, அழகாக காட்சி அளித்தது. ""ரொம்ப நல்லா ...
மேலும் கதையை படிக்க...
டேய் செல்லம். இந்தப் பழத்தைக் கொண்டு போய் பாட்டிகிட்டே கொடுத்திட்டு வந்திடுப்பா’ வீட்டுக்குள் வரும்போதே மகனை விரட்டினார் பத்மநாபன் நுழையறதுக்கு முன்னாடியே அம்மா ஞாபகம் வந்திடுச்சா? குழந்தையை இந்த விரட்டு விரட்டுறீங்க? சிடு சிடுத்த கெஜலட்சுமியிடம் மற்றொரு பழ கவரை தந்த பத்மநான், ‘இத பாரு கெஜா…பெத்த ...
மேலும் கதையை படிக்க...
பூமிக்கு பச்சை ஆடை அணிந்தது போல், பச்சை பசேல் என இருக்கும் நெல் வயலில், சிதறி கிடக்கும் பயிர்களை உண்ணும் பறவைகளின் சத்தம், நடக்கும் ஓரமெல்லாம் தென்னை மரத்தின் நிழல், அதனுடன் கூடிய குளிர்ந்த காற்று வீச, ரமேஷ் தர்மனின் வீட்டை ...
மேலும் கதையை படிக்க...
சஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்
தொங்கல்
தகப்பன்சாமி
சுயநலம் – ஒரு பக்க கதை
மண்வாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)