சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 6,559 
 

அத்தியாயம்-25 | அத்தியாயம்-26

‘சிஸ்டர்’ அல்ப்ப்ன்சா ‘சிஸ்டர் நிர்மலாவைப் பார்த்து நான் ஏற்பாடு பண்ணீ இருக்கும் விஷயத்தை சொன்னாள்.’சிஸ்டர் நிர்மலா சந்தோஷப் பட்டுக் கொண்டே”ரொம்ப ‘தாங்க்ஸ்’ ‘சிஸ்டர் அல்போன்சா” என்று சொன்னாள்.

செந்தாமரை தான் எடுத்த இந்த முடிவைப் பற்றி யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

சற்று நேரம் கழித்து செந்தாமரை தன் ரூமை விட்டு வெளியே வந்து அந்த முதியோர் இல்ல த்தை சுற்றிப் பார்த்தாள்.அவர்கள் நடத்தி வரும் பள்ளிகூடத்தையும், முதியோர்கள் தங்கி வந்த ரூம் களையும் சுற்றிப் பார்த்தாள்.அந்த ரூம்களைப் பார்த்ததும் செந்தாமரைக்கு தனக்கு வாழ்வு அளித்த கணபதி சாரும் அவரது மணைவி சாந்தாவும் இருந்து வந்த முதியோர் இல்லம் ஞாபகத்துக்கு வந்தது. ’இந்த மாதிரி ஒரு முதியோர் இல்லத்லே தானே எனக்கு வாழ்வு கொடுத்த “தெய்வங்கள்” வாழ்ந்துக் கிட்டு இருந்தங்க.நாம் தினமும் வேண்டி வரும் பிள்ளையார் அருளீனால் நம்மால் அவங்களுக்கு ஒரு நல்ல வாழக்கை அமைச்சுக் குடுத்து, அவங்க இறந்தவுடன் ‘இறுதி காரியங்களும்’ செய்ய முடிஞ்சது’ என்று நினைக்கும் போது செந்தாமரையின் மனது மிகவும் சந்தோஷப் பட்டது.அவள் பிள்ளையா ருக்கு தன் நன்றிகளை தன் மனதில் சொல்லிக் கொன்டே தன் ரூமுக்கு வந்தாள்.

‘இனிமே நான் இந்த இல்லத்லே தான் என் வாழ்க்கையின் ‘சாயங்காலப் பொழுதை’க் கழிச்சு வரணும்.ஒரு அறுந்த காத்தாடி காத்தடிச்ச பக்கம் எல்லாம் பறந்து போய்க் கிட்டு இருந்து விட்டு, வீசும் காத்து நின்னதும்,அந்தக் காத்தாடி எங்கோ ஒரு மரக் கிளையிலோ,மின்சார கம்பிலோயோ. மாட்டி கிட்டு யாரும் கேட்பாரு இல்லாம தொங்கிக் கிட்டு இருப்பதை போல,நாமும் இந்த இல்லத்லே, நம்ம உறவுக் காரங்க யாரும் இல்லாம கேட்பாறற்று இருந்து வரப் போறோம்’ என்று நினைத்த போது செந்தாமரைக்கு ஒரு பக்கம் அழுகையும் இன்னொரு பக்கம் சிரிப்பும் வந்தது.‘நாம ஒரு சேரியிலே பொறந்தோம்அந்த சேரியிலே படிச்சு வந்தோம்.அப்புறமா கணபதி,சாந்தா,இவங்க தயவாலே பன்னா டாவது வரை படிச்சது,சுந்தரம் நிறுவனத்தாரால் நிறைய படிச்சது,கணதி தம்பதிகள் உதவியாலே சென்னை வந்து மூர்த்து சார தயவாலே ஒரு வாத்தியார் வேலை கிடைச்சது,அப்புறமா அப்பா,அம்மா, அக்கா,அவ பொண்ணுங்களோடு ஒரு நல்ல சந்தோஷமான வாழ்க்கை அமைஞ்சது.சுந்தரம் பிள்ளை, மூர்த்தி வாத்தியார்,ராஜேஷ், ஷர்மா போன்ற பெரிய படிப்பு படிச்சவங்களோட சேர்ந்து வேலை செய்யும் பாக்கியம் எல்லாம் கிடைச்சது,கடைசியாக நான் படிச்ச பள்ளிகூடத்திலே ஒரு பிரின்சிபால் வேலை எல்லாம் அந்த பிள்ளையார் அருளினால் தான் நமக்கு கிடைச்சது.

எல்லாம் முடிஞ்சு,இப்போ நான் என் வாழக்கையின் ‘சாயங்கால வயசை’ இந்த முதியோர் இல்லத்லே நிறைய முதியவர்கங்க கூட வாழ்ந்து வரணும்ன்னு அந்த பிள்ளையார் நமக்கு அமைச்சு வச்சு இருககார் போல இருக்குது’ என்று எண்ணி யோஜனை பண்ணிக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தாள் செந்தாமரை.பிறந்ததில் இருந்து இன்று வரை அவள் வாழ்க்கை பாதையை அணு அணுவாக நினைவுக்குக் கொண்டு வந்து சந்தோஷப் பட்டுக் கொண்டு வந்தாள்.

‘சிஸ்டர்’ மேரி செந்தாமரை ரூமுக்கு வந்து செந்தாமரையை சாப்பிட அழைத்துப் போனார். செந்தாமரை அந்த இல்லத்திலே அவர்கள் கொடுத்த எளிமையான சாப்பாட்டை சாப்பிட்டு ‘சிஸ்டர்’ நிர்மலாவை ‘தாங்க்’ பண்ணி விட்டு தன் ரூமுக்கு வந்து ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டாள்.கொஞ்ச நேரம் ஆனதும் ‘சிஸ்டர் மேரி’ செந்தாமரை ரூமுக்கு வந்து ‘சிஸ்டர் நிர்மலா’ சொல்லி இருக்கும் ஐடியாவைச் சொல்லி விட்டு,செந்தாமரையை அடுத்த நாள் காலையில் நாஷ்டா சாப்பிட்டு விட்டு ஒன்பதரை மணிக்கு தயராக இருக்கும் படி சொல்லி விட்டுப் போனாள்.

