சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 5,925 
 

அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13

மூன்று மாதம் ஆகி விட்டது. அன்று காலையில் எழுந்ததும் சரளா அடுத்து, அடுத்து, வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாள்.இதை பார்த்த வசந்தா “ஐயையோ,ஏண்டி சரளா இப்படி வாந்தி எடுக்க றே.நான் நினைச்சது சரியாப் போச்சேடி.அந்தப் பணக்கார பையன் உன்னை ஆசை காட்டி ‘கெடுத்து’ விட்டு இருக்கானேடி.நான் இப்போ என்ன பண்ணுவேன்” என்று கத்திக் கொண்டே“யோவ், தூங்கி கிட்டு இருக்கியே எழுந்துரிய்யா.பாருயா இந்த அநியாயத்தை.அந்த பணக்கார பையன் நம்ப சரளா வை கெடுத்து விட்டு இருக்கான்யா.இவ இப்போ வாந்தி எடுக்கறாயா” என்று சொல்லி புருஷன் வரதனை உலுக்கி எழுப்பினாள்.பெஞ்சாதி உலுக்கி எழுப்பினதும் வரதன் படுக்கையை விட்டு மெல்ல எழுந்து தன் கண்களை கசக்கிக்கொண்டே”என்ன சொல்றே புள்ளே.ஏன் இப்படி என்னை காலங்கா த்தாலே என்னை உலுக்கி எழுப்பினே.என்ன சமாச்சாரம் புள்ளே” என்று கேட்டான்.வசந்தா அழுதுக் கொண்டே சரளாவைப் பத்தி எல்லா விஷயமும் வரதனிடம் சொன்னாள்.அந்த நேரம் பார்த்து காளி வசந்தா குடிசைக்கு வந்தான்.அவன் கிட்டேயும் வசந்தா சரளாவைப் பத்தி எல்லா விஷயமும் காளி யிடம் சொன்னாள்.மூனு பேருக்கும் ரத்தம் கொதித்தது.வாந்தி எடுப்பது கொஞ்சம் குறைந்தவுடன் சரளா தன் அம்மாவிடம் ‘அம்மா நான் இப்ப வாந்தி எடுக்கறதுக்கு அந்தப் பணக்கார பையன் கார ணம் இல்லேம்மா.என்னை உன் தம்பி காளி தாம்மா என்னை கெடுத்து இருக்காரு.நான் சொல்வதை கொஞ்சம் நம்பும்மா’என்று கத்தி சொல்லி ‘ஓ’ என்று அழவேண்டும் போல இருந்தது.ஆனா உடனே ‘நம்மை அப்படி சொல்லகூடாதுன்னு,அந்த பொருக்கி முறை மாமன் சொல்லி விட்டுப் போய் இருக்க வே, எப்படி நாம இந்த உண்மையை சொல்றது’ என்று புரியாமல் தவித்தாள்.அனலில் விழுந்த புழவாய் துடித்தாள் சரளா.வரதன் ”இதோ பார்,வசந்தா நாம இனிமே சும்மா இருக்கக்கூடாது.காளி நீ கூட எங்க கூட வா.நாம மூனு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ‘அந்த பணக்கார பையன எங்க வூட்டுப் பொண்ணை ‘கெடுத்து’ட்டாங்க.நீங்க அவனை கொஞ்சம் கூப்பிட்டு விசாரிச்சு எங்க பொ ண்ணுக்கு ஒரு வழி பன்ணுங்கன்னு’ சொல்லி ஒரு புகார் குடுப்போம்.இந்த சாக்கிலே நாம அந்தப் பணக்கர பையன் கிட்டே பணத்தே கறந்திடலாம்.போலீஸ் கிட்ட காட்ட இந்த ‘செல் போன்லே’ அவன் நம்ப சரளாவோடு நெருக்கமா எடுத்துக் கிட்ட போட்டோங்க இருக்கு.அதை அந்த இன்ஸ் பெக்டர் கிட்டே காட்டி நாம புகாரை குடுக்கலாம்”என்று சந்தோஷமாக சொன்னான்.உடனே வசந்தா “ஆமாய்யா,நாம அந்த பணக்கார பையனைப் பாத்து ‘நீ எங்க பொண்ணு சரளாவை ‘கெடுத்து’ இரு க்கே.இப்போ அவளை யார் கல்லாணம் பண்ணிப்பாங்க.அதனால்லே,ஒன்னு நீ எங்க சரளாவை கல்லாணம் கட்டிக்க.இல்லாட்டி எங்களுக்கு ரெண்டு லக்ஷ ரூபாய் குடு.நாங்க போலீஸ் கிட்டே இரு ந்து எங்க புகாரை ‘வாபஸ்’ வாங்கிக்கிறோம்’ன்னு சொல்லி மிரட்டி பணம் பிடுங்கலாங்க”என்று அவளு க்கு தொ¢ஞ்ச ஒரு ‘ஐடியாவை’ கோவமாகச் சொன்னாள்.”ஆமாம் மச்சான்,அக்கா சொல்றா மாதிரி அந்தப் பணக்கார பய கிட்டே பணத்தை நிறைய கறக்காலாம்”என்று காளியும் சொன்னதும்,உடனே வரதன் மிகவும் ஆசைபட்டு ”ஆமாம் புள்ளே,நீயும் காளியும் சொல்றது தான் சரி” என்று சந்தோஷத் துடன் சொன்னான்.‘இவங்க எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவட்டும்.இவங்க கிளம்பிப் போன தும் நாம் நம் முடிவைத் தேடிக்கிடலாம்.இவங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து திரும்பி குடிசைக்கு வந்து பார்க்கும் போது தூக்குக் கயித்திலே தொங்கிக் கிட்டு இருக்கும் நம்முடைய பிணத்தை இவங்க பார்த்து சந்தோஷப்படட்டும்’ என்று துக்கம் மேலிட சொல்லிக் கொண்டாள் சரளா.

பிறகு மூனு பேரும் குடிசையை விட்டு கிளம்பிப் போய்,பக்கத்திலே இருக்கிற போலீஸ் ஸ்டேஷ னுக்குப் போய் அங்கே இருந்த சப் இன்ஸ்பெகடா¢டம் ”சார்,நான் பக்கத்திலே இருக்கிற குடிசையிலே இருந்து வறேங்க.இவ என் சம்சாரம்.அவ பேரு வசந்தாங்க.இவன் என் மச்சான்.இவன் பேரு காளிங்க. மெயின் ரோடிலே இருக்கிற சரவணன் மளிகைக் கடையிலே இருக்கிற முத்துங்கிற பையன் எங்க பொண்ணு சரளாவைக் ‘கெடுத்து’ விட்டு இருக்காங்க.இப்போ அவ வாந்தி எடுத்துக்கிட்டு ‘கர்ப்பமா’ இருக்காங்க.இந்த ‘செல் போன்லே’ பாருங்க.அவங்க ரெண்டு பேரும் நெருக்கமா குந்திக் கிட்டு எடுத் துக் கிட்டு இருக்கிற போட்டோங்க எல்லாம் இருக்கு” என்று சொல்லி தன் பாக்கெட்டில் இருந்து செல் போன ‘ஆன்’ பண்ணி சரளாவும் முத்துவும் நெருக்கமா எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல் லாம் காட்டினான் வரதன்.அந்த சப் இன்ஸ்பெகடர் ”எங்கே கொண்டாங்க,அந்த செல் போனை” என்று கேட்டு வரதன் காட்டின போட்டோக்களை எல்லாம் நிதானமாகப் பார்த்தார்.“ஆமாம் ரெண்டு பெரும் ரொம்ப நெருக்கமா குந்திக் கிட்டு தன் போட்டோ எடுத்துக் கிட்டு இருக்காங்க.வாங்க நாம அவங்க கடைக்குப் போய் இந்த விஷயத்தை பத்தி கேட்டு விட்டு வரலாம்” என்று சொல்லி அவங்க முனு பேரையும் தன் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சரவணன் மளிகைக் கடைக்கு போனார் சப் இன்ஸ் பெக்டர். தன் ஜீப்பை நிறுத்தி விட்டு, ஜீப்பில் இருந்து கீழே இறங்கி வந்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர். அப்போது அந்த மளிகைக் கடையிலே முத்துவும் சரவணனும் இருந்தார்கள்.கடை வாசலுக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் “இங்கே முத்து என்கிறது யாருங்க”என்று கண்டிப்பான குரலில் கேட்டார்.முத்துவும் சரவணனும் பயந்துப் போனார்கள்.உடனே முத்து ”நான் தாங்க முத்து,என்னங்க விஷயம்” என்று கடையிலே இருந்தவாறே கேட்டான்.“வெளியே வாடா.ஒரு சப் இன்ஸ்பெக்டர் உன் கடைக்கு வந்து கேக்கறேன்.நீ கடைக்குள்ளாற குந்திக்கின்னு பதில் சொல்றே”என்று கத்தவே “ரொம்ப சாரி சார்” என்று சொல்லிக் கொண்டே கடையை விட்டு வெளியே வந்தான் முத்து.வரதன் கிட்டே இருந்து ‘செல் போனில்’ வாங்கி முத்துவும் சரளாவும் எடுத்துக் கிட்ட போட்டோக்களை எல்லாம் முத்து கிட்டே காட்டி “இந்த போட்டோங்க எல்லாம் நீ இவங்க பொண்ணு கூட எடுத்து கிட்ட போட்டோங்க தானே” என்று கேட்டு விட்டு ‘செல் போனை’ முத்து கிட்டே காட்டினார் சப் இன்ஸ்பெக்டர்.முத்துவுக்கு தூக்கி வாரிப் போட்டது.சப் இன்ஸ்பெக்டர் காட்டின செல் போன் முத்து சரளாவுக்கு அன்பளிப்பாக கொடுத் த ‘செல் போன்’ தான்.‘ஐயையோ,நாம சரளாவுக்குக் கொடுத்த ‘செல் போன்’ ஆச்சே இது.இங்கே நிக்கவறவங்க சரளாவோட அம்மா அப்பாவா.பக்கத்திலே நிக்கறவன் சரளாவின் முறைமாமனா.நாம இப்படி வசமா மாட்டிக்கிட்டோமே.இப்போ என்ன பண்ணப் போறோம்.அப்பா வேறே இப்ப கடையிலே இருக்காறே’ என்று நினைத்த முத்துவுக்கு அடி வயிற்றை கலக்கியது.

அவன் உடனே “ஆமாம் சார்,நாங்க ரெண்டு பேரும் எடுத்துக் கிட்டது தாங்க”என்று பயந்துக் கொண்டே சொன்னான்.உடனே சப் இன்ஸ்பெக்டர் ”ஏண்டா, இப்படி அந்தப் பொண்ணு கிட்டே பழகி அவளுக்கு ‘ஆசை காட்டி’ நீ அவளை ‘கெடுத்து’ இருக்கியாமே.நடடா போலீஸ் ஸ்டேஷனுக்கு” என்று சொல்லி முத்துவின் காலரைப் பிடித்து இழுத்தார்.உடனே மிகவும் பயந்து போன சரவணன் சப் இன்ஸ்பெகடர் கிட்டே வந்து “சார்,என் பையன் அப்படி எல்லாம் தவறான வழிலே எல்லாம் போக மாட் டாங்க.அவனை ஸ்டேஷனுக்கு எல்லாம் இட்டு கிட்டுப் போகாதீங்க” என்று தன் கையைக் கூப்பி கெஞ்சினார்.உடனே அந்த சப் இன்ஸ்பெக்டர் “இதோ பாருங்க பொ¢சு,நீங்க சும்மா இருங்க.இந்த ‘மேட்டர்’ ரொம்ப ‘சீரியஸ்’ ஆனது.இதைப் பத்தி உங்க பையன் சொல்லட்டும்” என்று சொல்லி சரவ ணனை ஒரு எட்டு தூரத் தள்ளினார்.உடனே முத்து அழுதுக் கொண்டே”சார்,நான் அந்தப் பொண் ணோடு வெறுமே போட்டோங்க மட்டும் தாங்க எடுத்துக்கிட்டேன்.நான் அவளை ‘கெடுக்க’ எல்லாம் இல்லீங்க.எனக்கு அந்த பொண்ணு வுடு எங்கே இருக்குதுன்னு கூட தொ¢யாதுங்க.என்னை நம்புங்க சார்” என்று தன் கையைக் கூப்பி கெஞ்சினான்.“அதை எல்லாம் நீ ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுடா. இப்போ ஜீப்பிலே ஏறுடா” என்று சொல்லி விட்டு முத்துவை இழுத்து கொண்டு போய் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு,வரதன்,வசந்தா,காளி மூனு பேரையும் போலீஸ் ஸ்டேஷன்னுக்கு வர சொல்லி விட்டு ஜீப் பை ‘ஸ்டார்ட்’ பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார் அந்த இன்ஸ்பெக்டர்.

