சோகம் தரும் படிப்பு

 

“பெரிசா உடம்புக்கு ஒன்னும் இல்ல… நான் கொடுக்குற மாத்திரைய நல்லா சாப்பிடுங்க… சீக்கிரம் குணமாகும்.”

அதிகாலை 5.30 மணியிருக்கும். ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தனர். காலையில் என்ன நடக்குமோ என்ற பதட்டம். என்ன முடிவு வருமோ என்ற அச்சம்.

“சாந்தி எழுந்திரு…. +2 ரிஸல்ட் இன்னைக்கு வருது… நீ பாட்டுக்கு தூங்கிட்டு இருக்க…” என்றான் சரவணன்.

டாக்டாராகி விட்ட கனவில் இருந்த சாந்தி, தன் கனவைக் கலைத்து நிகழ்காலத்தற்கு வந்தாள்.

“என்ன அ ண்ணா… எதுக்கு எழுப்பினிங்க…. நல்ல கனவு டாக்டராகி ஆப்ரெஷன் பண்ணுர மாதிரி கனவு… நல்ல கன வைகலச்சிட்டீங்க…” என்றாள் சாந்தி.

“சரி ராத்திரி படுத்தா அதே கனவு வ ர போகுது…. இன்னைக்கு +2 ரிஸல்ட் வருது…. உன் கனவு அடித்தளமே அந்த ரிஸல்ட்ல தான். பார்க்க போகலையா….” என்றான்.

“ஆமா… சீக்கிரமா கிள ம்பனும்….” என்று சொல்லி தன் வேலைய விரைவாக செய்யத் தொடங்கினாள் சாந்தி…

சாந்திக்கு ஒரே ஆ தரவு அவள் அண்ணன் சரவணன் தான். அவர்களுக்கு பெற்றோர் இல்லை. சரவணன் வேலை செய்து தன் தங்கையைப் படிக்க வைக்கிறான். தன் தங்கையை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதே சரவணனின் நீண்ட நாள் கனவு.

“அண்ணா நான் கிளம்பிறேன்… ரிஸல்ட் பார்க்க போகனும்…” என்றாள் சாந்தி.

“காலையில வெரும் வயதுல வெளியே போகக் கூடாது… சாப்பிட்டு போம்மா…” என்றான் சரவணன்.

“இல்லேண்ணா… ரிஸல்ட் பாரக்குற வரைக்கும் எனக்கு பசிக்காது!” என்று சொல்லிவிட்டு தன் தோழி வீட்டுக்கு செல்லத் தொடங்கினாள்.

“பார்த்து போம்மா…. நான் வேணும்னா கூட வரட்டா” என்று சரவணன் சொல்வதை தன் காதில் வாங்கிக் கொள்ளாமல் ரிஸல்ட் பார்க்கும் வேகத்தில் இருந்தாள்.

சாந்தி தேர்ச்சி பெற வேண்டும் என்று எல்லாக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டு இருந்தான் சரவணன்.

சாந்தி தன் தோழி மாலா வீட்டிற்கு செல்கிறாள்.

சாந்தி….ஏன் இவ்வளவு லேட்டு… உனக்காக எவ்வளவு நேரம் காத்து கிட்டு இருக்கிறது… என்றாள் மாலா.

“சாரி பா… கொஞ்சம் லேட் ஆயிடுச்சு… சரி வா போவோம்…” என்றாள் சாந்தி.

“அம்மா…. நான் சாந்தியோட ரிஸல்ட் பார்க்க போறேன்” என்று மாலா தன் அம்மாவிடம் சொல்லி சாந்தியுடன் சென்றாள். மாலா தன் பெற்றோர்க்கு ஒரே மகள் என்பதாள் மிகச் செல்லமாக வளர்ந்தாள்.

பேப்பர் கடையில் மாணவர்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டு இருந்தது. இன்டர்நெட் இணையதளமும் தேர்வு முடிவுகளை அறிவிக்க நேரமாகும் என்பதால் எல்லா மாணவர்களும் பேப்பர் நம்பியே இருந்தனர்.

சாந்தியின் தோழி ஒருத்தி பேப்பர் வாங்கி வ ர… எல்லோரும் அடித்துப்பிடித்து தங்கள் நம்பரை பார்க்கத் தொடங்கினார்கள்.

சாந்திக்கும், மாலாவுக்கும் அதிர்ச்சியான செய்தி காத்துக் கொண்டு இருந்தது. பேப்பரில் அவர்கள் இருவரையும் சேர்த்து மொத்தம் பதினைந்து நம்பர்கள் வரவில்லை. ஓ ர் இரு மாணவிகள் தவிர மற்ற மாணவிகள் அழுது கொண்டு இருந்தனர். பெற்றோர்கள் கன வ தொலைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் ஒவ்வொருவரும் தவித்தனர்.

சாந்தியாலும், மாலாவாலும் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாந்தி தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்தாள். அண்ணன் கனவு நம்மால் சிதைந்துவிட்டதே என்ற வருத்தம். நம் இறந்துவிட்டால் நம் அண்ணனுக்கு யார் துணை என்ற குழப்பம். தற்கொலை செய்து கொள்ள முடியாமல், வீட்டுக்குச் சென்று அண்ணனிடம் உண்மையைக் கூற முடியாத நிலமையில் சாந்தி இருந்தாள்.

குழப்பத்தில் இருந்த சாந்திக்கு மற்றொரு அதிர்ச்சி நிகழ்ச்சியைப் பார்த்தாள். மாலா தன் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மின்சாரத்தைத் தொட்டு தற்கொலை செய்து கொண்டாள். அழகிய உருவம் மின்சாரத்தால் கருகி போனது.

செய்தி கேட்டு மாலாவின் பெற்றோர்கள் விரைந்து ஓடிவந்தனர். மாலாவில் உடலை பிடித்து அவள் அழுது கொண்டு இருந்தார்கள். சாந்தி மாலாவின் பெற்றோர்கள் இருக்கும் இடத்தில் தன் அண்ணனை வைத்துப்பார்த்தாள். நாமும் இ ப்படிச் செய்து இருந்தால் நம் அண்ணன் எப்படி துடித்திருப்பார் என்று யோசித்தாள். இந்த தோல்வி சில நாளில் மாறிவிடும். நாம் இறந்து விட்டால் தன் இழப்பு … தன் அண்ணனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்று உ ண ர ஆரம்பித்தாள்.

தன் வீட்டுக்குச் சென்று நடந்ததை எல்லாம் சரவணனிடம் கூறினாள். சரவணன் சாந்திக்கு ஆ றுதல் கூறினான். ம று நாள் காலை செய்தித்தாளில் பதினைந்து மாணவிகள் நம்பர் அச்சடிக்கத் தவறியதை வருந்தி செய்தி வந்தது. சாந்தி பாஸாகிவிட்டாள் என்பதில் சரவணனுக்கு மகிழ்ச்சி. ஆனால், தான் பாஸாகிவிட்டோம் என்று தெரியாமல் தற்கொலை செய்துக் கொண்ட மாலாவின் உயிரை யார் தருவார்கள் ? என்று சாந்தி மாலாவுக்காக அழுது கொண்டு தான் இருந்தாள். ஒரு வெற்றி தோல்வியை மாற்றிவிட்டது. ஆனால் மரணத்தால் வரும் இழப்பை மாற்ற முடியவில்லை.

- குகன் [tmguhan@yahoo.co.in] (ஜனவரி 2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா..! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது. விமானத்திலிருந்து குதிக்க முடியுமா..? என்ன ஒரு மக்குத் தனமான எண்ணம் என்னுள்..! விமானம் ஏதாவதொரு நாட்டில் ...
மேலும் கதையை படிக்க...
நிலம்
கந்தசாமிக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலங்கள் எல்லாம் பயிர் செய்யப்படாமல் வெறும் கறம்பாகவே கிடந்தன. புதரும் மண்டிக் கிடந்தது. வரப்புகள் தெரியவில்லை. வாய்க்கால் தெரியவில்லை. ஒரு காலத்தில்- ஒரு காலத்தில் என்ன பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு - ...
மேலும் கதையை படிக்க...
எதிர் வீட்டிற்கு வேலையாய்ச் சென்ற மனைவி திரும்பி வரும்போது சுருசுருவென்று வந்தாள். ''உங்களுக்கு நல்ல இடம் பெரிய இடம் பார்த்துப் பழகத் தெரியாது.'' முணுமுணுத்து அருகில் அமர்ந்தாள். ''என்ன ?'' துணுக்குற்றேன். ''எதிர்வீடு.....எவ்வளவு தாய் புள்ளையாய்ப் பழகுறாங்க. அவுங்க மனசு வருத்தப்படுறாப்போல நடந்துக்குறீங்களே நியாயமா ?'' ...
மேலும் கதையை படிக்க...
விஷ்ணுவிற்கு தூக்கம் கலைந்த போது, சாந்தி புன் சிரிப்போடு கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டிருந்தாள்! அவளைப் பார்த்து சிரித்தவன் ஜன்னலுக்கு வெளியே சாரல் அடிப்பதை பார்த்து ரசிக்கிறான். மேசைமேல் கடிதம் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கிறது. சாந்தியைப் பார்த்துச் சொன்னான், வீட்டிலிருந்து கடிதம் ...
மேலும் கதையை படிக்க...
குழந்தைகள் இரண்டையும் டியூசனுக்கு அனுப்பிவிட்டு ஒரு முடிவுடன் கணவன் வருகைக்காக காத்திருந்தாள் சகுந்தலா. கதிர் அலுவலகம் விட்டு ஆறுமணிக்கு சரியாக வந்தான். உடை மாற்றி கைகால் முகம் கழுவி வந்தவனுக்கு டிபன் காபி கொடுத்து உபசரித்தவள் ‘‘என்னங்க ஒரு விசயம்!‘‘ நெருங்கி அமர்ந்தாள். ‘‘சொல்லு ...
மேலும் கதையை படிக்க...
சொல்லிச் சென்றவள்!
நிலம்
பாடம் !
நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
மாறனும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)