மேரி சிஸ்டர் போனதும் செந்தாமரை ‘சிஸ்டர் நிர்மலா நம்ம வாழ்க்கை பத்தின பூரா விவரத்தை யும் நாளைக்கு காத்தாலே ‘அசெம்பெளி ஹால்லே’ பேச சொன்னாங்களாமே.நம்முடைய வாழ்க்கைப் பத்தி எல்லா விவரமும் சொல்லலாமா,வேணாமா’ என்று யோஜனைப் பண்ணினாள்.அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் நேரே ‘சிஸ்டர் நிர்மலாவுக்குப் போய் அவா¢டம் ‘சிஸ்டர் மேரி சொன்ன விஷயத் தை சொல்லி “சிஸ்டர்,நான் என் வாழக்கையைப் பத்தி உங்க கிட்டே சொல்லி விடறேனே.ஏன் எல்லா எதிரிலேயும் நான் சொல்லனும்.உங்க கிட்டே சொன்னா போதாதா” என்கிற தன் சந்தேகத்தை கேட் டாள்.உடனே ‘சிஸ்டர் நிர்மலா’ “மேடம்,நீங்க உங்க கடைசி காலத்தே எங்க கூட இருந்து வர முடிவு பண்ணீ இருக்கீங்க.இனிமே நாம எல்லோரும் இங்கே ஒன்னா இருந்து வரப் போறோம் உங்களே பாத்தா,நீங்க ஒரு பிராமன ஜாதியை சேர்ந்தவங்க போல தோனுது.நீங்க உங்களுடைய கடைசி காலத் தை உங்க ‘குடும்பத்துடன்’ இருந்து வராம இங்கே வந்து இருக்கீங்களே.ஒரு வேளை நீங்க உங்க கணவனை இழந்தவராக இருப்பீங்களோ,இல்லை உங்களுக்கு குழந்தைங்க,வேறே உறவுக்காரங்க யாரும் இல்லாம இருக்குமோன்னு இங்கு இருக்கும் ‘சிஸ்டர்கள்’ எல்லாம் திஞ்சுக் கொள்ள ரொம்ப ஆசைப் படறாங்க.அதனாலே நீங்க உங்க வாயாலேயே உங்க வாழ்க்கையைப் பத்தி எங்க எல்லாருக் கும் சொன்னா நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். நீங்க என்ன சொல்ல விரும்பறீங்களோ,அதை மட்டுமாவது சொல்லுங்க ‘ ப்ளீஸ்’ ”என்று கேட்டுக் கொண்டார்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீன “சரி ‘சிஸ்டர்’ நான் என் வாழ்க்கையைப் பத்தின எல்லா விவரமும் சொல்றேன்”என்று சொன்னதும் ‘சிஸ்டர்’ நிர்மலா’ “ரொம்ப தாங்ஸ் மேடம்” என்று சொன் னதும் செந்தாமரை தன் ரூமுக்கு வந்து விட்டாள்.

அடுத்த நாள் சனிகிழமை.அன்று பள்ளி விடுமுறை.காலையில் இருந்து அந்த விடுதி எல்லா வேலைக்காரர்களும்,பள்ளிப் பிள்ளைகளும் அந்த விடுதியில் இருந்த ‘அசெம்பலி ஹாலை’ பல கலர் பேப்பர்களால் ஆன தேரணங்களால் அலங்கா¢த்து வந்தார்கள்.மணீ பத்து அடிக்க பத்து நிமிஷத்துக்கு ’சிஸ்டர்’ மேரி செந்தாமரை இருந்த ரூமுக்கு வந்து செந்தாமரையை அழைத்துப் போய் ‘சிஸ்டர்’ நிர்மலா ரூமில் வீட்டு விட்டு வந்து ‘அசெம்பலி ஹாலுக்கு’ வந்தாள்.

எல்லா பள்ளிப் பிள்ளைகளையும்,எல்லா ‘சிஸ்டர்களும்,எல்லா முதியவர்களும் ‘அசெம்பிலி ஹாலுக்கு’ வந்து அமர்ந்துக் கொண்டார்கள்.மேடை மேலே ஒரு பெரிய மேஜை போடப் பட்டு இருந் தது.எதிரே இரண்டு சேர்கள் போடப் பட்டு இருந்தது.மேஜை மேலே இரண்டு ‘க்லாஸில்’ தண்ணீர் வைக்கப் பட்டு இருந்தது.

