இரவு பத்து மணி. கட்டிலுக்கு வந்த மகேசுக்குள் மகிழ்ச்சித் துள்ளல். காரணம் இன்றைக்குத் தாம்பத்திய நாள்.
கணவன் மனைவி மாதச் சம்பளக்காரர்கள், அலுவலக உழைப்பாளிகள் என்றாலே தாம்பத்தியத்தில்கூட கட்டுப்பாடு என்பது காலத்தின் கோலம்.
என்னதான் ஆண் பெண்ணுக்கு உதவி ஒத்தாசை அனுசரணையாக இருந்தாலும் காலை…சமையல் சாப்பாடு என்று எட்டுமணிவரை எதையும் சிந்திக்க முடியாத வேலை. அடுத்து குளித்து முடித்து அள்ளிச் சொருகி அவசர அவசரமாய் விழுங்கி பேருந்து பிடித்து அலுவலகம் சேரல். அங்கே வேலை. அற்புறம் மாலை பேருந்தில் கசங்கி வீட்டில் வந்து வேலை அடுத்து கணவன் மனைவி என்பது தினம் நடைமுறைப் படுத்த முடியாத விசயம். ஏன் இருவருக்கும் உடலும் மனமுமே ஒத்துழைக்க முடியாத காரியம். அதனால் விடுமுறை கொண்டாட்டமான ஞாயிற்றுக் கிழமையில் இதையும் கொண்டாட வேண்டிய கட்டாயம்.
காலை துணிமணி துவைத்தல், மதியம் சைவமோ அசைவமோ சூடான சாப்பாடு. மாலை….பூங்கா, கடற்கரை, சினிமா, இரவு ஓட்டல் இறுதியாய் தாம்பத்தியம் என்பதுதான் இவர்கள் அட்டவணை.
அதனால் மகேசுக்கு ஞாயிறு விடிந்தாலே இனிப்பு. இரவு வந்தால் துடிப்பு.
வீட்டு வேலை முடித்து வந்து படுத்த மனைவியை மெல்ல தொட்டான்.
”வேணாங்க….” சித்ரா மெல்ல அவன் கையை விலக்கினாள்.
”ஏன் ?” திடுக்கிட்டான்.
”இன்னைக்குப் பக்கத்துத் தெருவுல அகால மரணம் சாவுக்குப் போய் வந்தது மனசுலேயே இருக்கு. மனசு சரி இல்லே, ஒத்துழைக்கலே.!” மென்iமையாச் சொன்னாள்.
மனைவியின் மனசு புரிய…மகேசுக்குள்ளும் கனம் ஏறி களிப்பு குறைய நகர்ந்து படுத்தான்.
தொடர்புடைய சிறுகதைகள்
இருளும் ஒளியும் கலந்த மசக்கையான நேரம். பக்கத்து வீட்டில் ஏதோ கரைச்சல்.
சோமசுந்தரம் மிராசு, அவரின் கூலி ஆள் சங்கன், மிராசுவின் மனைவி செண்பகம்.... என்று குரல்கள் மாறி மாறி கேட்டது.
கொஞ்ச நேரத்தில் சோமசுந்தரத்தின் மகன் ராமு என் வீட்டிற்குள் நுழைந்தான்.
படித்துக்கொண்டிருந்த என்னிடம் ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரைக்குக் காற்று வாங்கச் சென்ற அலமேலு இடியை வாங்கிக் கொண்டு திரும்பி வந்து சோபாவில் அமர்ந்தாள்.
சேகரும் திவ்யாவும் நெருங்கி அமர்ந்து சுண்டல் தின்று மகிழ்ச்சியாக இருந்த காட்சி அவளால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இடியின் உறுத்தலாய் இன்னும் மனதை ...
மேலும் கதையை படிக்க...
"அந்த சின்னப் பையன் கடிதம் கொண்டு வரும்போது வீட்டுல அண்ணா, அண்ணி, சந்துரு இருந்தான். பொடியன் எசகுபிசகா யார்கிட்டேயாவது கொடுத்துடப் போறானோன்னு எனக்கு உள்ளுக்குள் திக் திக் பயம். இப்படியாப் பண்றது...?" அனுஷா சொல்ல....
கேட்ட கலியுகனுக்குள் ,முகத்தில் கலவரம் படர்ந்தது. பயத்துடன் ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகம் வந்து இறங்கிய அரை நேரத்தில் மேசை மேல் இருந்த கைபேசி ஒலிக்க..... 'வைஷ்ணவி' என்கிறப் பெயரைப் பார்த்து, 'இம்சை!' என்று மனசுக்குள் அழுது, வலியுடன் அணைத்து நகர்த்தி வேலையைத் தொடர கணணியில் முகம் பதித்தான்; சிவாஷ்.
வைஷ்ணவி! பத்து நாட்களுக்கு முன்வரை ...
மேலும் கதையை படிக்க...
பத்தடி தூரத்தில் வரும்போதே....குடிசை வாசலில் துவண்டு உட்கார்ந்திருந்த நான்கு வயது பிள்ளையைப் பார்த்ததும் செல்லாயிக்கு நெஞ்சு திக்கென்றது.
எட்டி நடை போட்டு அருகில் சென்றாள்.
"அம்மா ! பசிக்குது !..." அருண் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுதான்
இவளுக்குப் பெற்ற வயிறு பிய்த்துக்கொண்டு போனது.
சித்தாள் வேலைக்குச் ...
மேலும் கதையை படிக்க...
வீட்டில் நுழைந்த மகளைப் பார்த்த தாய் லைலாவிற்கு ஆத்திரம், ஆவேசம்.
"ஏய் நில்லுடி. ! ‘’ நாற்காலியை விட்டு எழுந்து நின்று அதட்டல் போட்டாள்.
நின்றாள் கல்லூரி மாணவி மீரா.
"எத்தனை நாளாய் நடக்குது இந்தக் கூத்து..? "வெடித்தாள்.
"எது...? "மீரா தாய் அதட்டல் உருட்டலுக்கு அதிராமல் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு இருபது ரூபாய் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது.
கடையில் கணக்குத் தவறி அதிகமாகக் கொடுத்த போதே அதைத் திருப்பி இருக்க வேண்டும்.
'சரி இருக்கட்டும்!' என்று கொஞ்சம் சபலப்பட்டு இரண்டடி எடுத்து வைத்தது தவறாகப் போய்விட்டது.
"ஏமாந்து கொடுத்தான் என்பதற்காக ஏமாற்றுவது சரியா..?" உடனே உள் ...
மேலும் கதையை படிக்க...
காலை மணி 10.00. அந்த நகரத்தின் பிரதான அஞ்சல் அலுவலகம் ரொம்ப சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
அழுக்கு வேட்டி சட்டை, தோளில் துண்டு. ஐம்பது வயது பெரியவர் கையில் உள் நாட்டு கடிதத்துடன் படி ஏறி சுற்றும் முற்றும் பார்த்தார் எல்லா கௌண்டர்களிலும் மக்கள் ...
மேலும் கதையை படிக்க...
கொஞ்சம் அதிகமாகவே உடல் இளைத்து , நோஞ்சானாய்... நடக்கவே தெம்பில்லாமல் தளர்வாய் செல்லும் நண்பனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி.
நான் ஒரு மாத காலமாக ஊரில் இல்லை. அலுவலக வேலையாய் வெளியூர் பயணம்.
' என்னாச்சு இவனுக்கு...? உடல் நிலை சரி இல்லாமல் , ...
மேலும் கதையை படிக்க...
மீனுக்குட்டி எலிகளைக் கடித்துக் குதறிவிட்டு தன் காலால் வாயைத் துடைக்கும் அழகே தனி. புலி, சிங்கம் கெட்டது. !
வீட்டு வளர்ப்பு விலங்குகளில் நாயும் பூனையும் தனித்தனி ரகம். நாய் மனித விசுவாசி. வளர்ப்பவர் எங்கு சென்றாலும் பின்னாலேயே வரும். பூனை அப்படி ...
மேலும் கதையை படிக்க...
ஒரு உண்மைக் காதலும் உதவாக்கரை தோசமும்…
துக்கமே செத்துப் போச்சு..!
பழக்கம்..! – ஒரு பக்க கதை