சரவணன் தன் மளிகைக் கடையைப் பூட்டி விட்டு அவர்கள் பின்னாலேயே போலீஸ் ஸ்டே ஷனுக்கு ஓடினார்.போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன இன்ஸ்பெக்டர் முத்துவை ‘லாக் அப்பில்’ அடை த்து வைத்தார்.எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்ததும் சரவணனைப் பார்த்து “இதோ பாருங்க பொ¢சு,உங்க பையன் முத்து இவங்க ‘மைனர்’ பொண்ணு சரளாவைக் கெடுத்து இருக்கான்’னு இவங்க புகார் கொடுத்து இருக்காங்க.அந்த பொண்ணு ‘செல் போனி’லே நான் அந்த போட்டோகளை எல்லாம் நான் பாத்த பிறவு தான் எனக்கு உங்க முத்து அந்த மாதிரி செஞ்சு இருப்பான்னு நிச்சியமாயிடுச்சி. நான் இவ மேலே ‘ஒரு மைனர் பெண்ணைக் ‘கெடுத்த’ குத்தத்துகாக இவனை ‘லாக் அப்பில்’ அடை ச்சு வச்சு இருக்கேன்.அதுக்காக இவன் பேர்லே ஒரு வழக்கு பதிவு செஞ்சி இவனை கோர்ட்டிலெ ஆஜர் படுத்தப்போறேன்.கேஸை விசாரிக்கும் ‘ஜட்ஜ்’ அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கிறாரோ அதை இவன் அனுபவிச்சு வரணும்”என்று சொன்னவுடன் சரவணன் அழுது விட்டார்.அவர் உடனே “அதெல்லாம் வேணாம் சார்,நீங்க அவன் மேலெ ‘கேஸ்’ எல்லாம் போட்டு அவனை கோர்ட்டுக்கு இட்டுக்கிட்டுப் போகாதீங்க.நான் இவங்க கிட்டே கொஞ்சம் பேசி விட்டு உங்க கிட்டே சொல்றேன். எனக்கு ஒரு பத்து நிமிஷ அவகாசம் குடுங்க” என்று சொல்லி விட்டு வரதன் கிட்டே சரவணன் மெல்ல நடந்துப் போய் வரதனையும் வசந்தாவையும் பார்த்து ”எங்க பையன் அப்படி எல்லாம் உங்க பொண்ணை ‘செஞ்சி’ இருக்கமாட்டாங்க.அவன் ரொம்ப பயந்த சுவாபம் உள்ள பையங்க நீங்க கொஞ் சம் தயவு செஞ்சி நீங்க குடுத்த கேஸை ‘வாபஸ்’ வாங்கிக்குங்க.உங்களுக்கு கோடி புண்ணீயம் உண் டுங்க” என்று சொல்லி தன் கையைக் கூப்பி கொண்டு கெஞ்சினார்.உடனே வரதன் “அதெல்லாம் முடி யாதுங்க.உங்க பையன் எங்க பொண்ணைக் ‘கெடுத்து’ இருக்காங்க” என்று கத்திச் சொல்லவே சரவ ணன் பயந்துப் போய் “கத்திச் சொல்லாதீங்க.இப்போ என் பையன் வெளியே வரணுங்க.நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க.நான் நிச்சியமா செய்யறேன்”என்று தன் கண்களில் கண்ணீர் மல்க கேட்டார். உடனே வரதனும் வசந்தாவும் காளியும் யோஜனைப் பண்ணினார்கள்.பிறகு வரதன் போலீஸ் சப் இன்ஸ்பெகடர் கிட்டே போய் ஏதோ ரகசியமாகப் பேசினான்.உடனே சப் இன்ஸ்பெகடர் வரதனைப் பார்த்து ரகசியமா “நீங்க அப்படி ‘செட்டில்’ பண்ணா,எனக்கு அந்தப் பணத்திலே நாப்பதாயிரம் ரூபாய் தள்ளணும்.முடியுமா” என்று கண்டிப்பாக கேட்டார்.“சரி சார்,அவர் பணம் குடுத்தவுடன் உங்க ளுக்கு நான் உடனே நாப்பதாயிரம் ரூவா குடுத்து விடறேன்”என்று சொல்லி வரதனும் ஒத்துக் கொண்டான்.வரதன் சரவணனை பார்த்து “இதோ பாருங்க.உங்க பையன் எங்க பொண்ணைக் ‘கெடுத்தது’ என்னவோ நிஜம்ங்க.அவ இப்போ வாந்தி எடுத்து கிட்டு வறா.நீங்க எங்களுக்கு ரெண்டு லக்ஷ ரூபாய் கொடுத்தா நாங்க இந்த ‘கேஸை’ வாபஸ் வாங்கிக் றோமுங்க”என்று சொன்னதும் சரவ ணன் ஆடிப் போய் விட்டார்.அவர் உடனே ”ரெண்டு லக்ஷ ரூபாயா.கொஞ்சம் குறைச்சுக்குங்க” என்று தன் கை யைக் கூப்பிக் கொண்டு கெஞ்சினார்.ஆனால் வரதனோ “அதெல்லாம் ஒன்னும் குறைச்சுக்க முடியாதுங்க.நீங்க குடுக்கற அந்தப் பணத்திலே தாங்க,நாங்க எங்க பொண்ணு வயத்திலெ வளர குழ ந்தையை கலைக்கணும்.அப்புறமா நிறைய மருந்துங்க வாங்கி அவ உடம்பைத் தேத்தணும்.பிறவு நிறைய பணம் குடுத்து எவனையாவது பிடிச்சி அவனுக்கு எங்க பொண்ணை கல்லாணம் கட்டி குடுக்கணும்.இந்த செலவுக்கு எல்லாம் எங்களுக்குப் பணம் வேணுங்களே பொ¢சு.நீங்களே சொல்லுங்க” என்று கண்டிப்பாக சொன்னதும் வேறே வழி ஒன்னும் இல்லாம சரவணன் வரதனுக்கு ரெண்டு லக்ஷ ரூபாய் கொடுக்க ஒத்துக் கொண்டார்.போலீஸ் இன்ஸ்பெகடருக்கு தன் நன்றியை சொல்லி விட்டு முத்துவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார் சரவணன்.தன் புருஷனும் முத்துவும் இவ்வளவு சீக்கிரமா வூட்டுக்கு வந்து விட்டதைப் பாத்து சரஸ்வதி பயந்துப் போனாள்.வீட்டுக்கு வந்து சரவணன் தன் செருப்பை வேகமாக கழட்டி போட்டு விட்டு நடந்த முழு கதையையும் சொன்னார். சரவணன் சொன்னதைக் கேட்டு சரஸ்வதி மிகவும் அதிர்ச்சி அடைந்தாள்.

