சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 7,643 
 

அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 | அத்தியாயம்-25

முதியோர் இல்லத்திற்கு வந்த கணபதியும்,சாந்தாவும் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவர்கள் இடத்தில் படுக்கப் போனார்கள்.படுத்ததும் கணபதி சந்தோஷத்தில் சாந்தாவைப் பார்த்து “சாந்தா,நாம இன்னைக்கு செந்தாமரையை கோவிலிலே பாப்போம்ன்னு கனவிலே கூட நினைக்கலே. நான் தினமும் வேண்டி வர அந்த முருகப் பெருமான் தான் அவளை நம் கண் முன்னாலே காட்டி, அவ நம்மை சென்னைக்கு அழைச்சுப் போற புத்தியையும் அவளுக்கு குடுத்து இருக்கார். இது அவர் அனுக்கிகம் தான் சாந்தா” என்று சந்தோஷத்துடன் சொல்லி விட்டு தன் கண்களில் வழிந்துக் கொண் டு இருந்த கண்ணீரைத் துடைத்தார்.அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந் தது.உடனே சாந்தாவும் “ஆமாங்க,இத்தனை வருஷத்துக்கு அப்புறமா செந்தமரை நம் கண்ணீலே தென்படுவான்னு நான் எதிர் பாக்கவே இல்லீங்க.எனக்கு இன்னும் எல்லாமே ஒரு கனவிலே நடந்தா மாதிரி தாங்க இருக்கு.கோவிலிலே நடந்ததை இன்னும் என்னால் நமப்வே முடியலீங்க” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.

ஞாயிற்றுக் கிழமை காலையிலே செந்தாமரையையும் ரேவதி ‘மிஸ்ஸும்’ ‘எக்ஸ்கர்ஷனில்’ ‘ஸ்டூடண்ட்ஸ்’ களை எல்லாரையும் அழைச்சுக்கிட்டு வந்து சென்னைக்கு வந்தார்கள். எல்லா ‘ஸ்டூடண்ட்ஸ்’களையும் பள்ளீகூடத்தில் பத்திரமாகக் கொண்டு வந்து விட்டு விட்டு,செந்தாமரை தன் ஹாஸ்டலுக்கு வந்தாள்.ரேவதி ‘மிஸ்’ அவள் வீட்டுக்குக் கிளம்பிப் போனாள்.

அடுத்த நாள் பள்ளிக் கூடத்தை விட்டு ஹாஸ்டலுக்கு வந்த செந்தாமரை குளித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணி கொண்டு நாஷ்டா சாப்பிட்டு விட்டு விடு தேடி தரும் ‘ப்ரோக்கரை’ தேடிப் போனாள். அந்த ‘ப்ரோக்கர்’ உடனே செந்தாமரைக்கு அவ பள்ளீ கூடத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் நாலு வீடுகளைக் காட்டினார்.செந்தாமரை அந்த நாலு வீட்டையும் பார்த்து விட்டு,தரை மட்டத்தில் இருக்கிற ஒரு ‘ப்லாட்டை’ செலக்ட் பண்ணீ,அந்த வீட்டுக்காரர் கிட்டே வாடகையைப் பேசி, அதற்கு ‘அட்வான்ஸ்’ பணத்தையும் கொடுத்து விட்டு அவரிடம் ”சார், நான் நாளையில் இருந்து இங்கே குடித்தனம் வறேன்” என்று சொல்லி விட்டு வந்தாள்.‘ப்ரோக்கருக்கு’ கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாள் செந்தாமரை.பிறகு ஒரு பாத்திரக் கடையில் பால் காய்ச்ச ஒரு பாத்திரத் தையும்,பால் பூத்தில் ஒரு பால் பாக்கெடையும், மளிகைக் கடையில் கொஞ்சம் சக்கரையும்,ஒரு ‘காஸ்’அடுப்பையும் வாங்கிக் கொண்டு தான் வாடகைக்குப் பார்த்து இருக்கும் வீட்டுக்கு வந்து வீட்டுகாரா¢டம் வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் போய்,‘காஸ்’ அடுப்பில் பாலைக் காய்ச்சி,அதில் கொஞ்சம் சக்கரையைப் போட்டு தன்னுடன் கொண்டு வந்து இருந்த பிள்ளையார் படத்திற்கு ‘நிவேதனம்’ பண்ணீ விட்டு அவளும் அந்த பாலைக் குடித்தாள் செந்தாமரை.

அவள் தன் மனசில் ‘இனிமே ஒரு கவலையும் இல்லே.கணபதி சாரையும்,அவங்க சம்சார த்தையும்,இந்த வீட்டுக்கு அழைச்சு கிட்டு வந்து,அவங்க காலம் முடியும் வரைக்கும் அவங்களை சந்தோஷமா வச்சு இட்டு வரணும்”என்று தன் மனதில் ஆசைப் பட்டாள் செந்தாமரை.பள்ளீக் கூடம் முடிந்ததும் வீட்டுக்கு வேண்டிய ஒரு ‘சோபா செட்’,ரெண்டு கட்டில்,மெத்தைகள், தலையணகள், ’ஒரு டைனிங்க்’ டேபிள்,நாலு சேர், குளிக்க ‘பக்கெட்கள்’ முக்கியமான சமையல் செய்ய பாத்திரங்கள், மளிகை சாமான்கள்,’ப்லாஸ்டிக்’ டப்பாக்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு அந்த வீட்டுக்கு வந்தாள். வீட்டுக்கு வந்து செந்தாமரை எல்லா மளிகை சமான்களையும் ‘ப்லாஸ்டிக் டப்பாக்களில் கொட்டி வைத்து விட்டு,எல்லா டப்பா மேலேயும் என்ன மளிகை சாமான்கள் எந்த டாப்பாவில் இருக்கு என்று தெரியும் படி பெயர் எழுதி ஒட்டினாள்.வாடிக்கையாக பால் போடும் ஆசாமியிடம் தனக்கு ரெண்டு ‘பாக்கெட்’ பால் தினமும் போடும் படி சொல்லி விட்டு அதற்கான பணத்தையும் அவர் கிட்டே கொடு த்தாள்.வீட்டு வேலை செஞ்சு வர ஒரு வேலைக்காரியையும்,சமை யல் செய்ய ஒரு சமையல் கார அம்மாவையும் ஏற்பாடு பண்ணீனாள் செந்தாமரை.அந்த வீட்டில் ஒரு டீ.வி.யையும் ஒரு ரேடியோ வையும் வாங்கி வைத்தாள்.

சனிகிழமை காத்தாலே செந்தாமரை அவ தங்கி இருந்த ‘லேடீஸ் ஹாஸ்டலுக்கு’ அன்று வரை கொடுக்க வேண்டிய வாடகைப் பணத்தை கொடுத்து விட்டு,தன் ரெண்டு ‘சூட் கேஸையும்’ எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்துக் கொண்டாள்.அன்று இரவே செந்தாமரை பாண்டியன் ‘எக்ஸ்ப்ரஸ்’ வண்டி ஏறி ஞாயிற்றுக் கிழமை காலையில் மதுரைக்கு வந்து சேர்ந்தாள். ‘ஸ்டேஷனை’ விட்டு வெளியே வந்த செந்தாமரை பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் ஒரு ‘ரூம்’ எடுத்துக் கொண்டு குளித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணீக் கொண்டு நாஷ்டா சாப்பிட்டு விட்டு கணபதி தங்கி இருந்த முதியோர் இல்லத்திற்கு வந்தாள்.

செந்தாமரை அந்த இல்லத்தின் மானேஜரிடம் விசாரித்துக் கொண்டு கணபதியும் சாந்தாவும் இருக்கும் ரூமுக்கு வந்தார்கள்.அந்த ரூம் எட்டு அடிக்கு எட்டு அடி தான் இருந்தது.அந்த ரூமில் அவர்களுடன் இன்னும் நாலு பேர்கள் இருந்து வந்தார்கள்.எல்லோருக்கும் ‘காமனாக’ ஒரு ஆண்கள் ‘பாத்ரூமும்’,’ஒரு பெண்கள் ‘பாத்ரூம்’ மட்டும் தான் இருந்தது.ஒரு நிமிஷம் செந்தாமரை “இவங்க எப்படி கார்,பொ¢ய வீடு, கை நிறைய சம்பளம்,எல்லாம் வாங்கி வந்து,ஒரு பணக்கார வாழக்கை வாழ் ந்து வந்துக் கொண்டு இருந்தாங்க.எனக்கு ஒரு தனி ரூம் வேறே கொடுத்தாங்களே.எனக்கு வயிறார சாப்பாடு கூடப் போட்டாங்களே.ரெண்டு வருஷம் எனக்கு பள்ளீக் கூட சம்பளம் கட்டி என்னை பன் னாடாவது வரை படிக்க வச்சாங்களே.பாவம் இவங்களுக்கா இந்த ‘அவல வாழக்கை’ என்று நினைத்த போது செந்தாமரைக்கு அழுகை அழுகையாக வந்தது.தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள் செந்தாமரை.

கணபதியைப் பார்த்து “அப்பா,அம்மா, நான் சொன்னபடி இன்னைக்கு வந்து விட்டேன்” என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனாள்.செந்தாமரையைப் பார்த்த்தும் கணபதிக்கும் சாந்தாவுகும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.செந்தாமரையைப் பார்த்து ரெண்டு பேரும் “வந்து விட்டாயாம்மா” என்று சந்தோஷத்துடன் கேட்டார்கள்.செந்தாமரை கொஞ்ச நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு “அப்பா,நான் இந்த இல்லத்தின் மானேஜரிடம் என்னை அறிமுகம் பண்ணீ கிட்டு, அவர் கிட்டே உங்களை என் கூட அழைச்சுப் போக ‘பர்மிஷன்’ வாங்கி வறேம்ப்பா” என்று சொல்லி வீட்டுக் கிளம்பிப் போனாள்.

செந்தாமரை அந்த இல்லத்தின் மானேஜரைப் போய் பார்த்தாள்.அவரிடம் செந்தாமரை “சார், என் பேர் செந்தாமரை.நான் சென்னையிலே இருக்கிற நுங்கம்பாக்காம் ஹை ஸ்கூலில் ஒரு ‘சீனியர்’ கணக்கு வாத்தியாரா வேலை செஞ்சு வறேன்.உங்க இல்லத்திலே இருந்து வர கணபதி என்பவரும், அவர் சம்சாரமும்,அந்த நாள்ளே எனக்கு பண்ண உதவிக்கு,நான் அவங்களை என் கூட அழைச்சுப் போய் என் கூட வச்சுக் கிட்டு வந்து,பிரதி உபகாரம் பண்ணனும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு. நீங்க தயவு செஞ்சி எனக்கு ‘பர்மிஷன்’ குடுத்தா,நான் அவங்க ரெண்டு பேரையும் என் கூட சென்னைக்கு அழைச்சு கிட்டு போய்,என் கூட சந்தோஷமா வச்சுக் கிட்டு வர ரொம்ப ஆசைப்பட றேன்.நீங்க அவங்களை என் கூட சென்னைக்கு அழைச்சுப் போக ‘பர்மிஷன்’ தருவீங்களா சார்” என்று தன் கையைக் கூப்பிக் கொண்டு கேட்டாள்.அந்த மானேஜர் செந்தாமரையை ஏற இறங்கப் பார்த்தார்.பிறகு அவர் “அம்மா,நீங்க கேக்கறீங்கனு எல்லாம்,நான் அவங்களை உங்க கூட அனுப்ப முடியாதும்மா.முதல்லே நான் அவங்களை இங்கே வர வழைச்சு,’உங்களை அவங்களுக்கு தெரியுமா ன்னு விசாரிக்கணும்.அப்புறமா அவங்க உங்க கூட சென்னைக்கு வர சம்மதிக்கிறாங்களா,இல்லையா’ ன்னு கேக்கணும்.அப்புறமா தான் நான் உங்களுக்கு ஒரு பதில் சொல்ல முடியும்” என்று சொல்லி விட்டார்.

செந்தாமரைக்கு மிகவும் ஏமாற்றமாய் போய் விட்டது.‘இந்த மானேஜர் அவங்க ரெண்டு பேரையும் தன்னுடன் அனுப்புவாரா மாட்டாரா என்கிற பயம் வந்து விட்டது செந்தாமரைக்கு.அவள் தினமும் தான் வேண்டி வரும் பிள்ளையாரை தன் மனதில் நன்றாக வேண்டிக் கொண்டாள்.அந்த மானேஜர் அங்கு இருந்த ஒரு பையனைப் பார்த்து “டே கோபால்,ரூம் நம்பர் பதினைஞ்சுலே கணபதி ன்னு ஒருத்தரும்,அவங்க சம்சாரமும் இருப்பாங்க.அவங்களை மானேஜர் கூப்பிடுகிறார்ன்னு சொல்லி உடனே அவங்களை உன் கையோடு இங்கே அழைச்சிக் கிட்டு வா” என்று சொல்லி அனுப்பினார். அந்தப் பையனும் உடனே ரூம் நம்பர் 15க்குப் போய் கணபதியிடமும்,சாந்தாவிடமும், மானேஜர் சொன்னதை சொல்லி விட்டு அவர்கள் ரெண்டு பேரையும் கையோடு அழைத்துக் கொண்டு மானேஜர் ரூமுக்கு போனான்.

மானேஜர் கணபதியையும் சாந்தாவையும் பார்த்து “இந்த அம்மாவை உங்களுக்குத் தெரியுமா. நீங்க அந்த நாள்ளே இவங்களுக்கு உதவி பண்ணீங்களாம்.அதுக்கு இவங்க உங்களுக்கு பிரதி உபகாரம் பண்ணனும்ன்னு ஆசைப் படறதா சொல்றாங்க.இது எல்லாம் உண்மையாங்க” என்று கேட்டு கணபதியின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.கணபதி உடனே “சார்,இந்த அம்மா சொல்றது நுத்துக்கு நூறு நிஜங்க” என்று சொன்னார்.மானேஜர் “அப்படியா.சரி.இப்போ இவங்க உங்களை சென்னைக்கு இட்டு கிட்டு போய்,அவங்க,கூட வச்சு கிட்டு வர ஆசைப்படறாங்க. நீங்க ரெண்டு பேரும் இந்த அம்மா கூட சென்னைக்கு போய் இவங்க கூட இருந்து வர ஆசைப்படறீங்களா” என்று கேட்டார்.கணபதி யும் சாந்தாவும் “நாங்க இவங்க கூட சென்னைக்குப் போய் இவங்க கூட இருந்து வர ஆசைப் படறோமுங்க” என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.
“அப்படின்னா சரி.நீங்க இவங்க ரெண்டு பேரையும் அழைச்சுக் கிட்டு சென்னைக்குப் போறதா ஒரு லெட்டர் எழுதி,அதிலே உங்க பேரையும்,உங்க வீட்டு விலாசத்தையும்,உங்க போன் நம்பரையும் எழுதி,அப்புறமா அதிலே உங்க கையெழுத்தையும் போட்டு என் கிட்டே குடுங்க.நான் இவங்க ரெண் டு பேர் கிட்டேயும் ‘நாங்க இவங்க கூடபோவது பிடிச்சி இருக்கு’ ன்னு எழுதி கையெழுத்தையும் வாங்கி கிட்டு,அப்புறமா நான் இவங்க ரெண்டு பேரையும் உங்க கூட அனுப்பறேன்” என்று சொன்ன தும் செந்தாமரை அந்த மானேஜர் சொன்னதைப் போல எழுதி கையேழுத்தை போட்டு ,தன் வீட்டு விலாசத்தையும்,போன் நம்பரையும் எழுதிக் கொடுத்தாள்.

அந்த மானேஜர் கணபதி கிட்டேயும்,சாந்தா கிட்டேயும் ‘எங்களுக்கு இவங்க கூட போக சம்மதம்’ ன்னு எழுதி கையெழுத்தையும் வாங்கிக் கொண்டார்.பிறகு அந்த மானேஜர் செந்தாமரை யைப் பார்த்து “இப்ப நீங்க இவங்க ரெண்டு பேரையும் அழைச்சுக் கிட்டு போவலாம்ங்க” என்று சொன்னார். உடனே செந்தாமரை அந்த மானேஜரை தாங்க் பண்ணினாள்.கணபதியும் சாந்தாவும் அவருக்கு நன்றி சொல்லி விட்டு,ரூமுக்கு வந்து அவர் கள் துணிமணிகளை எடுத்துக் கொண்டு, அந்த ரூமில் இத்தனை வருஷமா ஒன்னா இருந்து வந்த மற்ற முதியர்வகளிடம் சொல்லிக் கொண்டு செந்தாமரையுடன் அந்த முதியோர் இல்லத்தை விட்டு வெளீயே வந்தார்கள்.வெளியே வந்த செந்தாம ரை அவர்கள் ரெண்டு பேரையும் பக்கத்தில் இருந்த ஒரு பொ¢ய ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய் ரெண்டு பேருக்கும் வயிறார ‘டிபனையும்’ ‘காபியையும்’ வாங்கிக் கொடுத்தாள். பிறகு செந்தாமரை அவர்கள் ரெண்டு பேரையும் அழைத்துக் கொண்டு தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்தாள்.மதியம் சாப்பாடு சாப்பிட்ட பிறகு அவர்கள் இருவரையும் ஹோட்டலில் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொள்ளச் சொன்னாள்.

அன்று இரவே செந்தாமரை ரெண்டு பேரையும் பாண்டியன் ‘எக்ஸ்ப்ரஸ்ஸீல்’ ஏற்றி கொண்டு சென்னைக்கு வந்து இறங்கி,பிறகு ஒரு ஆட்டோப் பிடித்து தன் வீட்டுக்கு அழைத்து வந்தாள். செந்தாமரை வீட்டைத் திறந்து உள்ளே வந்த ரெண்டாவது நிமிஷமே பால்காரர் ரெண்டு பாக்கெட் பாலைக் கொடுத்து விட்டுப் போனார்.செந்தாமரை கணபதியையும் சாந்தாவையும் சௌகா¢யமாக புதிதாக வாங்கி வந்த ‘சோபா செட்டில்’ உட்கார சொன்னாள்.அவள் வீட்டு ‘காலிங்க் பெல்’ அடித் தது.செந்தாமரை வாசல் கதவைத் திறந்தாள்.அவள் ஏற்பாடு பண்ணீ இருந்த சமையல்கார அம்மா நின்றுக் கொண்டு இருந்தாள்.செந்தாமரை அந்த சமையல்கார அம்மாவை உள்ளே வரச் சொல்லி அந்த அம்மாவை பார்த்து ”நான் வீட்டுக்கு வேண்டிய மளிகை சாமாங்கள் கொஞ்சம் வாங்கி வச்சு இருக்கேன்.நீங்க இவங்க என்ன சாப்பிட கேக்கறாங்களோ,அதை எல்லாம் சமைச்சுப் போடுங்க. பக்கத்திலே இருக்கிற ‘சூப்பர் மார்கெட்டிலே’ உங்களுக்கு வேண்டிய சாமான்கள்,காய்கறிகள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து எனக்கு சொல்லுங்க.நான் அப்புறமா அந்த ‘சூப்பர் மார்கெட்டுக்கு’ப் பணத்தைக் குடுத்து விடறேன்”என்று சொன்னாள்.உடனே அந்த சமையல்கார அம்மா “சரிங்க. நீங்க சொன்னபடியே நான் செய்யறேங்க”என்று சொன்னதும் செந்தாமாரை அந்த சமையல் கார அம்மா விடம் “முதல்லே நீங்க எங்க மூனு பேருக்கும் நல்ல சூடா ‘காபிப்’ போட்டுக் குடுங்க” என்று சொன்னாள்.

அதுவரை தன் துக்கத்தை அடக்கி வைத்துக் கொண்டு இருந்த சாந்தா எழுந்து நின்றுக் கொண்டு “அம்மா செந்தாமரை,இவரும் நானும் உன்னை நல்லா படிக்க வைக்கிறோம்னு சொல்லி மதுரைக்கு அழைச்சுக் கிட்டு வந்தோம்.ஆனா எனக்கு ஒரு பையன் பொறந்ததும்,நான் எனக்கு ஒரு குழந்தை பொறந்து விட்டகர்வத்தாலேயும்,என் அம்மாவும்,பக்கத்து இருக்கிறவங்க சொன்னதாலும், நான் உன்னை எங்க வீட்டைவிட்டேவெளியே போக சொன்னேம்மா.உன் காது பட பல தடவை நான் ‘அவ ஒரு சேரிப் பொண்ணு,அவ ஒரு சேரிப் பொண்ணு’ன்னு உன்னைச் சொல்லி இருக்கேம்மா. அப்படி நான் சொல்லி இருந்தும்,நீ அதை எல்லாம் மனசிலே வச்சுக்காம,எங்களை இந்த வீட்டுக்கு அழைச்சு வந்து இந்த சௌகா¢யத்தை எல்லாம் பண்ணிக் குடுத்து இருக்கேம்மா.உன் அருமைத் தெரியாம நான் உன்னை ரொம்ப அவமானப்படுத்தி விட்டேம்மா என்னை மன்னிச்சிடும்மா” என்று சொல்லி செந்தாமரையின் கைகளைப் பிடித்துக் கொண்டு விக்கி விக்கி அழுதாள்.உடனே செந்தாம ரை “அதெல்லாம் ஒன்னும் இல்லேம்மா.இன்னைக்கும் நீங்களும்,இவரும்,என்னை பெறாத பெத்த பெற்றோர்கள் தாம்மா.இப்ப எனக்கு என்னைப் பெத்த அம்மாவும்,அப்பாவும் ரெண்டு பேரும் இல்லே. .நான் இன்னியிலே இருந்து உரிமையோடு உங்க ரெண்டு பேரையும் ‘அப்பா,அம்மா’ன்னு கூப்பிடட் டுமா”என்று கேட்டதும் சாந்தா அழுது கொண்டே”நீ எங்க வயித்திலெ பொறக்காத பொண்ணுமா. நீ சேற்றறிலே பொறந்த ஒரு செந்தாமரைம்மா.நீ என்னையும் அவரையும் ‘அம்மா’ ‘அப்பா’ ன்னுக் கூப்பிட நாங்க குடுத்து வச்சு இருக்கணும்மா.தாராளமா கூப்பிடும்மா.அதை நான் என் காதார கேக்க ணும்மா” என்று சொல்லி அழுதுக் கொண்டே செந்தாமரையைக் கட்டிக் கொண்டாள் சாந்தா.செந்தா மரை சாந்தா சொன்னதை கேட்டு மிகவும் சந்தோஷப் பட்டாள்.சமையல்கார அம்மா சூடா மூனு ‘காபியை’ப் போட்டுக் கொண்டு வந்து மூவரிடமும் கொடுத்தாள்.கணபதியும் சாந்தாவும் செந்தா மரையும் சமையல் கார அம்மா கொடுத்த அந்த ‘காபியை’ ரசித்து குடித்தார்கள்.முதியோர் இல்லத் தில் அவர்கள் கொடுத்து வந்த சூடு கம்மியான,தண்ணி ‘டீயை’க் குடித்து வந்த கணபதிக்கும். சாந்தாவுக்கும்,சமையல் கார அம்மா கொடுத்த ‘காபி தேவாம்ருதமாக இனித்தது.இருவரும் அந்த காபியை மிகவும் ரசித்துக் குடித்தார்கள்

முதியோர் இல்லத்தில் கஷ்டப் பட்டு வாழ்ந்து வந்த கணபதி க்கும் சாந்தாவுக்கும் தங்கள் வாழ்க்கையிலே இந்த மாற்றம் ஏற்படும் என்று கனவிலும் நினைக்க வில்லை.ரெண்டு பேரும் அவர்கள் தினமும் வேண்டி வரும் முருகப் பெருமானுக்கு தங்கள் நன்றியை சொல்லிக் கொண்டார்கள்.

செந்தாமரை குளித்து விட்டு சமையல்கார மாமி செய்த ‘நாஷ்டாவை’ சாப்பிட உட்கார்ந்தாள். செந்தாமரை கணபதியையும்,சாந்தாவையும் கூப்பிட்டு “இனிமே நான் வீட்டிலே இருக்கும் போது நாம மூனு பேரும் ஒன்னா உக்காந்துக் கிட்டு சாப்பிடலாம்.இந்த ரெண்டு வருஷமா நான் அந்த ‘ஹா ஸ்டலில்’ ரொம்ப தனியா இருந்து வந்தேன்.இப்ப நான் தினமும் வேண்டி வரும் பிள்ளையார் எனக்கு என் அம்மாவையும், அப்பாவையும் மறுபடியும் குடுத்து இருக்காரு.வாங்க நாம எல்லாரும் ஒன்னா உக்காந்து நாஷ்டாவை சாப்பிடலாம்” என்று சொல்லி கணபதியையும் சாந்தாவையும் உரிமையோடு கூப்பி ட்டாள்.உடனே அவர்கள் ரெண்டு பேரும் செந்தாமரையுடன் ஒன்றாக உட்கார்ந்துக் கொண்டு நாஷ்டாவை சாப்பீடார்கள்.செந்தாமரை கணபதியைப் பார்த்து ”அப்பா,நீங்க சுமதி அம்மா அப்பாவை போய் பார்த்துட்டு வரணுமா”என்று கேட்டாள்.அதற்கு கணபதி “அவங்க இப்போ சென்னையிலே இல்லேம்மா.சுமதிக்குக் கல்யாணம் ஆன ஆறாவது மாசமே,அவ புருஷனுக்கு மும்பையிலே ஒரு நல்ல வேலைக் கிடைச்சுதும்மா.சுமதியின் அப்பா வேலையிலே இருந்து ரிடையர் ஆனதும் அவங்க பொண் ணு மாப்பிளை கூட இருந்து வர,அவங்க மும்பைக்குப் போய் விட்டாங்க.அவங்க கிட்ட இது நாள் வரைக்கும் எங்க சோகக் கதையை நாங்க சொல்லவே இல்லேம்மா” என்று சொல்லி கண்ணீர் விட்டார். உடனே செந்தாமரை “அழாதீங்கப்பா.உங்க சோகக் கதையை வெளியே யார் கிட்டேயும் சொல்லிக் கொள்ற மாதிரி இல்லீயேப்பா” என்று சொல்லி செந்தாமரையும் வருத்தப் பட்டாள்.பிறகு செந்தாமரை அவர்களிடம் “அம்மா,அப்பா,நான் பள்ளீக் கூடம் போய் வறேன்.நீங்க சொன்ன சமையலை,அந்த சமையல் கார அம்மா செஞ்சு போடுவாங்க நீங்க ரெண்டு பேரும் மதியம் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு நல்லா ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொள்ளுங்க.உங்களுக்கு பிடிச்ச டீ.வீ. ‘ப்ரோக்ராமை’ ‘டீ. வியிலே’ பாருங்க.அப்பா நானும் என் கூட கணக்கு வாத்தியாரா வேலை செஞ்சுக் கிட்டு வரும் ராஜேஷூம், ஆராய்ச்சி செஞ்சு பத்தாவது வகுப்புக்கும்,பன்னாடாவது வகுப்புக்கும் ஒரு கணக்கு புஸ்தகம் போட்டு அதை எங்க பழைய ‘பிரின்ஸிபால்’ முன்னுறை எழுதி,அவர் நண்பர் கிட்டே சொல்லி ‘பப்ளிஷ்’ பண்ணினாருப்பா.அந்த ரெண்டு புஸ்தகங்கள் தாங்க இந்த ரெண்டும்.நீங்க இந்த புஸ்தகங்களை படிச்சு பாருங்க.இந்த ரெண்டு புஸ்தகங்களுக்கும் எங்க ரெண்டு பேருக்கும் ‘ஷேர்’ பணம் கூட வருதுப்பா ”என்று சொல்லி விட்டு ‘பப்ளிஷ்’ ஆன பத்தாவது,பன்னாடவது கணக்கு புஸ்தகங்க¨ளை கணபதி இடம் கொடுத்தாள்.

உடனே கணபதி செந்தாமரையைப் பார்த்து “அப்படியா செந்தாமரை.எனக்கு ரொம்ப சந்தோ ஷமா இருக்கும்மா.நீங்க ரெண்டு பேரும் கணக்கு புஸ்தகங்கள் போட்டு இருக்கீங்களா.அந்த புஸ்த கங்களை குடும்மா.நான் அவைகளைப் படிச்சுப் பாக்கிறேன்” என்று சொல்லி செந்தாமரை கொடுத்த புஸ்தகங்ககளை வாங்கிக் கொண்டார்.தான் கொண்டு வந்த ரெண்டு கணக்கு புஸ்தகங்களையும் கணபதியிடம் கொடுத்து விட்டு செந்தாமரை பள்ளீக் கூடத்திற்குக் கிளம்பினாள்.குளித்து விட்டு கணபதி செந்தாமரை கொடுத்த ரெண்டு கணக்கு புஸ்தகங்களையும் ஒரு பக்கம் விடாமல் படித்துப் பார்த்தார்.

உடனே அவர் சாந்தாவைப் பார்த்து “சாந்தா,செந்தாமரையும் அந்த ராஜேஷ¤ம் போட்டு இருக்கும் இந்த ரெண்டு கணக்கு புஸ்தகங்களும் பத்தாவது,பன்னடாவது படிச்சு வரும் பிள்ளை களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.கஷ்டமான கணக்குகளை எல்லாம் சுலபமாக எப்படி போடு வதுன்னு,இவங்க ரெண்டு பெரும் ஆராய்ச்சி பண்ணி இதை புஸ்தகமாகப் போட்டு இருக்காங்க. செந்தாமரை இப்படி ரெண்டு கணக்கு புஸ்தககஙளை போட்டு இருப்பதை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சாந்தா” என்று சந்தோஷத்துடன் சொன்னார்.சாயங்காலம் செந்தாமரை பள்ளீக் கூடத்தை வீட்டுக்கு வந்ததும் கணபதி “செந்தாமரை,ரெண்டு புஸ்தகங்களும் ரொம்பப் பிரமாதமா இருக்கு.பரிக்ஷ நேரத்திலே பத்தாவது பன்னாடாவது பிள்ளைங்களுக்கு இந்த புஸ்தகங்கள் ரொம்ப ரொம்ப ‘யூஸ்புல்லா’ இருக்கும். ‘க்ரேட் வர்க்’ செந்தாமரை.உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெரு மையா இருக்கு” என்று சந்தோஷத்தில் சொன்னார்.இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு செந்தாமரை டீ.வீ.யை ‘ஆன்’ பண்ணீ பார்க்க ஆரம்பித்தாள்.கணபதியும்,சாந்தாவும்,தங்கள் கண்களை இடுக்கிக் கொண்டு டீ.வீ. பார்ப்பதைப் பார்த்த செந்தாமரை “ஏம்ப்பா, ஏம்மா.நீங்க ரெண்டு பேரும் உங்க கண் களை இடுக்கிக் கொண்டு டீ.வீ.பாக்கறீங்க.உங்க கண் பார்வை சரி இல்லையா” என்று கவலையுடன் கேட்டாள்.உடனே கணபதி “ஆமாம் செந்தாமரை.ரெண்டு மூனு வருஷமா எங்க ரெண்டு பேருக்கும் கண் பார்வை சரி இல்லைம்மா.அப்படியே கஷ்டப் பட்டுக் கிட்டுத் தான் வறோம்” என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார்.“அப்படியாப்பா.நான் இப்போ தான் கவனிச்சேன்.எனக்கு அடுத்த வாரத்தில் இருந்து பள்ளிக் கூட வருடாந்திர லீவு வருது.அந்த லீவிலே நான் ஒரு நல்ல கண் டாக் டா¢டம் உங்க ரெண்டு பேரை யும் அழைச்சுக்கிட்டுப் உங்க கண்களை ‘செக் அப்’ பண்றேன்” என்று சொல்லி விட்டு செந்தாமரை டீ.வீ.யை அணைத்தாள்.

உடனே கணபதி ”செந்தாமரை கண் டாக்டர் எல்லாம் வேணாம்மா.நாங்க இப்படியே எங்க காலத்தை கழிச்சுட்டு ஒரு நாள் போய் சேருகிறோம்மா.எங்காளுக்காக நீ வீணா பணத்தை எல்லாம் ‘வேஸ்ட்’ பண்ணாதேம்மா” என்று சொன்னதும் செந்தாமரை உடனே “அப்படி எல்லாம் சொல்லாதீங்க ப்பா.என் சொந்த அம்மா அப்பா இப்படி அவங்க கண் பார்வை சரியில்லைனு சொன்னா நான் கேட்டுக் கிட்டு சும்மா இருப்பேனா. உடனே அவங்களை ஒரு நல்ல கண் டாக்டர் கிட்டே காட்டி வைத்தியம் பண்ண மாட்டேனா சொல்லுங்க.அதே போலத் தான் நீங்களும் எனக்கு.கண் டாக்டர் கிட்டே வர மாட்டேன்னு மட்டும் சொல்லாதீங்கப்பா” என்று உரிமையோடு கணபதியின் கைகளைப் பிடித்து கெஞ்சினாள்.இருவரும் ஒத்துக் கொண்டார்கள்.

செந்தாமரைக்கு வருடாந்திர லீவு ஆரம்பித்தது. செந்தாமரை அடுத்த நாளே கணபதியையும் சாந்தாவையும்ஒரு ஆட்டோவிலே ஏற்றி கொண்டு தன் அக்காவுக்கும் மாமாவுக்கும் கண் ஆபரேஷன் ஷன் பண்ணின கண் டாக்டர் கிட்டே அழைத்துப் போய் ரெண்டு பேருடைய கண்களையும் ‘டெஸ்ட்’ பண்ணச் சொன்னாள்.அந்த கண் டாக்டர் ரெண்டு பேருடைய கண்களையும் நன்றாக ‘செக் அப்’ பண்ணி விட்டு ரெண்டு பேருக்கும் ரெண்டு கண்களிலேயும் ‘காட்ராக்ட்’ வளர்த்து இருப்பதாயும் உடனே ‘ஆபரேஷன்’ பண்ண வேண்டும் என்று சொன்னார்.செந்தாமரை அந்த கண் டாக்டரைப் பார்த்து “டாக்டர் முதலில் நீங்க அப்பாவுக்கு கண் ஆபரேஷன் பண்ணுங்க.அவர் கண்கள் சரியாகி அவர் கண்ணாடிப் போட்டுக் கிட்டு அவர் பார்வை சரியான பிறகு அப்புறமா அம்மாவுக்குப் ஆபரே ஷன் பண்ணுங்க” என்று சொல்லி கணபதி கண்கள் ஆபரேஷனுக்கு பணம் கட்டினாள்.உடனே அந்த கண் டாக்டர் கணபதியை நன்றாக ‘டெஸ்ட் பண்ணீனார்.அப்போது தான் அவருக்கு உடம்பிலே BP இருப்பது தெரிந்தது.அந்த கண் டாக்டர் கணபதிக்கு BP க்கு மாதிரைகளை எழுதிக் கொடுத்து, அந்த மாதிரைகளை ஒரு வாரத்துக்கு தவறாம சாப்பிட்டு வரும் படி சொல்லி அனுப்பினார்.செந்தா மரை கணபதியையும்,சாந்தாவையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் போது ஒரு மருந்து ‘ஷாப்பில்’ டாக்டர் எழுதிக் கொடுத்த BP மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வந்தாள்.

கணபதி அந்த மாத்திரைகளை டாக்டர் சொன்னது போல ஒரு வாரத்துக்கு சாப்பீட்ட பிறகு செந்தாமரை கணபதியை அந்த கண் டாக்டா¢டம் அழைத்துப் போனாள்.அந்த கண் டாக்டர் கண தியை நன்றாக செக் அப் பண்ணி அவர் கண் ‘ஆபரேஷனுக்கு’ ‘பிட்டா’ என்று பார்த்தார். பிறகு செந்தாமரையிடம் “அம்மா இவர் கண் ‘ஆபரேஷன்னுக்கு’ ‘பிட்டாக’ இருக்காரு” என்று சொல்லி விட்டு கணபதிக்கு ஒரு கண்ணை ‘ஆபரேஷன்’ பண்ணி விட்டு அந்த கண்ணிலே ‘பாண்டேஜ்’ போட்டு வெளியே அழைத்து வந்தார்.அவர் செந்தாமரையைப் பார்த்து “ நான் இவருக்கு ஒரு கண் ணை ‘ஆபரேஷன்’ பண்ணி இவர் ‘காட்ராக்டை’ எடுத்து விட்டு கண்ணாடியைப் பொருத்தி இருக் கேன்.நான் எழுதித் தரும் கண் சொட்டு மருந்தை இங்கேயே வாங்கி கொண்டு,நான் எழுதி இருப்பது தவறாம போட்டு வாங்க.இவரை மறுபடியும் மூனு நாளைக்கு அப்புறமா மறுபடி யும் இங்கே அழைச்சி கிட்டு வாங்க.நான் இவருடைய அடுத்த கண்ணையும் ‘ஆபரேஷன்’ பண்ணீ வீட்டுக்கு அனுப்பி விடறேன்” என்று சொன்னதும் செந்தாமரை கணபதியையும், சந்தாவையும் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.மூன்று நாள் கழித்து செந்தாமரை கணபதியையும் சாந்தாவையும் அழைத்துக் கொண்டு போய் கணபதிக்கு அடுத்த கண்ணையும் ‘ஆபரேஷன்’ பண்ணீக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தாள்.கண் ‘ஆபரேஷன்’ பண்ணி ஒரு மாசம் ஆனதும் செந்தாமரை டாக்டர் கணபதிக்கு கண்க ளில் என்ன ‘பவர்’ இருந்ததோ அதற்கு சரியான ‘பவர்’ கண்ணாடியை எழுதிக் கொடுத்தார்.மூவரும் வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் இருந்த கண் கண்ணடிக் கடையில் கண் டாக்டர் கணபதயின் கண்களுக்கு எழுதி கொடுத்த ‘பவர்’ ரசீதை காட்டி கண் கண்ணடி ஆர்டர் பண்ணீனார் கள்.ஆர்டர் பண்ண கண் கண்ணடி வந்து இருக்கு என்று அந்த கண் கண்ணாடிக் கடையில் இருந்து போன் வந்ததும் செந்தாமரை கண் கண்ணடியை வாங்கி வந்து கணதியைப் போட்டுக் கொள்ள சொன்னாள். கணபதி அந்தக் கண்ணடியைப் போட்டுக் கொண்டதும் அவருக்கு பழையபடி கண்கள் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது.கணபதி சந்தோஷத்துடன் செந்தாமரையையும் சாந்தாவையும் பார்த்து “இப்ப என் கண்ணு ரெண்டும் ரொம்ப நல்லா தெரியுது” என்று சந்தோஷத்தில் சொன்னார்.

செந்தாமரை அடுத்த நாளே சாந்தாவை அந்த கண் ‘நர்ஸிங்க் ஹோமில் சேர்த்து அவளுடைய ரெண்டு கண்களையும் கண் ‘ஆபரேஷன்’ பண்ணி வந்து ஒரு மாசம் கழித்து அவளுடைய கண் ‘பவரை’ எழுதி வாங்கிக் கொண்டு வந்து கண் கண்ணாடிக் கடையில் கண்ணாடி ஆர்டர் பண்ணீ கண் கண்ணாடி ரெடி ஆகி வந்ததும் அதை வாங்கி வந்து சாந்தாவைப் போட்டுப் பார்க்கச் சொன் னாள்.கண் கண்ணாடியைப் போட்டுக் கொண்டதும் சாந்தாவுக்கு பழையபடி கண்கள் ரெண்டும் நன் றாகத் தெரிய ஆரம்பித்தது. உடனே சாந்தா ”எனக்கு என் கண் ரெண்டும் பழையபடி நல்லா தெரியுது செந்தாமரை” என்று சந்தோஷத்துடன் சொல்லி விட்டு செந்தாமரையைக் கட்டிக் கொண்டு ”செந்தாம ரை,உனக்கு நாங்க ரெண்டு பேரும் எங்க மூச்சு இருக்கிற வரைக்கும் ரொம்ப கடமைப் பட்டவங்களாக இருப்போம்மா.இந்த நல்ல செந்தாமரையை என் கீழ்தனமான புத்தியாலேயும், மத்தவங்க எனக்கு சொல்லிக் கொடுத்ததாலேயும் உன்னை நான் ‘ஒரு சேரிப் பொண்ணு’ ‘ஒரு சேரிப் பொண் ணு’ன்னு உன் காது பட சொன்னேனேம்மா.அந்த பாவம் என்னை சும்மா விடாதும்மா.என்னை நீ மன்னிச்சேன் னு ஒரு வார்த்தை சொல்லும்மா,என்னை மன்னிச்சேன்னு சொல்லும்மா” என்று மறுபடியும் மறுபடி யும் சொல்லி விட்டு விக்கி விக்கி அழுதாள்.செந்தாமரை சாந்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அழாதீங்கம்மா.நான் உண்மையிலேயெ ஒரு சேரிப் பொண்ணு தானேம்மா.நீங்களும் அப்பாவும் என்னை மதுரைக்கு அழைச்சுக் கிட்டு வராம இருந்தா,நான் அந்த சேரியிலே தானேம்மா வாழ்ந்துக் கிட்டு வந்து இருப்பேன்.இந்த மாதிரி ஒரு நல்ல கணக்கு வாத்தியாரா ஆகி நான் கை நிறைய சம்பளம் எல்லாம் வாங்கி வந்துக்கிட்டு இருந்து இருக்க முடியுமா. இந்த மாபெரும் உதவியை நீங்களும், அப்பாவும்,தானேமா எனக்குப் பண்ணி இருக்கிங்க.இந்த உதவிக்கு நான் உங்க ரெண்டு பேருக்கும் காலம் பூராவும் கடமைப் பட்டு இருக்கணுமா” என்று சொல்லி சாந்தாவின் கால்களைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.

“செந்தாமரை,நீ எங்க ரெண்டு பேரையும் கண்டு பிடிச்சு எங்களுக்குக் கண்களை ஆபரேஷன் பண்ணீ அவங்களுக்கு பழையபடி கண் ரெண் டும் நல்லா தெரியறா மாதிரி கண் கண்ணாடியும் வாங்கி போட்டு இருகேம்மா.நாங்க ரெண்டு பேரும் உனக்கு எவ்வளவு ‘தாங்க்ஸ்’ சொன்னாலும் போதாதும்மா” என்று சொல்லி செந்தாமரையின் கைகளை பிடித்து கொண்டு கணபதி அழுதுக் கொன்டே சொன்னார்.

உடனே செந்தாமரை ”அப்பா,அம்மா,நீங்க ரெண்டு பேரும் பண்ண பொ¢ய உதவிக்கு உங்க ளுக்கு நான் பண்ணாம,வேறே யாருக்குப்பா பண்ணப் போறேன்” என்று சொன்னதும் கணபதி “செந்தாமரை,உன் கிட்டே பேசி யாரும் ஜெயிக்கவே முடியாயது செந்தாமரை. நீ ஒரு ‘பார்ன்
இன்டெலிஜெண்ட் வுமன்’” என்று சொல்லி செந்தாமரையைப் புகழ்ந்தார்.

வருடாந்திர லீவு முடிந்து செந்தாமரை மறுபடியும் பள்ளிக் கூடம் போய் வர ஆரம்பித்தாள். செந்தாமரை கணபதியையும் சாந்தாவையும் அழைத்துக் கொண்டு தன் அக்கா மாமா வீட்டுக்குப் போனாள்.செந்தாமரை கணபதியையும்,சாந்தாவையும் சோபாவில் உட்காரச் சொல்லி விட்டு அவளும் பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டாள்.செந்தாமரை உட்கார்ந்துக் கொண்ட ரெண்டாவது நிமிஷமே செல்வியும் சேகர் மாமாவும் ஒன்றாக வீட்டுக்கு வந்தார்கள்.

செந்தாமரையைப் பார்த்த சேகர் “வா செந்தாமு” என்று வாய் நிறைய கூப்பீட்டார்.செல்வியும் “வாங்க சித்தி வாங்க”என்று சொல்லி விட்டு தன் டாக்டர் ‘டிரஸ்ஸை’ கழட்டி கையில் வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.செல்வி தன் சித்தியைப் பார்த்து “சித்தி,என் அப்பா வீட்டிலெ சும்மா இருந்து வந்தார்.அதனால் நான் என் ‘சீனியர்’ டாக்டர் கிட்டே சொல்லி,அவருக்கு எங்க ‘நர்ஸிங்க் ஹோமிலே’ ஒரு ‘வாச்மேன்’ வேலையை வாங்கிக் குடுத்து இருக்கேன்.அவர் என்னோடு காத்தாலே வந்து,அவர் வேலை முடிஞ்சதும் என்னோடு ஒன்னா வீட்டுக்கு வறார்” என்று சொன் னாள்.உடனே செந்தாமரை “அப்படியா செல்வி,எனக்கு ரொம்ப சந்தோஷாமா இருக்கும்மா. மாமா வேலைக்குப் போய் வருவது அவர் வயசுக்கு ரொம்ப நல்லது.அப்ப தான் அவர் தன்னை ‘ஆக்டிவ்வா’ வச்சுக் கிட்டு வர முடியும்” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை கணபதியையும் சாந்தாவையும் காட்டி “அக்கா,மாமா, செல்வி,இந்த ‘நல்லவங்க’ தான் என்னை சென்னையிலே மதுரைக்கு இட்டுக் கிட்டுப் போய்,அவங்க செலவிலே என்னை பத்தாவதும், பன் னாடாவதும் படிக்க வச்சாங்க.இவங்க மட்டும் அன்னைக்கு என்னை மதுரைக்கு இட்டு கிட்டு பேவாமஇருந்து இருந்தா நான் இன்னைக்கு இந்த நிலைக்கே வந்து இருக்க மாட்டேன்.இவங்க ரெண்டு பேரும் என்னை வாழ வச்ச தெய்வங்க” என்று தன் கண்களில் கண்ணீர் மல்க சொன்னாள்

உடனே “அப்படி எல்லாம் இல்லிங்க.செந்தாமரை ஒரு ‘பிறவி மேதைங்க’. நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க.செந்தாமரை தன் அறிவாலே பத்தாவதுலேயும்,பன்னாடாவதுலேயும் சென்னை மாநிலத் திலேயே முதலாவதாக ‘பாஸ்’ பண்ணினாள்.அப்புறம் சுந்தரம் நிறுவனம் கொடுத்த ‘ஸ்காலர்ஷிபை உபயோகப் படுத்தி BSc, MSc கணக்கு பரிக்ஷயிலே சென்னை மாநிலத்திலேயே முதலாவதாக ‘பாஸ்’ பண்ணினாள்.அவ ஒரு ‘பார்ன் இன்டெலிஜென்ட்’ பொண்ணுங்க.செந்தாமரை இவ்வளவு படிப்பு படிச்சது முழுக்க,முழக்க,அவ உழைப்பும் அறிவாற்றலும் தாங்க.நாங்க ஒன்னும் பொ¢சா செய்ய லீங்க” என்று சொல்லி செந்தாமரையை புகழ்ந்தார் கணபதி.உடனே கமலா ”ஆமாங்க எங்க செந்தாமு சின்ன வயசிலே இருந்து ரொம்ப நல்லா படிப்பாங்க.படிப்புன்னா அவளுக்கு உசிருங்க. எப்பவு ம் படிச்சுக் கிட்டே இருப்பா” என்று சந்தோஷப் பட்டுக் கொண்டு சொன்னாள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *