ஜூனோ – ஒரு பக்க கதை

 

நான்கு காலில் நடந்த அந்த வித்யாசமான ஜீவராசி, இரண்டு கால்களில் நேராக நடந்த மனிதன் ஒருவனை இடுப்பில் சங்கிலி போட்டு இழுத்துக் கொண்டு சென்றது.

போய்க் கொண்டிருக்கும் போது, அதனுடைய நண்பன் அந்த ஜீவனைக் கேட்டது “எங்கடா இந்த மனிதனைக் கொண்டு போற?’

“வீட்டுக்குப் பாதுகாப்பா, நமக்கு ஒரு பொழுதுபோக்கா இருக்கட்டுமேன்னு, பூமியில இருந்து புடிச்சுட்டு வந்து வளர்க்கிறேன்! இப்ப என்னடான்னா பக்கத்து வீட்டுல
வளர்க்கிற பொம்பனை மனுஷியைப் பார்த்து வயலண்ட்டாகுது! ஒரே சத்தம்! அதனால் கொண்டு போய் “ஆண்மை நீக்கம்’ செய்து கொண்டுவர அழைச்சிட்டுப்
போறேன்’ என்றது அந்த ஜீவன்.

“சரி போயிட்டு வா! இதோட பேர் என்ன?’

“மதன்னு பூமியில கூப்பிட்டாங்க!’

கட்டிலில் இருந்து உருண்டு விழுந்தான் மதன். “அப்பப்பா! என்ன பயங்கரக் கனவு!’ மனதிற்குள் எண்ணியபடியே, மறுபடியும் தூங்க ஆரம்பித்தான் மதன்.

காலையில் எழுந்ததும் மனைவி ராஜி கேட்டாள். “ஏங்க, நம்ம ஜுனோவுக்கு கு.க. ஆபரேஷன் பண்ண டாக்டர் கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கினீங்களே, கூட்டிட்டுப் போகலையா?’

“பாவம்டி அது! இயற்கைக்கு எதிரா அதுக்கு கு.க. பண்ணுறது தப்பு! அதோட இயல்பா அது வளரட்டும்!’ என்ற கணவனை கேள்விக்குறியாய் பார்த்தாள் ராஜி.

- வி.சகிதா முருகன் (பிப்ரவரி 1, 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
அத்தனை சப்தங்களையும் ஒரு சேர எங்கோ இனந் தெரியாததோர் இடத்தில் வைத்துக் கொண்டு அசப்தத்தின் ஒட்டு மொத்தக் குத்தகையில் அக்கிரமம் புரிந்து கொண்டிருந்தது ஒருவித அமானுஷ்யம்... திறந்த நீதிமன்றத்தில் அத்தனை கண்களும் தீர்ப்புக்காகக் காத்துக் கிடந்தன. நீதிமன்றம் என்றாலே வழமையாகவே குண்டூசி விழுந்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
மஞ்சுளாவிற்கு சாப்பிடுவதில் அதிக விருப்பம் இருந்தது. எதையாவது சாப்பிட்டபடியே இருந்ததால் அவள் பூசின உடல்வாகைக் கொண்டிருந்தாள். சிறுவயதில் அப்பாவோ அல்லது உறவினர்களோ வாங்கி வரும் பொட்டலங்களில் மற்றவர்களை விட தனக்கு கொஞ்சமாவது அதிகம் கிடைக்கும் படி பார்த்துக் கொள்வாள். வீட்டின் கடைசி ...
மேலும் கதையை படிக்க...
'மதுரை 20 கி.மீ'. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது. அல்லது வெறும் தோன்றலா தெரியவில்லை. 'மதுரையில எறங்கி ஊருக்குத் திரும்பப் போயிரலாமா' யோசித்தான். சட்டை பாக்கெட்டில் இருந்த காசை எடுத்து ...
மேலும் கதையை படிக்க...
வகுப்புத் தோழன் குண்டனை காலை - அந்தக் கோலத்தில் - கண்டதில் இருந்து நந்தனின் மனம் திக் திக் என்று இருந்தது. நந்தன் இதற்கு முன் தேங்காய் பாதியை கடித்து விட்டு தங்கச்சியை சாட்டி விடுவது , தான் வலிய அவளுக்கு அடித்து ...
மேலும் கதையை படிக்க...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் விடிகிறது. எப்போது வெளிக்கும் என்று வாசற்பக்கமே பார்த்துக்கொண்டு கிடப்பாள் அம்மா. சில இரவுகள் நேரத்தைக் கடத்திக்கொண்டு போவதுண்டு. நித்திரையின்றிப் புரள்வதைவிட எழுந்து உட்காரவேண்டும்போலிருக்கும். அல்லது ஹோலுக்குள்ளேயே இங்குமங்கும் நடக்கலாம். ஆனால், சாமத்தில் எழுந்து நடந்து திரிந்தால் மகன் ஏசுவான். “என்னம்மா ...
மேலும் கதையை படிக்க...
மன சாட்சி
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
செல்வம்
மான பங்கம்
உயிர்க்கசிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)