டுபுடுபு மோட்டார்…

 

தோனியது.கிளம்பிவிட்டேன்.அதிகாலை நான்கு மணிக்கு வந்துவிட்ட விழிப்பு அப்படியானதொரு எண்ணத்தையோ, அதற்கான சூழலையோ உருவாக்கியிருக்கவில்லை. ஆனாலுமாய் கிளம்பிவிடுகிறேன். கொஞ்சம் மனத்தயக்கத்திற்கு பிறகு இந்நேரம் தாத்தா டீக்கடை திறந்திருக்க வாய்ப்பில்லை, ஆகவே செல்வோம் இன்னும் சிறிது வேளை கழித்து.

இப்பொழுது எழுவதா இல்லை அப்படியே படுக்கையில் கிடப்பதா?

இருள் சூழ்ந்திருந்த வீடும், ஜன்னல் கிராதிகளின் வழியாய் வெளியிலிருந்து வந்த வெளிச்சமும், சுவரில் பதிந்து உருவம் காட்டுவதாய் கம்பி போட்ட ஜன்னல் இல்லை அது,மாறாக கம்பியை வளைத்து டிசைன் தரித்து பூக்கள் பூக்க செய்திருந்த ஒன்றாக அடர்பச்சையும், வெள்ளை நிறமுமே அந்தக் கம்பிக்களுக்கு அடிக்க ஏற்றது என்கிற பெயிண்டிங் விதிகளை மாற்றி முதன் முதலாக கறுப்புக் கலரும், அரை வெள்ளையுமாய் அடித்துக் கொடுத்தார் பெயிண்டர் மிக்கேல். பார்த்த மாத்திரமே பளிச்சென சிரித்து தன் முதல் பேச்சிலேயே மன தை கழட்டி வைத்து விடுகிற மனிதர்.

நான்கு மணி இந்நேரம் கொஞ்சம் நேரத்தைக்கூட்டிக் காட்டியிருக் கலாம். சிறியதும், பெரியது மாய் இருக்கிற முட்களின் கூட்டுபிணை ப்பில் காட்டிச் செல்கிற நேரம் எவ்வளவு என சரியாக தெரியா விட்டாலும்கூட இந்நேரம் மணி4.30 அல்லது5.00ஐ எட்டித்தொட்டிருக் கலாம் என்கிற நினைப்பில் எழுந்து லைட் டை ப் போட்ட சமயம் கடிகாரம் சொல்லிச்சென்ற மணி 4.25.

அலைபாய்ந்த எண்ணங்கள் நிறைந்து அவிழ்ந்து கிடந்த மனதை அள்ளி முடிய பிரியமில்லாமல்அப்படியேவிட்டவாறுமென் நடை பயின்று முகம் கழுவச்செல்கிறான்.முகம் என்றால் முகம் மட்டுமே கழுவுவது அவனது அகராதியில் இல்லை.கை,கால்,உடல் என ஒரு மினி காக்காய் குளிப்பாகவே இருக்கிறது அவனது முகம் கழுவல் கையில் தட்டிய ரோமக்கற்றைகள் இன்று ஷேவிங் செய்து விட வேண்டும் கண்டிப்பாக எனச் சொல்லிச்செல்கிறது .மனம்சொன்ன செய்திக்கு செவிமடுக் காமல்எப்படிவிடமுடியும்அலட்சியமாக கழற்றிய செவியின் உட்புலன்களை கோரிக்கைக்குக் கொடுத்து விட்டு உடல் துடைத்த வேளை விழிப்படலம் பட்ட துண்டின் கோடுகளும், கட்டங்களும் இப்படி ஒரு டிசைனில் சட்டை இருந்தால் நன்றாக இருக்கும் என்றது.

விளைவித்தவரும்,நூற்றவரும்,பாவு முக்கியவரும், சாயம் கலந்த வரும்,தறி நெய்தவருமாய் ஒரு நிமிடம் தெரிந்து மறைந்தார்கள் துண்டில் அலுவலக ட்ரெய்னிங் நிமித்தமாய் ஒரு முறை கோயம்புத்தூர் சென் றிந்த போது எடுத்து வந்த மஞ்சளும்,சிவப்புமாய் கட்டம் கட்டிய துணி மிகவும் நன்றாக இருந்தது.அதில் தைத்த சட்டையை ஒரு வரு டம் போட்டிருந்தான் .வருடத்தின் முடிவில் கொடியில் தொங்கப் போட்டிருந்த துணியை எலி கடித்துப் போட்டுவிட அன்றிலிருந்து போட விடுபட்டுப்போன கட்டம் போட்ட சட்டை யை இன்றுவரை போடமுடியவில்லை.அது ஏன் எனவும்இன்றுவரை இவனுக் குத் தெரியவில்லை. தெரியவில்லை.ஒரு வேளை அப்படித்துணிகள் ஏதும் கிடைக்கவில்லையா அல்லது இவனது தேடல் குறைந்து போனதா தெரியவி ல்லை.