மணி பத்து இருக்கும்.‘சிஸ்டர் நிர்மலா’ செந்தாமரையை தன்னுடன் அழைத்துக் கொண்டு ‘அசெம்பலி ஹாலுக்கு’ வந்தார்.எல்லோ¡ரும் எழுந்து நின்றுக் கொண்டு ‘சிஸ்டர் நிர்மலாவுக்கு வண க்கம் சொன்னார்கள்.எல்லோருக்கு பதில் வணக்கம் சொல்லி விட்டு செந்தாமரையை உட்காரச் சொல்லி விட்டு மைக்கை தன் கையில் வைத்துக் கொண்டு “உங்க எல்லாருக்கும் இந்த அம்மாவை அறிமுகப்படுத்தவே நான் உங்களை எல்லாம் இங்கே வரச் சொல்லி இருக்கேன்.இவங்க நம்ம முதி யோர் இல்லத்துக்கு முப்பத்து ஏழு லக்ஷம்,என்பதாயிரத்து தொன்னெத்தெட்டு ரூபாய் ‘டொனேஷன்’ குடுத்து இருக்காங்க.இவங்க இங்கேயே தங்கி நாம எல்லோரும் சாப்பிட்டு வரும் சாப்பாட்டை சாப்பிட்டு வரப் போறாங்க.இங்கே நடந்து வரும் பள்ளிக் கூடத்திலே,அவங்க ஆசைப் பட்டது போல ஒரு கணக்கு வாத்தியாரா வேலை செஞ்சு வரப் போறாங்க.மீதி நேரங்களே நம்ம முதியோர் இல்லத் தின் அன்றாட வரவு செலவு கணக்கையும் பார்த்து வரப் பேறாங்க”என்று சொல்லி விட்டு செந்தா மரையை பார்த்து “மேடம் உங்க வாழக்கையைப் பத்தி எங்க எல்லாருக்கும் தொ¢ஞ்சுக் கொள்ள ரொம்ப ஆசையா இருக்கு.தயவு செஞ்சி உங்க வாழ்க்கையை பத்தி விவரமா சொல்ல முடியுமாங்க” என்று கேட்டு விட்டு ‘மைக்கை’ செந்தாமரை கையிலே கொடுத்தார் ‘சிஸ்டர் நிர்மலா’. எல்லா பள்ளிப் பிள்ளைகளும்,முதியோர்களும் செந்தாமரையை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
செந்தாமரை ‘சிஸ்டர் நிர்மலா’ கொடுத்த ‘மைக்கை’ கையில் வாங்கிக் கொண்டு “உங்க எல்லாருக்கும் முதற் கண் என வணக்கத்தை சொல்லிக் கொண்டு,நான் என் வாழக்கையை பத்தி உங்களுக்கு இப்ப சொல்றேன்.நான் சேத்துப் பட்டு சேரியிலே தினக்கூலி செஞ்சு வரும் என் அம்மா அப்பாவுக்கும் ரெண்டாவது மகளாகப் பொறந்தேன்….”என்று சொல்லி முடிக்கவில்லை ‘சிஸ்டர் நிர்மலா’ முதல் அங்கே குழுமி இருந்த எல்லோரும் ‘இவங்க ஒரு சேரியிலே பொறந்தவங்களா.பாத்தா ஒரு ஐயர் பொம்பளை மாதிரி இருக்காங்களே’ என்று நினைத்து ஆச்சரியப் பட்டார்கள்.

செந்தாமரை தொடர்ந்தாள்.“நான் எட்டாவது வரை நான் ஒரு ‘கார்பரேஷன்’ பள்ளி கூடத்லே படிச்சு வந்தேன்.எட்டவதிலே நான் கணக்கிலே நுத்துக்கு நூறு மார்க் வாங்கினேன்.என் கணக்கு அறிவைப் பாராட்டி அங்கு கணக்கு வாத்தியாரா வேலை செஞ்சு வந்த சுந்தரம் பிள்ளை என்பவர், நுங்கம்பாகம் உயர் நிலைப் பள்ளியில் கணக்கு வாத்தியாராக வேலை செஞ்சு வந்த மூர்த்தி என்பவா¢ டம் என்னைப் பத்தி எல்லா விவரமும் சொல்லி அந்தப் பள்ளி கூடத்திலெ எனக்கு ஒரு ‘சீட்’ வாங்கி அவர் செலவிலே என்னை பத்தாவது வரை படிக்க வச்சாருங்க.பத்தாவதிலே நான் சென்னை மாநிலத் திலே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணினேன்…..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது மறு படியும் எல்லோரும் ஆசரியப்பட்டார்கள்.

