“மாலா, நாளையிலிருந்து சாயந்திரம் 4 மணிக்கு பேத்தி ஆர்த்தியை டியூஷனுக்குக் கூட்டிப் போகணும். டியூஷன் முடிந்ததும் மறுபடியும் கூட்டி வரணும் என்ன?’ என்றாள் மல்லிகா.
“சரிம்மா. யாரும்மா டியூஷன் எடுக்கறாங்க. நல்லா சொல்லித் தருவாங்களா?’ என்றாள் வேலைக்காரி.
“ஏன் உன் பேத்தியையும் அங்கே சேர்க்கலாம்னு நினைக்கிறயா?’
“ஏம்மா, அங்கே என் பேத்தியைச் சேர்க்கக் கூடாதா?’
“அங்கே படிக்கிற பசங்கெல்லாம், பணக்கார வீட்டுப் பசங்க. மாதம் 7400 சம்பளம் தரணும். உன் மாதிரி வேலைக்காரி வீட்டுப் பசங்க அங்கே எப்படிச் சேர முடியும்?’ கர்வத்துடன் கேட்டாள் மல்லிகா.
“அம்மா, டியூஷன் சொல்லித்தர்ற வாத்தியாரம்மா பேர் என்ன?’
“ஏன், பெயரைத் தெரிந்து என்ன செய்யப் போறே? பக்கத்துத் தெருவிலே… விமலான்னு பேரு. போதுமா? இல்லை இன்னும் ஏதாவது கேட்கணுமா?’ நக்கலாகக் கேட்டாள்.
“அம்மா அந்த விமலா என் பொண்ணுதான்’ என எப்படிச் சொல்வாள் மாலா.
- கஞ்சநாயக்கன்பட்டி மணியன் (நவம்பர் 2011)
தொடர்புடைய சிறுகதைகள்
” பிம்மாலையில பனி ஜாஸ்தி விழும். தலையில எதையாவது கட்டிக்கோடா கடங்காரா ” என்று பாட்டி அக்கறை கலந்து திட்டும் காலம் தையும் மாசியும். பாட்டி ” பிம்மாலை ” என்பதை இரவைக் குறிப்பிடும்போதும் சொல்வாள். சிற்றஞ்சிறுகாலையைக் குறித்தும் சொல்வாள். நாம்தான் ...
மேலும் கதையை படிக்க...
1.
என் பெயர் நிலாக்குட்டி.ஆறாம் வகுப்பில் படிக்கிறேன். என்னுடன் படிக்கும் செல்வராஜின் அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். தினமும் செல்வராஜை சைக்கிளில் கூட்டிக்கொண்டு வந்து பள்ளியில் விட்டுச்செல்வார். நளினியின் அப்பாவுக்கு அழகே அவரது மீசைதான்.
கருகருவென்று அடர்த்தியாக இருக்கும் அந்த மீசையை பார்த்தால் ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் இருந்த அழகிய இரு இணைக் காலணிகள் அவனுக்கு ஆச்சரிய கலந்த ஆனந்ததைத் தந்தன. நிச்சயம் பொன்னி அக்காவந்திருக்க வேண்டும்.அவன் விருட்டென்று வீட்டினுள் நுழைந்து கூடத்திற்கு பக்கத்தில் இருந்த அறையை எட்டி பார்க்கையில் அவனது கணிப்பு பொய்த்துவிட வில்லை.
பொன்னி அக்கா ஒருகழித்து ...
மேலும் கதையை படிக்க...
நந்தினி எதற்கெடுத்தாலும் சிடுசிடு வென்றிருந்தாள்.
வெளியே அழைத்துச் சென்றாலும் அதே சிடுசிடு. படுக்கையிலும் அதே.
புரிந்தது. தனிக்குடித்தனத்திற்கு. …
“அம்மா நாங்க வேற வீடு பார்த்துக்கறம்’ என்றான் அம்மாவிடம்.
“ஒரு தந்திரம் பண்ணியிருக்கேம்மா. நான் வீடு பார்த்திருக்கற ஏரியாவில் எப்பவும் கொலை, கொள்ளை நடக்கற இடம், வீட்ல ...
மேலும் கதையை படிக்க...
"புத் என்ற நரகத்திலிருந்து பெற்றவனை விடுவிப்பவன், "புத்திரன்!' பதிமூன்று நாள் நித்யவிதி செய்து, நீ, அவரைக் கரையேற்றி விட்டாய்...' ராமு சாஸ்திரிகள் அப்பாவின், 13ம் நாள் காரியத்தன்று ஆவேசம் வந்தது போல் சொன்ன வார்த்தைகள்... அப்பா பற்றி நினைக்கும் போதெல்லாம், முந்திக் ...
மேலும் கதையை படிக்க...
கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்