இப்பொழுது பையப்பைய வருகிறது,நேற்று இரு சக்கரவாகனத்தில் இவன் சென்று கொண்டிருந்த வேளை எதிரே வந்த கல்லூரி பேரா சிரியர் பெரிது பெரிதாய் கட்டம் கட்டம் கட்டப் பட்டிருந்த சட்டையை அணிந்து இன் பண்ணியிருந்தார்.பச்சைக்கலரில் ஓடிய தடிமனான கோடுகளும்,அரை வெள் ளையிலுமாய் இருந்த சட்டையும்,பிரவ்ன் கலருமாய்இருந்தஃபேண்டும்பார்க்கநன்றாகவேஇருந்தது.பிராண்டட் போலிருக்கிறது.எப்படியும்1500ரூபாய்க்கு குறையாமல்இருக்கலாம். இவனானால் அந்த விலையில் இரண்டு ஜோடிகள் எடுத்திருப்பான். சரிதான் அவரால் அப்படி யோசிக்க முடிகிறது, இவ னால் இப்படி யோசிக்க முடிகிறது.

கட்டியிருக்கிறகட்டங்களும்,ஓடுகிறகோடுகளுமாய்சொல்லிச் செல் கிறவிஷயங்களும்நிர்ணயிப்புகளும்நிறையவே அப்படியானநிறை யானவை களை சுமந்து கொண்டு டீ சாப்பிட்டு விட்டு,பாத்ரூம் பல் துலக்கல், குளியல் ,,,,,,,,,என்கிற படிமங்களை முடித்த வேலை மணி ஆறரை ஆகி விட்டது.

ஆறு மணிக்குள்ளாக வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என நினை த்தவன் இப்பொழுது ஆற ரையின் வாசலின் கால்வைத்தவனாய் இலக்கற்ற பயணங்கள் மனம் தொடுபவையாகவே/எங்கும் போக வேண்டிய வேலை ஏதும் இருந்திருக்கவில்லை இவனுக்கு அந்த அதிகாலைப்பொழுதில். அரவங்கள் அவ்வளவாய் இல்லாத காலைப் பொழுதில் அப்படியே ஒரு ரவுண்ட் சென்று வந்தால் மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருக்கும் என்கிற நினைவில் இவன் சென்ற வழி மேம்பாலத்தின் மேலாய் இருந்தது. சுத்தமான காற்றும் சுகந்தமான வாசமும் வீசிய காலை வேலையில் அடுத்தடுத்தாய் கடந்த இரண்டு டவுன் பஸ்களும்,இரண்டு லாரிகளும் எவ்வளவு பேரை வைத்துக்கொண்டும், எவ்வளவுமூடைகளைஅடைத்துக்கொண் டும் இவ்வளவு வேகம் காட்டுகிறது எனத்தெரியவில்லை.

பாலத்தின் இறக்கத்தில் வலது புறமாய் செல்கிற சாலையில் கடைசியில் இடமும்,வலமுமாய் மாறி,மாறி காணப்படுகிற மூன்று மில்களுக்கு மூடை சுமந்து கொண்டு போகிறது போலும் லாரிகள். ஊர்ந்து விரைகிற பஸ்கள் கிராமங்களின் வழித்தடங்கள் நோக்கி இன்னும் சிறிது நேரத்தில் உழைப்பின் அடையாளம் சுமந்த மனித ர்கள் அதே டவுன் பஸ்ஸில் வந்து மூன்று மில்களுக்குமாய் வேலைக்குச் செல்வார்கள். ஜேம்ஸ்தோழர்கடைஇல்லை, தங்கப் பாண்டித் தோழர்கடையில் தேநீர் அருந்திக் கொண்டே குமாருக்கு போன் செய்கிறான் கண்ணில்பட்டபருப்பு வடைகளையும், உளுந்தவடைக ளையும் பார்த்தவாறே,

”இன்றையபொழுதின் ஆரம்பத்தில் நம்காலை நேரசந்திப்பு நிகழட்டு ம். நின்று கொண்டிருக்கிறேன் தோழர் தங்கப்பாண்டி கடையில். உங்களது சந்திப்பு வேண்டியும் டீ சாப்பிடவுமாய்” எனச்சொல்லிய வார்த்தைகளும், முளைவிட்ட ரு ம்பிய ஆசையும் எதிர் முனையில் எடுக்கப் படாத போனின் பேச்சற்றலில் கரைந்து போகிறது.