செந்தாமரை கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டு “அந்த சமயம் பாத்து நான் என் ‘ப்ரெண்ட்’ சுமதியின் வீட்டுக்குப் போய் இருந்தேன்.அங்கே சுமதியின் மாமா கணபதி என்பவர் சென்னைக்கு வந்து இருந்தார்.அவர் மதுரை பல்கலைக் கழகத்திலே ஒரு கணக்கு ‘ப்ரப்ஸராக வேலை செஞ்சுக் கிட்டு இருந்தார்.அவருக்கு குழந்தைங்க இல்லே.சுமதி என்னைப் பத்தி அவர் கிட்டே ‘மாமா,இந்த செந்தாமரை பத்தாவதிலெ சென்னை மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கா. எல்லா கணக்கு பா¢ஷையிலும் இவ நூத்துக்கு நூறு மார்க் வாங்குவா’ என்று சொன்னதும்,அவர் என் கணாற்றலை சோதிச்சார்.நான் அவர் கேட்ட எல்லா மணக் கணக்குகளுக்கும் சரியாக விடை சொன்னேன்.அதைப் பாத்து அவர் மிகவும் சந்தோஷப் பட்டு என்னைப் பாத்து ‘செந்தாமரை நீ என் கூட மதுரைக்கு வறயா.நான் உன்னை எங்க பல்கலைக் கழத்திலே சேத்து உன்னை ஒரு கணக்கு பட்டதாரியாகஆக்க ரொம்ப ஆசைப் படறேன்’ என்று சொன்னதும்,நானும் மேலே படிக்க ரொம்ப ஆசைபட்டதாலே, உடனே எங்க வீட்டுக்குப் வந்து கேட்டேன்.ஆனா என் அம்மா மறுத்துட்டாங்க என்னைப் பாத்து ‘நீ பத்தாவது படிச்சது போதும்.நீஒரு வேலைக்குப் போய் சம்பாதிச்சு வா.வீட்லே ரொம்ப பணக் கஷ்டமா இருக்கு’ன்னு சொன்னாங்க.ஆனா எனக்கு மேலே படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்திச்சி.அதனாலே நான் அன்னைக்கு ராத்திரியே யார் கிட்டேயும் சொல்லிக்காம எங்க வீட்டை விட்டு கணபதி சாருடன் மதுரைக்குப் போயிட்டேன்.அவர் மதுரைப் பல்கலைக் கழகப் பள்ளி கூடத்திலே எனக்கு ஒரு ‘சீட்’ வாங்கி,அவர் செலவிலே என்னை பதினோறாவதையும், பன்னாடா வதையும் படிக்க வச்சாரு.நான் அந்த ரெண்டு ‘க்லாசிலேயும்’ ‘பைனல்’ பா¢¨க்ஷயிலே சென்னை மாநிலத்திலேயே முதலாவதாக ‘பாஸ்’ பண்ணினேன்.இந்த செய்தியைக் கேள்விப் பட்டதும் சுந்தரம் நிறுவனம் எனக்கு ஒரு ‘ஸ்காலர்ஷிப்பை’க் குடுத்து, ‘ஹாஸ்டலில்’ தங்கிப் படிக்க,எனக்கு வருஷ த்துக்கு இருபத்தி ஐஞ்சு ஆயிரம் ரூபாய் பண உதவியும் குடுத்தாங்க.நான் அந்த பணத்லே B.Sc. Maths. படிச்சேன்.நான் அந்த B.Sc. Maths பா¢¨க்ஷயிலும் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணினேன்.உடனே சுந்தரம் நிறுவனம் மறுபடியும் எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ‘ஸ்காலர்ஷிப்பைக் குடுதாங்க.நான் ’ஹாஸ்டலில்’ தங்கி M.Sc Maths படிச்சேன்.நான் அந்த M.Sc. Maths பா¢¨க்ஷயிலும் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணி னேன்.அப்புறமா நான் B.Ed.‘கோர்ஸ்ஸ¤ம்’ பாஸ் பண்ணீனேன்.என் படிப்பு அறிவை பாத சுந்தரம் நிறுவனம்,எனக்கு அவங்க் நிறுவனத்திலேயே ஒரு ஆபீஸர் வேலையே குடுத்து சேரச் சொன்னா ங்க.ஆனா எனக்கு அந்த மாதிரி வேலை செய்ய பிடிக்கலே.எனக்கு சென்னைக்குத் திரும்பி போய், ஒரு கணக்கு வாத்தியாரா வேலை செஞ்சு வந்து நிறைய குடிசை வாழ் ஏழை குழந்தைகளுக்கு இலவசமா கணக்கு சொல்லிக் குடுத்து,அவங்க வாழக்கை தரத்தை உயர்த்தணும் என்கிற ஆசை என் மனதில் இருந்தது.உடனே நான் சுந்தரம் நிறுனவனத்தின் ‘மேனேஜிங்க் டைரக்டா¢டம்’ என் மனதில் கொழுந்து விட்டு ஏறியும் ஆசையை சொல்லி “சார்,எனக்கு இந்த வேலை வேணாம்.என்னை தயவு செஞ்சி மன்னிச்சிடுங்க” என்று சொன்னேன்.பிறகு செந்தாமரை டேபிள் மேலே இருந்த ‘க்லாஸ்’ தண்ணீரை கொஞ்சம் குடித்தாள்.

‘இவங்க இன்னும் என்ன ஆச்சரியமான சமாசாரங்களை சொல்லப் போறாங்களோ’ என்று எல்லோரும் ஆவலோடு செந்தாமரை முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

“நான் கணபதி சார் கிட்டேயும் என் ஆசையைச் சொன்னேன்.அவர் அடுத்த ரெண்டாவது நாள்ளே என்னை சென்னைக்கு இட்டு கிட்டு வந்து விட்டார்.நான் சென்னைக்குத் திரும்பி வந்ததும் அந்த மாசமே நான் படிச்ச நுங்கம்பாகம் உயர் நிலைப் பள்ளியிலேயே எனக்கு ஒரு கணக்கு வாத்தி யார் வேலை கிடைச்சுது.கணபதி சார் மதுரைக்கு போறதுக்கு முன்னால் எனக்கு பத்தாயிரம் ரூபாய் குடுத்தார்.எனக்கு அந்த வேலைக் கிடைச்சவுடன்,மூனு மாசம் கழிச்சு என் கையில் பணம் சேந்ததும் என் அம்மா அப்பாவை அவங்க குடிசையிலே போய்ப் பாத்தேன்.என்னை பாத்தவுடன் அவங்க என் கிட்டே ஆரம்பத்திலெ மிகவும் கோவமாகப் பேசினாங்க.நான் அவங்க கிட்டே நான் ஓடிப் போனதில் இருந்து அன்று வரை நடந்த கதை பூராத்தையும் சொல்லி ரொம்ப கெஞ்சிக் கேட்டு அழுதேன்.அந்த சமயம் பாத்து என் அக்கா என் அம்மா குடிசைக்கு வந்தா.ஒரு வழியா நான் அவங்க எல்லோரையும் சமாதானப் படுத்தி என் கூட அழைச்சுக் கிட்டு வந்து வச்சிக் கிட்டேன்.அவங்களுக்கு ஒரு நல்ல சந்தோஷமான வாழக்கையை நான் குடுத்தேன்.என் அக்கா பெரிய மகளை நல்லாப் படிக்க வச்சி,அவ ஒரு நல்ல வேலைக்கு சேந்த பிறகு அவ ஆசை பட்ட ஒரு கிருஸ்தவப் பையனையே அவளுக்கு பதினைஞ்சு சவரனுக்கு நகைகள் போட்டு கல்யாணத்தைப் பண்ணி வச்சேன்.மிகவும் நோய்வாய் பட்டுக் கொண்டு வந்துக் கொண்டு இருந்த என் அப்பா இந்த பேத்திக் கல்யாணத்தைப் பாத்து மிகவும் சந்தோஷ பட்டார்.சில மாசம் போனதும் அவர் இறந்து விட்டார்.என் அப்பா இறந்த துக்கத்லே என் அம்மாவும் இறந்துப் போயிட்டாங்க.என் அக்காவின் ரெண்டாவது பொண்ணு நல்ல படிச்சு வரவே அவ ஆசைப் பட்டா மாதிரி அவளை ஒரு ‘மெடிக்கல் காலேஜிலே’ ‘டொனேஷன்’ குடுத்து டாக்டர் படிப்பு படிக்க வசேன்.அவளும் அந்த டாக்டர் படிப்பை கண்ணும் கருத்துமாய் படிச்சு வந்து ‘பஸ்ட் க்லாஸிலே’ ‘பாஸ்’ பண்ணீனா.தன் சீனியர் டாகடர் ஒருவர் நடத்தி வரும் ‘நர்ஸிங்க் ஹோமிலே’ அவ டாக்டராக வேலைக்கு சேந்துட்டா.ஒரு நாள் நானும் என் அக்காவும் கோவிலுக்குப் போய் இருந்த போது என் அக்காவை விட்டு ஓடிப் போனப் புருஷன் என் கன்ணிலே தென்பட்டாரு.அவர் கிட்டே நான் பேசின போது அவர் மிகவும் வருத்தப் பட்டு என் அக்காவிடம் நிறைய மன்னீப்பு கேட்டார்.என் அக்காவை நான் மெல்ல சம்மதிக்க வச்சி,என் அக்கா புருஷனை என் அக்காவோடு சேத்து வச்சேன்.அவங்க பாங்க் ‘அக்கவுண்ட்லே’மூனு லக்ஷ ரூபாய் போட்டு இருக்கேன்.என்னோடு வேலை செஞ்சு வந்த ராஜேஷ் என்கிற ஒரு நல்ல கணக்கு வாத்தியாரு டன் நிறைய ஆராய்ச்சி செஞ்சு,பத்தாவதுக்கும்,பன்னாடாவதுக்கும் ‘Maths Made Easy’ என்கிற தலைப்பைப் போட்டு என் பள்ளிகூட ‘பிரின்ஸிபால்’ மூர்த்தி என்பவருடைய முன்னுறையுடன் புஸ்தங்களாக ‘பப்லிஷ்’ பண்ணி இருக்கேன்” என்று சொல்லி விட்டு இன்னும் கொஞ்சம் தண்ணீரை குடித்தாள்.

