சைத்ரா செய்த தீர்மானம்

 

சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க வேண்டிவந்தது. மூன்றுவருடங்களும் ஓடிவிட் டன. இவர்களுடைய திருமணப்பேச்சு வந்தபோது இருகுடும்பங்க ளும் சற்று முறைத்துக்கொண்டன. பிறகு, காலத்திற்குத் தக்கபடி அடுத்ததலைமுறையின் நல்வாழ்வுகருதி விட்டுக்கொடுப்பதாக திரு மணத்திற்கு ஒப்புதல்கொடுத்தனர். எப்படியோ, அடுத்தமாதத்தில் திருநீர் மலையில் சிக்கனமாக மணமுடிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன.

அன்று, தன்னைக் காக்கவைத்துவிட்டு நேரங்கழித்து வந்த சைத்ராவுடன் சைதன்யன் பேசவில்லை. கோபமாக உம்மென்றிருந் தான்.

“நான் எதனால் நேரங்கழித்துவந்தேன் என்று தெரிந்தால் நீ கோபபட மாட்டாய் என்னை மெச்சிக்கொள்வாய் சைதன்!. என்ன என்றுதான் கேளேன்!”, என்றாள்.

“என்ன செய்திருக்கப்போறே பெரிசா? ஏதாவது புதிய நெயில் பாலிஷ் போட்டிருப்பே, அல்லது, அருமையான கலர்ல புடவை எடுத்திருப்பே…. அதானே. வேறென்ன?”

“சைதன்யா, நீ என்னைப் புரிஞ்சுண்டது அவ்வளவுதானா? மெச்சும்படியான காரியம் எதையும் நான் செய்யமாட்டேனா?”

“அப்படி என்னதான் செய்தே? சொல்லேன்!”

“இதோபார் ரசீது! நான் குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த என் டெபாசிட் பணத்தை பூகம்ப நிவாரண நிதிக்குக் கொடுத்து விட்டேன்!”

சைதன்யா திடுக்கிட்டுப்போனான்.

”சைத்ரா, என்ன இதெல்லாம்? என்ன செய்துவிட்டாய்… நாம் ஹனிமூன் போக ப்ளான் செய்த டெபாசிட் பணமல்லவா? என்னிடம் ஒரு வார்த்தை கேட்காமல் பூகம்ப நிவாரணத்திற்கு எப்படிக் கொடுக்கலாம்?”

“சைதன்! நீயும் உன் டெபாசிட் பணத்தைக் குடுத்திடு. தேனிலவு சிங்கப்பூருக்குத்தான் போகணுமா? இங்கே மகாபலிபுரம் போய்வருவோமே! நம் வாழ்வில் ஏதேனும் ஒரு முறை சிங்கப்ப்பூர் போகமுடியாதா என்ன? கஷ்டப்படும் மக்கள் மறுவாழ்வு பெற நம்மாலான உதவியைச் செய்வது நம் கடமை இல்லையா?”

“நம்மைப்போல் இருக்கிறவர்களுக்கு கடமை என்ன கேண்டிக்கிடக்கு? அதான் கட்டாயப்படுத்தி ஒரு நாள் சம்பளம் பிடுங்கிடறாங்களே – அது போதாதா? எத்தனை தினுசு வரி கட்ட றோம்? நான் ஒரு கனவுபோல் எத்தனை கஷ்டப்பட்டு பணம் சேகரிச்சேன்னு உனக்கு எப்படித் தெரியும்? எந்தக் கஷ்டம் வந்தாலும் ஆட்டோவில் ஏறிச்செல்லமாட்டேன்… மத்தியானம் ஒரு தடவைமட்டும் காபிகுடிப்பேன். சாயங்காலம் பச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டுப் பேசாமலிருந்துவிடுவேன்.. இப்ப என் தங்கைக்குக் கலியாணமாச்சே, கொஞ்சம் தாராளமா செலவுசெய்யட்டுமே ன்னு என் அம்மா-அப்பாக்கிட்டே இந்தப்பணத்தைக் கொடுக்கக்கூட எனக்குத் தோணலை. அதை எப்படி சைதன்யா நான் அப்படியே எடுத்து பூகம்ப நிவாரண நிதிக்குக் கொடுத்துவிட முடியும்?”

“இல்லை சைதன், நானும்தான் சிறுகச்சிறுகச் சேர்த்தேன். எல்லோரும் மசால்தோசை சாப்பிட்டா எனக்கும் வேணும்னு தோன்றும். ஆனால், வெறும் டீ குடிச்சிட்டுத் திரும்பிடுவேன். நானும் பஸ் சார்ஜ் மிச்சம் செய்து காலாற நடந்துபோவேன். நானும் என் டெபாசிட் பணத்தைப் பொத்திப்பொத்தித்தான் காப்பாற்றிவந்தேன்-நம்முடைய ஹனிமூனுக்காக. ஆனால், டி.வி யில அந்தக் கோரத்தைப் பார்த்தபோது வயிற்றைக் கலக்கியது. பாவம், அவர்களுக்குச் சாப்பிட சாப்பாடு வேண்டாமா? குளிருக் குத் துணி வேண்டாமா? எத்தனை வயதானவர்கள் எத்தனையெத் தனை குழந்தைகள்? அவர்களுடைய கஷ்டத்தை நம்மால் கடுக ளவு குறைக்கமுடிந்தாலும் போதுமே!”

“இல்லை சைத்ரா!அவரவர்கஷ்டம் அவரவருக்கு. நாம்ப பத்தாயிரம் குடுத்திட்டா என்ன பிரயோசனம்?சமுத்திரத்தில் பெருங்காயம் கரைச்ச கதைதான். எத்தனையோ பணக்காரர்கள், எத்த னையோ வியாபாரிகள் கருப்புப்பணத்தை மூட்டைகட்டி வைத்திருக்கிறார் கள். வெளிநாட்டிலிருந்தெல்லாம் மொத்தம்மொத்தமா கொடுப்பார் கள். நம்ம சம்பளத்தையெல்லாம் கட்டாயப்படுத்தி வாங்குகிறார் கள். நான் எடுத்துச்சொன்னாலும் ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய் சைத்ரா?”

சைதன்யன் வெடுவெடுவென்று பேசியபோது அவன் முகம் சிவந்து விகாரமாகிவிட்டது. அவன் இப்படி ஆங்காரமாய் எதிர்ப்புத் தெரி விப்பான் என்று சைத்ரா எதிர்பார்க்கவில்லை. மூன்று வருடப் பழக்கத்தில் அவள் ஆமாம் என்பதற்கு அவன் ‘டபுள் ஓகே’ என்பது தான் வழக்கம்!

“இல்லை சைதன், இதெல்லாம் தினம் ஏற்படும் விபத்தில்லை. எத்தனை பெரிய நஷ்டம்? நம் தேசத்தின் இழப்பில் நாமும் பங்கு பெறுவது நமது கடமையில்லையா? நானும் கஷ்டம் தெ ரிந்து வளர்ந்த பெண் தான். சிறு வயதில் ஒரு ஐஸ்க்ரீம் தின்ன ஆசையா யிருந்தாலும் வீட்டுநிலைமை புரிந்து, கேட்கத் தயங்கி பேசாமலி ருப்பேன். சுடச்சுட சாப்பாடு சாப்பிடக்கூட ஆசைப்பட்டு சொல்லா மருந்ததுண்டு. இடண்டு செட் யூனிஃபார்ம் தவிர ஒரேயொரு சாதா ட்ரெஸ் வைத்துக்கொண்டு என் பள்ளிநாட்களைக் கழித்தவள்தான் நான்.

புதிய உடை அணிந்து கழற்றவே மனமில்லாமல் என் அம்மா அடித்துக் கழற்றவைத்தபோது ஓவென்று அழுதது நினைவிருக் கிறது. அடுத்தவீட்டுப் பெண்ணுக்கு அரை சவரனில் செயின் வாங்கியபோது அதை ஆதங்கத்துடன் பார்த்துப் பொறாமைப்பட்ட துண்டு. எனக்கு இந்த டெபாசிட் பணம் பத்தாயிரம் பத்துகோடி போன்றதுதான் சைதன்யா! அதனால்தான் இல்லாதவர்களின் கஷ்டம் எனக்கு நன்றாகப் புரிகிறது. நீ என்னதான் சமாதானம் சொன்னாலும் எனக்கு சரி என்று தோன்றவில்லை”.

“ என்ன இருந்தாலும், பணத்தைக் கொடுப்பதற்குமுன், அட்லீஸ்ட் ஒரு ஃபோன் செய்து என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருந்திருக்க வேண்டும் நீ”.

“சைதன்யா, இது என் சொந்தப் பணம். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம். நீ இன்னும் என் கணவனாகவில்லை. இப்போதே உன்னை ஏன் கேட்கவேண்டும்? என் பணம் என்று நான் ஊதாரித்தனமாகச் செலவுசெய்தேனா என்ன? வேண்டாத எந்தச் செலவும் செய்யவில்லையே. என் இஷ்டமாக என் சக மனிதர்களுக்கு உதவி செய்யக்கூட உன்னிடம் உத்தரவு வாங்கவேண்டிய அவசியமென்ன? இனியும் அப்படிப் பட்ட நிர்பந்தம் வேண்டாம். இந்தச் சந்தர்ப்பத்தில் உன்னை நன்றாகப் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்துவிட்டது எனக்கு. குட்-பை”.

சொல்லிவிட்டு, சைத்ரா தெளிவாகத் தன்வழியே நடக்கத்தொடங் கினாள்.

- 18 ஜூன், 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி எடுத்துவிட்டான். ஆனால் ராமனைப் பெற்றவுடன் கௌசல்யா இறந்துவிடவே கௌசல்யாவின் தந்தையே வற்புறுத்தி கேதகியை (இரண்டாம் மகளை) மணமுடித்து வைத்தார். ...
மேலும் கதையை படிக்க...
நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள். உறவுமுறையில் ஒரு செல்வந்தரின் மகள் இருந்தாள். அந்தப் பெண் இந்துமதியை மணம் செய்விக்க முயற்சி செய்தாள். நந்தகுமாரின் அக்கா, தங்கைகள் இந்துமதியின் ...
மேலும் கதையை படிக்க...
அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத் தேடவே மாட்டாள். மின்விளக்குவசதிகூட இல்லாத அந்த வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். பதினெட்டு ரூபாய் வாடகை; ஒரே மாதம் அட்வான்ஸ். ஒரு பெரிய அறை, ஒரு ...
மேலும் கதையை படிக்க...
பரசுவால் நீலு பேசும் ஒரு வார்த்தைளை பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியவே இல்லை. கோபித்து கொள்ளவோ தடுக்கவோ தைரியமுமில்லை. அவளுடைய பேச்சுக்குப் பேச்சு அதை கேட்க நேர்ந்தது. மனம் திடுக்கிட்டு பதறுகிறது. ஆனால் அதற்கு ஒரு காரணமிருந்தது. அவன் சிறுவயதிலேயே யாரோ ...
மேலும் கதையை படிக்க...
பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி வைத்து நீர் ஊற்றி கோலங்கள் போட்டு விளக்கேற்றி தோத்திரம் படித்து பிரதக்ஷினம் நமஸ்காரம் என்று பெரியவர்கள் போல சிரத்தையுடன் செய்வாள். திருமணமாயிற்று. புருஷன் ...
மேலும் கதையை படிக்க...
தசரதன் இறக்கவில்லை!
அவனுடைய காதலி
அப்படியோர் ஆசை!
ஓடியது யார்?
கங்கை சொம்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)