குமார் இல்லையா அல்லது இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில் லையா? கண்ணனுக்குப் பேசினான்.பெரிதாக ஒன்றுமில்லை நண்பரே இப்பக்கம் வந்தேன், கண்ணுக்குள் அரித்தது. வரலாமா உங்களைப் பார்க்க,,,,,?என வார்த்தையில் வரைந்த மனுவை அனுப்பிவிட்டு கிளம்புகிறான் கண்ணன் இருக்கும் திசை நோக்கியும்,கண்ணனை சந்திக்கவுமாய் இவன் வீட்டிலிருந்து கிளம்புகிற வேளை இப்படியெல்லாமுமாக நினைத் திருக்கவில்லை.வாய்ப்பிருந்தால் சந்தித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணம் மேலோங்க சென்றதுதான்.

இலக்கிலாமல் பயணிப்பதும்,பின் நண்பர்களிடம் பேசுவதும் அவர்களை சந்திக்கச் செல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது. 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த நேரத்தில் அவளை அங்கு வைத்துப பார்ப்போமென எதிர்பார்த்திருக்கவில்லைதான். மென் பனி பொழிந்த முன் மாலைப்பொழுது, இன்று பனியின் தாக்கம் சற்று கூடுதலாகவே தெரிந்தது, அழுத்திய உடல் சோர்வை விடவும் பசியும்,ஒண்ணுக்கும் நெருக்கிக்கொண்டு வந்தது, இதில்பசியைதாங்கிக்கொள்ளலாம்,முட்டிக்கொண்டுவருகிறஒண்ணுக்கை என்ன செய்து எங்கிட்டுக்கொண்டு போய் தள்ளுவது எனத்தெரியவில் லை, தள்ள ...
மேலும் கதையை படிக்க...
கருத்து நீண்டு கிடக்கிறது சாலை,எட்டிப்பிடிக்கநினைத்தயாரோ முடியாமல் போனதனால் அப்படியே விட்டுவிட்டதைப்போல/ கண்ணுக் கெட்டிய தூரம் வரையாய் நீண்டுவளைந்து நெளிந்திரு ந்த கறுப்பு பார்ப்பதற்குஅழகாகவே இருந்தது.ஒருமுனையை பிடித்துத்தூக்கினால் மறு முனை எழுந்து நிற்கும் போலானதொரு தோற்றம். எதுநன்றாக இருக்கிறதோ அது நன்றாகவே இருக்கட்டும்,எது நன்றாக இல்லையோ ...
மேலும் கதையை படிக்க...
இது போலான பண்டங்களை இது போலான ஊரில் வாங்கினால்தான் உண்டு. ஆமாம் அதற்கென தனி ஊருக்குத்தேடிப்போய்வாங்கு என்கிறான் நண்பன், இருக்காதாபின்னே,,?இப்படியானதை வாங்க அப்படித்தானே போக வேண்டியிருக் கிறது பஸ் ஏறியோ,அல்லது இரு சக்கர வாகனம் கொண்டோ/ இரண்டு,அறுபது போடவேண்டும்என்றார்கடைசியாய் இரு சக்கரவாகனத்தை சர்வீஸ்பார்த்தஒர்க்ஷாப்க்காரர், அதற்கர்த்தம் இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான். பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு விடுகிறது. கொட்டாவி விடுதலுடனும்,உடல் முறுக்கிய தூக்கக் கலக்கத்துடனுமாய் படிக்கிறான் படிக்கிறான், உடல் அலுக்கும் வரை படிக்கிறான், எழுதுகிறான் கை வலிக்கும் வரை ...
மேலும் கதையை படிக்க...
கசக்கி சிறியதாய் உருட்டி எறியப்பட்ட பேப்பருக்கு இப்படி பயந்து போயோ அல்லது பயந்து போனது போல் அஞ்சி தலை குனியாவிட்டால்தான் என்ன அல்லது லேசாக கழுத்தை அப்படி ஒடித்துச் சாய்த்து கோபமாகவும் ஒயிலாகவும் பார்க்கா விட்டால்தான் என்ன இப்பொழுது எனக் கேட்கத் ...
மேலும் கதையை படிக்க...
சிலந்தி வலை தட்டான்கள்…
ஐஸ்க்குச்சி…
பால்பன்
கொட்டாவி,,,
மனக்கத்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)