சிறிது நேரம் ஆனதும் செந்தாமரை தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தாள்.“ரெண்டு மாசம்

போனதும் அவங்க மூனு பேரும் சந்தோஷமா இருந்து வரட்டும்ன்னு நினைச்சு நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு ‘லேடீஸ் ஹாஸ்டலிலே’ தங்கி வந்தேன்.ஒரு நாள் நான் பத்தாவது ‘ஸ்டூடண்ட்ஸ்களை’அழைச்சுகிட்டு மதுரைக்கு ‘எக்ஸ்க்ர்ஷனுக்கு’ப் போய் இருந்த போது எனக்கு “வாழ்வு”அளித்த கணபதி சாரும் அவங்க சம்சாரமும் மனம் உடைஞ்சு கோவிலிலே குந்தி கிட்டு இருந்ததைப் பாத்தேன் .உடனே அவங்களை ரொம்ப கெஞ்சிக் கேட்டு என் கூட சென்னைக்கு அழைச்சு வந்து அவங்களை என் கூட சந்தோஷமா வச்சுக் கிட்டு வந்தேன்.அவங்க ரெண்டு பேரும் என் கூட எட்டு வருஷம் ரொம்ப சந்தோஷமா இருந்து வந்தாங்க.ஒரு மாசத்து வித்தியாசத்திலே ரெண்டு பேரும் காலமாகி விட்டாங்க.ஆறு வருஷத்துக்கு பிறகு நான் வேலை செஞ்சு வந்த பள்ளி கூடத்திலே எனக்கு ‘பிரின்ஸிபால்’ வேலைக் குடுத்தாங்க.அந்த வேலைலே சேந்து,நான் என் அறுபத்தி ஐஞ்சு வயசு வ¨க்கும் அந்த ‘பிரின்ஸிபால்’ வேலையை செஞ்சு வந்தேன்.நான் ‘ரிடையர்’ ஆனதும் எனக்கு தனிமை ரொம்ப வாட்டிச்சு.எனக்கு மறுபடியும் சந்தோஷ மாக இருந்து வரும் அக்கா குடும்பத்தோடு போய் இருக்க பிடிக்கலே.இனிமே நாம என்ன செய்யப் போறோமுன்னு ரொம்ப கவலைப் பட்டுக் கிட்டு இருந்தப்ப தான்,இந்த முதியோர் இல்லத்தின் விளம்பரத்தை நான் பாததேன். உடனே எனக்கு இந்த இல்லத்துக்கு வந்து,இந்த இல்லத்லே இருந்து வரும் முதியவர்களோட ஒரு முதியவளா,அவங்க சாப்பிட்டு வர சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வந்து,அப்புறமா என் காலம் முடிஞ்ச பிறகு என் கண்ணை மூடலாம்ன்னு நினைச்சுத் தான் என் பணத்தை பூராவையும் பாங்கிலே இருந்து ‘வித்ட்ரா’பண்ணி கிட்டு வந்து உங்க கிட்டே குடுத்து இருக்கேன்.என் குடும்பத்தை சந்தோஷமா வச்சு வந்து,நிறைய ஏழை குழந்தைகளுக்கு கணக்கு சொல்லிக் குடுத்து வருவதையும் தான் என் வாழ்க்கையின் ரெண்டு முக்கிய ‘குறிக்கோள்கள்’ என்று நினைச்,நான் கல்யாணமே பண்ணீக்கலீங்க”என்று தன் முழு கதையை விஸ்தாரமாக சொல்லி முடித்து விட்டு ‘டேபிள்’ மேலே இருந்த தண்ணிர் டம்ளரை கையில் எடுத்து தண்ணீரை முழுக்க குடித்தாள்.

பிறகு சேரில் உட்கர்ந்துக் கொண்டு ‘நம் வாழ்க்கை கதையை நம்மால் இவ்வளவு விவரமாக சொல்ல முடிஞ்சதை’ நினைத்து செந்தாமரை தன் மனதுக்குள் சந்தோஷப் பட்டாள்..

உடனே’சிஸ்டர் நிர்மலா’ செந்தாமரை இடம் இருந்து மைக்கை தன் கையில் வாங்கிக் கொண்டு “செந்தாமரை என்கிற இந்த அம்மா ஒரு சேரியிலே பொறந்து இருந்தும்,அவங்களுடைய புத்தி கூர்மை யினாலும்,விடா முயற்சியினாலும்,வாழ்க்கைலே போராடி இவ்வளவு முன்னுக்கு வந்து இருக்காங்க. தன் வாழ்க்கையிலே ஒரு சுகத்தையும் தேடிக்காம,ஒரு கணக்கு வாத்தியார் வேலைக்கு சேந்து அவங்க வாழ்க்கை பூராவையும்,அவங்க குடும்பத்துக்கும்,அவங்களை படிக்க வச்சு முன்னுக்கு கொண்டு வந்த கணபதி சாருக்கும் அவங்க மணைவிக்கும் செலவு பண்ணி வந்து இருக்காங்க.அவங்களே யாரோ ஒரு புண்ணீயவான் பணம் கட்டி படிக்க வச்ச பள்ளிகூடத்திலே ஒரு வாத்தியாரா சேந்து படிப் படியா ஒசந்து வந்து,அந்தப் பள்ளிகூடத்லே ‘பின்ஸிபால்’ வேலையே செஞ்சு வந்து இருக்காங்க,அவங்க அந்த வேலைலெ இருந்து ¡£டையர் ஆனவுடன்,அவங்க கிட்ட மீதி இருந்த மொத்த பணத்தையும், இந்த முதியோர் இல்லத்துக்கு குடுத்து விட்டு,ஒரு ‘சாதாரண முதியவள்’ போல் இந்த இல்லத்லே அவங்களுடைய கடைசி காலத்தை கழிச்சு வர பண்ணி இருக்கும் முடிவை நினைச்சு,நான் ரொம்ப ஆச்சரியப்படறேன்.தன் வாழ்க்கைலே கல்யாணமே பண்ணிக் கொள்ளாத இவங்களும் ஒரு விதத்லே ஒரு “கன்னி ஸ்திரி” தான்.நாங்க “கன்னி ஸ்திரிகளாக” இருந்து வந்து,அந்த இயேசு பிரானுக்கு சேவை செஞ்சு வறோம்.இவங்க ஒரு “கன்னி ஸ்திரியாக” இருந்து வந்து அவங்க குடும்பத்துக்கும், அவங்களுக்கு உதவி பண்ணவங்களுக்கும் சேவை செஞ்சு வந்து இருக்காங்க.இவங்க நிச்சியமாக “சேற்றீலே மலர்ந்த ஒரு செந்தாமரை”தான்.இதில் எனக்கும் சரி, உங்கள் அனைவருக்கும் எந்த சந்தேகமும் இருக்காதுன்னு நினைக்கறேன்.இன்னியிலே இருந்து இவங்களை ‘மேடம்’, ‘மேடம்’ன்னு அழைப்பதற்கு பதிலா ‘சிஸ்டர் செந்தாமரை’ என்று அழைக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன்” என்று சொல்லி விட்டு “இதிலே உங்களுக்கு ஏதாவது ‘அப்ஜெ க்ஷன்’இருக்கா ‘சிஸ்டர்’ செந்தாமரை” என்று கேட்டவுடன் செந்தாமரை எழுந்து நின்றுக் கொண்டு “நீங்க எல்லோரும் என்னை அப்படி அழைப்பதிலே எனக்கு ஒரு ‘அப்ஜெக்ஷனும்’ இல்லே” என்று சொல்லி விட்டு உட்கார்ந்து கொண்டாள்.

‘சிஸ்டர் நிர்மலா’வும்,மற்ற ‘சிஸ்டர்’களும், எல்லா முதியவர்களும்,பள்ளிப் பிள்ளைகளும் செந்தாமரையின் வாழ்க்கை கதையை கேட்டு மிகவும் ஆச்சரியப் பட்டார்கள்.

எல்லா ‘சிஸ்டர்களும்’ முதியர்களும், பள்ளிப் பிள்ளைகளும் எழுந்து நின்றுக் கொண்டு சந்தோஷத்தால் தங்கள் கையைத் தட்டி கரகோஷம் பண்ணீனார்கள்.எல்லோரும் எழுந்து நின்றுக் கொண்டு கர கோஷம் செய்ததைப் பார்த்து செந்தாமரைக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.அவள் எழுந்து நின்றுக் கொண்டு தன் கையை கூப்பி எல்லோருக்கும் தன் நன்றி சொன்னாள்.

செந்தாமரை ‘சிஸ்டர் நிர்மலாவுடன் அவர் ரூமுக்குப் போய்,தன் ‘பாங்க் அக்கவுண்டில்’ ‘அன்னை தெரசா முதியோர் இல்லத்தின்’ பேரை ‘நாமினேஷனாக’ போட பர்மிஷன் கேட்டு,அடுத்த நாளே அவ பாங்குக்குப் போய் அந்த ‘நாமினேஷனை’ போட்டு விட்டு வந்தாள்.

அடுத்த நாளில் இருந்து செந்தாமரை காலை நேரங்களில் அந்த இல்லத்தின் வரவு செலவை கணக்கை எல்லாம் பார்த்து முடித்து விட்டு,மத்தியான நேரத்தில் அந்த இல்லம் நடத்தி வந்த பள்ளி கூடத்திலே பிள்ளைகளுக்கு இலவசமாக கணக்கு சொல்லி கொடுத்து வந்தாள்.அவ்வப்போது அந்த ‘பப்ளிஷர்’ இடம் இருந்து விற்பனையான பத்தாவது,பன்னாடாவது,கணக்கு புஸ்தங்ககளுக்கு வந்த ‘ஷேர்’ பணத்தை ‘சிஸ்டர் நிர்மலா’விடம் கொடுத்து வந்தாள் செந்தாமரை.தன் ‘சாயங்கால வாழ்க் கையை’ சந்தோஷமாக கழித்து வந்தாள்.

தனது ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் எல்லா பெண் முதியவர்களுக்கும் புடவை,ப்ளவுஸ¥ம், ஆண் முதியவர்களுக்கும்,எல்லா வேலைகாரர்களுக்கும் வேஷடி சட்டையும்,மற்ற எல்லோருக்கும் ‘ஸ்வீட்டு’ம் வாங்கிக் கொண்டு வந்து சந்தோஷப் பட்டாள்.

செந்தாமரை அந்த முதியோர் இல்லத்துக்கு வந்து நான்கு வருஷங்கள் ஆயிற்று.

அன்று திங்கக் கிழமை.மணி ஒன்பது அடித்தும் செந்தாமரை காலை நாஷ்டா சாப்பிடவே வரவில்லை.இதைக் கவனித்த சிஸ்டர் நிர்மலா சிஸ்டர் மேரியை கூப்பிட்டு “’சிஸ்டர் மேரி,’சிஸ்டர்’ செந்தாமரை அம்மா இன்னைக்கு இன்னும் நாஷ்டா சாப்பிடவே வர வில்லையே.ஒரு வேளை அவங் களுக்கு உடம்பு ஏதாச்சும் சரி இல்லாம இருக்குதோ என்னவோ.நீ உடனே அவங்க ரூமுக்குப் போய் கொஞ்ச அவங்களை பாத்து வா”என்று கவலையுடன் சொல்லி ‘சிஸ்டர்’ மேரியை செந்தாமரை ரூமு க்கு அனுப்பினார்.’சிஸ்டர்’ மேரி செந்தாமரையின் ரூமுக்கு பயந்துக் கொண்டே வந்தார்.செந்தாமரை யின் ரூம் லேசாகத் திறந்து இருந்தது.’சிஸ்டர்’ மேரி செந்தாமரையின் ரூமை மெல்லத் திறந்துக் கொண்டு உள்ளே போனார்.செந்தாமரை கழுத்து வரைப் போர்த்திக் கொண்டு தூங்கி கொண்டு இருந்தாள்.

‘சிஸ்டர்’ மேரி மெல்ல செந்தாமரை அருகில் போய் “‘சிஸ்டர்’ ‘சிஸ்டர்’ ”என்று குரல் கொடுத் தார் செந்தாமரை அசைவு ஒன்றும் இல்லமல் படுத்து இருக்கவே மேரிக்கு பயம் வந்து விட்டது.மேரி உடனே இன்னும் கொஞ்சம் சத்தமாக ” ’சிஸ்டர்,’சிஸ்டர்’ “என்று குரல் கொடுத்தார்.செந்தாமரை உடலில் அசைவே இல்லை.பயந்துப் போய் மேரி செந்தாமரை கையைத் தொட்டுப் பார்த்தார்.செந்தாம ரையின் கை ‘ஜில்’ என்று இருந்தது.

மிகவும் பயந்துப் போய் மேரி செந்தாமரை ரூமை விட்டு உடனே ஓடி வந்து ‘சிஸ்டர்’ நிர்மலா விடம் “சிஸ்டர்,அவங்க உடம்பு ‘ஜில்’லுன்னு இருக்கு.அவங்க இன்னும் தூங்கிக் கிட்டு இருக்காங்க” என்று சொல்லும் போது மேரி முகம் பூராவும் வேர்த்து கொட்டி இருந்தது.

உடனே ‘சிஸ்டர் நிர்மலா’ தன் செல் போனை எடுத்து,இல்லத்தின் டாக்டர் கிட்டே போன் பண்ணி “டாக்டர்,’சிஸ்டர்’ செந்தாமரை இன்னும் தன் ரூமை விட்டு எழுந்து வெளியே வரலே. நான் ‘சிஸ்டர் மேரியை’ அவங்க ரூமுக்கு அனுப்பிப் பாத்து வரச் சொன்னேன்.இப்ப ‘சிஸ்டர் மேரி’ என்னிடம் ஓடி வந்து ‘அவங்க இன்னும் தூங்கிக் கிட்டு இருக்காங்க,ஆனா அவங்க உடம்பு ‘ஜில்’ லுன்னு இருக்கு’ சொல்லி விட்டு என் கிட்டே பயந்து கிட்டு நின்னுக் கிட்டு இருக்கா.நீங்க தயவு செஞ்சி உடனே ’சிஸ்டர்’ செந்தாமரை ரூமுக்கு வாங்க.நானும் அங்கே போறேன் டாக்டர்” என்று சொன்னதும் அந்த இல்லத்தின் டாக்டர் “சரி சிஸ்டர்.நான் இப்ப உடனே ‘சிஸ்டர்’ செந்தாமரை ரூமு க்கு வறேன்”என்று சொல்லி விட்டு தன் செல் போனை ‘ஆப்’ பண்ணி விட்டு ‘ஸ்டெதஸ்கோப்பை’ எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு செந்தாமரை ரூமுக்கு வந்தார்.

செந்தாமரை ரூமுக்கு வந்த டாகடர் செந்தாமரை கையில் நாடியைப் பார்த்தார்.கையை கிழே மெதுவாக விட்டு விட்டு ‘ஸ்டெதஸ் கோப்பை’ தன் காதுகளில் பொருத்திக் கொண்டு செந்தாமரை இதயத் துடிப்பை சோதனைப் பண்ணீனார்.இரண்டு மூன்று இடங்களில் ‘ஸ்டெதஸ்கோப்பை’ வைத்துப் பார்த்த டாக்டர் உடனே தன் ‘ஸ்டெதஸ்கோப்பை’க் கழட்டி விட்டு “’சிஸ்டர்’,இவங்க இறந்துப் போய் ஆறு மனிக்கு மேலே ஆயிடுச்சி.இவங்களுக்கு ‘மாஸிவ் ஹார்ட் அட்டாக்’வந்து இவங்க தூக்கத்திலேயே இறந்துப் போய் இருக்காங்க” என்று வருத்ததுடன் சொன்னார்.

டாகடர் சொன்னதைக் கேட்டு ‘சிஸ்டர் நிர்மாலாவுக்கு’த் தூக்கி வாரிப் போட்டது. உடனே ‘சிஸ்டர் நிர்மலா’ “அப்படியா டாக்டர்.இவங்களுக்கு இருதய நோய் இருப்பதாகவோ,இல்லை ரத்த அழுத்தம் இருப்பதாகவோ,இது வரை என் கிட்டே சொல்லவே இலையே” என்று கேட்ட போது டாக்டர் “இவை எல்லாம் இருக்கணும்ன்னு அவசியமே இல்லே ‘சிஸ்டர்’. ஒருத்தருக்கு ‘மாஸிவ் ஹார்ட் அட்டாக்’ எப்போதும் வேணுமானாலும் வரலாம்.அது அதிக சந்தோஷத்தாலும் வரலாம்,அதிக துக்கத்தாலும் வரலாம் ‘சிஸ்டர்’” என்று சொன்னார்.

உடனே ‘சிஸ்டர் நிர்மலா’ ஒரு ‘ஐஸ் பெட்டிக்கு’ஏற்பாடு பண்ணினார்.அந்த ஐஸ் பெட்டி வந்ததும் எல்லோருமாகப் பிடித்து செந்தாமரையின் பூத உடலை அந்த ‘ஐஸ் பெட்டியில்’ வைத்து செந்தாமரையின் பூத உடலை ‘ப்ரேயர் ஹாலில்’ ஒரு உயர்ந்த ‘டேபிள் ‘மேலே வைத்து, அந்த ‘ஐஸ் பெட்டி’ மேலே எல்லா ‘நிர்மலா சிஸ்டரும்’ மற்ற ‘சிஸ்டர்களும்’நிறைய பூமாலைகளை எல்லாம் போட்டார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சிஸ்டர் நிர்மலா அந்த இல்லத்தில் இருந்த எல்லா முதியவர் களையும்,பள்ளிகூட பிள்ளைகளையும் ‘ப்ரேயர் ஹாலில்’ வந்து உட்காரச் சொன்னாள்.அந்த இல்லத்தில் இருந்த எல்லா முதியவர்களும்,பள்ளிப் பிள்ளைகளும் ‘ப்ரேயர்’ ஹாலில் வந்து உட்கார் ந்துக் கொண்டார்கள்.எல்லா ‘சிஸ்டர்களும்’ ‘சிஸ்டர்’ நிர்மலா’வின் பக்கத்தில் நின்றுக் கொண்டு இறந்துப் போன செந்தாமரைக்கு வருத்ததுடன் மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் கண்களிலும் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

‘சிஸ்டர் நிர்மலா’ ‘பைபிளை’ வைத்துக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தார்.சிறுது நேரம் ஆனவுடனே ‘சிஸ்டர் நிர்மலா’ பைப்பிளை மூடி வைத்து விட்டு “இந்த ‘சிஸ்டர்’ தன் வாழ் நாள் பூராவும் ஒரு ‘மெழுவர்த்தி’ போல தன்னை எரிச்சு கிட்டு,தன்னை சுத்தி இருந்த அனைவருக்கும் வெளிச்சம்’ குடுத்து விட்டு,இப்போ தனது கடமை எல்லாம் முடிஞ்சு விட்ட நிம்மதியிலே இந்த உலகத்தைப் விட்டு சந்தோஷமா போய் இருக்காங்க.இவங்க ஆத்மா சாந்தி அடைய நாம எல்லோரும் ரெண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தலாம்” என்று சொன்னதும் எல்லா முதியவர்களும்,பள்ளீப் பிள்ளைகளூம்,தங்கள் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு,எழுந்து நின்றுக் கொண்டு ரெண்டு நிமிஷம் மௌனம் அஞ்சலி செலுத்தினார்கள்.

ரெண்டு நிமிஷம் ஆனதும் எல்லா முதியவர்களும்,பள்ளிப் பிள்ளைகளும்,எழுந்து போய் செந்தாமரையின் பூத உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.அவர்கள் கண்களீல் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

அடுத்த ஒரு மணி ஆனதும் ‘சிஸ்டர்’ நிர்மலா மற்ற ‘சிஸ்டர்களும்’ ஒன்றாக கலந்துப் பேசி செந்தாமரையை அந்த இல்லத்திலேயே ஒரு ஓரத்தில் அடக்கம் பண்ணுவது என்று தீர்மானித்து அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்தார்கள்.எல்லா ஏற்பாடுகளும் முடிந்ததும் செந்தா மரையின் பூத உடலை அந்த இல்லத்தின் ஒரு கோடியில் அடக்கம் செய்தார் ‘சிஸ்டர் நிர்மலா’.

ஒரு வாரம் கழித்து ‘சிஸ்டர்’ நிர்மலா செந்தாமரை புதைத்த இடத்திலே ஒரு கல்லறையைக் கட்டி அதன் மேலே
சேற்றிலே மலர்ந்த செந்தாமரை இங்கே நிம்மதியாக
உறங்குது.
என்கிற எழுத்துக்கள் செதுக்கிய ஒரு பளிங்குக் கல்லை பதிக்க வைத்தார்.

அன்றில் இருந்து ஒவ்வொரு திங்கட் கிழமையும் ‘சிஸ்டர்’ நிர்மலாவும்,மற்ற ‘சிஸ்டர்களும்’ எல்லா முதியர்களும், பள்ளிப் பிள்ளைகளும், செந்தாமரையின் கல்லறைக்கு மலர் வளையங்கள் வைத்து வந்து செந்தாமரையை மறக்காமல் இருந்து வந்தார்கள்.

முற்றும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *