சேமிப்பு – ஒரு பக்க கதை

 

அடாது பெய்த பழை ஒரு வாரமாக மாணிக்கத்தை வீட்டிலேயே கட்டிப்போட்டிருக்கிறது.

அன்றாட பிழைப்புக்கு ஓர் இடைக்கால தடை.

அதுக்கு தான் தலை தலையா அடிச்சுக்கிட்டேன். காசு வரும்போது அதுல கொஞ்சம் வங்கியிலே போட்டு வையுங்கன்னு. இப்ப பாருங்க. அவசரம் ஆபத்துக்கு வழியில்லே என்றால் இளவழகி.

கேட்டு கொண்டிருந்த அவர்களுடைய மகள் பொன்மணி எழுந்து சென்று தன் சிறிய தகர பெட்டியை எடுத்து வந்தாள்.

கவலைப்படாதீங்க அம்மா. வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க கொடுக்குற காசுகளை இதுல போட்டு வச்சிருக்கேன். வேலை கிடைச்சதும் திருப்பி தந்திடனும்.

அதுவும் வட்டியோட என்றாள்.

எண்ணிப் பார்க்கையில் நூறை தாண்டிற்று.

தன் செய்கையால் புத்தி சொன்ன மகளை ஆரத் தழுவிக்கொண்டான் மாணிக்கம்.

- வினோதானந்த் (ஒக்ரோபர் 2010)
 

தொடர்புடைய சிறுகதைகள்
மணி ஒன்பது. அழகேசன் சட்டையை மாட்டிக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான். தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு தண்ணீர் பிடிக்கச் சென்ற சுசீலா குடத்துடன் ஓடி வந்தாள். குழந்தையின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அழகேசனிடம் “ஏங்க குழந்தைக்கு இன்னும் ஜூரம் ...
மேலும் கதையை படிக்க...
"வசன், வெளியே என்னடா பண்ற காலங்கத்தாலேயே ? உள்ளே வந்து பல்ல விளக்கி புஸ்தகத்தைக் கையில் எடுக்குறத விட்டுட்டு" தாய் கல்யாணியில் குரல். சட்டென எழுந்துத் தன் தாயைக் கட்டியணைத்துக் கொண்டான். காலைக்கடன்களை முடித்துவிட்டு, புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மீள்பார்வை செய்ய ...
மேலும் கதையை படிக்க...
ராமநாதன் அலுவலகத்தில் இருந்து வரும் போதே ப்ரியா..., ப்ரியா.... என்று அழைத்தபடியே வந்தார். சொல்லுங்க, என்று வந்த ப்ரியாவிடம் ஒரு உறையை நீட்டினார். என்னங்க, இது என்றவளிடம் பாட்டு கச்சேரிக்கான நுழைவுச்சீட்டு இது, என் நண்பர் சக்கரபாணியின் மனைவி பாடுறாங்க. சக்கரபாணி கண்டிப்பா ...
மேலும் கதையை படிக்க...
சேதுவுக்கு இன்று விடுதலை. சட்டம் வழங்கிய தண்டனை பூர்த்தியாகிவிட்டது. இனி அவன் சுதந்திர மனிதன். இனி வார்டனால் 'டேய்.... மகனே ' என எழுப்ப முடியாது. கன்னத்தில் 'பளா ' ரென்று அறைந்து, 'என்ன முறைக்கிறே ? ' என்று கேட்க முடியாது. ...
மேலும் கதையை படிக்க...
ஏனோ..அன்று அதிகாலை மூன்று மணிக்கு விழிப்பு வந்து..எழுந்து..பாத் ரூம் சென்று விட்டு திரும்ப வந்த படுத்த போது.. சரியாக எனது அலைபேசி அழைத்தது.. இரண்டாவது ரிங்கில்லே..எடுத்து.., அழைத்தது யார் என தெரிந்தும்.. “ ஹலோ..” என்றேன். நண்பன் தான் அழைத்திருந்தான்..அவன் எனது நண்பன் ...
மேலும் கதையை படிக்க...
பிச்சை
கலந்த கனவு
பழைமை
நினைவுச் சின்னம்
ஓர் வாடிக்கையாளனின் சபலம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)