வீட்டுக்கு வந்த வசந்தா குடிசையின் கதவைத் திறந்தாள்.அவளுக்குத் தூக்கி வாறிப் போட்டது. சரளா தன் தாவணியை கூரையில் இருந்த தொங்கிக் கொண்டு இருந்த ‘பான்’ கொம்பில் தன் கெட்டியாகக் கட்டி விட்டு, அந்த தூக்கு கயித்திலே தூக்கு போட்டு கொண்டு தொங்கி கொண்டு இருந்தாள்.குடிசைக்குள்ளே ஓடி வந்து வசந்தா ”அடிப்பாவி,நாங்க அந்தப் பையனை பாத்து பேசி பணத்தை வாங்கியாறதுக்குள்ளாற,நீ இப்படி தூக்கிலே தொங்கிக் கிட்டு இருக்கிறயேடீ.ஏண்டி இப் படி பண்ணே.எங்களை எல்லாம் விட்டுட்டுப் போக உனக்கு எப்படிடீ மனசு வந்திச்சி” என்று கத்திக் கொண்டே சரளாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.காளியும்,வரதனும் ஒரு சேர் போட்டு ஏறி, ’பான்’ கொம்பில் இருந்து தாவணி முடிச்சை அவிழ்த்து சரளாவின் ‘பாடியை’ க் கீழே இறக்கினார்கள்.விஷயம் கேள்விப் பட்டு அந்த குடிசை வாழ் மக்கள் எல்லோரும் வரதன் குடிசைக்கு ஓடி வந்தார்கள்.அன்று பூராவும் வசந்தா தன் பெண் பக்கத்திலேயே உட்கார்ந்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள்.போலீஸ் வந்து சரளாவின் பாடியை பிரேத பா¢சோதனக்கு கொண்டு போய் அடுத்த நாள் மதியத்தில் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார்கள்.அதற்கு அடுத்த நாள் அழுதுக் கொண்டே வரதனும் காளியும் சரளாவின் ‘பாடியை’ எடுத்துக் கொண்டு போய் அவளை அடக்கம் பண்ணி விட்டு குடிசைக்கு வந்தார்கள்.அன்று பூராவும் வெறுமனெ தங்கள் விதியை நொ ந்துக் கொண்டு மூவரும் வீட்டிலேயே அழுது வந்துக் கொண்டு இருதார்கள். .

மெல்ல சரவணன் முத்துவிடம் “முத்து, அவங்க கேட்ட ரெண்டு லக்ஷ ரூபாயை என்னால் பிரட் டவே முடியலே.பாங்கிலே நம்ம கடையை அடைமானம் வச்சதுக்கு அவங்க எனக்கு ஒன்னரை லக்ஷ ரூவா தான் குடுத்தாங்க.அதனாலே நான் உன் ‘பைக்கை’ வித்தா தான் ரெண்டு லக்ஷ சேக்க முடியும்.எனக்கு வேறே வழி ஒன்னும் தொ¢யலே.நீ என்ன சொல்றே” என்று கணிவோடு கேட்டார். முத்து ‘பெட்ரூம்’ கதவைத் திறக்காமலே ”அப்பா உங்க சௌகரியம் போல எது வேணுமானாலும் பண்ணுங்கப்பா” என்று சொன்னான்.உடனே சரஸ்வதி “முத்து, நீ ரெண்டு நாளா ஒன்னும் சாப்பிடாம இருக்கியேப்பா.வாப்பா ‘பெட் ரூமை’ விட்டு வெளியெ வந்து கொஞ்சம் ஆகாரம் சாப்பிடுப்பா” என்று கெஞ்சினாள்.முத்து தன் ‘பெட் ரூமை’ விட்டு வெளியே வந்து அழுது கொண்டே அவன் அம்மா குடுத்த நாஷ்டாவை சாப்பிட்டான்.சரவணன் முத்து ‘பைக்கை’ என்ன விலைக்கு போனதோ அந்த விலைக்கு வித்தார்.‘பைக்’ வித்த பணம்,பாங்கு கொடுத்த பணம்,தன்னிடம் இருந்த சேமிப்பு எல்லாம் ஒன்னா சேர்த்து வரதனை போலீஸ் ஸ்டேஷனக்கு வரச் சொல்லி அந்த சப் இன்ஸ்பெக்டர் முன்னிலை யில் அவர் கொண்டு வந்த ரெண்டு லக்ஷ ரூபாயை வரதன் கிட்டே வருத்த பட்டுக் கொண்டே “இந்தாங்க,நீங்க கேட்ட ரெண்டு லக்ஷ ரூபாய்” என்று சொல்லி கொடுத்தார்.சரவணன் கொடுத்த ரெண்டு லக்ஷ ரூபாயை வாங்கிக் கொண்டான் வரதன்.சரவணன் முத்துவை அழைத்துக் கொண்டு போன பிறகு,அவர் கொடுத்த பணத்தில் வரதன் சப் இன்ஸ்பெக்டர் தன்னிடம் கேட்ட நாப்பதாயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு மீதி பணத்தை எடுத்துக் கொண்டு குடிசைக்கு வந்தான்.

வீட்டுக்கு வந்த சரவணன் கொஞ்ச நேரம் அவர்கள் வீட்டுக்கு வந்த பழைய தினத்தந்தி பேப்பர் ஒன்றை எடுத்து பாதி படிக்கும் போதே, அந்தப் பேப்பரை வீசி எறிந்து விட்டு, சாப்பிட்டு விட்டுப் படுக்கப் போய் விட்டார்.வீசி எறிந்த அந்த பேப்பா¢ல் ஒரு பெண்ணின் போட்டோவை போட்டு கூடவே:
“குடிசை இளம் பெண் காதல் தோல்வியால் தூக்கில் தொங்கினாள்”

என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டு இருந்தார்கள்.அந்தப் பேப்ப்ரைப் பிரித்து படித்தான் முத்து.

சென்னை ஏப்ரல் 4.எழும்பூர் குடிசைப் பகுதியில் வாழ்ந்து வரும் சரளா என்கிற பதினாறு வயது பெண்,நேற்று காதல் தோல்வியால் அவளுடைய அப்பா அப்பா வீட்டில் இல்லாபோது,அவள் அந்த துக்கம் தாங்காமல் ‘பான்’ கொம்பில் தன் தாவணித் துணியைக் கட்டி விட்டு தூக்குப் போட்டுக் கொ¡ண்டு இறந்துப் போய் இருக்கிறாள்.அவள் ‘பாடியை’ போலீஸ்காரங்க பிரேத பா¢சோதனை பண்ணி விட்டு,அந்த பொண்ணு ‘பாடியை’ அவங்க அப்பா அம்மா கிட்டே கொடுத்து விட்டுப் போ னாங்க.அந்த ‘மைனர்’ பெண்ணை காதலித்து ஏமாற்றியது யார் என்று போலீஸ் புலன் விசாரணை நடத்திக் கிட்டு வறாங்க…..”

இந்த செய்தியைப் படித்த முத்துவுக்கு தூக்கி வாரிப் போட்டது.முத்துவால் அந்த பேப்பரை மேலே படிக்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.துயரம் மேலிட அவன் தன் மனதுக்குள் அழு தான்.‘ஐயையோ,நம் சரளா காதல் தோல்வியால தூக்குப் போட்டுக் கொண்டு தன் உயிரை மாய்ச்சிக் கிட்டு இருக்காளே.நான் அவளுக்கு இந்த ஜென்மத்திலே கிடைக்க மாட்டேன்னு நினைச்சு அவ தூக்கு போட்டுக் கிட்டு கொண்டு தன் உசிரை மாய்ச்சிக்கிட்டு விட்டாளா.என்னை மனசார காத லிச்சு அவ பாவம் என்ன சுகத்தைக் கண்டா.என்னால் தானே அவ இப்படி சின்ன வயசிலே தற்கொ லை பண்ணிகிட்டா.கடவுளே அவ ஆத்மா சாந்தி அடையட்டும்’என்று தன் மனதில் சொல்லி கடவுளை வேண்டிக் கொண்டான் முத்து.சரளா இறந்த பிறகு முத்துவுக்கு வாழவே பிடிக்க வில்லை. அவன் ஒரு நடைப் பிணம் ஆனான்.ஒரு வாரம் சரவணன் கடைக்குப் போகாமல் வீட்டில் வெறுமனே உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.“இப்படி உக்காந்துக் கிட்டு இருந்தா எப்படிங்க.நீங்க ‘பாங்கு லோனை’ அடைக்க வேணா வாங்க.வூட்டு செலவுக்கு பணம் வேணா வாங்க.எழுந்தா¢ங்க்.மெல்ல எழுந்துப் போய் கடையைத் தொறந்து வியாபாரத்தை கவனிச்சு வாங்க” என்று சொல்லி சரஸ்வதி தன் கணவன் சரவணனை எழுப்பினாள்.சரஸ்வதி சொன்னதைக் கேட்டு சரவணன் தன் மனதை கல்லா க்கிக் கொண்டு மறுபடியும் தன் மளிகைக் கடையை திறந்து,கடையில் இருக்கும் மளிகை சாமான்ளை வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்.அம்மா வீட்டில் இல்லாத போது முத்து “அம்மா,அப்பா,நான் அந்த பொண்ணு சரளாவை மனசார காதலிச்சு வந்தேன்.அவளும் என்னை மனசார காதலிச்சு வந்தா. ‘அந்த பொண்ணை உங்க கிட்டெ காட்டி, உங்க சம்மதத்தை வாங்கிக் கிட்டு கல்லாணம் கட்டிக்கலாம் ன்னு நான் மனக் கோட்டை கட்டி வந்தேன்.அவளை நான் ‘கெடுக்கவே’ இல்லே.ஒரு நாள் ஞாயி த்துக் கிழமை சாயங்காலம் என்னையும் அந்த பொண்ணையும் ஒன்னாப் பாத்த அவன் முறை மாமன் தான் கோவத்திலே இருந்தான்.அவன் தான் அவங்க அக்கா கிட்டேயும்,மாமா கிட்டேயும் சொல்லி சரளாவை பலவந்தமா கல்லாணம் கட்டிக் கிட்டு வந்து இருப்பான்.இதை பொறுத்துக்க முடியாம தான் சரளா தற்கொலை பண்ணிக் கிட்டு இருப்பா போல இருக்கு.இனிமெ நான் காதலிச்ச சரளா இல்லாம வேறு யாரோடும் என்னால் வாழ்ந்து வரவே முடியாது.அதனால் நான் இந்த உலகத்தை விட்டே போய் விட தீர்மானித்து விட்டேன்.நீங்க என்னை தேடவேணாம்.என்னை மன்னிச்சு விடுங்க. இப்படிக்கு இத்தனை வருஷமா வாழ்ந்து வந்த உங்க மகன் முத்து” என்று ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தன் வீட்டை விட்டு போய் விட்டான்.முத்து எழும்பூர் ரயில்வே ஸ்டெஷனுக்கு முன்னால் ஓடி வரும் மின்சார வண்டி முன்னால் விழுந்து தற்கொலைப் பண்ணிக் கொண்டு விட்டான்.யார் மூலமாகவோ விஷயம் கேள்விப் பட்டு சரவணனும் சரஸ்வதியும் எழும்பூர ரயில் நிலையத்துக்கு ஓடி வந்தார்கள் எழும்பூர ரயில்வே ஸ்டேஷனில் ஒரு வெள்ளை துணி போர்த்து முத்துவை ஒரு ஸ்டெச்சரில் படுக்க வைத்து இருந்தார்கள்.சரவணனும் சரஸ்வதியும் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்கள்.முத்து தற்கொலை பண்ணிக் கொண்ட விஷயம் தேவிக்கு தொ¢யவே அவளும் ராஜ்ஜும் சரவணன் வீட்டு க்கு வந்து சரவணனுக்கும் சரஸ்வதிக்கும் ஆறுதல் சொன்னார்கள்.ரெண்டு நாள் கழித்து முத்து ‘பாடியை’ மார்ச்சுவா¢யில் இருந்து வெளியே எடுத்து வந்து அழுதுக் கொண்டே அவனுக்கு எல்லா ஈமக் காரியங்களையும் செய்து முடித்தார் சரவணன்.

அடுத்த வாரமே கமலாவுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.பத்து நாள் முடிந்ததும் சேகரும்,அவன் அம்மாவும்,எல்லா உறவுக்காரங்களையும் தேவியையும்,ராஜ்ஜையும்,ரத்தினத்தையும் தங்கள் குடிசைக்கு அழைத்து குழந்தைக்கு பேர் வைக்கும் விழாவை சிறப்பாக நடத்தி அந்த பெண் குழந்தைக்கு செல்வி என்று பேர் வைத்து விருந்து சாப்பாடும் போட்டார்கள். திடீரென்று ஒரு நாள் ரத்தினம் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்கா மல் இறந்துப் போனாள்.தன் அம்மாவை அடக்கம் பண்ணி விட்டு ராஜ் மிகவும் துக்கப்பட்டு வந்தான். அது துக்கத்தில் அவன் நிறைய குடிக்க ஆரம்பித்தான்.தேவி ரெண்டு தடவை அவனிடம் “தோ பார்யா.இப்படி ‘ஓவரா’ குடிக்காதே.உன் உடம்பு கெட்டு போனா என்னால் உனக்கு வைத்தியம் என் கிட்டே பணம் இல்லே யா.இப்படி ‘ஓவரா’ குடிக்காதேய்யா.நான் சொன்னா கேளுய்யா” என்று பல தடவை சொன்னாள் ஆனால் ராஜ் தேவி சொன்னதை கேக்காம குடித்துக் கொண்டு இருந்தான்.

செந்தாமரை அவர்கள் வீட்டுக்கு வந்து மூனு மாதம் தான் ஆகி இருக்கும்.சாந்தா கருவுற் றாள்.சந்தோஷத்தால் கணபதியும் எல்லாருக்கும் ‘ஸ்விட் வாங்கிக் கொடுத்தார்.பிரசவ வலி வரவே கணபதி சாந்தாவை ஆஸ்பத்திரில் ‘அட்மிட்’ பண்ணி விட்டு ‘லேபர் வார்ட்’ வாசலிலே போட்டு இருந்த சேர் ஒன்றில் உட்கார்ந்துக் கொண்டு கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தார்.சாந்தவை ‘அட்மிட்’ பண்ணி ஆறு மணி நேரம் ஆனதும் சாந்தாவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தைப் பிறந்தது. அம்மாவுக்கு ஒரு ஆண் குழந்தைப் பொறந்து இருக்கு என்று கேள்விப் பட்ட செந்தாமரை தான் தினமும் வேண்டி வந்த பிள்ளையாருக்கு தன் மனமார்ந்த நன்றியை சொன்னாள்.கணதியின் அப்பா அம்மாவும்,சாந்தாவின் அம்மா அப்பாவும் ஆஸ்பத்திரிக்கு வந்து குழந்தையைப் பார்த்து விட்டு ”இத் தனை வருஷக்கு அப்புறமா சாந்தாவுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்து இருக்கு.அந்தக் குழந் தையும் ரொம்ப நல்லா இருக்குது.இதிலே எங்களுக்கு ரெட்டிப்பு சந்தோஷம்” என்று சொல்லி மகிழ்ந் தார்கள்.ரெண்டு நாள் ஆனதும் கணபதி சாந்தாவையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்தார்

பதினோறாவது நாள் கணபதியும் சாந்தாவும் குழந்தைக்கு ‘பேர் சூட்டும் விழா’ ஒன்றை நடத்தி னார்கள்.அந்த விழாவுக்கு கணபதி உறவினர்களும்,நண்பர்களும் சாந்தா உறவினர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.சாந்தாவால் சின்ன குழந்தையைப் பார்த்துக் கொள்ள கஷ்டமா இருக்கும் என்று நினைத்து சாந்தாவின் அம்மா விஜயா,சாந்தா கூட சில மாதங்கள் தங்கி இருந்து அவளுக்கு உதவி பண்ண நினைத்து சாந்தா வீட்டில் தங்கி வந்தாள்.சாந்தாவின் அம்மா விஜயா ரொம்ப ‘ஸ்டேடஸ்’ பார்க்கிற குணம் கொண்டவள்.விஜயா சாந்தா வீட்டுக்கு வந்ததில் இருந்து ‘செந்தாமரை ஒரு சேரிப் பொண்ணு ஆச்சே.அவ நம்ப மக வீட்டிலே இத்தனை மாசமா சாந்தாவுக்கு குழந்தை பொறக்காததால் தான் இங்கே இருந்து வந்தா.இப்பத் தான் சாந்தாவுக்கு குழந்தைப் பொற ந்து இருக்கே.இந்த செந்தாமரையை அவ வீட்டுக்கு அனுப்பி விட்டு நமப ‘ஸ்டேடஸ்ஸ¤’ க்கு தகுந்த மாதிரி சாந்தாவும் மருமகப் பிள்ளையும் வாழ்ந்து வரலாமே’ என்று மிகவும் ஆசைப் பட்டாள்.‘தன் மூளையை கசக்கிப் பிழிந்துக் கொண்டு வந்தாள் விஜயா.‘எதற்கும் நாம் இப்ப அவசரப்படக் கூடாது. கொஞ்சம் மாசம் போகட்டும்.அப்புறமா நாம் நிதானமாக முதலில் சாந்தா கீட்டே சொல்லி அவளை ஒத்துக் கொள்ள வச்சு விட்டு,சாந்தாவையே மெல்ல அவள் புருஷன் கிட்டே சொல்லி எப்படியவது செந்தமரையை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பணும்’ என்று நினைத்து அதற்கான தன்னை தயார் படுத்திக் கொண்டு இருந்தாள்.பதினோறாவது வகுப்பில் செந்தாமரை அவள் வகுப்பிலே முதல் மாணவியா ‘பாஸ்’ செய்தாள்.சாந்தாவுக்கும் கணபதிக்கும் அளவிலா சந்தோஷம்.அவர்கள் இருவரும் செந்தாமரையைக் கூப்பிட்டு தங்கள் சந்தோஷத்தை சொல்லி விட்டு அன்று சாயந்திரமே எல்லா நண்பர்களையும் போனிலே கூப்பிட்டு இந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி விட்டு அவர்களை ‘பார்ட்டியில்’ கலந்துக் கொள்ள அழைத்தார்கள்.‘பார்ட்டியில்’ கணபதி சாந்தா ரெண்டு பேருடைய நண்பர்கள் எல்லோரும் கவந்துக் கொண்டு செந்தாமரையை வாழ்த்தி விட்டு “செந்தாமரை,நீ இந்த மாதிரியே நல்லாப் படிச்சு பன்னாடாவது பா¢¨க்ஷயிலே ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வரணும்”என்று சொன் னார்கள்.உடனே செந்தாமரை ”நான் நிச்சியமா நல்ல படிச்சு பன்னாடாவது பா¢¨க்ஷயிலே சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா வருவேங்க” என்று மிகவும் ‘காண்பிடண்டாக’ ச் சொன்னாள்.

‘மாப்பிள்ளை ஒரு சேரிப் பொண்ணுக்காக இப்படி ஒரு ‘பார்ட்டியை’ ஏற்பாடு பண்ணி பண த்தை இப்படி பணத்தை வாரி இறைச்சு வீணடித்து வந்து இருக்காறே.இது அவசியமே இல்லத ஒரு வீண் செலவு ஆச்சே’ என்று நினைத்து மிகவும் வேதனைப் பட்டாள் விஜயா.‘பார்ட்டி’ நடந்த ஒரு வாரம் கழிச்சு விஜயா மெதுவாக சாந்தா கிட்டே “சாந்தா,நான் சொல்றேன்னு நீ தப்பா எடுத்துக்கா தே.உனக்கு குழந்தை பொறக்காத இருந்தப்ப தான்,நீயும் மாப்பிள்ளையும் அந்த சேரிப் பொண்ணு செந்தாமரையை நம்ப வீட்டிலே அழைச்சு வந்து வச்சுக் கிட்டு,அவளைப் படிக்க பணம் செலவு பண்ணீ வந்து, அவளுக்கு துணி மணிகள் எல்லாம் வாங்கிக் கொடுத்து வந்துக் கிட்டு இருக்கீங்க. இப்பத் தான் உனக்கு தங்க விக்கிரகம் மாதிரி ஒரு ஆண் குழந்தைப் பொறந்து இருக்கே.சில சமயங்களிலே அந்த செந்தாமரை பேசி வர பேச்சு ஒரு சேரி பொண்ணு பேசுவது போல இருக்கிறதை நான் கவனிச்சி இருக்கேன் சாந்தா.இனிமே எதுக்கு நீங்க ரெண்டு பேரும் அந்த சேரிப் பொண்ணை உங்க வீட்டிலே வச்சுக் கிட்டு வறீங்க.வீணா அவளுக்கு பணமும் செலவு பண்ணி வறீங்க.பேசாம அந்த செந்தாமரையை அவ சென்னையிலே இருந்து வந்த சேரிக்கே அனுப்பி விடுங்க.அந்த சேரிப் பொண்ணு நம்ப ‘ஸ்டேடஸ்ஸ¤க்கு’ சரி வராதே சாந்தா” என்று சாந்தா காதில் மெதுவாக சொன்னாள். சாந்தாவுக்கு அவள் அம்மா சொன்னதைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டது.”சரிம்மா,நாம நிதானமா அதை செய்யலாம்”என்று சொல்லி அம்மாவை சமாளித்தாள் சாந்தா.

ஒரு வாரம் போய் இருக்கும்.சாந்தாவுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தார் கணபதி. இது தான் நல்ல சமயம் நாம் நம்ம தன் அம்மா சொன்னதை அவர் கிட்டே மெல்ல சொல்லிப் பார்ப் போம்.அதுக்கு அவர் என்ன சொல்றார் என்று அவர் எண்னத்தைத் தொ¢ந்துக் கொள்ளலாம் என்று நினைத்து சாந்தா தன் கணவனிடம் மெதுவாக “ஏங்க,என் அம்மா போன வாரம் என் கிட்டே நான் தனியா இருக்கும் போது என் கிட்டே ‘சாந்தா,நான் சொல்றேன்னு நீ தப்பா எடுத்துக்காதே.உனக்கு குழந்தை பொறக்காத இருந்தப்ப தான்,நீயும் மாப்பிள்ளையும் அந்த சேரிப் பொண்ணு செந்தாமரை யை நம்ப வீட்டிலே இட்டாந்து வந்து வச்சுக் கிட்டு,அவளைப் படிக்க பணம் செலவு பண்ணீ வந்து, அவளுக்கு துணி மணிகள் எல்லாம் வாங்கிக் குடுத்து வந்துக் கிட்டு இருக்கீங்க.அப்ப உனக்குக் குழந்தை இல்லே.இப்பத தான் உனக்கு தங்க விக்கிரகம் மாதிரி ஒரு ஆண் குழந்தைப் பொறந்து இருக்கே சாந்தா.சில சமயங்களிலே செந்தாமரை பேச்சு ஒரு சேரிப் பொண்ணு பேச்சு போல இருக்கிற தை நான் கவனிச்சி இருக்கேன்.இனிமே எதுக்கு நீங்க ரெண்டு பேரும் அந்த சேரிப் பொண்ணை இன்னும் உங்க வீட்டிலே வச்சுக் கிட்டு வறீங்க.வீணா அவளுக்கு பணமும் செலவு பண்ணி வறீங்க. பேசாம அந்த செந்தாமரையை அவ சென்னையிலே இருந்து வந்த சேரிக்கே அனுப்பி விடுங்க.அந்த சேரிப் பொண்ணு நம்ப ‘ஸ்டேடஸ்ஸ¤க்கு’ சரி வராதே சாந்தா’ ன்னு சொல்லி வருத்தப் பட்டாங்க.நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்டு தன் கணவனின் முகத்தைப் பார்த்து கொண்டு இருந்தாள் சாந்தா. அதற்கு கணபதி பதில் ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்து வந்தார்.

அன்று பக்கத்து வீட்டு வயசான அம்மா மதியம் சாப்பிட்டு விட்டு சாந்தா அம்மாவுடன் வம்பு பேச வந்து இருந்தாள்.அப்போது செந்தாமரை குழந்தை ஆனந்தனை வைத்துக் கொண்டு விளை யாட்டுக் காட்டி விளையாடி கொண்டு இருந்தாள்.இவர்கள் பேசிக் கொண்டு இருக்கட்டும் என்று நினைத்து செந்தாமரை குழந்தையை எடுத்துக் கொண்டு தன் ரூமுக்குள் போனாள்.பேச்சின் நடுவில் அந்த பக்கத்து வீட்டு அம்மா சாந்தாவின் அம்மாவிடம் “ஏங்க நீங்க இப்ப இங்கே வந்து இருக்கீங்க ளேங்க.உங்க பொண்ணுக்குத் தான் இப்ப ஒரு அழகான ஆண் குழந்தைப் பொறந்து இருக்கேங்க. இன்னும் எதுக்குங்க அந்த சேரிப் பொண்னு செந்தமரையை உங்க வீட்லே இன்னும் வச்சுக் கிட்டு இருக்கீங்க.நீங்க உங்க பொண்ணு கிட்டேமெல்ல சொல்லி, அந்தப் பொண்ணை அவங்க வீட்டுக்கு அனுப்பி விடச் சொல்லுங்க.அப்படி ஏங்க நீங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க” என்று சற்று உரக்க சொன்னதைக் கேட்ட செந்தாமரைக்கு தூக்கி வாரிப் போட்டது.‘ஏன் என்னை இந்த வீட்டிலே இரு ந்து பழையபடி அந்த சேரிக்கு அனுப்பணும்’ என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள். .

செந்தாமரை ‘பிள்ளயாரே,நான் உன்னை வேண்டிக் கொண்டு தானே படிச்சு ஒரு கணக்கு பட்டதாரி ஆகணும் என்கிற ஆசையில் தானே நம்ப அம்மா, அப்பா,ஆயாவை எல்லாம் ஏமாத்திட்டு, அவங்க கிட்டே கூட சொல்லிக்காம,இவங்க கூட மதுரைக்கு ஓடி வந்து இருக்கேன்.இப்ப தானே நான் பதினோறாவது ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்.இன்னும் ஒரு பட்டதாரி ஆக ரொம்ப வருஷம் இங்கே இருந்து வரணுமே.இவங்க ‘ஸ்டேடஸ்’ என்று எல்லாம் பாத்து நம்மை வெளியே அனுப்பி விட்டாங்க ன்னா,நாம என்ன பண்ண போறோம்.எப்படி ஒரு கணக்கு பட்டதாரியாக ஆகப் போறோம்’ என்று நினைக்கும் போது செந்தாமரைக்கு உலகமே இருட்டி விட்டது போல ஆகி விட்டது. குழந்தை கூட விளையாடுவதை நிறுத்தி விட்டு தன் கண்களை மூடிக் கொண்டு தான் வழக்கமாக வேண்டி வரும் பிள்ளையாரை மனதில் ‘பிள்ளையாரே.என்னை எப்படியாவது ஒரு கணக்கு பட்டதாரியா ஆக்கி விடு.பாதி படிப்பிலே என்னை நிறுத்தி விடாதே’ என்று வேண்டிக் கொண்டு வந்தாள்.

‘அவ அம்மாவும் பக்கத்து விட்டு அம்மாவும் சொன்னது சரியாய் இருக்கும்’ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.சாந்தா தன் கணவனுடன் தனியாய் இருந்து வரும் போது பேச்சின் நடு நடுவே ‘தன் அம்மா சொன்னதையும்,அதையே பக்கத்து வீட்டு அம்மாவும் சொன்னதாகவும் சொல்லி செந்தா மரையை சென்னைக்கே அனுப்பி விடுவது சரி என்று தனக்கும் படுகிறது’ என்று சொல்லி தன் கணவன் அபிபிராயத்தைக் கேட்டு வந்தாள்.ஆனால் கணபதி மட்டும் பிடிவாதமாக ‘எந்த காரணம் கொண்டும் தான் செந்தாமரையை ஒரு கணக்கு பட்டதாரியாக ஆக்காமல் சென்னைக்கு அனுப்ப மாட்டேன் சாந்தா’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

அன்று சாயந்திரம் வகுப்பு முடிந்து செந்தாமரை வகுப்பிலே இருந்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடந்துக் கொண்டு இருந்தாள்.அவள் பின்னால் அவள் முதுகை மெதுவாகத் தொட்டார் கணபதி. அவரைப் பார்த்ததும் செந்தாமரைக்கு அழுகை அழுகையாக வந்தது.செந்தாமரை விக்கி விக்கி அழுதாள்.’அவள் அழுது ஓயட்டும்’ என்று நினைத்து கணபதி சும்மா நின்றுக் கொண்டு இருந்தார்.ஒரு ஐந்து நிமிஷம் ஆனதும் கணபதி செந்தாமரையை பாத்து “அழாதே செந்தாமரை.உன் கண்ணைத் துடை.நீ வீட்லே இருந்து கல்லூரிக்குக் கிளம்பிப் போனதில் இருந்து நான் என் வேலை யில் ரொம்ப ‘பிஸியாக’ இருந்து விட்டேன்.இதைத் தவிர எனக்கு ஒரு முக்கியமான ‘மீட்டிங்க்’ வேறே இருந்திச்சு.அதனால் தான் நான் உன்னை சந்தித்துப் பேச முடியாம போயிடிச்சி செந்தாமரை. காத்தாலே சாந்தா சொன்னதை ரொம்ப ‘சீரியஸ்ஸா’ உன் மனசுக்கு எடுத்துக்காதே.நான் உன்னை ஒரு கணக்கு பட்டதாரி ஆக்காம எந்த காரணம் கொண்டும் என் வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டேன்.நீ பயப் படாம உன் பாடங்களை எல்லாம் கவனமாக நல்லா படிச்சி வா செந்தாமரை” என்று சொல்லி செல்லமாக முதுகில் தட்டினார்.சந்தோஷம் மேலிட செந்தாமரை கல்லூரி என்று கூட பார் க்காமல் கணபதி காலைத் தொட்டு தன் கண்களில் ஒத்தி கொண்டு “சார்,நீங்க தான் எனக்கு ஒரு கல ங்கரை விளக்கு போல.உங்களைப் பாத்து தான் நான் என்னை செலுத்தி வருவேன்.நீங்க தான் எனக்குக் கடவுள்” என்று கண்ணீர் மல்க கையைக் கூப்பிச் சொன்னாள்.

செந்தாமரையை வீட்டுக்கு அனுப்பி விட்டு கணபதி தன் காரில் வீட்டுக்கு வந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *